தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே கடந்த 3 தினங்களாக நிலவி வந்த அரசியல் பேரம் இன்று மாலை முடிவுக்கு வந்தது.காங்கிரஸ் கட்சிக்கு அது விரும்பியபடியே 63 இடங்களை ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 இடங்களை கொடுக்க முன்வந்தும், காங்கிரஸ் 63 இடங்களை கேட்பது நியாயம்தானா? என்று கடந்த வெள்ளிக்கிழமை இரவில் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி,காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி குறித்து தமது கட்சியின் உயர் நிலை செயல்திட்டக் குழு கூடி முடிவு செய்யும் அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த சனிக்கிழமையன்று மாலை நடைபெற்ற திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாகவும், மன்மோகன் சிங் அரசுக்கு வெளியிலிருந்து பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசிலிருந்து விலகும் முடிவை திமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுகவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளிப்பதற்காக டெல்லி சென்ற திமுக மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் – திமுக இடையே மீண்டும் தொடங்கிய சமரச பேச்சுவார்த்தையையடுத்து, கடிதம் அளிப்பதை மாலைக்கு தள்ளி வைத்தனர் .
இதற்கிடையே கருணாநிதியுடன் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு பேசினார்.மறுபுறம் டெல்லி வந்த திமுகவினருடன் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேசி வந்தனர்.
இதனையடுத்து காங்கிரஸ் ஒரு நாள் கால அவகாசம் கோருவதால், ராஜினாமா முடிவை நாளைக்கு (இன்றைக்கு) தள்ளிப்போடுவதாக திமுக துணை பொதுச் செயலாளரும், துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேற்று மாலை அறிவித்தார்.
இந்நிலையில் நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன் மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது திமுக இவ்வாறு ராஜினாமா என்று அறிவித்து பரபரப்பை கிளப்பாமல், முன்னரே பிரசனையை பேசி தீர்த்திருக்கலாமே என்று கோபத்துடன் கேட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் பேச்சுவார்த்தையை தொடர சோனியா விரும்பியதால், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை தயாநிதி மாறன் மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் இன்று பல முறை சந்தித்துப் பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாகவும், காங்கிரஸ் கேட்டபடியே 63 தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதித்ததாகவும் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தமிழனைத் தெலுங்கந்தான் ஆள வேண்டும் எனும் தலைவிதி போலும்.எல்லாத் தெலுங்கனும் ஓரணீயில் நின்றூ சங்கத்தமிழனை சரிக்க நினைக்கிறார்கள்.நம் பொல்லாத காலம் போக்கிரிகள்,புறம்போக்குகள் தமிழனைக் குட்டுவது நிற்பதாய் இல்லை.ஆறாவது முறயாய் தமிழனை தமிழனின் தலைவரை அரியண ஏற்றூங்கள்.அன்பார்ந்த தமிழரே தமிழனைத் தமிழனே ஆள வேண்டும்.
நீங்கள் ஆள விரும்புகிறீர்களா ஆளப்பட விரும்புகிறீர்களா? ஆளப்படுவது நானாயின் ராமன்ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன