காஷ்மீரில் அந்நிய பயங்கரவாத சக்திகள் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுகிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. ஆனால் காஷ்மீர் மக்களோ இந்திய, பாகிஸ்தான் இரண்டு அரசுகளுமே தங்களை ஒடுக்குவதாகவும். தங்களை நேரடியாக கட்டுப்படுத்தும் இந்தியாவிடமிருந்தும் மறைமுகமாக தங்களின் மேலாதிக்கத்தை நிறுவும் பாகிஸ்தானிடம் இருந்தும் தங்களுக்கு விடுதலை வேண்டும் என்றும் காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். கடந்த பலமாதங்களாக நிலமை இந்தியாவுக்கு எதிராக மோசமாகியுள்ள நிலையில் மேலதிகப் படைகளை அனுப்பியும் பிரோயனம் இல்லை. இப்போது இன்னும் எவளவு படைகளை காஷ்மீருக்கு அனுப்பலாம் என்று இந்தியா யோசிக்கிறதே தவிற காஷ்மீரிகளின் அரசியல் சுதந்திரம் பற்றிப் பேச இந்தியா தாயாரில்லை. இந்நிலையில் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை போலீஸôருக்கு எதிராக மீண்டும் கல்லெறி சம்பவம் நடந்தது. இதையடுத்து போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சோப்பூரில் மசூதி ஒன்றில் பகலில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பியவர்கள் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை மத்திய பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக,
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க, காஷ்மீரில் உள்ள அனைத்து பிரிவு மக்களுடனும் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். சொந்த நாட்டு மக்களுடன் பேச்சு நடத்த எங்களுக்கு எந்தவித தயக்கமும் கிடையாது.காஷ்மீருக்குள் வெளிநாட்டு தீவிரவாத சக்திகள் புகுந்து கொண்டு, பிரிவினைவாதிகள் என்ற பெயரில் செயல்படுகிறார்கள். கலவர நேரங்களில் காஷ்மீரில் வாழும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றார். சிதம்பரத்தின் இந்த விஷம் தோய்ந்த இந்தப் பேச்சில் இருக்கும் உண்மை காஷ்மீரில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக பண்டிட்கள் எனப்படும் இந்துக்களைத் தூண்டி விட்டு போராடும் காஷ்மீரிகளின் சுய நிர்ணய போராட்டத்தை நசுக்குவதுதான்.