காவிரி நதி நீரை தமிழகத்திற்கு அளிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று, வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில், இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் கர்நாடக அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், தங்களது மாநிலத்தில் வறட்சி நிலவுவதாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா தெரிவித்த கருத்துக்கு எதிராக தனியாக பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரில் புதுச்சேரிக்கு கூடுதலாக ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட கோரி, அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு அரசியலுக்கான ஆதரவைத் தேடும் வழக்குகளுக்குள் முடங்கிப் போயிருக்கிறது காவிரி நீர்.
1990. Central Government and Regional Autonomy by Kalaignar Muttuvel Karunanithy. Some one should translate it into Kannada, Hindi and English. at least.