கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும், தமக்கும் இடையில் தீர்மானம் மிக்கதோர் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணா லக்பிம பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
கட்சியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைகளை தீர்வுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு தோல்வியடைந்தால், பிள்ளையான் தொடர்பில் அரசியல் ரீதியான தீர்மானமொன்றை எடுக்க நேரிடும் என கருணா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தற்போதைய செயற்பாடுகள், நிர்வாகம், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.
இரகசிய இடமொன்றில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த இடம் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.