இருபத்தியொரு நாட்களாக உண்ணாநிலைப்போராட்டதை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி அவர்களை போராட்டத்தை நிறுத்துமாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அறிக்கை மூலம் கேட்டிருந்ததாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக �புதிய தலைமுறை� தொலைக்காட்சியின் செய்தியாளர் சக்தி கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே திரு. சிவந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். நேற்று திரு. சிவந்தன் உண்ணாநிலைப்போரட்டத்தை மேற்கொண்டுவரும் கூடாரத்துக்கு வந்த �புதிய தலைமுறை� தொலைக்காட்சியினர் அவரது விரிவான நேர்காணலை ஒளிப்பதிவு செய்தனர்.
ரெசோ மாநாடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாகவும், இம்மாநாட்டின் மூலம் தமிழ் ஈழம் அமையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த திரு. சிவந்தன், �ரெசோ மாநாட்டில் எனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தபோதிலும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கருத்தும் இதுவாகத்தானிருக்கும் என நம்புகிறேன். எங்களது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது, அவர்களது பரிதாபநிலையைப்பார்த்த பின்பும் ஒரு முடிவினை எடுக்கமுடியாத கலைஞர் கருணாநிதி அவர்கள், தற்போது எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டத்தினை பெற்றுத்தருவதாகக் கூறுவதும், ஈழத்திற்கான பிரேரணை கொண்டுவருவதும் தமிழ்மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தோற்றுவித்துள்ளது. எங்களை ஏமாற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டமாகவே நான் இதனைப் பார்கிறேன. இது ஈழத்தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத் தரப்போவதில்லை� எனத் தெரிவித்தார்.
ரெசோ மாநாடு நடைபெற்றாலும் அதில் தனி(தமிழ்) ஈழம் என்ற சொல் உபயோகப்படுத்தக் கூடாது என இந்தி வெளியுறவுத்துறைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கைபற்றியும் திரு. சிவந்தனிடம் கேட்கப்பட்டது. �ரெசோ என்றால் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு என்று கூறினார்கள், ஆனால் அங்கு தமிழீழம் பற்றி பேசக்கூடாது என்றால் எப்படி? ஈழத் தமிழ் மக்கள் தமிழீழம் என்பதனையே தமது இறுதி இலட்சியமாக கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழப்போகிறார்களா இல்லையா என்பதனை அவர்களே முடிவு செய்யவேண்டும். இந்நிலையில் ஈழத்திற்கான மாநாட்டில் ஈழம் பற்றி பேசக் கூடாது என்பது கேலிக் கூத்தாகவே அமைகிறது� என்றார்.
திட்டமிட்டிருந்தபடி ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிருந்து திரு. சிவந்தன் அமர்ந்துள்ள ஸ்ரற்போர்ட் இலகு தொடருந்து நிலைய அருகாமையில் (Stratford High Street DLR, London E15 2SP) மக்கள் கூடவிருக்கிறார்கள். மாலை 5.30 மணிக்கு உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்வதுடன், ஆரம்பநாள் நிகழ்ச்சியின்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அதே இடத்தில் Aspen Way, London E14 5ST (Billingsgate மீன் அங்காடிக்கு எதிரில்) மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.








கருணாநிதி பற்றி மிகவும் தெளிவாகவுள்ள சிவந்தனின் நிலைப்பாடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .இதேயளவு தெளிவு
மற்றைய தமிழக தலைவர்களிலும், தமிழ் தேசியம் சார்ந்த காரணிகளிலும் சிவந்தனிட்கு இருக்குமென்று நம்புகிறேன் , இருக்க வாழ்த்துகிறேன்.
இவர் உண்ணாவிரதம் இருப்பதும் அவர் கோரிக்கை வைப்பதும் எங்கோ வலை பின்னப்பட்டுள்ளதோ? அலன் தம்பதிகளை இபிஆர்எல் கடத்த இந்திரா விடுதலை செய்ய சொல்ல ……….போன வரலாறு திரும்பி விடுமோ?
இவருடைய தூய தேசிய சிந்தனையை ,தேசியதிட்காக போராடும் அர்பணிப்பை தீய சக்திகள் தம் நலனிற்காக பாவிக்க மாட்டார்கள் , பாவிப்பதை தடுக்கும் தெளிவு சிவந்தனிடம் உண்டு என்று நாம் எல்லோரும் நம்புவோமாக.அவ்வளவு தெளிவு இவரிடம் இருக்க வாழ்த்துவோம்.
கடந்து போன போராட்டம் குறித்து சிவந்தனின் கருத்து என்ன என இனியொரு கேட்டுச் சொல்லவும்.
இவருடைய தூய தேசிய சிந்தனையை ,தேசியதிட்காக போராடும் அர்பணிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.அதே நேரம்இவரின் தூய தேசிய சிந்தனையை ,தேசியதிட்காக போராடும் அர்பணிப்பை யாரும் துஸ்பிரயோகம் செய்யவும் அனுமதிக்க கூடாது. இங்கு யாரும் என்று குறிப்பிடுவது முக்கியமாக தேசிய முகமூடியுடன் அலையும் இந்திய, மேற்கு, மகிந்த சார்பு தேசியவாதிகள்ளாகும்
மேற்கு சார்பு என்பதுவும் தேசியம் சார்பு அல்ல , அதாவது இந்தியாவிற்கு பதில் மேற்கு என்பதுவும் தேசியம் சார்பானதல்ல. மேற்கும் எமது தேசியத்திற்கு எதிரிகளே என்பதுவும் சிவந்தனிட்கு புரியாதது அல்ல.
கூத்தாடிகள் சண்டைபோட்டால் ஊருக்குதான் கொண்டாடம்
புரியலை நெடுதுயிலோன்.
I could see that you have something in your throat, please spill it out.we can’t guess.
அடுத்தவன் தோளில் ஏறி திருவிழா பார்ப்பதையே வழமையாகக் கொண்ட
கருணாநிதி சிவந்தனின் தியாக வேள்வியையும் தனக்குச் சாதகமாகப் பயன்
படுத்தி விளம்பர வெளிச்சம் தேடிக் கொள்ளும் முயற்சிதான் இந்த முதலைக்
கண்ணீர். இருபது நாளாக எங்கே போயிருந்தார் ? சிவந்தனின்
பட்டவர்த்தனமான பதில் அவருக்கு நல்ல மூக்கறு
டெசோ….
த்ஸோ….த்ஸோ…..
கலைஞர் சொல்கிறார்:
தமிழ் நாய்களே … அருள் கூர்ந்து மன்னிக்கவும் … நாயகர்களே!
அதற்குள் உங்களது ஏமாற்றம் முடிந்து … எனது பணப்பசியும், அரசியல் தாகமும் அடங்கிவிட்டது என நீங்கள் மனப்பால் குடித்தால் எப்படி?
எனது கொள்ளுப்பேரன்கள் / பேத்திகளுக்கான பேரங்கள் நடந்து முடிந்து அவர்களது 18 தலைமுறைகளுக்கு தமிழன் மொறவாசல் செய்வதாகப் பட்டயம் எழுதிக் கொடுத்து, தங்களது எதிர்காலத்தை ஒட்டு மொத்த்த் தமிழ்ச் சமூகம் தாமாகவே கெடுக்காதவரை …
ஓய்வானா இந்தக் கருணையின் இருப்பிடமும் நிதியின் புகலிடமும் ஆன கலைஞன்?
தமிழனின் விம்மல்:
அய்யா முத்துவேலர் மகன் சாமி! 83000 தமிழ் உயிர்கள இராஜபக்ஸ குடிக்க வழி வகுத்து, அதுல அவன் 3 தேர்தல்களில் வெற்றிக் கள் குடிக்க ஏற்பாடு செய்து, அதன் உதவியால் சூனியக்காரி சொனியா தனது சதி பக்தியால் கொல்லப்பட்ட ராஜீவுக்காக பழிக்குப் பழி வாங்குவதாக நடிக்க மேடை அமைத்து வெண்சாமரம் வீசி உதவிய நீங்கள் … 2009ல் தமிழகம் புதுவை ஆகிய மாநிலங்களில் பொய்யுரைத்து 40ல் 29 பாராளுமன்ற சீட்டுக்களை சீப்பாக வெல்ல …. நடிகர் விஜய்காந்த் அவர்களது தே மு தி க வைத் தனியாகப் போட்டியிடச் செய்து … அவரது இமேஜை வளரோ வள என வளவளவென வளர்த்து …. 25 பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்குகளைப் கன்னாப்பின்னாவெனப் பிரித்து … தேசிய முற்போக்குக் கூட்டணியின் “அமோக வெற்றி” என்ற பம்மாத்தை நிகழ்த்தினீர்கள் …
உமது அரசியல் தந்திரத்தை மெச்சலாம் என்றாலும் … தமிழனின் பிணக்குவியலில் பணக்குவியலைத் தேடும் நீரும் ஒரு மனிதப் பிறவியா?
எம் ஜி ஆர் நடித்த ஒளி விளக்குப் படத்தின் வரிகள் நினைவுக்கு வருகிறதய்யா!
“தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீதான் ஒரு மிருகம்!
இந்த [பதவி/பண போதை அளிக்கும்] மதுவில் விழும் நேரம் …
மனமும் …. நல்ல குணமும்
[அது தான் உங்களிடம் இல்லையே!]
உன் நினைவை விட்டு விலகும்!
பொருள் வேண்டித் திருடச் செல்வான்
பெண்ணைப் பெற வேண்டி விலையைச் சொல்வான்
துணிவோடு உயிரைக் கொல்வான்
எதற்கும் துணையாக [பதவி/பண] மதுவைக் கொள்வான்!
கேட்டால் நான் தானே மனிதன் என்பான்!”
தமிழக தலைவர்களில் கருணாநிதி மட்டும் தான் தேசியத்திற்கு எதிரி என்ற கருத்து மிகவும் அபாயகரமானது. எங்கள் வலியில் உங்கள் தமிழக கருணாநிதி Vs ஜெயா அல்லது வைகோ ,or தா பாண்டியன் , or ராமதாஸ்…..or .anyone அரசியல் வேண்டாம்.காணும் ,இனியும் வேண்டாம்.
இப்படியே பேசிக்கொன்டு இருந்தால் ஈழ்ம் கிடைக்காது.
therefore we should let Karunanithi, or Jeya, or India….to play our card for thier own politics. very Good view SUNDER.
டெசோ வும் டாஸ்மாக்கும் ஒன்றா
Look, I have only contempt for all politicians. I have the same contempt for Karunanidhi or Jayalalithaa or Amrithalingam or Neelamthiruchelvan or Rajapaksa or any of the UNP jokers or Jayawardene or Premadasa or Barack Obama or any of those jokers in Europe, Canada, Australia … But let us remember that we live in a world they also live and if one has to achieve Eelam … one will have to deal with such jokers. Eelam too is on the same earth as Lanka
தேவன், மனிதன்,
சயந்தனின் கோரிக்கைகள் நியாயமானவை. அவரது போராட்டத்தை நிராகரிக்க முடியாது. இது முதலவது புள்ளி. இரண்டாவதாக அவரது போராட்டம் வெற்றிபெறப் போவதில்லை. உறுதியான அரசியல் தலைமையும், அதற்குரிய வேலைத்திட்டமும் இல்லாமல் அது சாத்தியமற்றது. மூன்றாவதாக, அப்படியான அரசியல் இல்லாத நிலையில் சிவந்தனின் போராட்டத்தை இன்று பலமான நிலையிலுள்ள ஏகாதிபத்தியங்களே பயன்படுத்திக்கொள்ளும்.
மேற்கினதும் இந்திய அரசினதும் இலங்கை அரசினதும் ஏஜண்டுகளே இன்று போராட்டத்தை இன்று கையகப்படுத்தியுள்ளார்கள். ஆக, இவர்களின் சொந்த ஏகாதிபத்தியம் சார்ந்த வியாபார நலன்களுக்குச் சார்பானதாக இந்தப் போராட்டங்கள் முடிவடையும்.
ஆக, சிவந்தனின் போராட்டத்தை நிராகரிக்க முடியாது அதேவேளை அதனை நெறிப்படுத்தும் அரசியலை முன்வைக்க வேண்டும். அதற்காக போராட வேண்டும். பாரிஸ் கம்யூன் போராட்டத்திலிருந்து பல போராட்டங்களில் இவ்வாறான போராட்டங்கள் எவ்வாறு பங்குபற்றுவது என்பது அதன் அரசியலோடு முரண்பட்டு புதிய அரசியலை வளர்ப்பது என்பது பற்றியும் பல உதாரணங்கள் உண்டு.
‘புலி எதிர்ப்பாளர்கள்’ கடந்த காலம் முழுவதும் இந்தத் தவறிற்கு சமூகத்தை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள். இதுவே அவர்கள் இன்று அரச சார்பு நிலை எடுப்பதற்கு ஆதாரமாக உள்ளது.
இது ஒரு புதுவகை உபகரணம்,கிட்டயிருந்து தட்டினால் தாளமாகவும்,எட்டயிருந்து தட்டினால் யாள்ராவாகவும் ஒலிக்கும்.
டேசோ இழந்த தமது அரசியல் வாழ்வை திரும்பப் பெறும் முயற்சி. இதனால் நிச்சயமாக எம் மக்களுக்கு எதுவும் கிட்டிவிடப் போவதில்லை. இந்த மனிதரும் தமிழக அரசியல் வாதிகளும் அன்றும் இன்றும் ஈழத்தமிழரின் துன்பத்தில் துயரில் கண்ணீரில் கப்பலோட்டி மகிழ்கின்றவர்கள். சயந்தன் போன்ற தியாக உள்ளம் படைத்த இளைஞர்கள் எழட்டும். உலகம் நம் பக்கம் திரும்பும் வரை எம்மால் செய்ய முடிந்ததை செய்வோம்.
னீங்கள் டெசொவை போடுங்கோ, டாஸ்மாக்கில் குடிய்ங்கோ உண்ணாவிரதம் இருங்கோ யார் கணக்கில் எடுக்கின்றனர், ராஜபக்ச தான்நினைத்தை செய்கின்றார், தாயக பூமி மெதுவாக் பரி போகின்றது, இதற்கெல்லாம் வழி சமைத்து கொடுத்த புலிகளுக்கும் வெளிநாடு புலி பினாமிகளுக்கும் வாழ்த்துக்ள
அது சரி உமது வழிமுறைதான் இன்னான்னு சொல்லேன்யா .