தேர்தல் பொதுக் கூட்டமொன்றில் சீமான் கருத்துத் தெரிவிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
தமிழனின் தாய் நிலமான ஈழ மண்ணில் தமிழ் இனத்தின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி ஈழத்து உறவுகளை கொன்று குவிக்க சிங்கள இனவெறி அரசிக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியை 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்பதை லட்சியமாய் ஏற்று காங்கிரசை கருவருக்க அடித்தளமாக இப்பொதுக் கூட்டத்தை அமைத்துள்ளோம்.
இந்த நாட்டில் எல்லாமே இலவசமாகிவிட்டது. சாப்பாடு, துணி, வீடு, மனைவி என எல்லாமே இலவசமாகத் தருகிறார்கள். ஒரு மொத்த சமுதாயத்தையே சோம்பேறிகளாக்கிவிட்டதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
மக்களே, இந்தத் தேர்தலில் உங்களுக்கு நிறைய பணம் தருவார்கள். தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். காரணம் அது உங்கள் பணம்தான். 2ஜி ஸ்பெக்ட்ரமில் அடித்த கொள்ளையின் ஒரு பகுதிதான் அது. ஆனால் வாக்களிக்கும்போது மட்டும், மீண்டும் இப்படி ஒரு கொள்ளை அரங்கேறி, நாடே நாசமாகப் போக வேண்டுமா என்பதை எண்ணிப் பாருங்கள்.
காங்கிரஸ் கட்சி பஞ்சமா பாதகங்களை கொஞ்சமும் கூசாமல் செய்து வரும் கட்சி. என் அன்பான திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் பலருக்கும் இந்த உண்மை தெரியும். அவர்களும் குமுறலோடுதான் காங்கிரஸைப் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்தத் தேர்தலோடு, காங்கிரஸ் கட்சி தடம் தெரியாமல் அழிந்து போகவேண்டும். அதுதான் நடந்த கொடுமைகளுக்கெல்லாம் ஒரு தீர்வாக இருக்கும்.
இனி வரும் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க அத்தனை கட்சிகளும் அச்சப்பட்டு ஒதுங்கி ஓட வேண்டும். அந்த நிலையை இந்தத் தேர்தலில் ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சீமான்.








44 long years.Tamilnadu is under the corrupt,selfish rule of the dravidian parties,which was once blessed by the Great Rajaji.My father freedom fighter Nellai Jebamanin opposed both the dravidian parties and i am following his footsteps meticulously. i am contesting from mylapore constituency, if i win a change will come into tamilnadu politics,a good blessed change. please vote for me and tell your friends in mylapore to vote for me. 94440 18543
என்ன பாவ்ம் செய்தாரோ இந்த சீ,சீ.சீமான். 2ஜி ஸ்பெக்ட்ரமில் அடித்த கொள்ளைபர்ரி
பேசுகின்றாரே. இதில் யாரெல்லாம் மாட்டுப்படப் போகின்றார்களென்பது இவருக்குத் தெரியுமா? ஊழல், பண்மென்றால்
சொந்த மனைவிகூட சம்பந்தப்ப்ட்டிருக்கக் கூடிய காலமல்லவா இது.
எப்படி இவர் காங்கிரசை விட மற்ர கட்சிகளெல்லாம் ஊழல்களில் சம்பந்தப்படவில்லையென
எதிர்பார்க்கின்றார்? புலிகளென்றும், அண்னன் பிரபாகரனென்றும் இவரால் போற்ரப்படுவோரின்
வாரிசுகள் இந்திய அரசியல் வாதிகழுடனும், இலங்கை அரசுடனும் தங்கள் கறுப்புப் பணங்களை (தமிழரின் இரத்தக்கறை படிந்த)
வைத்து வியாபாரம் செய்வதே அறியாதவ்ராச்சே,. அல்ல்து தெரிந்தும்தான்
ந்டிப்புலகில் ஜீவிக்கின்றாரா? -துரை