காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக போராளிகள் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சர்வக்கட்சி பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மூத்த பத்திரிகையாளர் தலீப் படுகோங்கர் தலைமையிலான இக்குழுவில், தகவல்துறை ஆணையாளர் எம்.எம்.அன்சாரி, பிரபா கல்வியாளர் பேராசிரியர் ராதாகுமார் ஆகியோர் இடம் பெறுவர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் அரசியல் தலைவர் யாரும் இடம்பெறாத நிலையில், நான்காவதாக மேலும் ஒரு உறுப்பினர் இக்குழுவில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்திட, மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்த 8 அம்ச செயல்திட்டத்தில், சர்வக்கட்சி பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்படும் என்பது முக்கிய அம்சமாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது. மாவோயிஸ்டுகளுடனான பேச்சுக்களில் தொடர்பாளராகப் பணியாற்றிய தொழர் ஆசாத்தை சுட்டுக் கொலைசெய்துவிட்டு மோதலில் இறந்துபோனதாக அறிவித்த இந்திய மத்திய அரசின் பேச்சுவார்த்தைத் தந்திரம் குறித்து கஷ்மீர் தலைவர்கள் அவதானமடைய வேண்டும் என்று கருதப்படுகிறது.