எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (19-07-2015) மாலை 5 மணிக்கு 121, ஹம்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள தேசியக்கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் கவிஞர் இ. முருகையன் நினைவுப் பேருரையும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. ஈழத்தின் முக்கிய கவிஞர்களுள் ஒருவரும் பன்முக ஆற்றலுடன் பல்வேறு செயற்பரப்புக்களில் இயங்கியவருமான இ. முருகையன் அவர்களை நினைவுகூருமுகமாக இந்நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கொழும்புப் பிரதேசப் பேரவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் “ஈழத்து இலக்கியத்தில் முருகையனின் வகிபாகம்” என்ற தலைப்பிலான நினைவுப்பேருரையினை தாயகம் இதழின் ஆசிரியர் க. தணிகாசலம் அவர்கள் வழங்கவுள்ளார். “முருகையனின் முகங்கள்” எனும் தலைப்பில் சிற்றுரைகளை கு. பிரிந்தா, கு. கணரூபன், பிரம்மா தங்கராஜா ஆகியோர் ஆற்றவுள்ளனர். ச. சஞ்சுதனின் இசையில் முருகையனின் பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சியும் சோ . தேவராஜா அவர்களின் தலைமையில் “ஒரு சில விதிகள் செய்வோம்” எனும் தலைப்பில் கவியரங்கு ஒன்றும் நடைபெறவுள்ளது. கவிஞர்கள் வே. தினகரன், வி. மாதினி, தி. அனோஜன், ச. சுதாகர் ஆகியோர் கவியரங்கில் கவியுரைக்கிறார்கள். அனைவரும் கலந்துகொள்ளுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவை அன்புடன் அழைக்கிறது.