Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கவிதைகளுடனும் கவிஞர்களுடனுமான ஒரு நெடுந்தூரப்பயணம் – பகிர்வு 3 : கவிதா(நோர்வே)

இனியொரு... by இனியொரு...
03/03/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா
0 0
13
Home பிரதான பதிவுகள் | Principle posts

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்…

உலகில் உள்ள அனைத்தும் போல இலக்கியமும் மாறிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் போர் குணத்துடனும் சில சமயங்களில் பெரும் கூச்சலுடனும் இன்னும் பல சமயங்களில் மொளனித்தும் தமக்கென்ற மாற்றத்திற்கு வழி செய்து கொள்கின்றன.

இந்த மரபுக் கவிதைகள் என்னதான் சொல்கின்றன? எந்த வகையில் அவை மரபுக்கவிதை என்ற பெயரைச் சூடிக்கொள்கின்றன என்று பார்த்தால், மரபுக் கவிதை என்பவை அறம், ஒழுக்கம், மதபோதனை, என்பன பாடுபொருளாகவும், புலமையின் வெளிப்பாடு என்பதும் இங்கே முக்கித்துவம் பெற்று நிற்ப்பதைக்காணலாம் இந்த மரபுகவிதைக்களும் ஒரு காலத்தில் புதுமையானதாவே காணப்பட்டிருக்கும் என்றால் இன்று காணும் புதுக்கவிதையே எமது நாளைய மரபுகவிதை என்பதே உண்மை.

மரபுக்கவிதை காலத்தால் முந்தியது. தொன்றுதொட்டு வரும் தன்மையை மரபு என்கிறோம். தோல்காப்பியம் என்னும் நூல் மூலம் மூவாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய இலக்கண நூல் செய்யுள் தொடர்பான எழுத்து மரபு, பாடுபொருள், யாப்பு ஆகியவைகளைக் கொண்டிருக்கும். இவ்வாறுதான் எழுதப்படல் வேண்டும் என்ற கட்டுக்குள்ச் சுழன்று சொற்கள் தேடி கருத்துப் புதியனவாயினும் இலக்கணத்தின்படி பாடுதல் மரபுக்கவிதை. மரபுக்கவிதை தொழிலுக்கு ஏற்றதாக, மன்னர்காலத்தில் புகழ்பாடுதலாகவும், கோயில்களில் இறைபுகழ் பற்றியதாகவும் இருந்த நிலையை அறியலாம்.

1890களில் மேலத்தேய நாடுகளில் மரப்பை புறக்கணித்து ஆரம்பித்த வசனநடைக் கவிதைகள் பிறர் இதுவரை பேசா பொருட்களைக் கொண்டதாக புறப்பட்டு வந்தன. கவிதையின் கரு முக்கியமே ஒழிய சொல்லோசையில் காட்டுவதன்று என எம் பாரதியும் வசனநடைக் கவிதைகளை நேசித்தவரானார்.

மரபுவழிக் கவிஞர்கள் மூலம் விமர்சிக்கப்பட்டும், யாப்பில்லாக்கவிதை, இலகு கவிதை, வசனநடைக்கவிதை என்ற பெயர்களைச் சூட்டிக்கொண்டு இன்று புதுக்கவிதையென்ற பெயர் கொண்டு எம் மனங்கவர்ந்து நிற்கின்றது. புதுக்கவிதை என்பது வாழ்க்கையின் கண்ணாடி எனச் சொல்லாம். வாழ்வின் நிஜத்தை, சிக்கல்களை, எதிர்புகளை மற்றுமன்றி பொதுவுடமை, நாட்டுப்பற்று, தலித்தியம், பெண்ணியம் போன்ற சமூதாய அமைப்பு முறைகளை எடுத்தியம்பும் விம்பமாகவும் அமைகிறது.

ஈழத்தில் மரபுக்கவிதைகள் பற்றியும் சரி புதுகவிதைகள் பற்றியும் சரி பேசும்போது கவிஞர் உருத்திரமூர்த்தி பற்றி குறிப்பிடாமல் போவது சுலபமல்ல. பாரததேசம் கொண்ட தமிழனுக்கு ஓரு மகாகவி போல ஈழதேசம் கண்ட மஹாகவியின் சில கவிதைகள் இன்று பார்ப்போம்

மஹாகவி உருத்திரமூர்த்தி:

தமிழ்க் கவிதை இலக்கியத்திற்கு புதுமுகம் கொடுத்த தந்தை பாரதிக்குப் பின்னான காலத்தில் சுயம்புவான அடையாளங்களோடு மரபுக்கவிதையிலும், புதுக்கவிதையிலும் தன் மகத்துவத்தை நலைநிறுத்திக்கொண்டவர் கவிஞர் மஹாகவி. கவிஞர் புதுக்கவிதைகளை மட்டுமல்ல மரபுக் கவிதைகளையும் கையில் எடுத்தவர். அளவெட்டியைச் சேர்ந்த இவரது கவிதைகள் 1940களில் நாளேடுகளில் பிரசுரமாகத்தொடங்கின. கவிதைகள் மட்டுமல்லாமல் சிறுகதை, நாடகம் என்று பல துறையில் கால்பதித்தவர். மஹாகவி சமகால ஓட்டத்தினை இணங்கண்டு மரபுவழி நயத்திற்குப் பதிலாக பேச்சோசைத் தன்மையை புகுத்தியது மட்டுமல்லாது பாநாடகம், வில்லுப்பாட்டு ஆகிய துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவர்.

கவிஞர் மஹாகவி எழுதி பல நாடகங்களில் பாவிக்கப்பட்ட புகழ் பெற்ற ஒரு கவிதையினைப் பார்ப்போம். சிலநாட்களுக்கு முன் வேறு ஒரு சந்தர்பத்தில் எனக்கு அறிமுகமான இந்தப்பாடல் பல நேரங்களில் அடிக்கடி நினைவில் வந்து போவதாகவும் நான் முனுமுனுக்கும் வரிகளாகவும் ஆகிவிட்ட கவிதையென்றாகிப் போனது.

‘சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்

சிலவேளை இதைவந்து கடல் கொண்டு போகும்

கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்

கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும்

வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்

வெறிகொண்ட புயல்நின்று கரகங்கள் ஆடும்

நெறிமாறு பட நூறு சுழிவந்து சூழும்

நிலையான தரைநீரில் இலைபோல் ஈடாடும்

இருளோடு வெளியேறி வலைவீசினாலும்

இயலாது தரவென்று கடல் கூறல் ஆகும்

ஒரு வேளை முகில் கீறி ஒளி வந்து வீழும்

ஒரு வேளை துயர் நீள உயிர் வெந்து சாகும்’

இந்தப் பாடல்வரிகள் ‘புதியதோர்வீடு’ பாநாடகத்தில் இருந்து காணப்பெற்றவை. இது போலவே ‘புதியதோர்வீடு’ நாடகம் முழுவதும் பேச்சோசைத் தமிழிலேயே கவிதை புனைந்தவர். கடலின் துணையோடு வாழும் மீனவர்களின் வாழ்நிலை கூறும் கவித்துவம் நிறைந்த இந்தக் கவிதை மரபுக்கவிதையின் இயல்பும், பாரதி சொன்ன எளிமைத் தமிழும் தெளிவாய் சீரான அலைகளாய் மீனவர்கள் வாழ்க்கைமுறை துயர்சுமந்து எம் கால் நனைத்துச் செல்வதை கவிதையினூடு உணரலாம்.

தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுள் ஒன்றான யாழ்நூலக எரிப்பு (1984) என்பது பலர் மனதில் அக்கினித் துண்டொன்றை விட்டெறிந்தது. அழிக்கப்பட்ட தமிழ்நூல்கள் ஈழத்தமிழ் இலக்கியங்கள் என்பன ஈடுஇணையற்றவை, அவைகளில் பல எவராலும் நாம் மீள்ப்பெற முடியாதவதை. இந்த யாழ்நூலக எரிப்பின் பின் சிலர் ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளின் கையெழுத்து பிரதிகளை பொறுக்கி எடுத்து மீண்டும் அச்சுவடிவாக்கினர். கவிஞர் மஹாகவி தான் வாழ்ந்த காலத்தில் சில நூல்களே அச்சுவடிவில் கண்டார். அவையாவன ‘வள்ளி 1955, குறும்பா 1966, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் 1966 கண்மணியாள் கதை1968, கோடை1970’ ஆகியனவாகும். எனினும் அவருடைய அனைத்துக் கவிதைகளும் நமக்கு இன்னும் எட்டவில்லை என்பது திண்ணம்.

சாலையோரங்களில் வைக்கப்படும் சுமைதாங்கிகள் பற்றியும் அதுபோல் ஒன்று ஆலயத்திலும் இருப்பது பற்றிய கேள்வியோடும் நகைச்சுவை உணர்வோடு கூடிய அவருடைய ஒரு கவிதை பேசுகிறது.

‘வழியெல்லாம் கற்கள் வைத்தார் தமது

சுமையினை இறக்கிச் சும்மா நிற்க

பேரிய பழியெலாம் சுமக்க பாவியர் கூடி

வாயிலும் வளைவுமாய் வளர்ந்த

கோயிலும் கல் குடியிருந்தினரே’

பாதைகளில் வைத்த சுமைதாங்கிகள் வழிச்சுமையை சுமக்கவென்றும், வாழ்க்கைப் பழிச்சுமைதாங்க என்று ஆலயத்திலும் இதுபோல் ஒன்று இருக்குதென்றும் தானே விடையையும் தந்து செல்கிறார் இந்த கவிதையில்.

மஹாகவியின் பல கவிதைகளில் அசைவையும் மெலிதான இசையையும் இனம் கணலாம். அவை வாழ்க்கைத் தத்துவங்களோடும், தினசரிப் பெழுதுகளோடும் கைகோர்த்து படிப்போரின் மனமேடையில் நடமிடுவதை வாசகராய் நாம் உணரலாம்.

மூத்த ஈழக் கவிஞர்களில் ஒருவரான உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளை மித்ரா பதிப்பகம் ‘பொருள் நூறு’ என்னும் தலைப்பில் வெளிக்கொணர்ந்திருக்கிறது.

கவிஞர், மஹாகவி என்ற புனைபெயரில் மட்டுமல்ல மாபாடி, பண்டிதர், மகாலட்சுமி, பாணன், வாணன் போன்ற பெயர்களிலும் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் மஹாகவி யாழ்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வையே தனது பாடுபொருளாகிக் கொண்டவர். கிராமிய வழக்குச்சொற்களை கவிதைகளில் உட்புகுத்தினார். கற்பனாவாத அலங்காரச் சொல்லடுக்குகளும் செய்யுள்களும் எழுதப்பட்ட காலத்தில் மஹாகவி பேச்சு மொழியில், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் சமூக முரண்பாடுகளையும் யதார்த்தமாக பேசுபவையாக இருந்தன.

காலத்திற்கேற்ப நாம் மாறவேண்டும் என்பதை வலியுருத்தியும் அப்படி மாறாதவை இலக்கை அடையாது என்பதையும் அவர் கவிதையொன்று சொல்கிறது

‘அம்பு வில் மூதாதையர் கருவி

ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்

போர்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்

போயினான்…

ஏய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்

காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது

வீரவான் விழுந்தான்… விலாவில்

ஓர் எழும்பின்றி ஒடித்தது குண்டே’

ஒரு கலைப்படைப்பில் கருத்துச் சொல்வது ஒரு நிர்ப்பந்தம் அல்ல என்றாலும் நவீன இலக்கியப் படைப்பாளிகள் பலர் சமூக அக்கறை குறித்து கேள்விகள் எழுப்பிய வண்ணமே இருக்கின்றனர். அதைப்போலவே மஹாகவியின் கவிதைகள் காத்திரமானவை அல்ல என்றும், மஹாகவி என்ற பெயர் தானே தமக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் எனவும் பல விமர்சனங்களைத்தாண்டி கவிஞர் உருத்திரமூர்த்தி அவர்கள் மறுக்கப்படமாட்டாத இருபதாம் நூற்றான்டின் இறுதியில் எழுந்த ஒரு சாதனைக் கவிஞராகவும் ஈழத்துத்தமிழ் இலக்கியங்களில் மரபுக் கவிதையூடாகவும், புதுக்கவிதையினூடாகவும், அதிக அளவு மாறுதல்களை ஏற்படுத்தியவராகவும், கவிதை இலக்கிய மறுமலர்ச்சி வரலாற்றில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

……

காற்றுவெளியில் கைவீசி நடப்பதென்பது தனி உற்சாகம். நதியோரம் பாதம் பட்டு நனையும் நேரம் சிலிர்த்துப் போகின்றோம். எதிர்பாராத தருணங்களில் மழைத்துளி படும்போதும், காற்றில் எம்மை கொடுத்து அது முகம் தழுவும் போதும் எற்படும் பரவசத்தை நல்லதொரு கவிதையால் மொத்தமாய் கொடுத்து விட முடியும். அதே கவிதைகளால் போர்களத்தில் காற்றை எதிர்த்து வரும் வில்அம்பு, ஈட்டி முதல் இன்றைய தோட்டாக்கள் மார்பு கிழிக்கும் வலியையும் உயிருடன் உணரச்செய்ய முடியும். பெரும்பான்மை ஆண் கவிஞர்களே கவிதைகளை ஆண்ட காலம் கடந்து இன்றைய உலகில் பெண் கவிஞர்களின் எழுச்சி சுட்டிக்காட்டத் தக்கது.

அடுத்து இக்காலத்து கவிதாயினியின் ஒருவரின் ‘நாம் புதியவர்கள்’ என்ற கவிதைக்குள் நுழைந்து பார்ப்போம்…

தொடரும்…

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கையின் பாரிய நிதியளிப்பாளர்களாக சீனா!

Comments 13

  1. thamilmaran says:
    16 years ago

    மகாகவி நம் மண்ணூக்கு பெருமை சேர்ப்ப்வர் கலீல் கிப்ரான் போல யதார்த்தவாதி.அவரது குறூம்பாக்கலை மரைந்த சுஜாதா ஜப்பானிய் கைக்கூ என வர்ணீத்துள்ளார். நிலாவரைக் குளம் போல் வற்றாத கவி வளமாய், வெள்லைக் கடற்கரை,கசூனா பீச் போல் அழகாய் அவர் கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள்.நன்றீ.

  2. Athavan says:
    16 years ago

    மஹாகவி பற்றி அறிந்திருந்தாலும் அவருடைய கவிதைகள் மிகக்குறைவாகவே படித்திருக்கேன். அவரைப்பற்றிய மேலதிகமான தகவல்கஞக்கு நன்றி. சிறப்பான பதிவு. தொடர்ந்து செய்யுங்கள். இலக்கியத்திற்கும் எனக்குமான தொடர்பு அறுந்துவிட்ட நிலையில் தமிழ் மேல் மீண்டும் காதல் பிறக்கிறது. தொடருங்கள் பகிர்வை…

    • ANKAYATPIRIYAN says:
      16 years ago

      ஆதவன் என்ற ஒரு கவிஞர் டென்மாக்கிலிருக்கிறார்.நான் நினைக்கும் ஆதவன் இவராகத்தானிருப்பின் அவரும் அமரர் மகாகவி. து.உரத்திரமூர்த்தியின் ஊரான அளவெட்டியேதான்.இவருடைய வீடு அமரர் து.உருத்திரமூர்த்தியின் வீட்டிலிருந்து 500 மீற்றர் தூரத்திலேயே இருந்தது.நான் நினைக்கும் அவராக இல்லாது விடினும் ….இங்கே எமது நினைவில் என்றென்றும் வீற்றிருக்கும் பெருமைக்கும் மதிப்புக்குமுரிய அமரர் மகாகவி து.உருத்திரமூர்த்தியின் நினைவினை இங்கே இச்செய்தி வாயிலாக கொண்டு வந்தமைக்கு நன்றி செலுத்துகின்றேன்.மகாகவி அவர்களை எனக்கு மிக நன்றாகவே தெரியும்.மகாகவி பற்றி இன்னொரு இணையத்தளத்தில் கருத்தெழுதிய போது புதுக்கவிதைக் கவிஞர் திரு.மு.மேத்தாவிற்கு முன்பாகவே எங்கள் மகாகவி புதுக்கவிதை எழுதியவர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.மகாகவி வாழ்ந்த அளவெட்டிக்கிராமச் சூழலே அவரை புதிய சிந்தனைக்குட்படுத்தி புதுக்கவிதை எழுத வைத்தது.அளவெட்டிக் கிராமத்தில் கூத்தன்சீமா என்ற சிறபகுதி உண்டு.அங்கு தெருவோரத்தில் சந்தைகூடுவது வழக்கம்.அந்த இடத்தில் தெற்குப்புற தெருவோரத்தில் அமரர:.இ.இராசாவின் சைக்கிள் திருத்தும் கடைக்க எதிராக ஒரு சுமைதாங்கி இருக்கின்றது
      .அந்த சுமைதாங்கியும் இங்கே பாடுபொருளாக கவிஞரின் கவிதையில் இடம்பெற்றிருக்கின்றது.கவிஞர் அவர்கள் யாழ் கச்சேரியில் போக்குவரத்து திணைக்களத்தில் அதிகாரியாக பணியாற்றியவர்..தனது வீட்டிலிருந்து நடந்து வந்து அம்பனைத் தொடராக பெரு வயலாக இருக்கும் அந்த பெரு வயலை ஊடறுத்துச் செல்லும் வீதியால் போகும் பஸசுக்காக வெள்ளவாய்க்காலின் மேல் போடப்பட்டிருக்கும் பாலத்திலிருக்கும் மதகின் உட்கார்ந்தபடி நண்பர்களுடன் பேசிக் கொணடிருப்பார்.அம்பனை அளவெட்டி பெரும் வயல்பரப்பும் தெருநிரை நிழல்வாகை-பனை மரங்களும் நிற்கும் காடுஇசிகள் மனதிற்கு இரம்மியமாக இருக்கும்.
      மாடு கலப்பை பட்டை ஏர் எனக் வயலுக்கு போகும் உழவரும் வெங்காயம் நடுவதற்கும் புல்லுப் பிடுங்கவதற்கும் என ஆடி அசைந்து வரும் பெண்களுமாக அந்த வீதி களை கட்டியிருக்கும்..மகாகவியின் அறிவுப் பசிக்கு பாடு பொருளாக இருந்தவை அச் சூழல்களே..ஒவ்வொரு நாளும் பார்க்கும் காட்சிகள் ஒவ்வொரு நாயளும் புதுக்கவிதைகளாக அவரிடமிருந்து வெளி வந்தன..கவிதைக்காக வலிந்து காட்சிகளைத் தேடாமல் தனது பார்வைக்குட்பட்டவையை கவிதையாக்கிய மாபெரும் கவிஞர் அவர்.அதனால்தான் அவரது கவிதைகள் மக்கள் கவதைகள் எனப் பெயர்பெற்றது.அவர் இளம் வயதிலேயே காலமானார்.அவரின் இறுதிக்கிரயைpல் அவர் உடலக்கு தீமூட்டி எரிந்த போது அதில் எழுந்த புகைச்சாம்பலை பார்த்து கண்கலங்கி உடனேயேு கவிதையால் அஞ்சலி செய்தவர் கவிஞரின் நெருங்கிய தோழன் கவிஞர் நுஃமான். அமரர் மகாகவி.து.உருத்திரமூர்த்தி அவர்களின் 31ஆவது நாள் நினைவு நாளாக அஞ்சலி நாளாக எமது மன்றம் நிகழ்த்தி நினைவு மலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தோம்.அந்த மலரை அப்பொழுது சிறுவனாக இருந்த அவரது மகன் பாண்டியன் பெற்றுக் கொண்டான்.இத்தகு அஞ்சலியை செய்ய எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் பேறாகவே கருதுகின்றோம்.கவிஞர் அவர்களுக்கு பாண்டியன் -சேரன் -ஒளவை-இனியாள் என நான்கு பிள்ளைகள் உண்டு.கவிஞரும் பேராசிரியரும் ஆய்வாளருமான சேரன் கனடாவில் பேராசிரியராக கடமையாற்றுகிறார்.ஒளவை இனியாள்கூட கவிஞர்களே. அவரை எம்மால் மறக்கவே முடியாது.எம்மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் எங்கள் மதிப்புக்குரிய கவிரின் ஆத்மாவை நோக்கி தலைசாய்த்து வணங்குகிறேன்.அவரைப் பற்றி நிறையவே எழுதலாம்.

      • thamilmaran says:
        16 years ago

        அங்கயற் பிரியா உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்.

        • ANKAYATPIRIYAN says:
          16 years ago

          தமிழ்மாறன் அவர்களுக்கு “என்னை வாழ்த்தி “வணங்குகிறேன்” என்று எழுதியிருந்தீர்கள்.நன்றி.வணங்குகிறேன் என்ற சொல் என் மனதில் இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது.என் மனம் ஒப்புக் கொள்ள மறுக்கின்றது.எனது அனுபவங்களையும் நான் அறிந்தவற்றையுமே எழுதி வருகின்றேன்.இனிமேல் வாழ்த்தி வணங்குகிறேன் என்று எழுத வேண்டாம் என அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.தவறாக நினைக்க வேண்டாம்.

          • thamilmaran-thamil.maran@yahoo.com says:
            16 years ago

            மகாகவி ஏம் மண்ணீற்கு மா கவி.அவர் வாழ்ந்த மண்ணீல் வாழ்ந்தது பெருமையல்லவா.என் தந்தைக்கு மாகவியை பிடித்ததால் எனக்குப் பிடித்தது.பத்து வயதில் என் மனதை பிடித்தவர் நம் மண்ணீன் சொத்து என்பதைக் கூட சுஜாதா சொல்லித்தான் தெரிய முடிகிறது என்பது வெக்கமானது.அவ்ர் கவிதைகலை படிக்கும் போது நம்மை வானத்தில் தீயாய்,வெளீச்சமாய் அது மாற்றீ விடுகிறது.வணங்குவது தமிழ் மரபு அதை ஏற்பது மனிதப்பண்பு.

      • நெருஞ்சி says:
        16 years ago

        அஞ்சு பிள்ளைகள் இருக்கிற மகாகவி அவர்களை எனக்கும் தெரியும்.

        எப்படி உங்களுக்கு மட்டும் பாண்டியன் -சேரன் -ஒளவை-இனியாள் என நான்கு பிள்ளைகள் பெற்ற மகாகவி அவர்களை மிக நன்றாகவே தெரியும்.

        வரையுங்கள்,தரவுகளை சரிபார்த்து.

        • ANKAYATPIRIYAN says:
          16 years ago

          நீங்கள் கூறியதே சரி.அமரர் மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள்தான்.பாண்டியன்-சோழன்-சேரன்-இனியாள் என்பதே அவர்களின் பெயர்கள்.பாண்டியனும் சேரனும் கனடாவிலும் சோழன் அமெரிக்காவிலும் இனியாள் அவுஸ்திரேலியாவிலம் ஒளவை இலங்கையிலும் வசிக்கிறார்கள்.மேலதிக விபரத்தை அறிய சரிபார்க்க வந்தமைக்கு நன்றிகள் .

          • ANKAYATPIRIYAN says:
            16 years ago

            ஒளவையின் பெயர் விடுபட்டு போய்விட்டது.கனடாவிலிருக்கும் எனது அண்ணனிடம் இவ்விபரத்தை அறிந்து எழுதுகிறேன் அத்துடன் அமரர் மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் மனைவியுடன் எங்கள் அக்கா படித்ததை எனது அண்ணன் நினைவூட்டினார்.நெருஞ்சிக்கு மனமார்ந்த நன்றிகள்.

  3. ந.பத்மநாதன் says:
    16 years ago

    கவிதாவின் கவிதைகளை ஒப்பிடும் விதம் சிறப்பாக உள்ளது , உருத்திரமூர்த்தி அவர்கள் கவிஞர் சேரனின் தந்தை என்பது அனைவரும் அறிந்ததே. தற்காலிக சூழலில் இந்த மீட்டலானது பலருக்கும் மகிழ்ச்சியையும் , இலக்கியம் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது .தொடருங்கள் உங்கள் பயணத்தை………………

  4. ந.பத்மநாதன் says:
    16 years ago

    ஆர்வத்தால் மேலும் தேடினேன் , மேலும் கவிதைகள் கிடைத்தது , நீங்களும் பார்க்கலாம்

    http://noolaham.net/project/05/433/433.pdf

    • ANKAYATPIRIYAN says:
      16 years ago

      திரு.ந.பத்மநாதன் அவர்களுக்கு நன்றிகள்.

  5. thamilmaran says:
    16 years ago

    மகாகவியின் கவிதைகள் மண் சுமந்த மேனியர் என்ற நாட் கத்திலும் இடம் பெற்றதாக நினைவு சர்வேஸ்வரன் பதில் தர வேண்டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...