பிரித்தானியர்கள் இலங்கைத் தீவைத் தமது சிங்கள-தமிழ் பிரதிநிதிகளிடம் கையளித்த நாளிலிருந்து அவர்களாலேயே உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட பேரின வாதம் மகிந்த ராஜபக்ஷ என்ற பௌத்த சிங்கள அடிப்படை வாதியின் கரங்களில் தலைவிரித்தாடுகின்றது. “இலங்கை ஒரு சிங்கள-பௌத்த நாடு, இங்கே ஏனைய இனங்களும் சமாதானமாக வாழ முடியும்” – இதுதான் மகிந்த சிந்தனையவின் சாராம்சம். “சிங்கள-பௌத்த பெறுமானங்களைப் பயங்கர வாதிகளிடமிருந்து பாதுகாப்பதே எமது கடமை” – இது தான் மகிந்தவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. 80 களுக்குப் பின்னதாக உருவான எந்த தேசிய விடுதலை இயக்கங்களுமே “வன்முறை மீது காதல் கொண்ட” மனநோயாளிகளால் கட்டமைக்கப்படவில்லை. இலட்சக்கணக்கான மக்களின் அர்ப்பணங்களும், தியாகங்களும், போராட்டங்களும், தமிழ்ப் பேசும் மக்களும் மனிதர்களுக்கான உரிமையுடன் வாழ்வதற்கான போராட்டமேயன்றி அர்த்தமின்றிச் செத்துப் போவதற்கான சடங்குகளல்ல! அரை நூற்றாண்டு காலமாக, சரி பிழை, நியாயம் அநியாயம், நேர்வழி குறுக்குவழி, என்பவற்றிற்கெல்லாம் அப்பால், இலங்கையின் பெரும்பான்மை இனத்திற்கிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார உரிமைகளுடன் தமிழ் பேசும் மக்களும் வாழ்வத்ற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் பாசிச வடிவம் தான் தமிழீழ விடுதலைப் புலிகள்! தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடும் எந்த அமைப்பும், தனிமனிதனும், ஜனநாயகவாதியும், தேசிய வாதியும், மார்க்சியவாதியும், இந்தப் புலிகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தெறியப் படுவதைப் பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் புலிகளின் அழிவிலிருந்து உதிக்கும் பெருந்தேசியப் பாசிசத்தையும், தமிழ் பேசும் மக்கட் கூட்டம் ஜனநாயகத்தின் பேரால் சிதைத்துச் சின்னாபினப்படுத்தப் படுவதையும் “மகிந்த புரத்தின்” சிம்மhசனத்திலிருந்து நியாயம் கற்பிப்பதையும் புலியெதிர்ப்பு அரசியல் வியாபாரிகள் எந்தக் கூச்சமுமில்லாம் நிறைவேற்றி முடிக்கிறார்கள். இலங்கை இனப்பிரச்னைக்கான வேர்கள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பது ஆயிரம் தடவைகள் அலசப்பட்டுச் சலித்துப் போன விடயங்கள்.
1. மொழிரீதியான வேறுபாடுகளை இலங்கையில் ஆரிய-திராவிட முரண்பாடாகவும் பின்னர் தமிழ் – சிங்கள முரண்பாடாகவும் மாற்றி, வேறுபட்ட தேசிய இனங்கள் உருவாவதற்கான சூழலைத் தோற்றுவித்து, இத்தேசிய இனங்களை தமது அரசியல், வியாபார நலன்களுக்காக மோதவிட்டு வேடிக்கை பார்த்தது பிரித்தானிய ஏகதிபத்தியம்.
2. தமிழ்ப் பேசும் உயர்தர வர்க்கத்தை வளர்த்தெடுத்துஇ சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழலை உருவாக்கியதும் இதே பிரித்தானிய ஆதிக்கம்.
3. சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான அச்ச உணர்வைத் தோற்றுவித்த இந்த அடிப்படைகள், பிரித்தானிய காலனியாதிக்கத்தின் பின்னரும் தொடர்ந்தது மட்டுமன்றி தமது வாழ்வாதரப் பிரச்சனைகளுக்கு தமிழ் பேசும் மக்களே அடிப்படைக் காரணம் என்ற உணர்வும் உருவாக வழிவகுத்தது.
4. தமிழ் பேசும் மக்களின் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் சிங்களத் தலைவர்களே சிங்கள மக்களை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாக உருவாக, சிங்கள மக்கள மத்தியில் அமைப்பு மயப்பட்ட பேரினவாதம் உருவானது.
5. ஆக, இந்த அமைப்பு மயப்ப்பட்ட பேரின வாதம் சிங்களத் தலைவர்களின் வாக்கு வங்கியாகத் திகழ, சிங்கள மக்கள் மத்தியிலான அரசியற் கட்சிகள் பேரின வாதத்தையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.
6. இப்பேரின வாத அடக்கு முறையை உணரத் தொடங்கிய தமிழ் பேசும் சிறுபான்மையினர், சிங்களத் தலைமைகளுக்கெதிராக அமைபியல் ரீதியாக ஒன்றுபடவாரம்பித்தனர்.
7. தமிழ் அரசியற் கட்சிகளின் வாக்கு வங்கியாக தமிழ்த் தேசியவாதக் கருத்துக்கள் வளரவாரம்பிக்க, தமிழ் மக்கள மத்தியிலான அரசியற்கட்சிகள், தமிழ்த் தேசிய வெறியையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.
8. இதனால் இரு தேசிய இனங்களின் வளர்ச்சியும், அவற்றிடையேயன அமைப்பு மயப்பட்ட பிளவும் பெருந்தேசிய ஒடுக்குமுறையை அதிகப்படுத்த, இவ்வொடுக்குமுறைக்கு முகம் கொடுக்கமுடியாத அரசியற் கட்சிகளை தமிழ்பேசும் மக்கள் நிராகரிக்கவாரம்பித்த சூழலில், “பேச்சுவார்த்தை அரசியல்” என்பது “ஆயுத அரசியல்” என்ற தளத்திற்கு மாறியது. இங்குதான் புலிகள் உள்ளிட்ட தேசிய விடுதலைக்கான ஆயுதக் குழுக்கள் உருவாகின.
பெருந்தேசிய அடக்குமுறையானது அரசியல், பொருளாதர, சமூக அடக்குமுறையாக எல்லாத்துறைகளிலும் வியாபித்தது. தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் இராணுவ பலம் கொண்டு நசுக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெருக்களில் அனாதைகள் போல் கொலை செய்யப்பட்டு வீசியெறியப்பட்டு நூற்றாண்டுகள் கடந்துவிடவில்லை. ஒருபுறத்தில் இரத்தம் தோய்ந்த கொலைக்கரங்களும், மறுபுறத்தில் பௌத்த போதனைகளும் இலங்கையின் தேசிய அரசியலாக மாறிய நிலையில் தான் பெரும்பாலான தமிழ்பேசும் மக்களின் மானசீக ஆதரவுடன், ஆயுதக்குழுக்கள் வேர்விட்டு வளரவாரம்பித்தன.
உரிமைக்காகப் போராடும் ஒரே நோக்கோடு புத்தகங்களுக்குப் பதிலாகத் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு தெருவுக்குவந்த பல இளைஞர்களை உயிரோடு தகனம் செய்த பாதகர்கள்தான் புலிகள் என்பது வேறு விடயம்.
எந்தெந்தக் காரணங்களுக்காக பேச்சுவார்த்தை அரசியல் என்பது ஆயுத அரசியலாக மாறியதோ அதே காரணங்கள் இன்னும் வலுவாக இருக்க, புலிகளின் அழிவில் தமிழ் பேசும் மக்கள் பாதுகாக்கப்படுவதாக ஆனந்தக்கூத்தாடும் அரசியல் வியாபாரிகள் மகிந்த அரசின் இன அழிப்பிற்கு ஆதாரவுப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.
இலங்கையின் தேசிய இனச் சிக்கலில் அப்பாவி மக்களின் அழிவின்மேல் அரசியல் இலாபம் காணும் மக்கள் விரோத சக்திகள் தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் பல வகைப்படினும் பிரதானமாக நான்கு வகைக்குள் அடக்கிவிட முடியும்.
1. புலிகளும் அதன் ஆதரவு சக்திகளும்.
2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.
3. இந்திய அரசு
4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.
5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.
மக்கள் மீது நம்பிக்கையற்ற இவர்கள், மக்களின் அழிவிலிருந்து தான் தமது அரசியலையே கட்டமைக்கிறார்கள்.
1. புலிகளும் அவர்களின் ஆதரவு சக்திகளும்.
இவர்கள் எப்போதுமே மக்களைப் பற்றிச் சிந்தித்ததில்லை. தேசிய விடுதலைப் போராளிகள் என்ற முகமூடியை அணிந்திருக்கும் இவர்கள், தேசிய விடுதலைக்கான அனைத்து ஆதரவுத் தளத்தையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியவர்கள். 1983 ஜூலை இன அழிப்பு நடந்தேறிய காலகட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்துப் போனது. மொத்தத் தமிழகமுமே ஒரேகுரலில் பேரின வாதத்திற்காகக் குரலெழுப்பிற்று. இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காமல் வாக்குத் திரட்ட முடியாத நிலைக்குத் தமிழக அரசியற் கட்சிகள் தள்ளப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலிருந்த முற்போக்காளர்கள் உயிரையும் விலையாக வைத்து உரக்கக் குரல் கொடுத்தனர். உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக சக்திகள் பேரின வாதிகளின் இன அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பினர். முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் தேசிய இன அடக்குமுறைக்கெதிரான தமது பங்களிப்பை வழங்க முன்வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை இரவோடிரவக அனாதைகளாக விரட்டியடித்த விடுதலைப் புலிகள்இ கிழக்கில் தமது பாணியிலான குரூரமான படுகொலைகளை முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகத் திசைதிருப்பினர். நூற்றுக் கணக்கான சிங்கள மக்களைக் கொன்று குவித்தனர். தஞ்சம் கொடுத்த தமிழ் நாட்டு மக்களுக்கெதிராகவே தமது இராணுவ தர்பாரை நடாத்திக்காட்டினர். தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை என்ற ஒரே கோஷ்த்தின் கீழ் அமைப்பாகிக் கொண்ட எல்லா விடுதலை இயக்கங்களையும் ஆயுத பலம் கொண்டு அழித்தொழித்தனர். நூற்றுக்கணக்கான தமிழ் இழைஞ்ர்களை குழுக்கள் குழுக்களாகக் கொன்றொழித்தனர்.
தேசிய இன அடக்கு முறைக்கெதிரான அனைத்து ஆதரவு சக்திகளையும் அன்னியப்படுத்தி, ஒரு நியாயமான போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்தனர். இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் போராட்டத்திற்கான நியாயம், சிங்கள மக்கள் மத்தியிலும் பிரச்சாராத்திற்குட்படுத்த இயலாதவொன்றாகிப் போனது. இறுதியில், தேசிய இன அடக்கு முறைக்கெதிரான ஒரே குரலாகத் தம்மை முன்நிறுத்திக் கொண்ட புலிகள், பாசிஸ்டுக்களாக வளர்ந்து அழிந்து போயினர். அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுத்லைப் புலிகள், இந்த நிலையிலும் கூட தம்மைச் சுயவிமரிசனத்திற்கு உட்படுத்தத் தயாராகவில்லை. குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையில் கூட இவ்வாறான சுயவிமர்சனத்தை முன்வைக்கத் தயாராகவில்லை. 2008ம் ஆண்டு மாவீரர் உரையில், இந்திய எதிர்ப்பாளராகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்தியாவிடம் அரசியல் பிச்சை கேட்ட நிலையில் தனது சொந்த மக்களிடம் தான் தலைமைதாங்கி நடாத்திமுடித்த கோரக் கொலைகளுக்குக் கூட மன்னிபுக் கேட்கத் தயாராயிருக்கவில்லை. தன்னால் அன்னியப்படுத்தப்பட்ட, சொந்த மண்ணிலிருந்து புலிகளால் அகதிகளாக விரட்டப்பட்ட, தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு சக்திகளிடம் தன்னை, குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையிலாவது சுய விமர்சனத்திற்குட்படுத்தி, மறுபடி அவர்களை அணிதிரட்டத் தயாராகவில்லை. ஆயுதங்களையும், அதிகாரத்தையும் எந்த அளவிற்குப் புலிகள் நம்புகிறார்கள் என்பதையும், மக்கள் மீதான நம்பிக்கையற்ற, மக்கள் விரோதிகள் என்பதையும் புலிகள் மறுபடி மறுபடி வலியுறுத்துவதாகவே இது அமைகிறது.
2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.
புலிகளின் இருப்பின் அடிப்படையே, தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்புணர்வானது ஆயுதப்போராட்டம் என்ற தளத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணமே பேரின வாத்த்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் தான். புலிகளின் இருப்பிற்கான காரணத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், மக்கள் மத்தியில் போரற்ற நிலையை உருவாக்க வேண்டுமாயின், பேரினவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். பேரின வாதத்திற்கெதிரான, அது உருவாக்கி வளர்ந்து கொண்டிருக்கும் அரச பாசிசத்திற்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப் படவேண்டும். இதற்கெதிரான போராட்டங்கள், எல்லாச் சமூகச் செயற்ப்பாடுகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆனல் பெரும்பாலான தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள் இந்தப் பேரின வாதத்தையும் அரச பாசிசத்தையும் உரமிட்டு வளர்த்தெடுக்கிறர்கள். இதனூடாக, மறைமுகமாக புலிகளின் இருப்பை ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்துகிறார்கள். இவர்கள் வளர்த்தெடுப்பது அரச பாசிசத்தை மட்டுமல்ல, புலிகளின் பாசிசத்தையும் தான். மக்கள் சார்பில் மக்களுக்காக இவர்கள் ஒருபோதும் கருத்தாடியது கிடையாது. மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுமாரி பொழிந்து சிறீலங்கா விமானங்கள், கொலைத் தாண்டவம் நடாத்திய போதும், குழந்தைகள் முதியவர்கள் என்று எந்த வேறுபாடுமின்றி தமிழ் பேசும் ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுத் தெருக்களில் வீசப்பட போதும், ஏன் புலியழிப்பின் பேரால் இலங்கையில் வளரும் பாசிசத்திற்கெதிராகக் குரல் கொடுத்த சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் கடத்தப்படுக் கொலை செய்யப்பட்ட போதும், மகிந்த அரசிற்கு ஆதரவளிக்கும் அரச கைக்கூலிகளான இந்தப் புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் பக்கம் சாராத மக்கள் விரோதிகளே.
இவர்கள் செய்து முடித்த கைங்கரியங்கள் வாழும் உரிமைக்காகாகப் போராடிய ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குப் பின் தள்ளியுள்ளது.
1. புலியெதிர்ப்பென்பது பேரின வாத அரசின் அடக்குமுறையை ஆதரித்தல் என்ற பொதுவான கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்கள் இவர்களே.
2. பேரினவாத அரசிற்கு ஆதரவு வழங்கி அதன் பாசிசத்தை வளர்க்கத் துணை போகிறவர்களும் இவர்களே.
3. புலிகள் தவிர அரசிற்கெதிரான எழும் எந்த எதிர்ப்புக் குரலையும் அரச ஆதரவுக் குரல் என்று அடையாளப்படுத்தி, அரசிற்கெதிரான மாற்று அரசியற் சக்தி உருவாவதை சிந்தனைத் தளத்தில் சிதைத்தவர்களும், இதனூடாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்கத் துணை போனவர்கள் இவர்களே.
4. அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெருந்தேசிய அடக்குமுறைக் கெதிராக சிங்கள மக்கள் மத்தியிலுள்ள, இடது சாரிகள், முற்போக்காளர்கள் போன்றோரிடையிருந்து வரும் எதிர்ப்பை தமிழ் ம்க்கள் சார்பில் நசுக்கியவர்களும் இவர்களே.
5. அரசின் அடக்கு முறைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் இந்தக் கூட்டம், அரசியற்தீர்வுக்கான அனைத்து வழிகளையும் நிராகரித்து போரையும் மக்களின் அழிவையும் முன்நிறுத்தியவர்கள்.
தமக்கு எதிரான மாற்றுக் கருத்துடையோரை புலிகள் எவ்வாறு இராணுவ பலம் கொண்டு கொன்றொழித்தார்களோ, தமக்கு எதிரானவர்களை எல்லாம் புலி ஆதரவாளர்கள் என முத்திரையிட்டு புலி எதிர்ப்பாளர்கள் சிந்தனைத் தளத்தில் கொன்றொழித்துக் கொண்டிருக்கின்றனர். நியாயமான ஒரு போராட்டத்தில் மாற்று போராட்ட அமைப்புக்கள் உருவாக புலிகள் எவ்வளது தடையாக அமைந்தார்களோ அதற்கு எந்த வகையிலும் குறைவின்றி புலி எதிர்ப்பு தமிழர்களும் பங்களித்துள்ளனர். 80 களின் பிற்பகுதியிலிருந்தே ஆரம்பித்துவிட்ட இந்தப் புலியெதிர்ப்புக் கைக்கூலிகளின் அரசியல் வியாபாரம் வரலாற்றின் முனியக்கத்தை நீண்ட காலத்திற்குப் பிந்தள்ளியுள்ளது. இன்றைய அழிவுகளின் நேரடிப் பொறுப்பு புலிகளையும் அரசையும் சாரும் போது இவற்றின் மறுதலையான பொறுப்பு புலியெதிர்ப்பாளர்களையே சாரும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் 80 களில் தீவிர தேசிய வாதம்பேசிய இவர்களில் பெரும் பகுதியினர், தாம் சார்ந்த அமைப்புகளில் வலது சாரிப் போக்கை முன்நிறுத்தியவர்கள். இடது சாரிப் போக்குடையவர்களை அன்னியப்படுத்தி தீவிர தேசியவாதப் போக்கு மேலோங்க வழிசெய்தவர்கள். இன்று இலங்கை அரசின் பாசிசக் கொடுமைகளுக்கெதிராகப் பேச முற்பட்டால் தேசியவாதம் பேசுகிறோம் என்று தெருச்சண்டைக்கு அழைக்கிறார்கள். புலிகள் புலி – எதிர்ப்பாளர்களிடையேன இந்த முரண்பாடென்பது, அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மேல் மத்தியதர வர்க்க அணிகளிடையேயான செயற்தள மட்டத்திலான உள் முரண்பாடேயன்றி சமூக உணர்வி அடிப்படையில் எழுந்த போராட்டமல்ல. இவ்வாறான புலியெதிர்ப்பை முன்வைத்து இலங்கையில் செயற்படும் முன்னாள் தேசிய விடுத்லை இயக்கங்களோ அல்லது அவற்றோடு ஒட்டிக்கொள்ளும் புகலிட ஆதரவாளர்களோ, அரசின் நேரடிக்கைக் கூலிகளோ அபாயகரமானவர்கள். மக்களின் விரோதிகள்.
3. இந்திய அரசு.
இந்தியாவில் தலித் அமைப்புகள் நடாத்திய போராட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. இலங்கையில் இதே போராட்டங்கள் குறித்த வெற்றியைச் சம்பாதித்திருக்கின்றன. சண்முகதாசன் தலைமையிலான மாவோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய போராட்டங்களின் வெற்றியும், சூர்ய மல் இயக்கத்தின் எதிர்ப்புப் போராட்டங்களும், ஏனைய இடது சாரி இயக்கங்களின் வளர்ச்சியும் இலங்கைக்கு தெற்காசியாவிலேயெ ஒரு இடது சாரிப் பாரம்பரியத்தைத் தோற்றுவித்திருந்தது. கம்யூனிசத்தின் பேரால் ஆட்சியைக் கைப்பற்றும் எல்லைவரை ஜே.வீ.பீ தனது போராட்டத்தை நகர்த்த முடிந்தது. இவற்றின் தொடர்ச்சியாகவே தேசிய இன ஒடுக்கு முறைகெதிரான போராட்டங்களில் இடது சாரித் தன்மையுள்ள வேலைத்திட்டங்களுடன் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற அமைப்புக்கள் குறித்த வெற்றியுடன் மக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது. என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புக்கள் இடது சாரிக் கோஷங்களுடன் வெளிவர முடிந்தது. 80களில் ஆரோக்கியமான மார்க்சியக் கருத்தாடல்கள் தமிழ் பகுதிகள் வியாபித்தது. சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களுடன் தம்மை அடையாளப்படுத்த முன்வந்தனர். எல்லோர் மத்தியிலும் நம்பிக்கை துளிர்விட்டது.
இந்த சூழ்நிலையில் தான் இந்திய அரசு தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி, அவ்வமைப்புக்களை அவர்கள் சார்ந்திருந்த மக்களை விட பலமானதாக வளர்த்தெடுத்தது. தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை விட அவர்களின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டோர் பலமானவர்களாயினர். தேசிய விடுதலை இயக்கங்கள் வேறு இராணுவக் குழுக்களாக மாறி இந்த இராணுவ பலப் பரீட்சையின் உச்ச பகுதியாக புலிகள் ஏனைய இயக்கங்களை நிர்மூலமாக்கினர். இவ்வாறு இராணுவ ரீதியாக இயக்கங்களை வளர்த்துவிட்ட இந்திய தான் விரும்பியவற்றை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டது.
1. இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்டங்களூடாக உருவாகக் கூடியதாகவிருந்த அனைத்து இடதுசாரி இயக்கங்களையும் பண்புரிதியாக மாற்றியதுடன் இந்திய முற்போக்கு சக்திகளுடனனான அவர்களின் இணைவையும் சாத்தியமற்றதாக்கியது.
2. தமிழகத்திலிருக்ககூடிய அனைத்துப் பிரிவினை சக்திகளுடனான இணைவையும் சாத்தியமற்றதாக்கிற்று.
3. இலங்கையில் யுத்த சூழல் ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துதல்.
80 களின் சர்வதேச அரசியல் நிலையும் உலக அரசியற் தளத்தில் இந்தியாவின் பங்கு தொடர்பான போக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பிரதான பங்கு வகித்ததெனலாம். இன்று நிலமை முற்றாக மாறிவிட்டது. 80 களின் வல்லரசுப் பனிப்போர் இல்லை. இலங்கையின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அருகிப்போய்விட்டது. உலகமயமாகிவிட்ட பொருளாதாரம் இந்தியாவில் பெரும் பண முதலைகளையும், வியாபாரத்தில் வெற்றிகண்ட மேல் மத்தியதர வர்க்கத்தையும் தோற்றுவித்திருக்கிறது.
இந்தியாயில் புதிதாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அதிகார வர்க்கமும் ஆட்சியதிகாரமும் தமது மூலதனத்தினதும், முதலீடுகளினதும் எல்லையை இந்தியாவிற்கப்பாலும் விரிவு படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவினுள்ளேயே அதன் சிறப்புப் பொருளாதார வலையங்களுக்கெதிரான போராட்டங்கள் வலுவடைகிறது. டாடாவின் நானோ கார் உற்பத்திக்காக அழிக்கப்பட்ட அப்பாவிகளைக் கண்ட இந்திய விழிப்படைந்து வருகிறது.
போரின் மரணத்துள் வாழும் இலங்கை மக்களின் பிரதேசங்களை இந்தியா தனது வியாபார நலனுக்காகப் எதிர்ப்பில்லாமலே பாவித்துக்கொள்ளலாம். போர் ஓய்ந்துவிட முன்னமே இந்தியப் பெரு முதலாளிகளின் முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன.
இலங்கையின் அதிகார வர்க்கமும் “வியாபாரத்திற்கான அமைதியை” எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. ஆக, போரைவிட அப்பாவி மக்களின் அழிவிலாயினும் தனது முதலாளிகளின் முதலீடுகளுக்காக முந்திக்கொள்ளும் இந்திய அரசானது, புலியழிப்பின் பெயரால் இலங்கை அரசிற்கு எல்லா இராணுவ உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளது. தவிர, தெற்காசியாவிற்கான சந்தைப் போட்டியில் இந்தியாவைக் குறிவைக்கும் மேற்கு ஏகாதிபத்தியங்கள், இந்தியா மீதான அழுத்தங்களை அதன் அண்டை நாடுகளூடாகப் பிரயோகிக்கும் இன்றைய அரசியற் சூழலில், இலங்கையைப் பகைத்துக் கொள்ள விரும்பாத இந்தியா, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.
காஸாப் பகுதிகளில் மேற்கு ஊடகங்களின் கணக்குப்படி, குழந்தைகள் முதியோருட்பட 500 இற்கு மேற்பட்ட அப்பாவிகள், இஸ்ரேலிய அரசின் குண்டு மழைக்குப் பலியாகிவிட்டனர். மனித இரத்தம் பாயும் பலஸ்தீன அப்பாவி மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் வருத்தமடையாமல் இஸ்ரேலின் கொலைகளை வெளிப்படையாகவே ஆதரிக்கும் அமரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும், மேற்கும் ஐக்கிய நாடுகள் சபையும் தான் இன்றைய ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான முகங்கள். திரை மறைவில் நடாத்திமுடித்த அரச பயங்கர வாதத்தை வெளிப்படையாகவே நிறைவேற்ற உலகத்தை மறு ஒழுங்கமைப்புச் செய்து கொள்கிறார்கள்.
மேற்கின் பொருளாதார நேருக்கடிக்குப் பின்னதாக எதிர்பார்க்கப்படும் போராட்டங்களுகெதிரான அரச பயங்கரவாதத்திற்கு உலகத்தைத் தயார்படுத்தும் ஒத்திகைகளே இவைகள். உலகின் ஒவ்வொரு மூலைக்குள்ளும் மூக்கை நுழைத்து தனது சுரண்டலை வலுப்படுத்துக் கொள்ளத் தயாராகும் ஏகாதிபத்தியங்கள் தென்னாசியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் உள்ளேயும் அதனைச் சூழவுள்ள நாடுகளிலேயும் தனது ஆதரவுத் தளத்தை விரிவாகும் அமரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய அணி, இலங்கை அரசைக் கையாளவும் அதனை முழுமையாக இந்திய சார்புனிலைக்கு தள்ளிவிடாமல் பாதுகாக்கவும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதிருக்கின்றன. இந்தியாவோடு போட்டி போடுக்கொண்டு இலங்கை அரசிற்கு இராணுவ உதவி வழங்க தனது தெற்காசிய நேச அணிகளைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றன.
5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.
ராஜபக்ஷ குடும்பம்இ அது ஆட்சி நடத்தும் இலங்கையைப் பொறுத்தவரை தான் எதை விரும்புகிறது அது அனைத்தையும் செய்து முடிக்கலாம். பயங்கர வாதிகளுக்கெதிரான போரை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாகவே இவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். தொலைதூரக் கிராமங்களில் வேலையிலாத் திண்டாட்டத்தை நிவர்த்திசெய்ய “தேசபக்தியுள்ள” இராணுவத்திற்குப் படைகள் திரட்டப்படுகின்றன. இலங்கையின் பிரதான தொழில்களில் இராணுவமும் ஒன்றாகிவிட்டதைச் சுட்டிக்காட்டும் நீரா விக்ரமசிங்க போன்ற ஆய்வாளர்கள், போரற்ற சூழல் இலங்கையில் ஏற்படுமா என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துகின்றனர். மேற்குறித்த நான்கு மக்கள் விரோத சக்திகளும், போரை உரமூட்டி வளர்த்தெடுக்க, இலங்கை மக்களின் வாழ் நிலை என்பது போரோடு பிணைக்கப்பட்டுவிட்டது. ஒரு புறத்தில் பௌத்த சிங்களப் பெறுமானங்களைப் பாதுகாக்க போர் நடாத்துவதாக அப்பாவி மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மகிந்த குடும்ப அரசு, மறுபுறத்தில் கிராமங்களை போரோடு பிணைத்து வருகிறது. ஏற்கனவே சிங்கள மக்கள் மத்தியில் வேர்விட்டிருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதமானது, அவர்களின் நாளாந்த வாழ்க்கையோடு பிணைக்கப்பட்டு பாசிசமாக வளர்ந்துள்ளது. இலங்கையின் தமிழ் பேசும் ஊட்கவியளாளர்களில் பெரும்பாலானோர், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டோ கொல்லப்பட்டோ விட்டனர். அரசிற்கெதிரான சக்திகள் சிதைக்கப்பட்டோ, அரசால் உள்வாங்கப்பட்டோ சீரழிக்கப்பட்டுவிட்டனர். தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள், புலியெதிர்ப்புக் குழுக்கள், புலிகள், சிங்கள பெருந்தேசிய வாதிகள், இந்திய அரசு, ஏகாதிபத்தியங்கள், போன்ற எல்லா மக்கள் விரோத சக்திகளும் இலங்கை அரசின் பாசிசத்தை தமது சொந்த வியாபார நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள, தமிழ் பேசும் மக்கள் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
மக்களின் மறுதலையான ஆதரவையும் கூட இழந்து போன புலிகள், மக்களிலிருந்து அன்னியப்பட்டு நிரந்தர பாசிச இராணுவப் படையாக மாற்றமடைந்து, குறுகிய பிரதேசங்களில் முடக்கப்பட்டு அழிந்து போகிறார்கள். இவர்களின் அழிவின் எச்சங்களிலிருந்து அரச பாசிசம் வளர்ந்து இலங்கை மக்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவிலேயே அரச பயங்கர வாதத்தின் இன்னொரு ஆய்வுகூடம் தான் இலங்கை. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதற்காக சமூக உணர்வுள்ள யாரும் துயர்கொள்ள மாட்டார்கள். ஆனால் அழிவின் நெருப்பிற்குத் தீக்கிரையாகும் அப்பாவி இலங்கை மக்களுக்காகக் குரல் கொடுக்க இனியொரு போராட்டம் தேவையாகிறது.
CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (……. என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து
சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?
-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !
வணக்கம் நா(வலன்)
இதில் நீங்கள் உங்களை எந்தக் கூட்டத்தில் இணைத்துக் கொள்கிறீர்கள் எனபதையும் கூறிவிட்டு கட்டுரையை ஆரம்பித்தால் நன்றாக இருந்திருக்கும்.
சும்மா போங்கடா. உங்களால ஒரு மயிரைக்கூடப் புடுங்கேலாது.
பெரும்பாலான புலிஎதிர்ப்பாளர்கள் இந்தப் பேரினவாதத்தையும் அரசபாசிசத்தையும் உரமிட்டு வளர்த்தெடுக்கின்றார்கள். இப்புலியெதிர்ப்பாளர்கள் மக்கள்பக்கம் சாராத மக்கள்விரோதிகளே…..எனக் குறிப்பிடுகின்றீரே நாவலன் அவர்களே! இது அரசின் காலில் மண்டியிட்டுள்ள ஐனநாயக நீரோட்டக்காரர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் பொருந்தும். நாவலன் நீரே பெரியதொரு கட்டுரையை எழுதி பலஇடங்களில் புலியை கண்டிதது எழுதியுள்ளளீர். உம்மையும் மக்கள்பக்கம்சாராத மக்கள் விரோதி என அழைக்கலாமா? புலி எதிர்ப்பாளரர்களில் மக்கள்நலம் சார்ந்தோரே பெரும்பான்மையோர்!
இலங்கை இனப்பிரச்சனையை புலிளை அளிப்பதன் மூலம் முடிவுக்கு கொண்டுவரமுடியாது.
இலங்கைத்தமிழர்களின் போராட்டம் தொடரும்….இன்னமும் மேன்மையாக நல்ல வழியில்
இது மீண்டும் தொடடங்கும் மிடுக்கு
செழியன
திரு.சபா.நாவலன் !
உங்கள் கட்டுரையின் ஆழமும் அர்த்தமும் அளவிட முடியாதவை.நீங்கள் ஒரு பாசிசபுலி எதிர்ப்பாளராக இருந்தாலும் இன்றைைய யுத்த சூழலை சிங்கள பெளத்த பேரினவாத அரசு எப்படி தன் சூழ்ச்சிக்கும் -திட்டமிட்ட வேலைத்திட்டங்களுக்கும் பயன்படுத்துகின்றதென்பதை விலாவாரியாக விலாசித்தள்ளிவிட்டீர்கள்.உங்களைப்போன்றோர் எங்கு பாசிசம் நடந்தாலும்-எங்கு கொலை நடந்தாலும்-எங்கு ஆக்கிரமிப்பு நடந்தாலும் தட்டிக்கேட்கும் நிலையும்>அவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலுடன் செயற்படுவது பாராட்டப்படக்கூடியதும்>இன்றைய காலகட்டத்தில் தேவையானதுமாகும்.
ஆனால் சென்ற வாரம் பி.பி.சி வானொலியில் கிளிநொச்சி ஆக்கிரமிப்பு பற்றி அதன் செய்தியாளர் பலபேரை பேட்டிகண்டதில்>பலபேர் அங்குள்ள யதார்த்தத்தையும் அவலங்களையும் வெளிப்படுத்தியிருந்தாலும் புலம்பெயர் நாடொன்றில் வாழும் ………… என்பவர் சிங்கள ராணுவத்தின் வெற்றியானது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாக -தமிழ் மக்களுக்காகவே இந்த மகிந்த அரசும் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களும் நடந்து கொள்வதாக மிக குதூகலத்துடன் மகிந்தாவின் வெற்றியை தனது வெற்றியாக கொண்டாடினார்.இவரைபற்றி பின்பு தான் விசாரித்ததில்>இவர் ஒரு மாக்சியவாதியாகவும்>பாசிச எதிர்ப்பாளராகவும் தன்னை வெளிக்காட்டிக்கொள்பவரென அறிந்தேன்.உண்மையில் இவரைப்போன்றோர் பாசிசத்தை எதிர்ப்பதாயிருந்தால் அனைத்து பாசிசத்தையும் எதிர்கட்டும்.அதைவிடுத்து புலியெதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு நீங்கள் சொன்ன மாதிரி அரசபயங்கரவாத்தையும் அதன் வெற்றியையும் அவர்களோடு சேர்ந்து இங்கிருந்து கொண்டாடுவது அங்குள்ள எம்மக்களுக்கு இவரைப்போன்றோர் செய்யும் துரோகமாகும். எனவே உங்களைப்போன்றோரின் கருத்துக்களைக் கேட்டாவது இவர்களைப் போன்றோர் சிந்திக்க வேண்டும்
இந்த கட்டுரையை அர்த்தபடுத்தவோ தொடர்புபடுத்தவோ அவசியமற்றது மேற்டி பின்னூட்டம். இதை யார் விட்டது என்பது கேட்காமலே தொpந்துகொள்ள முடிந்ததோடு எந்தவிதத்திலும் எனக்குப் பாதிப்பில்லை!
இருந்தும் இன்னொரு ஊடகமான பிபிசி ஏதோ காரணங்களுக்காக பெயர்களை வெளியிடாமல் போட்ட ஒரு பேட்யிலிருந்து என்னுடைய குரல் தான் என்பதை உறுதிப்படுத்திய பினூட்டத்தைப் பிரசூpத்திருப்பது எந்த வகையில் பிபிசி யின் நோக்கத்தை மதிப்பதாக அமையும்? அடுத்து அது அவரது குரல் தான் என்பதை நீங்களும் உறுதி செய்வதாக முடிந்துவிடுகிறது.?
பின்னூட்டம் வேண்டிய பகுதியிலிருந்து வந்திருந்தால் அப்படியே இருக்கட்டும்!
அற்புதமான பத்திரிகைத் தந்திரம் தேசத்தில் வந்ததில் பெயரை மட்டும் வெட்டிவிட்டீர்களோ ? இதிலிருந்தே உறுதியாகிறது சந்தேகம். இந்க் கருத்துக்களைக் கேட்டு இனியாவது திருந்துவம்.அப்பிடியே விட்டுடுங்க.
நவம் !திருந்த வேண்டியது பேரினவாதிகள் அல்ல-
நாமே !எம்மை நாமே முதலில் திருத்திக்கொள்வோம்.
இனவிடுதலையைப் பெறுவதற்கு பயங்கரவாதத்தை துணைக்கழைத்த புலிகளும்
புலிகளுக்கு ஆதரவு கொடுத்த உம்மைபோல புலம்பெயர் முண்டங்களுமே.
முழுதமிழ்மக்கள்மட்டுமல்ல வன்னிமக்களும் இனிநின்மதி பெருமூச்சு விடுவார்கள்.தமது
பிள்ளைகளை எதிர்காலத்திற்காக நம்பிக்கையோடு வளர்த்தெடுக்க முடியும்.
லோகநாதனின் சேவை மக்கள் படும் துன்பத்தை எண்ணி அறிவு பூர்வமாக ஏற்பட்டது
உமது சேவை சுயநலத்தாலும் அறிவற்றதனத்தாலும் ஏற்படுத்தப்பட்டது நவம்.
லோகநாதன்,
பீ.பீ.சி யில் வெளியான எந்தச் செவ்வியையும் நாம் செவிமடுக்கவில்லை.
ஆனால் எதாவது ஒரு கருத்து பின்னூட்டமாக வெளியாகும் போது அதனை மறுக்கும் உரிமையும் அனைவருக்கும் உண்டு.
நாவலன் தங்களிடம் சில கேள்விகள், பதில் தரவும். 1. புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம் – அதன் பின்னரான உங்கள் போன்றவர்களின் செயல்பாடு என்ன? எப்படி அமையப்போகிறது. புலிகள் இல்லாமல் போன பின்னர் புலிகளின் 25 வருடகால பாசிச செயற்பாடு என ஒரு வரலாற்று புத்தகத்தை வெளியிடுவதில் உங்கள் போன்ற சதா மக்கள்நலனில் அக்கறைப்படுவதாக சொல்லிக்கொள்ளும் நீங்கள் அதில் ஈடுபாட்டை செலுத்தி மீண்டும் காலத்தை கடத்துவீர்களா? 2. புலிகள் ஓழிக்கப்படும் வரையிலான உங்கள் போன்ற மக்கள் தோழர்கள் மக்களுக்கு செய்த பணி என்ன? வெறும் புலிகளுக்கு எதிரான விமர்சனங்களும் 10 புத்தகம் வெளியிட்டு அதிலும் புலிகளை புறணிபாடுவது தான் தங்களின்நிகழ்கால செயற்பாடா? இந்த பின்னூட்டத்தை இடும்போது வன்னியில் புதுக்குடியிருப்பில் சாதாரண பாமரமக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் இன்னுமொருவருமாநால்வர் கொல்லப்பட்டுள்ளனர். உங்கள் பாசையில் சொன்னால் உழைக்கும் தொழிலாளிவர்க்கம் பரிதாபமாக அழிக்கப்பட்டுள்ளது.நேற்று புலிகளின் பகுதியிலிருந்து இரவோடிரவாக இருள் சூழ்ந்தநேரத்தில் முரசுமோட்டை பகுதியில்நப்பாசையில் இரானூவப்பிரதேசத்திற்குள் போக முற்பட்டவர்களை புலிகள் ஊடுருவுவதாக் நினைத்து சுட்டதில் 7பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் சுட்டதும் மக்கள் கூக்குரல் இட்டதையடுத்து உடனேயே தங்களை சுதாகரித்துக்கொண்ட இராணுவம் அவர்களில் காயப்பட்டவர்களை காப்பாற்றியுமுள்ளது. ஆனால் அடுத்தநிமிடமே பாதுகாப்பு இணையத்தளத்தில் தப்பியோடிய மக்களை புலிகள் சுட்டதாக அரசு முந்திச்செய்தி வெளியிட்டு விட்டது. அதன்பின்னரே புலிக்கு தெரியவந்து புலி அரசு செய்தது என மாறிமாறி செய்தி. இந்த மக்கள் புலிகளின் பகுதியில் இருப்பதால் இவர்களின் அவலங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? அல்லதுநாங்கள் ஓண்டும் செய்யாமலில்லை. இரகசியமான கம்பைன் செய்வதாக சொல்ல வருகிறீர்களாநாவலன் அல்லது இந்த மக்களும் விரோத மக்களா? இதற்கு பதில் தாருங்கள் …. தொடரும்
புரபெசர் அன்பரே,
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நிதானமாகக் கட்டுரையை மறுபடி வாசித்துப் பார்க்கவும்.
1. அரச ஆதரவு- புலியெதிர்ப்பாளர்களுக் கெதிராக 83 இலிருந்தே- எனது ரீன் ஏஜ் காலத்திலிருந்தே குரல் கொடுத்திருகிறேன். முன்நின்று மக்கள் போராட்டங்களையும் கூட நடாத்தியிருக்கிறேன் .. இதையெல்லாம் இங்கு விலாவாரியாக எழுதி சுய தம்மப்ட்டம் செய்து கொள்ள விரும்பவில்லை.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடந்த விஜிதரன் போராட்டத்தில் வெளியான 24 துண்டுப்பிரசுரங்களில் 22 பிரசுரங்களை நான் எழுதும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. – இது தான் இலங்கையில் கடைசியாக நடைபெற்|ற புலிகளுக்கெதிராகநடைபெற்ற மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டம். இவற்றைத் தற்செயலா மறுபடி வாசிக்க நேர்ந்த போது, மேலேயுள்ள கட்டுரையில் சொல்லப்பட்ட அரச எதிரிகளைப் பற்றியும் குறிப்பிடப்படுள்ளது பாருங்களேன்.
தவிர உங்களைப் போன்ற புலி எதிர்ப்பாளர்களுக்கும் புலிகளுக்கும் அச்சடித்தால் போல
ஒரு ஒற்றுமை பாருங்களேன்.
யாராவது புலிகளுக்கு எதிராக எழுதினாலோ பேசினாலோ…. ” மூச்….நாங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடுகிறோம் நீங்கள் மேசையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் … ஆகவே பேச வேண்டாம் முடிந்தால் போராட்டம் நடாத்திக் காட்டுங்கள் என்பார்கள்….”
என்ன ஆச்சரியம் ! புலி எதிப்பு அரச ஆதரவாளர்களும் இதே சூத்திரத்தையல்லவா பிரயோகிக்கிறார்கள்.
உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை… சபாலிங்கம் பாரிசில் கொலைசெய்யப்பட்ட நாளில் ஒரேயொரு துண்டுப் பிரசுரம் வந்தது… அதை எழுதி, அச்சடித்து வினியோகிக்க புலிப்பயத்தில் யாரும் முன்வரவில்லை…நானும் அசோக்கும் மட்டும் மரணபயத்துள் வினியோகித்திருந்தோம் இதில் கூட புலிப் பாசிசத்தை பற்றி மட்டுமல்ல பேரினவாதத்தைப் பற்றியும் பேசியிருந்தோம் .
புலிகளால் ஈபிஆரெலெப் அழிக்கப்பட்ட போது -மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளாக-ஈபிஆரெலெப் தோழர்களைக் காப்பாற்றிஆனால் அரச பாசிச அபாயத்தை மறந்து விடவில்லை.
பாருங்கள், புலிகள் கொலை செய்வார்கள் என நாங்கள் மறுக்கவுமில்லை புலிகளுக்குகெதிரான போராட்டத்தில் பின் நிற்கவுமில்லை. ஆனால் புலிகளுகெதிராக அரச பாசிசத்தை வளர்க்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களையும், தேர்தல் வாக்குப் பொறுக்கவும், பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் மகிந்த குடும்ப ஆட்சியினை நியாயப்படுத்தும் சந்தர்ப்பவாதிகளையே நாம் குறித்துக் காட்டுகிறோம்.
இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் புலிகளை ஒருகாலத்தில் மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரித்தவர்கள் தான் இன்று அரச பாசிசத்தை ஆதரிக்கிறார்கள்.னேன் என்பதற்காக புலிமுகாமில் சித்திரவதை அனுபவித்த அனுபவமும் உண்டு.
புலி அழிந்தபின்னர் போராட்டம் தேவை… ஆனால்; அது அரச பாசிசத்தை வளர்த்து போராட்டத்தை நீண்ட காலத்திற்குப் பின் தள்ளியுளது என்பதைச் சொல்லவே கட்டுரை.
இதில் முரண்பாடிருந்தால் மறுபடி பேசிக்கொள்வோம்.
நாவலன்,நன்றிகள், எனக்கு கி.உ.சங்கப்போராட்ட காலத்தையும், விழிதரன் போராட்டகாலத்தையும் மறுபடிநினைவுபடுத்த வேண்டாம். அவைநடந்து முடிந்த காலாவதியான சம்பவங்கள் அதன்பின்னர் பலநூறு மடங்கு சம்பவங்களும் பேரவலங்களும் நிகழ்ந்துவிட்டன,.நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. துரையப்பாவை சுட்டதையும் கொழும்பில் கனகரத்தினத்தை சுட்டதையும், திருநெல்வேலியில் கண்ணி வெடி வைத்ததையும்நெடுகளும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இவற்றிற்கும் அப்பால் பலநூறு மடங்கு பல புலிப்போராளிகள் அர்ப்பணிப்புகள் தியாகங்களை செய்துவிட்டார்கள். முன்னய சம்பங்களையோ அனுபவங்களையோ வைத்துக்கொண்டு நிகழ்காலத்தில் ஓடமுடியாது. அரச பாசிசம் வளர்ந்து விட்டது மட்டுமல்ல அரசபாசிசத்துக்கு எதிராக முன்னர் போராடியவர்களும் சேர்ந்துதான் அரசபாசிசத்துக்கு காவடி எடுக்கிறார்கள். சபாலிங்கம் கொலைக்கும் புலிக்கும் தொடர்பிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? புலிக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதும் தங்களின் பெயரில் செய்தவர்களை இன்னும் அம்பலப்படுத்தாமல் இருப்பது அவர்களின் மிகப்பெரிய தவறு. இங்கு சபாலிங்கம் கொலைக்கான துண்டுப்பிரசுரத்தை புலிப்பயத்தில் ஓட்டப்பயந்தது என்பது சாதாரணமாக வரும் புலிப்பயமே தவிர. புலியைத்தவிர வேறு ஒருவரும் செய்யச்சந்தர்ப்பமில்லை என்ற புலி தொடர்பான வெறும் ஊகம் தான். ஆனால் இன்று அதுநடந்து 15 வருடங்கள் கழிந்துவிட்டது சபாவிலும் பார்க்க புலிக்கு எதிராக நிறையவே பலர் செயற்பட்டுள்ளனர் ஏன் புலி ஒருத்தரையும் கொல்லவில்லை. அப்படியென்றால் புலி எதிர்ப்பாளர்களின் கையிலும் துப்பாக்கி வந்துவிட்டதா? அல்லது பலமாக உள்ளனரா? அதுவுமல்லாமல் சபாலிங்கம் புலி சுடும் அளவுக்கு அப்படி 1993க்குள் என்னத்தை புலிக்கு எதிராக செய்தார்? அப்படியென்றால் சோபாவையும் புஸ்பராஜாவையும் இன்னும் …. பலரையும் புலி போட்டுதள்ளியிருக்கவேண்டுமே ஏன்நடக்கவில்லை. இவற்றை விட்டு மறுபடியும் விடயத்துக்கு வருவோம்…..புலி அழிந்தபின்னர் போராட்டம் தேவை… இந்த போராட்டத்தை எப்படி முன்வைக்கப்போகிறிர்கள் நாவலன்! அந்த வடிவம் என்ன? எங்கிருந்து முன்னெடுக்க போகிறீர்கள்? நீங்கள் தமிழ் மக்களுக்காக கேட் கப்போகும் அரசியல் என்ன? வெறுமனே சிறிலங்காவில் ஆளூம் தரப்புகளுக்கு ஜால்ராப்போடும் தமிழ் பேசும் கூட்டத்தை விமர்சிக்கும் அரசியலா? எது! அதனை முன்வையுங்கள். விஜிதரனுக்கு எழுதிய 22 பிரசுரங்களுக்கு இப்போதுநீங்கள் கொடுக்க்கும் முக்கியத்துவத்துக்கு மேலாக 23 வருடங்கள் கழித்து நீங்கள் உம் உங்கள் சூழ்ந்த நண்பர் வட்டமும் இனியொரு விதி செய்வோம் என்னும் கோசத்துடன் நின்றுவிடப்போகிற்ர்களா? புலிகளின் முடிவு நெருங்கிவிட்டது. புலிகளின் ஆதரவுத்தளம் இன்னும்நொருங்கவில்லை. 22ஆயிரத்துக்கும் அதிகமான தியாகங்களுடன் கூடிய ஒரு அமைப்பை அழித்துவிடலாம். அதன் ஆதரவுத்தளத்தை அழித்துவிடுவது மிககடினம். இந்த வட்டத்தையும் அரவணைத்துத்தான் எதையும் போராட்டமாக முன்னேற்றமுடியும். இனி புலிகளின் ஆதரவுத்தளம் மாற்றுக்கருத்தாளர் தளமாக பரிகசிக்க முடியுமா? தொடரும்…..
புரபெசர் அன்பரே,
நான் மேலே எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதுதான்:
புலியெதிர்ப்ப்ர்ன்ற பெயரில் அரச பாசிசத்தையோ அரச எதிர்ப்பென்ற பெயரில் புலிப் பாசிசத்தையோ வளர்த்தல் தவறானது என்பது தான். 83 இலிருந்து நான் மற்றும் நண்பர்கள் சார்ந்த போராட்டங்களை குறித்துக் காட்டியதன் காரணம் நானோ என்னோடு குறைந்த பட்ச அரசியல் உடன்பாடு உடையவர்களோ அரச சார்பு நிலையோ புலி சார்பு நிலையோ தமது நிலைப்பாடுகளாகக் கொண்டதில்;லை என்பதை வலியுறுத்தவே.
நீங்கள் நான் குறிப்பிடாமலேயே நான் சார்ந்திருந்த கி.உ.ச வைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். நிறையத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பயமாக வேறு இருக்கிறது. உங்களுக்குத் தெரியாத ஒன்று, பல்கலைக் கழகத்தில் 2ம் வருடத்திலிருக்கும் போது புலிகளால் கைது செய்யப்பட்டு சில “சாத்தல்களின் ” பின்னதாக அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். முக்கிய குற்றச்சாட்டு: சங்கத்தில் சாதி அரசியல் செய்வதாக. ..
நான் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்திற்கு எதிரானவன் இல்லை.
அது சரியான திசையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.புலிகள் இந்தப்போராட்டத்தை அதிகார ஆசையில் கையிலெடுத்துக்கொண்டு போராட்டத்தை அழித்துவிட்டார்கள் என்பதே எனது கருத்து.
அதற்கான முயற்சியின் இன்னொரு பகுதிதான் பாசறையும் கூட…
புலிகள் பற்றியும் அதன் பாசிசம் பற்றியும் எழுதியதை மறுபடி நிதானமாகப் படித்துப் பாருங்கள்…
புலிகளின் அழிவோடு ஆயுதங்களும் அரசியல்கொலைகளும்
முற்றுமுழுதாக நிராகிக்கப் படுகிறது.புத்தம்புதிய உத்வேகத்துடன்
இலங்கைமக்களின் தேவைகள் முன்னெடுக்கப்படும்.மாகாணங்களுக்கான சுயயாட்சியும்
மத்தியில் கூட்டாட்சியுமே மக்கள்ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்கு இருக்கும்
ஒரேஒரு தீர்க்கமான வழி அதைநோக்கி முன்னேறுவதற்கு உங்கள் மானசீகமான ஆதரவை
வழங்கிடுங்கள். இதவே எமது உரிமையை பெற்றுக்கொள்ளுவதற்கான போராட்டம். ஆயுதங்களும் கொலைகளுமல்ல.
நாவலன், நான் கேட்டதற்கு தங்களிடம் தெளிவான பதில் இல்லை.நான்நிதானமாக பல தடவை உங்கள் கட்டுரை படித்துவிட்டேன். …….. இலங்கை மக்களுக்காகக் குரல் கொடுக்க இனியொரு போராட்டம் தேவையாகிறது.
இந்த போராட்டம் எத்தகையது. அதன் வடிவம் என்ன? அதற்குரிய அரசியல் முலாம் என்ன? தமிழீழமா? சுயாட்சியா? சமஸ்டியா? அது மாம்பழமா? அல்லது மண்ணாங்கட்டியா? என்ன என்பதை இப்போதே வடிவத்துக்கு கொண்டுவரவும். ஏதேனும் புறபோசல் வைத்துள்ளீர்களா? அல்லது திஸ்ஸவிதாரணவின் தீர்வு திட்டத்தையே முன்மொழிகிறீர்களா? அல்லது அதிலிருந்து ஒருபடி முன்நோக்கி செல்லவேண்டுமென் கிறீர்களா? அல்லது சந்திரன் ராஜா ஜொள்ளும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் மண்ணாங்கட்டி தீர்வா? எதை நோக்கி உங்கள் போராட்டத்தை இனி செய்ய உத்தேசம். இல்லாவிட்டால் புலிகள் பாசிசத்தை வளர்த்துவிட்டுள்ளதால் மீண்டும் அரிவரியிலிருந்து பாசறை சுவரொட்டி துண்டுப்பிரசுரப்போராட்டமா? எது. முன்னர் நீங்கள் செய்த எல்லாவற்றுக்கும் ஒரு சபாஸ் போட்டுவிட்டு, இனி என்ன? எப்போது’? யார்யாரெல்லாம் இந்த போராட்டத்தில் வெறும் எத்தனை பேர்? அதில் எத்தனை பேருடன் உடன்பாடுகொண்டுவிட்டீர்கள். புலிகளையும் அதேசமயத்தில் அரசையும் எதிர்ப்பதாக பல்வேறு சக்திகளின் உடன்பாடு எந்தநிலையில்? (உங்களை போன்று வேறு பலரும் சொல்கிறார்கள்) ஆனால் உங்களுக்கும் அவர்களுக்கும் கூட ஒத்திசைவு இல்லை போல் தெரிகிறது. ஆக உங்கள் போராட்டங்களை இன்றைய பின்னோக்கிய சூழலில் இனி எவராவது போராட்டம் அது இதுவென தொடங்கினால் நாம்நேசிக்கும் தமிழ் பேசும் மக்கள் ஆதரவுதரவார்கள் எனநம்புகிறீர்களா? புலிகளின் ஆதரவுத்தளம் இதனை ஆதரிக்குமா? இந்த இடைவெளியை உங்கள் போராட்டம் நிரப்புமா?…… தொடரும்
மறுபடி புரபெசர் அவர்களே,
உங்கள் கேள்விகளுக்குக் கோஷங்களை அடிப்படையாகக் கொண்ட பதில்களின் அடிப்படையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் விளைவுதான் இன்றுவரையான இழப்புக்களின் தோல்வி.
30 வருட காலத்துப் போராட்டத்தில் குறைந்த பட்ச சமூக ஆய்வு கூட மேற்கொள்ளப்பட்டதில்லை. ஒரு வியாபார தாபனம் விற்பனைக்கு முன்னதாக ஆயிரம் ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞான சமூகத்தில் மக்களின் தலைவிதியை இரண்டு வரி வசனத்தில் நிர்ணயித்து விடமுடியும் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம்.
இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுகின்றன. அத்தேசிய இனங்கள் ஒடுக்கு முறை இருக்கும் வரை தமது தலைவிதியைத் தாமே நிர்ணயித்துக் கொள்வதற்காகப் போராடுதல் என்பது நியாயமானது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் கூட. இந்த வகையில் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்து போவதற்கான உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது தேவையானதாகிறது.
அதிலும் பெருந்தேசிய வாதம் என்பது, அமைப்பு மயப்படுத்தப்பட்ட சிந்தனைப் போக்காக வளர்ச்சியடைந்துள்ள, பொருளாதார வளர்ச்சி என்பது முழுமை பெறாத நாடொன்றில் குறித்த கட்டம் வரை இவ்வாறான போராட்டங்கள் தவிர்க்க முடியாததாகவும் ஆகிவிடுகின்றது.
இவ்வாறான போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மைத் தேசிய இனங்களைத் தேசிய மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய விடுத்லை இயக்கங்களால் தலைமை தாங்கப்படும்.
இத் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு தமிழ், சிங்கள், முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தலைமை வழங்கும் நிலை வரும் போது போராட்டம் என்பது தெற்காசியவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவுடன் முன்னோக்கிச் செல்லும்.
போராட்டம் இனவாதமற்ற சரியான பாதையில் வளர்ந்த்து செல்லுமானால், இனங்களிடையேயான பிரிவு என்பதை விட ஐக்கியமே இறுதி விளைவாகும்.
ஆனால் இன்றுள்ள சூழலில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தவிர்க்கமுடியாதது.
இதற்காக சமூக உணர்வுள்ள அனைத்து சக்திகளும் தத்தமது எல்லைக்குள் பங்களிக்க வேண்டும்.
எத்தனை பேர் என்பது பிரச்சனையில்லை. சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களை விரல் விட்டு எண்ணலாம். அது அவர்களின் நியாயத்தன்மையைச் சிதைத்துவிடாது. கார்ல் மார்க்சும், ஏங்கல்சும் முதலாம் அகிலக் கூட்டத்தொடரை ஏற்பாடு செய்த்த வேளையில், உழைப்பாளர்கள் மீதான அடக்கு முறை, கொலைகளும், சூறையாடல்களும் நிறைந்த காலகட்டமாகவிருந்தும் கூட்டத்திற்கு இரண்டுபேர் மட்டுமே சமூகமளித்திருந்ததால் அகிலத்தைக் கலைத்துவிட்டனர். இன்று உலகம் மறுபடி மார்க்சைப்பற்றி பேசிக்கொள்கிறது. முதலாளித்துவப் பத்திரிகைகள் கூட மார்க்ஸ் சொன்னது உண்மையாகிறது என் கிறார்கள். மறுபடி போராட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அன்று தன்னுடன் போதிய ஆட்பலமோ ஆயுதங்களோ இல்லாததால் மார்க்ஸ் மிரண்டுபோய் எழுதாமல் இருந்திருந்தால் 150 வருடங்களின் பின்னர் மக்களுக்குப் போராட்டத்தின் மீது மறுபடிநம்பிக்கை ஏற்பட்டிராது.
இன்றைக்கு எனக்குச் சரியெனத் தெரிபவற்றை நான் எழுதுகிறேன். அது பிழையானதாக இருந்தால் விவாதிக்கப்படும். இது எனது கருத்துக்குக் கிடைக்கும் வெற்றி. அது சரியானதாக இருந்தால், சிலர் அதை மேலும் வளர்த்தெடுப்பர், போராட்டங்களாக, எழுத்துக்களாக… இதுவும் எனது கருத்துக்களுக்குக் கிடைத்த வெற்றி. ஒரு கருத்து வெற்றி பெறுமானால் அது சக்தியாக வளர்ச்சி பெறும்.
புலிகளையும் அரசையும் போன்ற அனைத்து அதிகார சக்திகளையும் எதிர்க்கும் சுயநினைவில் உள்ள எல்லோருடனும் இந்த அடிப்படையில் எல்லோருடன் உடன்பாடுண்டு.
பெரும்பாலான “புலியெதிர்ப்பை” மட்டும் கோசக்ங்களாக முன்வைக்கும் பலர் இலங்கையிலும் புலம் பெயர்நாடுகளிலும் இருக்கிறார்கள். தவிர, திஸ்ச விதாரண, சந்திரன் ராஜா, போன்ற இத்தியாதிகள் வேறு பெயர்களில் உலாவும் ஒரே சிந்தனைப் போக்குள்ளவர்கள். இவர்கள்தான் மகிந்த குடும்ப அரசிற்கு தங்கமுலாம் பூசும் விற்பனர்கள்.
மற்றப்படி, போராட்டம் என்பட்து எதோ வன்முறையில் விருப்புக்கொண்டு நடாத்தப்படும் போட்டியல்ல. ஒரு மக்கள் கூட்டம் ஒடுக்கப்படும் போது தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக வன்முறையை நாட வேண்டிய நிலையில் ஆயுதம் ஏந்த நேரிடுகிறது. புலி ஆதரவுத்தளம் என்பதெல்லம் ஒரு சித்தாந்த மேலமைப்பில்லை. ஒருகாலத்தில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஆதரவுத் தளம் இப்போது இல்லை.
தொடருங்கள்…
விரோதிகள்/ துரோகிகள்/ தங்கமுலாம் பூசுபவர்கள் போன்ற மட்டரகமான வார்த்தைகளால் எதிர்க்கருத்தாளர்களைத் திட்டுவது ஒரு எழுத்தாளருக்கு ஏற்புடையதா?
இல்லை உங்கள் தீவிரமான பக்க ஞாயம் புலியெதிர்ப்பே வேண்டாமென்கிறதா?
எதிர்ப்பதாக எழுதிக் காட்டுவது ஒப்புக்கு சப்பாணியா?
//தேசிய இனப்பிரச்சனை தேசியமட்டத்தில் அவ்வினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய விடுதலை இயக்கங்களால் தலமை தாங்கப்படும்// நாவலன்.
தப்பே கிடையாது சந்திரன்ராஜாவோ/ திசவிதாரணயோ/ மற்றும் புலியெதிர்ப்பாளர்களோ புலிகளின் ஆரம்பத்திலிருந்தே அதே காச்சலில் அலையவில்லை. புலிகளமைப்பு படுகேவலமான பாசிசக் கும்பலாகவும் எடுத்த நோக்கிற்கு மாறாக செயற்பட்டு தமிழ் மக்களின் பெருமளவான கொலைக்கும் அழிவுகளுக்கும் இடப்பெயர்வுக்கும் காரணமான பின்னர் எதிர்த்தார்கள். இதிலென்ன தப்பு?
அடிக்கடி வெறும் “புலியெதிர்ப்பாளர்கள்” என்று கிண்டல் இவர்களைக் கிண்டல் செய்யும் உங்களுக்கு புலி அமைப்பால் இழைக்கப்பட்ட சமூக அவலங்களில் எதுவுமே தொpயாதவையா?
அதுவும் போகட்டும் //இனங்களுக்கிடையான ஐக்கியத்தை அரசுக்கெதிரான போராட்டமாகத் திருப்பவேண்டும்//
அதுவும் வாஸ்தவம்.
அத்வாணி/ ராமதாஸ் போன்ற இந்துத்துவ வெறியர்களின் விருப்பத்திற்கு இணங்கி ஏதுமறியாத இஸ்லாமிய சமூகத்தை 24 மணி நேரத்தில் கலைத்தும் கூட்டுக் கொலைகள் பூpந்தும் இனங்களுக்கிடையான ஐக்கியத்தைக் குலைத்தவர்களும் புலிகளே. இது போpனவாதிகளுக்கு பொpதும் சாதகமான அற்புதமான உதவி.
இதை விளங்கிக்கொள்ளவில்லையா? சொல்ல மனசில்லையா?
சொல்லும் எழுதும் வார்த்தை ஒவ்வொன்றுக்கும் சிந்தனையின் பாற்பட்ட தாக்கமொன்றை ஏற்படுத்தும் வலிமையுண்டு அது போல புலியெதிர்ப்பை சொச்சைப் படுத்தி எழுதும் வார்த்தைகளும் அது போலத்தான்.
புலியெதிர்ப்பிற்கான வலுக் குறைக்கும் பணியைச் செய்யும்.. உங்களையும் இலகுவில் இனம் காட்டும்.
மகிந்த ஒன்றும் மாக்ஸ் அல்ல. மகிந்த மாத்திரமல் //பொருளாதார வளர்ச்சி முழுமை பெறாத சமூகத்தில்// யார் அரச அதிகாரத்துக்கு வந்தாலும் மக்களூpமையைத் தங்கத் தட்டில் வைத்துப் பாpசாக வழங்குவதில்லை
அதே வேளை அனைத்து அடக்குமுறைகளையும் எல்லா எதிரிகளையும் ஓரே தரத்தில் எதிர்ப்பதான அறிவுறுத்தலை மக்களுக்கு வழங்கும் போக்கு எந்த வகை முட்டாள் தனத்துக்குள் பார்ப்பது?
எல்லாத்தையும் தட்டி எழுதி /அல்லது தொட்டு எழுதி அறிவாற்றலைக் காட்டலாம் அது தரும் பயனை; காட்டிலும் எதன் தேவை எப்பொழுது எது இப்போ பிரதானமோ அதை எழுதுங்கள் செய்யுங்கள்
.
நன்றி!
சரண்யன்,
உங்களுக்கான பதில் கட்டுரையிலேயே உள்ளதே,
மீண்டும் படித்துப்பருங்கள்:
“1. புலிகளும் அவர்களின் ஆதரவு சக்திகளும்.
இவர்கள் எப்போதுமே மக்களைப் பற்றிச் சிந்தித்ததில்லை. தேசிய விடுதலைப் போராளிகள் என்ற முகமூடியை அணிந்திருக்கும் இவர்கள், தேசிய விடுதலைக்கான அனைத்து ஆதரவுத் தளத்தையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியவர்கள். 1983 ஜூலை இன அழிப்பு நடந்தேறிய காலகட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்துப் போனது. மொத்தத் தமிழகமுமே ஒரேகுரலில் பேரின வாதத்திற்காகக் குரலெழுப்பிற்று. இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காமல் வாக்குத் திரட்ட முடியாத நிலைக்குத் தமிழக அரசியற் கட்சிகள் தள்ளப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலிருந்த முற்போக்காளர்கள் உயிரையும் விலையாக வைத்து உரக்கக் குரல் கொடுத்தனர். உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக சக்திகள் பேரின வாதிகளின் இன அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பினர். முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் தேசிய இன அடக்குமுறைக்கெதிரான தமது பங்களிப்பை வழங்க முன்வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை இரவோடிரவக அனாதைகளாக விரட்டியடித்த விடுதலைப் புலிகளி கிழக்கில் தமது பாணியிலான குரூரமான படுகொலைகளை முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகத் திசைதிருப்பினர். நூற்றுக் கணக்கான சிங்கள மக்களைக் கொன்று குவித்தனர். தஞ்சம் கொடுத்த தமிழ் நாட்டு மக்களுக்கெதிராகவே தமது இராணுவ தர்பாரை நடாத்திக்காட்டினர். தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை என்ற ஒரே கோஷ்த்தின் கீழ் அமைப்பாகிக் கொண்ட எல்லா விடுதலை இயக்கங்களையும் ஆயுத பலம் கொண்டு அழித்தொழித்தனர். நூற்றுக்கணக்கான தமிழ் இழைஞ்ர்களை குழுக்கள் குழுக்களாகக் கொன்றொழித்தனர்.
தேசிய இன அடக்கு முறைக்கெதிரான அனைத்து ஆதரவு சக்திகளையும் அன்னியப்படுத்தி, ஒரு நியாயமான போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்தனர். இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் போராட்டத்திற்கான நியாயம், சிங்கள மக்கள் மத்தியிலும் பிரச்சாராத்திற்குட்படுத்த இயலாதவொன்றாகிப் போனது. இறுதியில், தேசிய இன அடக்கு முறைக்கெதிரான ஒரே குரலாகத் தம்மை முன்நிறுத்திக் கொண்ட புலிகள், பாசிஸ்டுக்களாக வளர்ந்து அழிந்து போயினர். அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுத்லைப் புலிகள், இந்த நிலையிலும் கூட தம்மைச் சுயவிமரிசனத்திற்கு உட்படுத்தத் தயாராகவில்லை. குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையில் கூட இவ்வாறான சுயவிமர்சனத்தை முன்வைக்கத் தயாராகவில்லை. 2008ம் ஆண்டு மாவீரர் உரையில், இந்திய எதிர்ப்பாளராகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்தியாவிடம் அரசியல் பிச்சை கேட்ட நிலையில் தனது சொந்த மக்களிடம் தான் தலைமைதாங்கி நடாத்திமுடித்த கோரக் கொலைகளுக்குக் கூட மன்னிபுக் கேட்கத் தயாராயிருக்கவில்லை. தன்னால் அன்னியப்படுத்தப்பட்ட, சொந்த மண்ணிலிருந்து புலிகளால் அகதிகளாக விரட்டப்பட்ட, தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு சக்திகளிடம் தன்னை, குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையிலாவது சுய விமர்சனத்திற்குட்படுத்தி, மறுபடி அவர்களை அணிதிரட்டத் தயாராகவில்லை. ஆயுதங்களையும், அதிகாரத்தையும் எந்த அளவிற்குப் புலிகள் நம்புகிறார்கள் என்பதையும், மக்கள் மீதான நம்பிக்கையற்ற, மக்கள் விரோதிகள் என்பதையும் புலிகள் மறுபடி மறுபடி வலியுறுத்துவதாகவே இது அமைகிறது”
சபாநாவலன் அவர்களே! சேறடிக்கிறதென்றால் என்ன? என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? நீங்கள் செய்வது தான்
அது. சந்திரன்ராஜா என்னுடைய புனைப்பெயர் தான். அந்த பெயரை விட வேறு ஒரு பெயரில் வேறு எந்த இணையத்தளதிலாவது வந்ததை நீங்கள் நிரூபிக்க முடியுமா?அது தான் என்னுடைய நேர்மை.இது தான் உங்கள்
கற்பளை. நிற்க.புலியெதிர்பு என்பது உங்களு மட்டும் உரியதா? ஏன் சந்திரன்.ராஜா கதைக்ககூடாதா? புலியை எதிர்
கொள்ளுவதற்கு நீங்கள் யாரிடம் போகப்போகிறீர்கள். தமிழ்நாட்டுமக்களிடமா? இந்தியா அரசிடமா? இந்துமத வெறி
அமைப்பிடமா?ஐரோபிய-யூனியனிடமா? அல்லது ஒபாமா விடமா?இறைமையுள்ள அரசுயென உலகநாடுகள்
இலங்கையை ஏற்றுக்கொள்ளும் போது அதை நீங்களும் தமிழ்நாட்டு சினிமாகூட்டமும் வாக்குபொறுக்கிகளும்
மறுதலிச்சா எப்படி?இலங்கைதமிழ்மக்களின் முரண்பாடே!புலம்பெயர்ந்த பத்துலட்சம் தமழ்மக்கள் தான் . இவர்களாலேயே தாய்நாடடில் தோன்றிய விடுதலையுணர்வுகள் நல்லகருத்துக்கள் அழிக்கப்பட்டு பயங்கரவாதம்
தோற்றிவிக்கப்பட்டது.இந்தபயங்கரவாதத்தை இறமையுள்ள அரசு தோற்கடிக்காமல் வேறுஒருவர் வந்தா? தோற்கடிக்கமுடியும்.சமூகசக்திகளான தொழில்சங்கங்களுக்கும் விவசாயகழகங்களுக்கும் முன்உரிமை கொடுங்கள். ஐக்கியஇலங்கையை நோக்கி முன்னேறுங்கள்.
நட்புடன்.. நண்பர்
வடகிழக்குப் பகுதி தமிழர்களின் தாயகம் எனும் கோசத்தின் கீழ் “பாராளுமன்ற சனநாயக வாதிகளின்” (கூட்டணி ?) போரட்டம் முனைப்புப் பெற்றிருந்த வேளையில்தான், 1983 இன வன்முறைகள் நிகழ்ந்தன. அதன்; பின், இலங்கை அரசும் சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு தமிழர்களைப் பாதுகாக்க வடகிழக்கிற்கு அனுப்பி வைத்தன. இது வடகிழக்குப் பகுதி தமிழர்களின் தாயகம் எனும் கோசத்தை வலுப்படுத்துவதாக அமைந்தது. இருந்த போதும் தமிழர்களிற்கான இன உரிமைக்காப் போரடிய சக்திகளால் அதன் நியாயத்தை உலகத்தின் முன் முன்வைக்க முடியாமல் போய்விட்டது என்பதே வரலாறு. எனினும் 1983 ன் பின்னரான 25 ஆண்டுகாலப் போராட்ட வரலாற்றில் கூட வடகிழக்குப் பகுதி தமிழர்களின் தாயகம் என்பதை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கச் செய்ய முடியாமல் போய்விட்டது என்பதுவும் உண்மைதான். இனவிடுதலைப் போரில் முதன்மையானதை, முக்கியமானதை செய்யமுடியாமல் போனதற்குக் காரணமென்ன?
புலிகள் அழிந்து விடுவார்கள் என அரசும் சிலரும் (அல்லது பலரும்) கூறிவருகின்றார்கள். இதில் இரண்டு விதமான பிரச்சினைகள் உள்ளன. புலிகள் தங்கள் முக்கிய வளங்களை இழக்காது பின்வாங்கிச் செல்கின்றன. அகலக்கால் பரப்பி வைத்தால் ஆபத்து எனக்கூறியும் வருகின்றன. ஒடுக்கமான பகுதியல் எதிரியை பலத்த வளத்துடன் எதிரிடுகையில் என்ன நடக்கும். இது ஒரு பிரச்சினை. அதே நேரம் மீண்டும் கொரில்லா முறைக்கு மாறிச் சென்றால்.. இது அடுத்த பிரச்சினை. அரசும் மக்கள் பலத்தில் கட்டியெழுப்பப் பட்ட ஒரு புரட்சிப் படையை வழி நடத்திச் செல்லவில்லை.
சரி புலிகள் ஒடுக்கப்பட்டால் என்ன நடக்கும். …
நாலு பயங்கரவாத அமைப்புகளின் மத்தியில் வாழும் தலைவிதி நமக்குக் கிடைக்கும். வேண்டுமென்றால் புதிதாகச் சிலதும் உருவாகலாம். அது யார் யார் என்பதை நீங்கள் ஏன் உலகமே அறியும்.
முற்றொரு புறம் யுத்த அழிவுகளின் பலனும் சிறுபாண்மை மக்களையே சென்றடையும்.
அத்துடன் புலிகள் இதுவரை உயர்த்திப் பிடித்து வந்த “ஆயுதங்களே யாவும் செய்யும்” என்ற கோட்பாடு மீண்டும் சிதையும்.
உண்மையில் கடந்த பல வருடங்களாக சுயவிமர்சனங்கள், விமர்சனங்களை எதிர்கொள்ளதுல் எதுவும் இன்றி போரடியிருக்கிறோம்.
இறுதியாய் இன ஒடுக்குமுறை மக்கள் பிரச்சினை எனின் அதற்கெதிரான போரட்டமும் தொடரும். என் பங்கிற்கு, உங்கள் பங்கிற்கு பங்கு கொள்ளலாம். அது நம் அரசியல் அறிவில், மக்கள் விடுதலையின் பாலான பற்றுறுதியைப் பொறுத்தது.
ஆனால்.. நாட்டில் வளர்ச்சி பெற்றிருக்கிற அரசியல் சக்திகள், பிராந்திய ஆதிக்கச்; சக்திகள், உலக மயமாக்கம் என்பதன் பி;ன்னாலுள்ள ஏகாதிபத்தியச் சக்திகள் என்பன ஒரு சிறுபாண்மையினத்தை போராடவும் மேலாக போரடவேண்டுமென்ற உணர்வுடன் தொடர்ந்து வாழவும் விட்டுவைக்குமா? அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க ஒரு தலைமை தோன்றுமா?
நட்புடன்
வியார்
தேனீ என்ற இலங்கை அரச சார்பு இணையத்தின் பாசிச ஆதரவு நடவடிக்கைகளைப் புலம்பெயர் சக்திகள் கண்டுகொள்ளவில்லையா?
இந்தியாவில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் எவரையுமே புலியாக முத்திரை குத்தி, இலங்கை அரசின் கொலைவெறியை நிபந்தனையின்றி ஆதரிக்கும் மகிந்தாவின் தமிழ் ஊதுகுழல் தேனீயை அம்பலப்படுத்துவோம்.
மன்னனே ! தேனீயை அம்பலபடுத்த புறப்பட்டு நீங்கள் தான் அம்பலபடபோகிறீர்கள்.
இங்கிருக்கும் சிலருக்கு இலங்கைவரலாறு தெரியாதல்ல. இதை தெரிந்து தாம் செய்கிறோம்
சத்தியாகிரகம் இருந்தோம் துரத்தியடித்தார்கள் பேரினவாதிகள்.பல இனக்கலவரங்களை தூண்டிவிட்டு
ஆயிரக்கணக்காண கொலைகளையும் செய்து பல்லாயிரக்கணக்காண சொத்துக்களையும் அழித்தார்கள:
பேரினவாதிகள் அல்லது சிங்கள அரசு. உலகசட்டங்களை மீறும் வண்னம் எமது அரசியல் தலைவர்களை
பூட்டிய அறையில் வைத்து மிலோச்தனமாக கொலைபுரிந்தார்கள் இந்த கொடியசிங்கள அரசு.இதற்கு பிறகு நடந்தது
தான்………..
பேரினவாதத்துக்கெதிராக பேராடப்புறப்பட்டன எமது இளம்தலைமுறையினர் வீதிவீதியாக வைத்து எரிக்கப்பட்டது
தான்.இது எம்இனத்தாலேயே நடத்திமுடிக்கப்பட்டது.அதுதான் கொடுமையிலும் கொடுமை.பேரினவாதம் செய்த
கொடுமையை எங்கோ ஒரு மூலையில் தள்ளிவிட்டது.இதுமட்டுமல்ல பத்திரிக்கைசுகந்திரம் .கருத்துசகந்திரம்
கூட்டம்கூடும் சுகந்திரம் தொழில்சங்கம் விவசாயிகள்கழகம் எல்லாம் மிருகமயமாக்கப்பட்டது. இதை பேரினவாத
அரசு செய்யவில்லை நிங்கள் யாரை தூக்கி வைத்து கூத்தடிக்கிறீகனோ இவர்கள் தான் இப்ப சொல்லுங்கள் நாம் யாருக்கெதிராக போராடவேண்டும்.?
எனக்கு மூக்கறுந்ததற்காக எது நடந்தாலும் இறக்கும் வரை சீதையை எதிர்ப்பேன் என்ற இராமாயணப் பாத்திரத்தில் வரும் பெண்ணாக மன்னனைப் பார்க்கத் தோன்றுகிறது. தேனி ஒன்றும் மோசமான செயற்பாட்டில் இல்லை.
தேனீ நீணடநாட்களாக புலிகளுக்கு எதிராக கூடு கட்டுது! ஆனால் கூட்டுக்குள்ளை தேன் இல்லை!
தேன் எங்கு இருக்கிறது என்று சொன்னால்
நாமும் தீ கொண்டு தேன் குடிப்போம். எம்சிறீ.
இந்தக்குறளின் பொருள் என்னவோ? சந்திரன்ராஐ; அண்ணா! சத்தியமாய் எனக்கு விளங்கேல்லை!