கிளிநொச்சியில் இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களுக்கு வேலைவாய்புத் தருவதாகக் கூறி அவர்களை அழைத்துச் செல்ல முட்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பென்குயின் என தன்னை அறிமுகப்படுத்திய தனியார் நிறுவனம் ஒன்று வேலைவாய்ப்பு கொடுப்பதாகக் கூறி 20ற்கு மேற்பட்ட இளம் யுவதிகளை பேருந்தில் ஏற்றிச் செல்ல முற்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துண்டுப்பிரசுர மூலம் ஏற்கனவே அறிவிக் கப்பட்டிருந்த கிளிநொச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் பதிலாக அரச செயலகத் துக்கு அருகில் மர நிழலிலேயே நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வினைத் தொடர்ந்து குறிப்பிட்ட யுவதிகளை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதற்காக அவர்களின் பெற்றோர்களும் அந்த இடத்துக்கு வருகை தந்திருந்தனர்
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உட்பட பலரின் தலையீட்டினால் இம் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
அரசின் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த பகுதிக்குள் இந்த நிறுவனத்தினர் மரத்தின் கீழ் நேர்முகப்பரீட்சை கூட நடடத்தியுள்ளனர் என்பது பல சந்தேகங்களை வலுவடையச் செய்கிறது. தவிர தமிழ் அரசியல் கைதிகள் பன்னாட்டு நிறுவனங்களில் அடிமைகள் போல வேலைவாங்கப்படுவதாகவும், பாலியல் வதைக்களுக்கு உள்ளாவதாகவும் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.