மது அருந்தி வாகனம் செலுத்தியதால் போலிசாரால் முன்னர் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா என்ற நாஸி பௌத்த அமைப்புன் செயலாளரான கலகொட அத்தே ஞானசார என்ற பௌத்த துறவி நாட்டின் இன்றைய பிரச்சனை கருத்தடை மாத்திரைகளே எனத் தெரிவித்தார். இனத்தை விருத்தி செய்யும் நோக்கிலும் கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கிலும் கருத்தடை மாத்திரைகளை சிங்கள மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்படஅ அனைத்து துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஊடாக உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு நாட்டை கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முஸ்லிம் வர்த்தகத்தை பகிஷ்கரிக்குமாறும் முஸ்லிம் மருத்துவர்களை நிராகரிக்குமாறும் ஞானசார தேரர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார்.
பொது பல சேனாவைக் உருவாக்கி வளர்ப்பதே இலங்கை அரச பாசிஸ்டுக்கள் தான். இலங்கை அரச கிரிமினல்களுக்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதையும் போராடுவதையும் நிராகரித்து கிரிமினல்களிடம் தீர்வு தாருங்கள் என்று கேட்கும் கூட்டம் ஒன்று உருவாகியுள்ளது.
All these things are scourges in societies all over the world.