லண்டனில் இருந்து நாடு திரும்பிய புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின மீது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயினும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றிருந்த அவரது கட்சியின் ஆதரவாளர்கள் விக்கிரமபாகு மீதான தாக்குதலைத் தடுக்க முற்பட்டபோத ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக விக்கிரமபாகு கருணாரத்தினவின் வருகையையொட்டி விமான நிலையத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். தடுக்க முயன்ற விமான நிலையப் பொலிசாரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
விமான நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் விமான நிலைய வாடகை வாகனங்களின் சாரதிகள் ஆகியோரே கூட்டாக இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பிரதியமைச்சர் சரத் குணரத்தினவின் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்கள் ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்றே விக்கிரமபாகு கருணாரத்தின உள்ளிட்ட ஏனையோர் மீதான தாக்குதலில் பங்குபற்றியதாக விமான நிலையத்தின் உயரதிகாரியொருவர் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் காரணமாக காயமடைந்தோரில் விக்கிரமபாகுவின் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பிரியந்த, அகில இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜேசூரிய, சிரச ஊடகவியலாளர் பிரேமலால் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சாந்த விஜேசூரிய தலையில் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற வைபவமொன்றில் பங்குபற்றிய விக்கிரமபாகு கருணாரத்தின தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அராஜகங்களை விமர்சித்திருந்ததுடன், அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிட்டிருந்தார். அதன் பின் ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின் போது தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பலை காரணமாக .ஜனாதிபதி தனது நிகழ்ச்சி நிரலை இடைநடுவில் கைவிட நேர்ந்தது.
அவ்வாறான சூழலின் பின்னணியில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட விக்கிரமபாகு கருணாரத்தின மற்றும் தமிழ் மக்களின் கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் மீது அரசாங்கத்தின் கோபப்பார்வை திரும்பியிருந்தது.
அதன் அடுத்த கட்டமாக ஜயலத் ஜயவர்த்தன பாராளுமன்றத்தில் வைத்தே இரண்டு அமைச்சர்களால் தாக்கப்பட்டுள்ளார். இன்னொரு அமைச்சரும் பேர்போன சண்டியருமான மேர்வின் சில்வாவோ அதற்குமப்பால் சென்று ஜயலத் ஜயவர்த்தனவை இலங்கையின் எந்த ஒரு அங்குலத்திலும் ஒளிந்து வாழக் கூட விடமாட்டேன், கண்ட இடத்தில் கொலை செய்து விடுவேன் என்று பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டிருந்தார். ஆனாலும் அவ்வளவுக்குப் பின்னும் இலங்கையின் நீதித்துறையும் காவல் துறையும் தூங்கிக் கொண்டுதான் இருந்தன.
அதே நேரம் எப்போதும் போன்று ஜயலத் விடயத்திலும் ஜனாதிபதி தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட்டுள்ளார். கார்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு அரச மட்டத்தில் கௌரவம் அளிக்கப்பட்ட நிகழ்வின் போது அமைச்சர்களின் தாக்குதல் காரணமாக காயமேற்பட்ட தழும்புகளைக் கொண்ட ஜயலத்தின் கையைத் தடவி ஆறுதல் கூறியிருக்கின்றார். அதற்குப் பதில் தாக்கிய அமைச்சர்களை அவர் ஒரு வார்த்தை தானும் கண்டிக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் ஆளுனர் அலவி மௌலானா தலைமையிலான ஒரு குழுவினர் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக விக்கிரமபாகு கருணாரத்தினவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தனர். அவரை நாட்டுக்குள் வரவிட வேண்டாம் என்று அவர்கள் கோஷமெழுப்பியுள்ளனர்.
அதன் பின்னணியிலேயே விக்கிரமபாகு கருணாரத்தின மீதான தாக்குதல் பல்லாயிரம் மக்கள் நடமாடும் விமான நிலையத்தில் வைத்து பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லாவிடில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அவ்வாறு துணிச்சலுடன் செயற்பட்டிருக்க முடியாது. தவிரவும் அரச அதிகாரிகளான விமான நிலைய ஊழியர்கள் தாம் கடமையில் இருந்து கொண்டே ஒருவரைத் தாக்குவதென்பது அரச சேவை தாபன விதிக் கோவையின் பிரகாரம் பதவியிலிருந்து விலக்கப்படுவதற்கு ஏதுவான காரணமாகும். ஆயினும் இங்கே அப்படியெல்லாம் நடக்கப்போவதில்லை. காரணம் அரசாங்கத்தின் ஆதரவு இல்லாவிட்டால் விக்கிரமபாகுவை மட்டுமன்றி பொலிசாரையும் தாக்கும் அளவுக்கு அவர்கள் துணிந்திருக்க மாட்டார்கள்.
இலங்கையின் சட்டமும் நீதியும் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி வருவதுடன் அராஜகம் தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பதையே இவ்வாறான நிகழ்வுகள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
மகிந்த என்ன தமாசுக்காரறோ? சுடுதண்ணீ குடித்த நாய் போல லண்டனில் இருந்து சென்ற நாள் முதல் எல்லோர் மீதும் கையை வைக்கிறார்.
இப்படியே ஆரம்பித்து சிங்கள புலியிடம் அகப்பட்டு தென்னிலங்கை அலறப் போகின்றது என்பதற்கு இது இன்னொரு முன்னோட்டம்.
2009 மே மாததிற்கு முதல் வாலில் தீ கொண்டு வந்து இலங்கையை முழுமையாக
எரிக்க முற்பட்டவர்கள் திரும்பவும் அது போன்ற முயற்சியில் ஈடுபடுவதைக் கண்டதும் அதனால் வந்த கோபமோ தெரியவில்லை தமிழ்மாறன் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். அவசரப்பட்டு கருத்துகளை அள்ளி வீசாதீர்கள்.
பல நாடுகளில் பலமொழிகளில் பலநாட்டுவதிவிட கடவுச்சீட்டுகளுடன் வாழும் தமிழன் இலங்கைநாட்டு ஜனாதிபதிக்கு எதிர்பு தெரிவிக்கிறான் என்றால் கொஞ்சம் சோழியன் குடும்பியைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
மகிந்தாராஜபக்சாவை எதிர்பதற்கு காலம்காலமாக கொழும்பு வீதிகளில் அறுபது ஆயிரம் குடும்பங்கள் முப்பது கிலோமீற்றர் தூரத்திற்கு அப்புறப் படுத்துவதையும் அவகளுடைய குடியிருப்புகள் தகரக்கொட்டகைகள் காட்போட் மட்டை கூடாரங்களை நிரந்தரமாக அழிப்பதைப் பற்றியோ எந்த தமிழனும் கேள்வி எழுப்பப் படவில்லை. இதில் இருந்தே தெரியவில்லையா? பு.தமிழனின் அரசியல் யோக்கியதை? புலம்பெயர் தமிழன் புளிச்சல் ஏவறைவிடுகிறான். இதையெல்லாம் அர.போராட்டமாகாக கருதலாமா? இவனுக்கு மகிந்தாவை எதிர்கிற போராட்டதையோ நேரத்தையோ இவனால் கணிக்க முடியாது. இவன் இதிகாச வீரர்களின் சூரத்தனத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களுக்கு தேவையானது 007…ரம்போ போன்றவர்கள் 2004 சுனாமி போன்ற அதிர்ச்சியான நிகழ்வுகளே! பணமும் புகழும் எப்படி வந்தால் தான் என்னா? அர்த்தம் இல்லாத யுத்தம் நிறுதப் பட்டால் என்னா? கஞ்சி குடிக்கக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டால் என்ன? தமிழனாக இருந்தால் என்ன இங்கிருப்பவர்களுக்கு மில்லினர்களாக மதிப்புக்குரியவர்களாக வருவதற்கு எந்த வாய்ப்புமில்லை என்பதை தமிழ்மாறன் உணர்ந்து கொள்ளவேண்டும்.இதுவே இன்று இங்குள்ள அரசியல் பாஷன். இதற்கு தனிமனிதனின் கருத்துக்கள் மட்டுமல்ல இணையத்தளங்களின் கருத்துகளும் அதுவே!.
சந்திரன் ராஜா நீங்கள் பழைய பேப்பர் படிக்கிறவர் உங்களூக்கு புதிய செய்திகள் தெரிய வாய்ப்பில்லை.மகிந்தவின் படங்கள உற்றூப் பாருங்கள் ஏதோ கிரிக்கெட்டில் இரண்டுசதம் ஒன்றாய் அடித்தது போல ஒவ்வொருவரையும் அவர் கட்டிப் பிடிப்பதும்,அந்தச் சிரிப்பும் தமாஸாகத் தெரியவில்லை?வடிவேலு கொமடிகள ஒரு நிமிசம் நிண்டு யோசியுங்கோ?
தனித்துப்போன ராசா துணைக்கு இழுக்கிறாராம் தமிழ்மாறனை!
சந்திரன் ராசா தனிக்காட்டு ராஜா.சிங்கிளாய் வரும் சிங்கம்.ராசாக்கள் அறீவாளளீகள் .
இப்போது நடந்துள்ளது பலருக்கும் நடந்த-நடக்கிற-நடக்கப் போகிற அரச ஆதரவுடனான காட்டுமிராண்டித்தனம் (உண்மையான காட்டுவாசிகள் மன்னிக்க வேண்டும் — இச் சொல் அவர்களைக் குறிப்பதல்ல).
முதலில், அதை –அது யாருக்குநடந்தாலும்– கண்டிக்கத் தவறுபவர் ஒரு சனநாயகவாதியாகவோ மனிதாபிமானியாகவோ இருக்க இயலாது.
அவர், நிச்சயமாக ஒரு நேர்மையான மாக்சியராக இருக்க முடியாது.
ராஜபக்சவுக்குச் சப்பைக்கட்டுக் கட்டுவதற்கு ஒருவருக்குப் பல நோக்கங்கள் இருக்கலாம். அதில் எதுவும் மக்கள் பற்றிய அக்கறை தொடர்பானாதல்ல என்பது உறுதி.
சிறிலங்காவில் நடப்பது காட்டுத் தர்ப்பார். இனியாவது உலகம் புரிந்து கொள்ளுமா? ஆயிரம் ஆயிரம் அப்பாவித் தமிழரைக் கொன்று குவித்து விட்டு கும்மாளம் போடுகிறது சிங்களம். இனயாவது தமிழருக்கு உரிய நீதி கிட்டுமா? மஹிந்த என்பவன் பண்பட்ட கொலைவெறியன் என்பது உலகு அறிந்தபின்னும் அவனை விட்டு வைப்பதில் என்ன நியாயம்?
தமிழ் நண்பா்கள் கவலைப்படுகின்றார்கள் புலிக்கொடியுடன் சென்றதால் மறுபடியும் புலி ஆதரவாளா்கள் தவறு செய்துவிட்டார்கள் என்றும் [[பல வழிகளில் நியாயமுமாகும்]] இதனால் அரசிற்கு இலாபமேயன்றி நட்டமில்லை என்று ஆனால் திருவாளா் பீரிஸ் என்ன சொல்கிறார் என்றால் சிங்களமக்களே அங்கு புலிக்கொடியுடன் நின்றதாக.
ஆதலால் லண்டனிற்கு வந்தவா்கள்தான் அதை ஊக்கப்படுத்தியிருப்பதாக திரும்பிச்சென்றவா்கள் கதறி அழுதுள்ளார்கள் போலும் இதனால் அவா்கள் விசுவாசிகள் தங்கள் பாசத்தை இந்த வகையில் வெளிப்படுத்தியுள்ளார்கள், இதுதான் நமது மக்கள் ஆட்சியின் மகோன்னதம்.