கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பதுமனின் தலைமையில் மீளக்கட்டி எழுப்பப்படவுள்ளதாகக் கூறி தனக்கு ஈமெயில் ஒன்று கிடைத்துள்ளது.வடக்கில் இராணுவத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளையே அரசு முன்னெடுத்துள்ளது. மேலும் கே.பி, கருணா, பிள்ளையான் ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தனது பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவருகிறது; என தெற்கு ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் புலிகள் என்ற அடையாளத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் உருவாகியுள்ளது. இதன் மறுபக்கத்தில் இதே அடையாளத்தை தமது நலனுக்காக இலங்கை அரச பயங்கரவாதிகளும் ஏனைய அழிவு சக்திகளும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.