சென்னைப் புத்தகக் கண்காட்சி நிகழ்வை ஒட்டிய பல தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காலச் சுவடு பதிப்பகம் தனது நூல் வெளியிடூ ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த வெளியீட்டு விழாவை நிராகரிக்குமாறு மே 17 இயக்கம் உட்பட பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்திய பார்ப்பன அதிகாரத்தின் வெளிப்பாடாகக் கருதப்படும் காலச்சுவடு சஞ்சிகையும் அதன் பதிப்பகமும் முற்போக்கு எழுத்தாளர்களால் நிராகரிக்கப்பட வேண்டும் என்று மே 17 இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காலச்சுவடு பதிப்பகம் தமிழ்வளர்சிக்கு முக்கியமான பல நூல்களை வெளியிட்டுள்ளாது. ஈழம் தொடர்பாகவும் மிக முக்கியமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தலித் எழுத்துகளை தொடர்ந்து ஆதரித்தும் வந்துள்ளது. காலச்சுவடை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் அவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியும். இன்னும் காலச்சுவடை பார்ப்பண இதழ் என்றும் தமிழுக்கு எதிரானவர்கள் என்றும் விமர்சிப்பது தவறான செயல்.
காலச்சுவடு கண்ட மாற்றின் காரணம் என்ன? அவ்வப்போது தோன்றும் வியாபார வெளியைப் பயன்படுத்திக் கொள்கிறது என்றாகாதா?? அதன் மேட்டுக்குடி ஆசிரியர் மட்டம் அப்படியே தான் இருக்கிறது என்பதும் தெரியாதா???
பார்ப்பனர்கள் உள்ள அமைப்புகளோ பத்திரிக்கைகளோ மட்டுமல்ல அவர்கள் இல்லாமலேயே அவர்களால் ஆட்டி வைக்கப்படும் அமைப்புகளும் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவை பார்ப்பனச் சார்பு இல்லாதது போல வெளியில் காட்டிக் கொள்ளச் செய்கின்றன. ஒரு அமைப்போ அல்லது தனி மனிதரோ பார்ப்பனச் சார்பு உடையவரா இல்லையா என்பதைச் சோதித்துப் பார்க்கும் உரைகல் இது தான்.
எல்லா வகுப்பு மக்களிடையேயும் மிகக் குறைந்த அறிவுத் திறன் முதல் மிக அதிகமான அறிவுத் திறன் கொண்டவர்கள் உள்ளது போல பார்ப்பனர்களிலும் உண்டு. ஆனால் கல்வி வேலை வாய்ப்பு சமூக பொருளாதார நடவடிக்கைகள் என்று வரும் போது பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைச் செய்கின்றனர். இது ஒடுக்கப்பட்ட வகுப்பிலுள்ள திறமைசாலிகள் கீழ்நிலை வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய நேரிடுவதானது மனித வளத்தை வீணாக்குகிறது. இதை விடக் கொடுமை என்னவென்றால் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைச் செய்வதால் நிர்வாகம் சீர்கெட்டு நாட்டு முனனேற்றம் பாதிக்கப்படுகிறது. இது கொடூரமான தேசத் துரோகம். இந்த தேசத் துரோகச் செயலைத் தடுத்து நிறுத்தி பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி விடாமல் தடுத்து அப்படிப்பட்ட வேலைகளைச் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டு அதனால் காலியாகும் உயர் நிலை வேலைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகளை இடம் பெற வைக்கும் பார்ப்பனர்களும் பார்ப்பன அமைப்புகளும் தான் பார்ப்பன ஆதிக்கச் சார்பு இல்லாதவையாக நினைக்க முடியும். இதைச் செய்யாமல் மழுப்பும் யாரும் பார்ப்பன ஆதிக்கச் சார்பை விட்டவர்களாக நினைக்க முடியாது. மேலும் இந்த உரைகல்லில் சிக்காமல் நழுவிச் செல்லும் ஒடுக்கப்பட்ட வகுப்புத் தலைவர்களையும் பார்ப்பன ஆதிக்கத்திற்குத் துணை போகும் துரோகிகளாகத் தான் நினைக்க முடியும்.
இந்த உரைகல்லில் உராய்ந்து பார்த்தால் ‘காலச் சுவடு’ சந்தேகத்திற்கு இடமின்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முற்றிலும் விரோதமான பார்ப்பன ஆதிக்கச் சார்பு அமைப்பு தான் என்று தெளிவாக விளங்கும்.
இராமியா
அருள் அவர்கள் த்லித்துகளின் உள் சாதி அரசியலை மைஅயப்படுத்தியே பேசுவார்கள், இன்றை பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்துகளுக்கு இடையிலான பிரச்சனையை பேசுவார்கள் ஆனால் இதன் ஆரம்ப காரண கர்த்தாவான பார்ப்பனர்களை ஒதுக்கிவிடுவார்கள்.. மேலும் முல்லை பெரியாறு பிரச்சனையில் போராடும் மக்களை தமிழ் சாதி என்று எழுதியிருக்கிறார்கள் என்ன செய்யலாம். ஒன்று பட்டும் போராடும் மக்களுக்கு சாதி என்று கூப்பிட்டு சாயம் பூசும் இந்த நாய்களை என்ன செய்யலாம்..
சாதிக் கொடுமைகளுக்கு ஆரம்ப கால காரணகர்த்தாக்கள் மட்டுமல்ல நண்பரே! இப்பொழுதும் சாதிக் கொடுமைகள் அனைத்திற்கும் பார்ப்பனர்கள் தான் காரணம். பார்ப்பனர்களிடையே உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் மிகக் குறைந்த ஊதியம் கொண்ட உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைத் தடுத்து விட்டால் அதனால் காலியாகும் உயர்நிலைப் பணிகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு (அதாவது பிற்ப்டுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்) விநியோகம் செய்தால் அவர்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளின் கூர்மை மழுங்கத் தொடங்கி விடும். பார்ப்பனர்கள் அவர்களுக்கு உரிய பங்கை விட அதிகம் பெறாத படி கண்டிப்பாகப் பார்த்துக் கொண்டால் சாதிக் கொடுமைகள் மறைந்து விடும்.
பாராட்டுக்கள் இராமியா
இந்த உரைகல்லில் சிக்காமல் நழுவிச் செல்லும் ஒடுக்கப்பட்ட வகுப்புத் தலைவர்கள் என்றால் என்னவென்று விளங்கவில்லையே.
அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைப் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடாமல் மற்ற (தேசத் துரோகிப்) பார்ப்பனர்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்கிறவர்கள் இதை எதிர்த்து திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அப்படிப்பட்ட கடினமான வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைச் சுட்டிக் காட்டி அதற்கு எதிரான விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த மறுப்பதும் ‘மறப்பதும்’ தான் இந்த உரைகல்லில் சிக்காமல் நழுவுதல் என்பதற்குப் பொருள்.