கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மாநில ஆளுநர் பரத்வாஜ் செய்த பரிந்துரை குறித்து முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை இன்று கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் முடிவு தெரியும் வரை அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பா.ஜ.க அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் 105 சட்டமன்ற உறுப்பினர்களை இன்று டெல்லி அழைத்துச் சென்று, குடியரசுத் தலைவர் முன் அணிவகுப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக கர்நாடக பா.ஜ.க அறிவித்துள்ளது.
ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற ஆளுநரின் பரிந்துரையை நிராகரிக்குமாறு அப்போது குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் அவர்கள் கோரிக்கை வைப்பார்கள்.
இதை கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்தார். ஆளுநர் காங்கிரஸ் ஏஜென்ட் போல் செயல்பட்டு வருகிறார். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். அல்லது திருப்பி அழைக்க வேண்டும் என்றார் ஈஸ்வரப்பா.
கலைஜரைக் குறீத்துக் காட்டுக் கத்தல் நாம் அயல் மானிலங்கள மீதான பார்வையைச் செலுத்துவதே இல்லைஎடீயூரப்பா,குமாரப்பா, என எத்தனை இடிகள் மானிலத்தை பங்கு போடுகிண்றன.வள்ளூவக் கடவுளூக்கு கோயில் கட்டியவர் மீது வள்ளேன்றூ விழுகிறோமே நாம் நன்றீயுள்ளவர்களா?