கற்பனை செய்து பார்க்க முடியாத மனிதப் பேரவலம் நிகழ்வதாக தமது பணியாளர்கள் கூறுவதாக செஞ்சிலுவைச் சங்க தலைமை முகாமையாளர் பியேர் கிராகன்புல் தெரிவிக்கிறார். தனித்து விடப்பட்டுள்ள மக்களுக்கு எந்த மனிதாபிமான அமிப்புகளும் உதவி புரிய முடியாத நிலையில் தோன்றியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
பாரிய யுத்தமொன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் துப்பாக்கிச் சத்தங்களும் ஷெல் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கும் வைத்தியக் கலானிதி துரைராஜா வரதராஜா, தாம் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள பங்கர்களுள் ஒளிந்திருப்பதாக மேலும் தெரிவிக்கிறார்.
மக்கள் குடியிருப்புக்கள் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப் படுகின்றன. 2000 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலையிலும் சூழவுள்ள இடங்களிலும் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் அவர், சூழவுள்ள இடங்களில் இறந்த உடல்கள் கிடப்பதாகவும் அவற்றைத் தகனம்செய்ய முடியாத நிலையிலிருப்பதாகவும் குறிப்பிட்டார்.