அவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும் கறுப்பு நிற கிறீஸ் பூசிக் கொண்டவர்கள். விரல்களில் கூரிய போலி நகங்களை அணிந்திருப்பவர்கள். பெண்களைத் தாக்குபவர்கள். அத்தோடு நன்றாக ஓடக் கூடியவர்கள். எந்த உயரத்திலிருந்தும் குதிக்கக் கூடியவர்கள். இப்படிப் பல கதைகள் அம் மர்ம மனிதர்களைப் பற்றி அன்றாடம் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.
பல பெண்கள் இம் மர்ம மனிதர்களால் காயமடைந்திருக்கின்றனர். சாட்சிகளாக அவர்களது உடல்களில் நகக் கீறல் காயங்கள் இருக்கின்றன. தாக்குதலுக்குள்ளாகியும், நேரில் கண்டு பயந்த காரணத்தினாலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் இன்னும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனும்போது அவற்றில் ஏதோ விடயம் இருக்கின்றதென்றே எண்ணத் தோன்றுகிறது. இதனை வதந்தி என்று சொல்லி முழுவதுமாக அப்புறப்படுத்தி விடவும் முடியாது. ஒரு சிறு வதந்தியானது, இலங்கையிலுள்ள சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதியெங்கிலும் ஒரே நேரத்தில் ஒரே அச்சத்தை ஏற்படுத்தி விட வாய்ப்பில்லை அல்லவா?
அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் கலவரத்தின் பின்னணியிலும் இதுவே இருந்தது. தற்போதைய கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களின் அமைதியற்ற சூழலுக்கும் இதுவே காரணமாகியிருக்கிறது. அத்தோடு மர்ம மனிதர்கள் ஒளிந்திருந்த பாழடைந்த வீட்டுக்குள்ளிருந்து காவல்துறை சீருடைகள், ஹெல்மட்டுக்கள், இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எனில் இவ் வதந்தியின் பின்னணியில் நாம் இன்னும் அறிந்து கொள்ளாத ஏதோ ஒரு சக்தியும், செய்தியும் இருக்கத்தானே செய்கிறது? அது என்னவென்று கண்டுபிடிக்க இந்த வதந்தியை ஆராயத்தானே வேண்டும்?
இவற்றை ஆராய்ந்து சொல்லும் என முழுவதுமாக இனி அரசை நம்பிப் பயனில்லை. அது தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. எனினும் இதற்காக சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொள்வதானது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். அத்தோடு அகப்படும் ஒருவரைப் பிடித்து, ஊர்மக்கள் நூறு பேர் சேர்ந்து தாக்குவது என்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதால்தான் காவல்துறையிடம் கொண்டு போய் ஒப்படைக்கின்றனர். ஒப்படைக்கப்படும் நபர்களை விடுதலை செய்துவிட்டு, சந்தேக நபர்களைக் கொண்டு வந்தவர்களைத் தாக்கும் நடவடிக்கையை காவல்துறை இலகுவாகச் செய்து வருகிறது. இதுவரைக்கும் இவ்வாறான சந்தேக நபர்கள் 40 பேரளவில் ஒவ்வொரு ஊர் பொதுமக்களிடமும் அகப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் அனேகமானோர் காவல்படையைச் சேர்ந்தவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போதும், அரசாங்கமானது இவையெல்லாவற்றையும் வதந்தி எனச் சொல்லித் தப்பிக்கப் பார்க்கும் போதும், மறைவாக ஏதோ உள்ளே இருக்கின்றது என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. அது என்ன என்பதற்கான தேடல்தான் எத்தரப்பிலிருந்தும் இன்னும் உறுதியான முறையில் ஆரம்பிக்கப்படவில்லை. காரணம், அவ்வாறு ஆரம்பிக்கப்படுவதன் முதல் எதிரி அரசாங்கமாக இருப்பதுதான். எனவே ஒட்டுமொத்தமாக மக்களின் சந்தேகமானது அரசாங்கத்தின் மீதே எழுந்திருக்கிறது என்பது வெளிப்படையானது.
அரசாங்கத்தின் மீதான இது போன்ற நியாயமான சந்தேகங்கள் எழக் காரணங்களும் இல்லாமல் இல்லை. ஊர்மக்கள் இரவுகளில் விழித்திருந்து பிடித்துக் கொடுத்த சந்தேக நபர்களை காவல்துறையானது எந்த நடவடிக்கையும் எடுக்காது, விடுதலை செய்திருக்கிறது. சாதாரண ஒரு முறைப்பாட்டுக்கே சந்தேக நபர்களை அடித்து உதைத்து விசாரிக்கும் இலங்கைக் காவல்துறையானது, ஒரு ஊரே சேர்ந்து கொடுத்த முறைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் சந்தேக நபர்களை விடுவித்ததெனில், பொதுமக்களுக்கு சந்தேகம் யார் மேல் எழும்? அதுவும் எல்லா ஊர்களிலும் இதே நடைமுறை எனும்போது இவ்வாறான சந்தேகம் எழுவது நியாயம்தானே?
இந்த மர்ம மனிதர்கள் குறித்து பலவிதமான எண்ணக் கருக்கள் மக்கள் மத்தியில் உள்ளன. அவற்றில் பிரதானமாகவும் நியாயமானதாகவும் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு எண்ணக் கருவை முதலில் பார்ப்போம்.
யுத்த காலத்தில் களத்துக்கு அனுப்ப வேண்டி, இலங்கை இராணுவத்துக்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். அதற்காக கிராமங்கள் தோறும், உடனடியாகவும் அவசரமாகவும் இளைஞர்களைத் திரட்டி எடுத்தனர். அவசர காலத்தில் இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பெரிதாக கல்வியறிவு இருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. சம்பளமும் அதிகம். கிராமங்களில் அந் நேரம் இராணுவத்தினர் மிகவும் கௌரவத்துக்குரியவர்களாகக் கருதப்பட்டனர். எனவே வேலையற்ற கிராமத்து இளைஞர்கள் அனேகம்பேர் உடனடியாக இராணுவத்தில் இணைந்தனர். அக் கிராமத்து இளைஞர்களிடம் இராணுவத்துக்குத் தேவையற்றதும் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடியதுமான ‘மனிதாபிமானம்’ நிறைந்திருந்தது. அவர்களை மூளைச் சலவை செய்யாமல் களத்துக்கு அனுப்பினால் எதிராளியைக் கொல்லத் தயங்குவர் என்பதை உணர்ந்த இராணுவம், அவர்களை மூளைச் சலவை செய்தது. போர்ப் பிரதேச மக்களையும் எதிரிகளாகப் பார்க்கும் மனநிலையை அவர்களுக்குள் தோற்றுவித்தது.
மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞர்களால் சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யுத்தம் நிறைவுற்றது. பல ஆண்டுகளாக நீடித்த போரில் அரசாங்கம் வென்று மார்தட்டிக் கொண்டது. இராணுவத்தினர் கொண்டாடப்பட்டனர். காலங்கள் சென்றன. இராணுவத்தில் தேவைக்கும் அதிகமாக இராணுவ வீரர்கள் செறிந்திருந்தனர். பிரதான வீதிகளிலிருந்த இராணுவக் காவலரண்களும் அகற்றப்பட்டதன் பின்னர், அவர்களுக்குச் செய்யவென எந்த வேலையும் இல்லை. அவர்களை மக்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காய்கறிகள், தேங்காய்களை விற்கவும், வீதிச் செப்பனிடல் பணிகளிலும், மைதானத் திருத்த வேலைகளிலும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். இந் நிலையில் ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்கள் தப்பிச் சென்றனர். அரசாங்கம் அதைப் பெரிதாகக் கவனத்தில் கொள்ளவில்லை. வெறுமனே சம்பளம் கொடுத்து வைத்திருப்பதை விடவும் தப்பிச் சென்றது நல்லதென அரசாங்கம் கருதியிருக்கக் கூடும்.
தப்பிச் சென்றவர்களுக்கு பகிரங்கமாக வேறு தொழில் தேட முடியாது. அரசாங்கம் வழங்கிய ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு, செழிப்பானதொரு வாழ்க்கைக்குப் பழகியிருந்த அவர்களுக்கு வீட்டின் தற்போதைய வறுமை நிலை பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவே அவர்களால் செய்ய முடியுமான இலகுவான வேலையாக திருட்டையும், பணத்துக்காக எதையும் செய்வதையும் தவிர்த்து வேறென்ன இருக்க முடியும்? அதுவும் மூளைச்சலவை செய்யப்பட்ட அவர்களிடம் மனிதாபிமானமும் இருக்காது. அவ்வாறானவர்கள்தான் இவ்வாறு சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இரவு நேரங்களில் உலவுகின்றனர் என மக்கள் கருதுகின்றனர்.
அத்தோடு இன்னுமொரு எண்ணம், படித்தவர்கள் மத்தியில் உலவுகிறது. யுத்தம் நிறைவுற்றதற்குப் பிறகு அவசர காலச் சட்டத்தை விலக்கக் கோரி பல மனுக்கள் அரசை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. அச் சட்டத்தை நீக்கினால் பல நஷ்டங்களைச் சந்திக்க நேருமென்ற அச்சம் அரசாங்கத்திடம் உள்ளது. எனவே ஊர்கள் தோறும் ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தினால் அச் சட்டத்தை நீக்க வேண்டிய தேவையிருக்காது என அரசாங்கம் எண்ணியிருக்கலாம் எனவும் பலர் கருதுகின்றனர்.
அதே போல அண்மைக்காலமாக அரசுக்குப் பல நெருக்கடிகள் பொதுமக்கள் மூலமாக ஏற்படத் தொடங்கியுள்ளன. கட்டுநாயக்கவில் அரசாங்கத்தை எதிர்த்து நின்ற ஊழியர்களின் ஆர்ப்பாட்டம், சேனல் 4 கிளப்பிய சிக்கல்கள், கலப்படப் பெற்றோல் இறக்குமதியால் எழுந்த பிரச்சினைகள், தற்போதைய கலப்பட சீமெந்தால் எழுந்துள்ள பிரச்சினைகள், விலைவாசி அதிகரிப்பால் எழுந்துள்ள கொந்தளிப்புக்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை நிலை எனப் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ள நிலையில் தற்போது அரசாங்கம் உள்ளது. இப் பிரச்சினைகளின் உண்மை நிலையை அறியவென மக்கள் கிளம்பினால், தற்போதைய ஆட்சிக்கு அது பங்கம் விளைவிக்கும். எனவே இவற்றின் மீதுள்ள மக்களின் கவனத்தைத் திசை திருப்பவேண்டியும், இவ்வாறான மர்ம நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதுவும் அரசியலில் ஈடுபாடு கொண்ட பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
‘எல்லாள மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு மன்னனுக்குச் சொந்தமான போர்வாளைக் கண்டுபிடித்துத் தன்னகத்தே வைத்திருக்கும் அரசனின் ஆட்சி நீடிக்கும்’ என்ற ஆதி நம்பிக்கைக்கிணங்கி, ஜனாதிபதி ஒவ்வொரு ஊருக்கும் இராணுவத்தினரை இரவில் அனுப்பி அவ் வாளைத் தேடுகிறார் என்பது பாமர மக்களின் கருத்து.
எவ்வாறாயினும் எல்லோரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இம் மர்ம மனிதர்கள் அரசைச் சார்ந்தவர்கள் என்பது மட்டும் எல்லோரதும் ஒருமித்த ஏக கருத்தாக இருக்கிறது. அவ்வாறில்லையெனில் அதனை நிரூபிக்க வேண்டியதுவும், சம்பந்தப்பட்ட மர்ம மனிதர்கள் யாரெனக் கண்டுபிடிப்பதுவும் அரசின் அத்தியாவசியமான கடமையாக உள்ளது.
இவற்றுடன் நியாயமான இன்னுமொரு கருதுகோளையும் கோடிட்டுக்காட்ட வேண்டியுள்ளது. அரசுக்கெதிரான சதி வேலைகள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கூர்மையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவது மறுக்க முடியாத உண்மை. நிச்சயமாக அரசின் செல்வாக்கை மட்டுமே குறைக்க கூடிய இந்த மக்கள் பீதியால் அரசு அடையும் இலாபங்களை விட நட்டங்களே அதிகம். அத்துடன் உலகே மக்கள் எழுச்சியால் ஸ்திரமற்ற நிலையிலுள்ள இக்கால கட்டத்தில், மேற்கு நாடுகளுடன் ஆரோக்கியமான உறவை கொண்டிராத இலங்கை இவ்வாறான விஷப்பரீட்சையில் இறங்குவதற்கான வாய்ப்பு குறைவே. ஊரால் ஒருவன் துரத்தப்படும் போது காவல் நிலையத்தை நோக்கி ஓடுவது யதார்த்தமே. ஊரே சேர்ந்து துரத்தும் போது காவல் நிலையம்தானே தஞ்சமடைய ஒரே வழி.
///இந்த மக்கள் பீதியால் அரசு அடையும் இலாபங்களை விட நட்டங்களே அதிகம்./// அப்படியாயின் அரசு இதில்ச் சம்பந்தப் பட்டிருக்காது எனச் சொல்ல வருகிறீர்களா?
///ஊரால் ஒருவன் துரத்தப்படும் போது காவல் நிலையத்தை நோக்கி ஓடுவது யதார்த்தமே./// அதுவும் சரி. அப்படியாயின் காவல் நிலையத்துக்குள்ச் சென்றவர்கள் எங்கே?
1.முடிவுக்கு வருவதற்கு இன்னும் சில காலங்கள் தேவை அதற்குமுன் அலச வேண்டிய விடயங்களையும் நான் தொட்டு காட்ட முனைந்தேனே தவிர அரசு செய்யவில்லை என உறுதியாக கூற முற்படவில்லை. கட்டுரையின் ஊகங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளேன்.
/////இவற்றுடன் நியாயமான இன்னுமொரு கருதுகோளையும் கோடிட்டுக்காட்ட வேண்டியுள்ளது//////
2.பொது மக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற வில்லை.
கிறிஸ் பூசிய சிறிலங்கா அரசபயங்கரவாத படையினர் மலையகம் கிழக்கு மக்களின் இயல்புவாழ்வை சீர்குலைப்பது உண்மை. ஆனால் எந்தவொரு சிறிலங்காமுஸ்லீம் நாடளமன்ற உறுப்பினரோ இதை கண்டிக்க கடிந்து கொள்ள தயாரில்லை. மேலும் ஒருபடி மேல்சென்று சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கு சார்பாக பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். அத்துடன் பள்ளிவாசல்களும் தம்பங்கிற்கு சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இதிலிருந்து மிகத்தெளிவாக தெரிவது 80 வருடகாலமாக சிறிலங்காமுஸ்லீம்கள் சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து அவர்களின் விருப்பை செவ்வெனே நிறைவு செய்கின்றனர். அது நிட்சயம் தமிழருக்கெதிரான நிகழ்சி நிரல்தான் என்பதில் ஐயமில்லை. அது எதுவென வரும் வாரங்கள்/ மாதங்கள் அப்பட்டமாக இனம்காட்டும்.
இங்கு கட்டுரையாளர் சிறிலங்காஅரசின் பொறுப்புக்கூறலை மிக மென்மையாக உணர்த்துவதில் அதிக சிரத்தை எடுத்துள்ளார். ஆனால் அதற்கு உடந்தையாகவுள்ள சிறிலங்காமுஸ்லீம் நாடளமன்ற உறுப்பினர்கள் பற்றியோ பள்ளிவாசல்களின் நடத்தை பற்றியோ மறந்தும் ஒரு சிறு கண்டன சொற்களைத்தானும் பாவிக்காது. தம்மினத்தின் 80 வருடகால நயவஞ்சக அரசியலை பாதுகாத்துள்ளார்.
ஒரு பின்னூட்டக்காரர் ஒருபடி மேலே போய் இது சிறிலங்கா அரசிற்கெதிரான சதியென்றுள்ளார். நல்லகாலம் முஸ்லீம்களின் நோன்பை குழப்பும் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் புலிகளினதும் கூட்டுச்சதி என்று சொல்லாது விட்டுவிட்டார்.ஐநா நிபுணர்குழு சனல் 4 ன் குற்றச்சாட்டென தொடர்கையில் சிறிலங்கா அரசபயங்கரவாதம் தமது தமிழின படுகொலையை உரிமை மறுப்பை சர்வசாதராணமாக தொடர்கையில் இந்த கிறிஸ் மனித விளையாட்டு அதற்கு ஒரு தூசு என்பது சிறிலங்கா தேசப்பக்தருக்கு புரியாதிருப்பது புதுமையான விடயமல்ல.
மறுதலையாய் எந்தவொரு இனியொரு தமிழ்(???)பத்தி எழுத்தாளரும் தமது பந்தியுடன் தொடர்பற்ற நிலையிருந்தால் கூட மறக்காது ஈழத்தமிழரின் தேசீயத்தையும் அதற்கான போராட்டைத்தையும் கொச்சைப்படுத்தாது விடமாட்டார். அப்போதான் அவர்களது மனது பூரணஅமைதிகொள்ளுதோ இல்லை சைக்கோதனத்தின் சாதரண வெளிப்பாடோ தெரியவில்லை.
///ஆனால் எந்தவொரு சிறிலங்காமுஸ்லீம் நாடளமன்ற உறுப்பினரோ இதை கண்டிக்க கடிந்து கொள்ள தயாரில்லை. மேலும் ஒருபடி மேல்சென்று சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கு சார்பாக பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். அத்துடன் பள்ளிவாசல்களும் தம்பங்கிற்கு சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இதிலிருந்து மிகத்தெளிவாக தெரிவது 80 வருடகாலமாக சிறிலங்காமுஸ்லீம்கள் சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து அவர்களின் விருப்பை செவ்வெனே நிறைவு செய்கின்றனர்.///
அப்படியாயின் 80 வருடகாலமாக சிறிலங்கா தமிழர்களும் சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து அவர்களின் விருப்பை செவ்வெனே நிறைவு செய்கின்றனர் என்று சொல்ல வருகிறீர்களா? பிரபாகரன் உட்பட அனைத்துப் புலித்தமிழர்களும் இதைத்தானே செய்தனர். அப்படியிருக்க இன்னொரு இனத்தைச் சாடுவது எந்தவகையில் நியாயமாகும்?
ஈழத்தமிழர் சிங்களப் பேரினவாதத்திற்கெதிராய் 4இலட்சம் தமிழர்களின் உயிரை பலியிட்டு போராடும் நிலையில் எப்படி “80 வருடகாலமாக சிறிலங்கா தமிழர்களும் சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து அவர்களின் விருப்பை செவ்வெனே நிறைவு செய்கின்றனர் என்று சொல்ல வருகிறீர்களா?” எனும் குதர்க்க கேள்வி எழுகிறது???
என்ன பிரபாகரன் சிறிலங்கா அரசின் துணைகொண்டு சிறிலங்கா முஸ்லீம் காடையர்களை தாக்கினார்களா??? இல்லையே. சிறிலங்கா முஸ்லீம்கள்தான் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் துணையுடன் கிழக்கில் அப்பட்டமான தமிழின அழிப்பை மேற்கொண்டார்கள் இலங்கைவாழ் தமிழினத்தை காட்டிக்கொடுத்தார்கள்.
என்ன சிறிலங்கா முஸ்லீம்கள் செய்த காரியத்தை தாங்களும் செய்து வயிறு வளர்ப்பதலா! லங்காபுவத் பாணியில் கதைவிடுகிறீர்கள்!
வட தமிழனுக்கு கீழ் இருப்பதைக்காட்டிலும் சிங்களவனுக்கு கீழ் இருப்பது பாதுகாப்பானது என்ற முடிவிற்கு முஸ்லிம்கள் 80 வருடங்களுக்கு முன்னரே வந்து விட்டனர் என்பதை நிர்மலன் புரிந்து வைத்திருப்பது சந்தோசம்.
முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழர்கள் கூட உணர்ந்து விட்டார்கள். உலகமுழுவதும் அகதியானது தமிழ் மொழிக்காகவா? தமது சொந்த வாழ்விற்காகவா?-துரை
சகோதரர் நிர்மலனுக்கு இங்கு கிரீஸ் மனிதர்கள் என்ற மர்மத்திற்கான காரணங்கள் ஊகிக்கப்பட்டு கட்டுரையாளரால் நிரல் படுத்தப்பட்டுள்ளதே தவிர தீர்ப்பு கூறப்படவில்லை. அவரால் விடப்பட்ட இன்னுமொரு காரணத்தை நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இக்கட்டுரை காரணங்களை பட்டியலிடும் பணியை செய்துள்ளதே தவிர தமது கருத்துக்களை மக்களிடத்தில் திணிக்கும் இரண்டாந்த்தர செயலை செய்ய முயற்சித்தது குறைவே.
எனது பின்னூட்டமும் அதைக்கருத்திற்கொண்டே எழுதப்பட்டதாகும்.
கட்டுரையாளரின் ஊகிப்பில் நீங்கள் மாறுபட்டிருந்தால் அதை நீங்கள் இக்கருத்துப்பகுதியில் கூறியிருக்கலாம். மாறாக இனங்களை சாடி பேச வேண்டிய அவசியம் தேவையற்றது.
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது
ஆராய்ந்து முடிவுகளுக்கு வர ஒவ்வொருவரும் சுய சிந்தனை திறனுடனே பிறந்துள்ளனர் என்பதையே. . இலங்கையில் சிறுபான்மையினரின் அவல நிலைக்கு காரணம் அவர்களை சுயமாக சிந்திக்க விடாத உங்களை போன்றவர்களது ‘கருத்து’ திணிப்பு’களும் ஒன்று என்பதும் சந்தேகமற்றது.
கட்டுரையாளர் வெறும் ஊகத்தின் அடிப்படையில் இக்கட்டுரையை வரையவில்லை. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த வாக்குமூலம். கிறிஸ்மனிதர்கள் என சந்தேகிப்பட்டு மக்களால் பிடிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் படைத்தரப்பை சேர்ந்தவர்கள். சந்தேக நபர்கள் மீதான விசாரணையை காவல்துறை நடத்த ஆர்வம்காட்டாமை ….. என சாட்சிகளின் அடிப்படையிலேயே கட்டுரையை எழுதியுள்ளார். இவ்வளவும் தெரிந்தும் சிறிலங்கா அரசஇயந்திரத்திற்கு துணைபோகும் சிறிலங்கா முஸ்லிம் நாடளமன்ற உறுப்பினர்களையும் பள்ளிவாசல்களையும் கட்டுரையில் சுட்டிக்காட்ட தயங்கியுள்ளார்.
தாங்கள் ஒரு படி மேலேபோய் ஊகமெனும் அடிப்படையில் சம்பவத்தை சிறிலங்கா அரசு செய்திருக்க முடியாது. கிறிஸ் மனிதர்களெனும் சந்தேக நபர்களை பொலிஸ் பாதுகாப்பது நியாயமென கருத்துச் சொல்லியுள்ளீர்கள்.
அக்கரைபற்று பிரதேச பள்ளிவாசல்கள் கிறிஸ் மனிதர்களிற்கும் சிறிலங்கா அரசபடைக்கும் சம்பந்தமில்லை அது சாத்தான்களின் வேலையென மூளைச்சலவை செய்கின்றனர்.
ஆக கிறிஸ் மனிதர்களின் பின்புலத்தை சிறிலங்கா முஸ்லிம் நாடளமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமயத்தலைவர்களும் நன்கு அறிந்துள்ளனர். இதனால் தமதுஇன மக்களிற்கு எதிர்கால பாதிப்பில்லை சிலவேளை இதனூடக சிறிலங்கா அரசபயங்கரவாதத்திடமிருந்து சலுகை கிடைக்கவுள்ளது. அதனால்தான் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் விருப்பிற்கமைய தொழிற்படுகிறார்கள். காத்தான்குடியில் இணையத்தளத்தை பார்த்திற்காக முஸ்லிம் மாணவிகளையும் அவர்களை பாதுகாக்க முனைந்த பொலிசார்மீதும் தாக்குதல் நடத்திய பள்ளிவாசல் பல ஊர்களின் நிம்மதியும் பலபேர் காயப்பட்டும் சிலர் கொல்லப்பட்டுள்ள வேளையில் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தை காப்பாற்ற முனையும் மர்மம் என்ன?
இப்போ கிறிஸ் மனித விடயம் தமிழர்பகுதிக்குள் வந்துவிட்டது. தமிழர்கள் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். இன்னும் என்ன என்ன நடக்குமோ தெரியாது. ஆனால் தாங்கள் உட்பட சிறிலங்கா முஸ்லிம் நாடளமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமயத்தலைவர்களும் சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்கும் போது நான் விரும்பியோ விரும்பாது சிறிலங்கா முஸ்லிம் செயல்பாடு பற்றி பேசுவது தவிர்க்க முடியாது.
சுயசிந்தனைபற்றி சிறிலங்கா முஸ்லிம் ஒருவர் பேசுவது பெரும் நகைப்புக்குரிய விடயமே! தினகரனிலும் ரூபவாகினியிலும் லங்காபுவத்திலும் பார்த்தோமே தங்கள் அபாண்டமான இட்டுக்கட்டுக்களையும் புனைவுகளையும் தமிழின அவதூறுகளையும் கலந்த கருத்துதிணிப்பை.
அவசரகாலச் சட்டத்தை நீக்காமல் இருப்பதற்காக , நாட்டில் அமைதி இல்லை என்று காட்டுவதற்கு
இராணுவ புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி, இந்த சேட்டைகளை அரசு செய்வதாகக்
கூறப்படுகிறது. இருப்பினும் மக்கள் போராட வீதிக்கு வந்துவிட்டார்கள் என்பது நல்ல
செய்தி. அங்குள்ள மக்களால் போராட முடியாது, என்று இங்கு கூறுபவர்கள் இனியாவது
உண்மையை உணரவேண்டும்.
இன்று 18 .08 .2011 வாழைச்சேனை,மட்டக்களப்பில் பொது மக்கள் ஒரு கிரீஸ் மனிதனை பிடித்து போலீஸ்சாரிடம் ஒப்படைத்தனர் போலீஸ்சார் அவனை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர் அவனை பிணை எடுப்பதக்கு
ஸ்ரீ லங்கா இராணுவ புலனாய்வு நீதிமன்றம் வந்து இவர் தங்கள் பிரிவை சேர்ந்தவர் என்று கூறி பிணை கேட்டனர் நீதிபதி அதை நிராகரித்து இரண்டு வாரம் சிறையில் வைக்கும் படி உத்தரவு இட்டுள்ளார்.
இந்த மனிதர் ஒருசிங்களவர்
இலங்கையில் கிறீஸ் மனிதகளால் என்ன நடக்கிறதென்பதைவிடவும் இது வரைகாலமும் என்னநடந்ததென்பதை கட்டுரையாளார் சுட்டியிருக்கவேண்டும்.ராணுவபேய்கள் கறுப்புப் பேய்களென உடையை மாற்றியிருக்கலாம். ஆனால் எல்லாப் பேய்களுமே எப்போதும் இதைத்தான் செய்கின்றார்கள்..கட்டுரையாள்ர் முஸ்லிம் என்பதால் முஸ்லிம் இதனைச்செய்யவில்லை என மூடிமறைக்கப் பார்க்கின்றார் எனும்நிர்மலனின் வாதம் சரி. எந்தநேரத்தில் எது செய்வார்களென்று தெரியாதமுஸ்லிம்களாலே தானே உலகம்நாறிக்கிடக்கிறது.
மட்டக்களப்பு தாண்டியடி நடராசானந்தாபுரம் பகுதியில் மறைந்திருந்த நபர்களை பிடிக்க முயன்ற இளைஞர்கள் மீது சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 18பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த சைட் . பார்க்கவும் .
http://www.thinakkathir.com/?p=16756
கட்டுரையாளர் அரசின் கடமை எதுவென முடித்திருக்கிறார். இவரைப்பொறுத்தவரை கடமைகளை சரிவரச் செய்யும் அரசாக கருதுகிறார் போலும். சொந்த நாட்டுமக்களையே பெண்கள் குழந்தைகள் என்றும் பாராது குண்டுவீசி ஆயிரக்கணக்கில் கொண்றொழித்தது முஸ்லீம் சகோதரருக்கு தெரியாதோ என்னமோ.
-பறிகொடுத்த தமிழன்.
////ஆக கிறிஸ் மனிதர்களின் பின்புலத்தை சிறிலங்கா முஸ்லிம் நாடளமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமயத்தலைவர்களும் நன்கு அறிந்துள்ளனர்.////
இவ்வாறு ஊகங்களை சத்தியம் என கூறி மக்களிடம் திணிக்கும் வக்கிர எழுத்தை எழுதுபவனல்ல நான்.
////சுயசிந்தனைபற்றி சிறிலங்கா முஸ்லிம் ஒருவர் பேசுவது பெரும் நகைப்புக்குரிய விடயமே! தினகரனிலும் ரூபவாகினியிலும் லங்காபுவத்திலும் பார்த்தோமே////
நண்பரே! திரும்பவும் கூற விரும்புகிறேன், இங்கு இனவாதம் தேவையற்றது. உங்களது துவேச பார்வைக்கு எனது பெயர் உறுத்தலை தருகிறது என்பதற்காக எனது பெயரை நான் மாற்றப்போவதில்லை. இலங்கை தமிழர்களிடத்திலும் பல வேறுபட்ட கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்டவர்கள் உள்ளது போல முஸ்லிம்களிடத்திலும் இருப்பர். உதாரணமாக இலங்கை அரசியலில் நீங்கள் ஒரு கொள்கையுடனும் டக்லஸ் கருணா போன்றோர் முரணான கொள்கையுடனும் உள்ளனர். இதையே நான் அவரவர்களின் சுயமான சிந்தனை, முடிவெடுக்கும் உரிமை என கூற வந்தேன். அத்தனி மனித சுதந்திரத்தை மதிக்க, ஜீரணிக்க நாம் பழக வேண்டும். “எனது முடிவையே அனைவரும் ஏற்க வேண்டும்” என்பது நாகரிகமற்ற வாதம்.அவ்வாறே எனது கருத்தை ஒரு தனி மனிதனின் பார்வையாக கொள்ளுங்கள் ஒரு சமூகத்தின் பார்வையாக நோக்க வேண்டியதில்லை
எழுதுபவரின் பெயரை பார்ப்பதை விட்டு கருத்துக்களை பார்க்க பழகுங்கள். அல்லது அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல பிரம்மை ஏற்படும்.
வவுணதீவில் பிரதேசவாசிகள்- படையினர் முறுகல்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 ஆகஸ்ட், 2011 – 16:21 ஜிஎம்டி
Facebook Twitter பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக .
தாக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் இலங்கைப் இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினரால் தாக்கப்பட்ட பலர் அடிகாயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்று வியாழக் கிழமை ‘க்ரீஸ் பூதங்கள்’ என்கின்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவலை அடுத்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட பீதியால் படையினருடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே தாம் தாக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.
தொடர்புடைய விடயங்கள்வன்முறை, தாக்குதல்நேற்றிரவு முழுவதும் பிரதேசத்தில் பெரும் பதற்றம் காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாண்டியடி கிராமத்திற்கு அருகிலுள்ள மறைவிடமொன்றில் மோட்டார் சைக்கிளில வந்த இராணுவ சீருடை தரித்தவர்களினால் 4 பேர் இறக்கி விடப்பட்டதை சிலர் கண்டதாக அங்கு பெரும் பீதி பரவியுள்ளது.
இதனையடுத்து, உள்ளுர் மக்களினால் அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டபோது அங்கு வந்த விசேட அதிரடிப் படையினருக்கும் கிராம வாசிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றனர்
ஆண்கள் ,பெண்கள் என பாராமல் பலரும் இதன் போது தடிகளால் தாக்கப்பட்டதாக அடி காயங்களுக்கு உள்ளான மக்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில், பொலிசாரால் கைது செய்யப்பட்ட கிராமவாசிகள் 18 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை நிதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இவர்கள், அடிகாயங்களுக்காக தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரின் கருத்துக்களை பெற முடியவில்லை.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியின் பெண்கள் விடுதிக்குள் மர்ம நபர்கள் ஊடுருவியுள்ளதாக எழுந்த சந்தேகத்தையடுத்து அங்கும் பெரும் பீதி பரவியது.
பொலிஸ் மற்றும் இராணுவம் அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அச்ச நிலை காரணமாக மாணவிகள் பலர் விடுதியை விட்டு வெளியேறி வீடுகளுக்கு திரும்பியள்ளனர்
மூலம் பிபிசி தமிழ்.
சிறிலங்கா அரசபயங்கரவாதத்தை மூடிமறைக்க முயலும் பிரபல சிறிலங்கா முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் அறிக்கை !
சிறிலங்கா முஸ்லிம்களை இனம் காண்பீர் எம்மினத்தை ஆபத்திலிருந்து பாதுகாப்பீர் இலங்கை வாழ் தமிழர்களே! இவர்களை சகோதரர் என நம்பிக்கெட்டது போதும் போதுமென போதும்.
Lankamuslim.orgOne World One Ummah
கிறிஸ்பூதம் விடயத்தில் அவதானம் தேவை!
with 4 comments
முஹம்மத் ஜான்ஸின்
தற்போது நாடெங்கிலும் சூடுபிடித்துள்ள விடயமாக கிறிஸ் மனிதன் விவகாரம் உள்ளது. இந்த விடயத்தில் மக்கள் மிக நிதானமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் கிறிஸ் மனிதர்களில் உண்மையான கிறிஸ் மனிதர்கள் எனவும் திருடர்கள் எனவும் இரண்டு பிரிவுகள் உள்ளன. உண்மையான கிறிஸ் மனிதர்களின் செயற்பாடு பெண்களை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேவேளை திருடர்கள் கிறிஸ்பூத பீதியை சாதகமாகப் பயன்படுத்தி திருட்டுக்களை செய்ய முற்படுகின்றனர். இந்த வகையில் இரண்டுவகையான மனிதர்களும் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
பொகவந்தலாவையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடி பின்னர் அடித்து கொல்லப்பட்ட இரண்டு நபர்களும் வியாபாரிகள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய மனிதர்களுக்கும் கிறிஸ் பேய் பட்டம் வழங்கப்படுகிறது.
கிறிஸ் மனிதர்கள் நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது . நாட்டில் மூன்று இலட்சம் படைவீரர்கள் இருந்தும் இந்த கிறிஸ் மனிதர்களை பிடிக்க முடியாமல் திண்டாடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு விடயம்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் உள்ள காலங்களில் என்ன செய்ய வேண்டுமென இஸ்லாம் நமக்கு கற்றுத் தந்துள்ளது. ஏற்கனவே அகில இலங்கை ஜம்இயதுல் உலமா இந்த விடயத்தில் செய்ய வேண்டிய சில துஆப் பிரார்த்தனைகளை எடுத்துக்கூறியுள்ளனர். அந்த துஆக்களை செய்வது அவசியமாகவுள்ளது. அதே வேளை சூரதுல் கஹ்பின் முதல் பத்து வசனங்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் ஓதி வந்தால் இந்தப்பிரச்சினை அந்த வீடுகளை அனுகாது. மேலும் ஓர் ஊரில் இந்தப்பிரச்சினை காணப்பட்டால் அந்த ஊரே சேர்ந்த வீடுகளில் பெண்களும் பள்ளிகளில் ஆண்களும் சேர்ந்து இந்த பத்து ஆயத்துக்களுடன் யாஸீன் சூராவையும் ஓதி இந்தப்பிரச்சினையிலிருந்து ஊரைப் பாதுகாக்குமாறு இறைவனிடம் துஆப்பிராத்தனை செய்து வந்தால் இன்ஷா அல்லாஹ் இவ்வாறான குழப்பம் விளைவிக்கக் கூடிய மனிதர்கள் தாமாக ஒதுங்கி விடுவர்.என்று உலமாக்கள் கூறுகின்றனர்.
இந்தப் பிரார்த்தனையைச் செய்கின்ற அதேவேளை ஊரில் பாதுகாப்பு ஏற்பாடகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு மஹல்லாவிலும் பாதுகாப்புக்குழுக்களை உருவாக்கி இரவு பகலாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இவ்வாறான பூதங்களிலிருந்தும் கள்வர்களில் இருந்தும் பாதுகாப்புப் பெறலாம். ரோந்து செல்பவர்கள் கூரான ஆயுதங்கள் எதையும் கொண்டுசெல்லக் கூடாது. தடிகள் கம்பிகள் என்பவற்றை வைத்துக் கொண்டு இருவர் இருவராக இரண்டு மணித்தியாளத்துக்கு ஒரு குழு என்ற அடிப்படையில் ஊரைச் சுற்றி வளம் வரலாம். குறிப்பாக தனியாக உள்ள வீடுகள் கண்கானிப்பின் கீழ் கொண்ட வரப்பட வேண்டும்.
தற்செயலாக கிறிஸ்மனிதன் பிடிபட்டு பாதுகாப்பு கருதி அவனைத் தாக்க நேர்ந்தால் அவனுக்கு உயிரிழப்பு ஏற்படும் விதமாக தாக்குதல் நடத்தக் கூடாது. சட்டத்தை கையிலெடுப்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் கூறி வருவதால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே படைமுகாமினுள் கிறிஸ் மனிதன் புகுந்தான் எனக்கூறி படை முகாம்களை தாக்கிய வேளைகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் கண்டிப்பாக தவிரிக்கப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் சிலவேளைகளில் உள் நோக்கங்களை கொண்டிருக்கலாம். அவ்வாறாக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம்களாகிய நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போது நோன்பு காலமாக உள்ளதால் ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலுமுள்ள சிங்கள தமிழ் பிரமுகர்களையும் இராணுவத்தினர் கடற்படையினர் பொலிஸார் போன்றவர்களை அழைத்து இப்தார் நோன்கு திறக்கும் நிகழ்ச்சிகளை வைத்து எமது ஏக தெய்வக் கொள்கையையும் இஸ்லாத்தைப் பற்றியும் அவர்களுக்கு விளக்கலாம். இதனூடாக அவர்களில் சிலர் ஹிதாயத்துப் பெறலாம். இன்னா செய்தாரை உவா;க்க அவர் நாண நன்நயம் செய்து விடல் நன்றே என்ற வல்லுவரின் கூற்றுக்கிணங்க எம்மை துன்புறுத்த முனைபவர்களுக்கு நாம் விருந்துபசாரம் வழங்குவதனூடாக அவர்களை வெட்கித் தலைகுனிய வைக்க முடிவதுடன் எமது சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம்.
இந்த விடயத்தை ஊர் மத்திய பள்ளியவாசலோ அல்லது தனிப்பட்ட பள்ளிவாசல்களாகவோ செய்து கொள்ளலாம். அண்மையில் நீர் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மத போதகர்கள் அரசியல்வாதிகள் சிங்கள பிரமுகர்கள் முஸ்லிமல்லாத அயலவர்களை அழைத்து சிங்களத்தில் ஒரு மார்க்க விளக்கவுரையும் இப்தார் நிகழ்ச்சியும் நடத்தினர். இந்த நிகழ்சியினால் சிங்கள பிரமுகர்கள் மனமகிழ்ந்து சென்றதாக அந்நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சிலர் தெரிவித்தனர். இவ்வாறான நிகழ்ச்சிகள் கிறிஸ் மனித அச்சுறுத்தல் உள்ள இடங்களில் மட்டுமன்றி நாட்டின் சகல பாகங்களிலும் சகல பள்ளிவாசல்களாலும் முஸ்லிம் சமூகசேவை அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்பட முடியும்.
யாஅல்லாஹ்! எமது நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களை முறியடிப்பாயாக! மேலும் இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் மிகவிரைவில் ஹிதாயத்தை கொடுப்பாயாக! ஆமீன்!
Rate this: i3 Votes
Share this: Share
FacebookTwitterStumbleUponPrintDiggEmail
தமிழர்களின் அழிவில் தங்கள் வாழ்வை மேம்படுத்திய தமிழர்களை விட,இந்த கிரீஸ்மனிதன் மோசமானவா? ஏன் இன்ன்மும் தமிழரையும் உலகினையும் ஏமாற்ரி
வாழ்கின்றீர்கள். தமிழருக்குள் வாழும் கிறீஸ் மனிதரை முதலில் கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஏன் பிறரைப்பற்ரி கவலைபடுகின்றீர்கள். முதலில் உங்கள் வீட்டில் உள்ள கள்வர்களை கண்டுபிடியுங்கல்: உங்களால் முடியுமா, முடியாதா? அல்ல்து
அந்தக்கள்வர்களில் நீங்கழுமொருவ்ரா? -துரை
//இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போதும், அரசாங்கமானது இவையெல்லாவற்றையும் வதந்தி எனச் சொல்லித் தப்பிக்கப் பார்க்கும் போதும், மறைவாக ஏதோ உள்ளே இருக்கின்றது என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. அது என்ன என்பதற்கான தேடல்தான் எத்தரப்பிலிருந்தும் இன்னும் உறுதியான முறையில் ஆரம்பிக்கப்படவில்லை. காரணம், அவ்வாறு ஆரம்பிக்கப்படுவதன் முதல் எதிரி அரசாங்கமாக இருப்பதுதான்// என்ற வரிகளால் தனது கருத்தைச் சொல்லிய ரிஷான் அதன் பினநர் மக்களிடையே நிலழும் அபிப்பிராயங்களையும் கூறகிறார்.
//எல்லோரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இம் மர்ம மனிதர்கள் அரசைச் சார்ந்தவர்கள் என்பது மட்டும் எல்லோரதும் ஒருமித்த ஏக கருத்தாக இருக்கிறது. அவ்வாறில்லையெனில் அதனை நிரூபிக்க வேண்டியதுவும், சம்பந்தப்பட்ட மர்ம மனிதர்கள் யாரெனக் கண்டுபிடிப்பதுவும் அரசின் அத்தியாவசியமான கடமையாக உள்ளது.// என்று எழுதியவர் தமிழ், முஸ்லீம் கட்சிகள் என்ன செய்திருக்கிறாற்கள், செய்யவில்லை, செய்ய வேண்டும் என்றும் எழுதியிருந்தால் அவரது ஆக்கம் நடுநிலை கொண்டதாக இருந்திருக்கும்.
எடுத்த எடுப்பில் முஷ்லீம்களைத் தாக்குவதில் நிர்மலன் அவசரப்படுகிறார்.
துரை முழங்காலையும் மொட்டைத் தலையையும் மடிச்சுப் போடுகிறார்.