காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.மத்தியில் மதவாத பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு அமைவதை தடுக்க, இடதுசாரிகள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் எந்த நிலையிலும் காங்கிறஸ் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம். காங்கிரஸ் அல்லது அல்லது பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு மாற்றாக, மூன்றாவது அணி ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காவிட்டால், நாங்கள் எதிர்கட்சியாக இருப்போம் என்று கூறினார்.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க அனுமதிப்பீர்களா என்று கேட்டதற்கு, எந்த சூழ்நிலையிலும், பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்தங்கியுள்ளது பற்றி கேட்டதற்கு, தென் மாநிலங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது பற்றி எதிர்காலத்தில் பரிசீலனை செய்வோம். கேரளாவிலும், மேற்கு வங்க மாநிலத்திலும் இடதுசாரிகள் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளன. இந்த மாநில மக்கல் தொடர்நது ஆதரவு அளிப்பார்கள். நாங்கள் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி அல்லாத அரசு அமைய ஆதரவு தரும்படி மக்களிடம் கேட்டோம். மக்கள் எங்கள் அரசியல் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று கருதுகின்றோம் என்று ராஜா கூறினார்.