Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கருணாநிதி அவர்களே, களப்பிரர் காலம் இருண்டகாலம்தான். யாருக்கு? : ஆதவன் தீட்சண்யா.

இனியொரு... by இனியொரு...
06/28/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
13
Home பிரதான பதிவுகள் | Principle posts

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை (25.06.2010), எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ( except Sun & kalaignar TV ? ) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கிய பின் கருத்தரங்கத்தின் தலைவர் கருணாநிதி நிறைவுரை ஆற்றினார். ஆற்றினார் ஆற்றினார், ஆறிப் பழங்கஞ்சாகி சில்லிட்டுப் போகும்வரை ஆற்றினார். தமிழ்மொழியின் நிலையை வரலாற்றுப்பூர்வமாக விவரித்துப் பேசப்புகுந்த கருணாநிதி, “இடையிலே களப்பிரர் ஆட்சி வந்தது. அவர்கள் பாலி மொழிக்கு முன்னுரிமை தந்ததால் தமிழ் பின்னுக்குப் போனது. அதுவொரு இருண்டகாலம்… ” என்று போகிறபோக்கில் சொல்லிப்போனார். களப்பிரர் காலம் பற்றிய கருணாநிதியின் இந்தக்கருத்து எந்தளவிற்கு உண்மையானது?

களப்பிரர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இங்கிருந்த மூவேந்தர்களையும் வென்று மூன்று நூற்றாண்டுகள் அரசோச்சியது எவ்வாறு என்பவை குறித்து ஒருமித்தக் கருத்து இதுகாறும் எட்டப்படவில்லை. “கி.பி.3ஆம் நூற்றாண்டில்தான் கர்நாடகாவில் நந்திமலையைச் சுற்றி வாழ்ந்த களப்பிரர் என்ற முரட்டுக்குடியினர் மூவேந்தர்களையும் வென்று சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்… என்று ஒரு கருத்துள்ளது” ( தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து/ பக்கம்- 7 )

“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது… வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி…” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )

இப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).

அதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு’வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.

இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்…” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.

சரி, களப்பிரர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா இங்கிருந்தே கிளர்ந்தவர்களா என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் அவரவர் முடிவுகளை சொல்லிக்கொண்டிருக்கட்டும். இதில் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வசை ஏன் வருகிறது? இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள்?

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா? அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா? எதற்கிந்த வசை?

இங்கேதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் சாதிய சாய்மானங்கள் அவர்கள் எழுதிய வரலாறுகளுக்குள் பதுங்கியிருப்பதைக் காண வேண்டியுள்ளது. தமது பார்ப்பன மற்றும் வேளாள சாதிகளுக்கு அனுசரணையாக இருந்த ஆட்சிகள் இருந்த காலத்தையெல்லாம் பொற்காலம் என்றும் தமது சுரண்டும் நலன்களுக்கு எதிராக இருந்த ஆட்சிகளின் காலங்களையெல்லாம் இருண்டகாலம் என்று அவர்கள் மோசடியாக எழுதிவைத்துள்ளார்கள். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளமாமலே கருணாநிதி உள்ளிட்ட பலரும் பிதற்றித்திரிவதுதான் வாடிக்கை. சரி, இருண்டகாலம் என்று இந்த ஆதிக்கசாதியினர் களப்பிரர்கள் மீது காழ்ப்பு கொண்டு சொல்வதற்கு காரணங்கள்தான் யாவை?

அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன. இது போதாதா இந்த பார்ப்பனர்களும் வேளாளர்களுமாகிய வரலாற்றாய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?
“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.
பார்ப்பன, வேளாள ஆய்வாளர்களால் இருண்டகாலம் என்று குற்றம் சாட்டப்பட்ட களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்…” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)
களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுகிற கே.கே.பிள்ளை கூட ‘’பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ( திரமிள சங்கம் ) ஒன்றை நிறுவினார் ( கி.பி.470.) … பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பல இச்சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்…. ” என்கிறார் ( முன்சொன்ன நூல், பக்கம்- 186 )

‘’புத்த மதமும், சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த இந்த இருண்டகாலத்தில்தான் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பல நூல்கள் இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்தக்காலத்தில் எழுதப்பட்டவைதான்” என்று இருண்டகால கண்டுபிடிப்பாளர் நீலகண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பேரா.அருணன், பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி இதே காலத்தில்தான் திருக்குறளும் எழுதப்பட்டது என்கிறார்.

அதுமட்டுமல்லாது பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர். ஆக, களப்பிரர்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் தந்து தமிழை வீழ்ச்சியடைய வைத்து இருண்டகாலத்தை உருவாக்கினார்கள் என்கிற கருணாநிதியின் கருத்து வரலாற்றுண்மைக்குக்குப் புறம்பானது.

இப்போது ஒரு பார்ப்பனர்களின் மாநாடோ அல்லது வேளாளர்களின் சைவ சித்தாந்த மாநாடோ நடந்து அந்த மாநாட்டுக்கு கருணாநிதி தலைவராயிருந்து களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என்று சொல்லியிருப்பாராயின் அவரது குமைச்சலையும் குற்றச்சாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் நடப்பதோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அதில், களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததா முடக்கப்பட்டதா? அப்போது இலக்கிய, இலக்கண நூல்கள் எதுவும் வெளியானதா இல்லையா என்கிற ரீதியில் மட்டுமே பரிசீலிப்பதை விடுத்து இப்படி யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மன்றத்தில் வாசிக்கிறார் கருணாநிதி. கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியிருப்பதாக நம்பப்படுகிற ஒரு சபையில் இப்படியொரு பொய்யை அவர் சொல்லிப்போயிருக்கிறார்.

“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” என்ற தமாஷை சீரியஸாகப் பேசுகிற- கருணாநிதிக்கு நெருக்கமான- தலித் அறிவுஜீவிகளோ அல்லது வரலாற்றாசிரியர்களோ அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தான் மிகுதியும் கொண்டாடி மாநாட்டு இலச்சினையில் பொறித்துள்ள அய்யன் வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் இந்த வையத்திற்கு தந்தது களப்பிரர்கள் காலம்தான் என்று கருணாநிதி இனியேனும் உணருவாரேயானால், பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுக்காமல் இருக்கும் வாய்ப்புண்டு.

அவசரத்திற்கு உதவிய நூல்கள்:

1. தலித் கலை இலக்கியம் அரசியல், தொகுப்பாசிரியர்: ரவிக்குமார் ( தலித் கலைவிழாக் குழு, நெய்வேலி)
2.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
3.பொங்குமாங்கடல் – அருணன் ( வசந்தம் வெளியீட்டகம் , மதுரை )
4.தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து ( ஜாசிம் பதிப்பகம், திருச்சி )

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அரச ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் : ஐ.நா கொழும்பு கிளைக்கு முன்னால்

Comments 13

  1. Trincomathi says:
    16 years ago

    இது வரை காலமும் நான், சமணமும், பெள்த்தமும் ஒன்று என நம்பினேன். என்ன வித்தியாசம் என பதில் தர முடியுமா?

  2. THAMILMARAN says:
    16 years ago

    பொய்க்ள வ்ரலாறூ ஆக்கி வைத்திருக்கும் இன்ம் இல்ங்கையில் இன்வாதம் பேசி புத்தர் சிலைகள் வைத்து அரசிய்ல் வியாபாரம் செய்கையில் கலைஜ்ர் பேசிய்தைப் பெரிதுப்டுத தேவையில்லை.நாத்திகவாதி போல் நாட் கம் ஆடிக் கொண்டு பார்ப்பனியம் காக்கும் கம்ல்காச்ன் போல்வா கலைஜ்ர்? தன் மக்னுக்கே பறய்ர் குல்த்தில் ம்ருமக்ள் எடுத்தவ்ர்.ஆதவா நீ சுட்டெரிப்பது உன் குல்ம் காக்கும் சூரிய்க் க்ட்வுள் அவ்ர் மீதா ஆராய்ச்சி??

  3. அப்துலாஹ் says:
    16 years ago

    இவ்வளவு சரித்திர அறிவுடன் நகைசுவையாகவும் எழுதும் ஆட்ற்றல் அபாரம். ஆதவன் தீட்சண்யா.! உங்கள் எழுத்து நடைமுறை அற்புதம்.

  4. Shiva says:
    16 years ago

    சங்கம் மருவிய கால நூல்கள் எனப்படுவன களப்பிரர் காலத்துக்குரியன எனக் கூறப் படுகிறது. இது பற்றிப் பலர் குறிப்பிட்டுள்ளனர். சங்கம் மருவிய காலத்துக்குரிய திருக்குறளிற் கல்விச் சிந்தனை பற்றிய ந. இரவீந்திரனின் அண்மைய நூல் சுட்டிக் காட்டுகிற விடயங்களில் ஒன்று: திருக்குறள் சமணம், பவுத்தம், ஆசீவகம் ஆகிய மதப் போக்குக்களின் செல்வாக்குக்கு உட்பட்டது என்பதாகும்.
    இம் மதங்களிடையே அக் காலத்தில் பகைமையான மோதல் இல்லை என்றே தெரிகிறது. (சிலப்பதிகாரத்துக்குப் பின்பு ஒன்றை மற்றது நிந்திக்கும் போக்கைக் காணலாம்).
    வடக்கில் மகத மன்னர்கள் மூன்று மதங்களையும் ஆதரித்ததற்குச் சான்றுகள் உள்ளன. அசோகனுக்குப் பிறகு பவுத்தம் கூடிய முக்கியம் பெறுகிறது.

    தமிழ் வரலாற்றியலின் பலவீனம் ஆவணப்படுத்தலின்மையாகும். (மகாவம்சத்தில் அதன் காலத்துக்கு முந்திய வரலாற்றில் புனைவுகள் உள்ளதும் மகாசேனன் பற்றி இருட்டடிப்பு உள்ளதும் உண்மையே ஆயினும்) இலங்கை ஒப்பிடுகையில் தென்னாசியாவில் சிறப்பான விதிவிலக்கு.
    தமிழ் வரலாற்றில் அறநூல்களும் இலக்கண நூல்களும் வந்த காலம் பற்றிய வாய்மொழி வரலாறு கூட இல்லையானால், மகாவம்சத்தில் மகாயான பவுத்தம் இருட்டடிப்புக்கு உட்பட்டதை விட எத்தகைய கொடிய இருட்டடிப்பாக அது அமைகிறது.

    நம்மிடம் காலத்தைச் சரியாக மதிப்பிடும் மரபும் பலவீனமானது.
    அதனாலேயே, மிக அகச்சார்பாக பவுத்தர்கள் தலித்துக்களே என்று அடித்துக் கூறுவது முதலாக சைவம் சங்க காலத்திலேயே இருந்தது என்று சொல்லுகிறது வரையிலான “ஆய்வு முடிவுகள்” வருகின்றன. தமிழ் ஆய்வுக்கு வேண்டாத பொருளாக வரலாற்று ஆய்வு உள்ளது.
    இது தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்குத் தடையாக உள்ளது மட்டுமன்றிச் “சைவமும் தமிழும்” என்று பிற மதங்களை நிராகரிக்கும் போக்குக்கும் நல்ல தமிழ்ப் பாடல்களைகொண்ட நாலாயிரப் பிரபந்தங்களைக் கூட சமஸ்கிருத ஆதிக்கவாதிகளிடம் ஒப்படைக்கவும் வழி செய்துள்ளது.
    கருணாநிதியின் வரலாற்று அறிவு மிக மழுங்கலானது. கண்டிக்க வேண்டியோர் அவருக்குத் துதி பாடும் அறிஞர்கள் தாம்.

  5. மா.இராக்கியண்ணன் says:
    16 years ago

    திருக்குறளைக் களப்பிரர் காலத்து நூல் என்று கூறுவோர்தான்,வரலாற்றைத் தரிக்கும் ஆய்வாளர்களாவார்.கி.பி.2-ஆம்,3-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தியவை சங்கநூல்களான எட்டுத்தொகை பத்தப்பாட்டு நூல்கள் என்பது பல கோணங்களில் இருந்தும் நிறுவப்பட்டுள்ள உண்மையாகும்.அந்த எட்டுத்தொகைபத்துப்பாட்டு நூல்களிலேயே திருக்குறள் கருத்துக்களும் பாடலடிகளும் ஆங்காங்கே இடம்பெற்றிருப்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.அதாவது கி.பி.3-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே திருக்குறள் கருத்துக்களை மேற்கோளாக ஆளும் அளவுக்கு அந்நூல் மக்களிடம் பரவி வழங்கிவந்துள்ளதை அறிய முடிகிறது.-ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்திஇல் என்று அறம்பாடிற்றே-எனப் புறநானூறுதிருக்குறளை அறம் என்ற பெயரில் எடுத்தாண்டுள்ளது.(எந்நன்றிகொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை ஒருவன் செய்ந்நன்றி கொன்ற மகற்கு-தருக்குறள்) இப்படி ஏராளமான பகுதிகளைச் சங்கநூல்களான அகம் மற்றும் புற நூல்கள் காட்டும்போது திருக்குறள் எவ்வாறு  களப்பிரர் கால நூலாக முடியும்? பிற்காலத்தில் தமிழ் நூல்களைப் பகுத்தும் வகுத்தும் தொகுத்தபோது  நீதி இலக்கியங்களை வரிசைப்படுத்தியவர்கள பொருள் ஒற்றுமையின் அடிப்படையில் திருக்குறளைப் பதினெண் கீழ்க்ணக்குடன்வைத்துத் தொகுத்திருப்பர் என்று கருதுவதே பொருந்துவதாகும்.மேலும் இலக்கியங்களை ஆராயும்போது சமய,சாதீய நோக்குடன் மனதில் ஒரு கருத்தை விதைத்துவைத்துக்கொண்டு ஆயந்தால் அதற்கேற்ற விளைச்சல்தானே கிடைக்கும்! களப்பிரர் கால ஆராய்ச்சியும் இங்கே அதுபோன்றதோ என்று ஐயுறத்தோன்றுகிறது.

    • Shiva says:
      16 years ago

      நம்மிடம் காலத்தைச் சரியாக மதிப்பிடும் மரபும் பலவீனமானது என்றேன். அதை நீங்கள் மீளவும் நினைவூட்டுகிறீர்கள்.
      திருக்குறளின் காலம் பற்றிய ஆய்வுகள் பல்வேறு கோணங்களில் செய்யப்பட்டுள்ளன.
      அகப் பாடல்கள் அறம் பற்றிய கருத்துக்களை உரப்பனவல்ல.
      புறநானூற்றில் வரும் கணியன் பூங்குன்றனார் பாடல் தான் தமிழில் மெய்யியற் பார்வையைக் கொண்ட முதற் செய்யுள்.
      தயவு செய்து எந்தெந்தத் தொகை நூலகள் குறளின் கருத்துக்களை எடுத்தாள்கின்றன என்று சொல்லுங்கள். குறளின் அற விழுமியங்களும் உலக நோக்கும் சங்க காலத்துகுரியன என்பதற்கான அடிப்படை என்ன? அவற்றின் ஆசீவக, சமண, பவுத்தச் சாயல்கட்கான விளக்கமென்ன?
      மூன்று நூற்றாண்டுக் கால வரலாற்றை இருட்டடித்த ஒரு மரபின் நோக்கில் தமிழரின் வரலாற்றை அறிய முடியாது.
      கொஞ்சம் விரிந்த பார்வை வேன்டும். எவரும் தமிழுக்கு எதிராகச் சதி செய்யவில்லை. வரலாற்றைப் பொய்களிலிருந்து மீட்கவே பலரும் முயல்கிறர்கள்.

  6. kasi.elangovan teacher says:
    16 years ago

    அழகாகவும் ஆழமாகவும் உள்ளது…உங்கள் கருத்து….இது முற்றிலும் சரி..
    நடன.காசிநாதனும் இதைதான் சொல்கிறார்…நானும் இந்த கருத்தைதான் பள்ளியில் மாணவர்களிடம்
    கூருவதுண்டு ..
    காசி.இளங்கோவன்..
    ஆசிரியர் [வரலாறு]
    ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி
    சீர்காழி.

  7. விடுதலை says:
    16 years ago

    சிறப்பான பதிவு

  8. எஸ்.ஜி.ரமேஷ்பாபு says:
    16 years ago

    ”திருக்குறளைக் களப்பிரர் காலத்து நூல் என்று கூறுவோர்தான்,வரலாற்றைத் தரிக்கும் ஆய்வாளர்களாவார்.” என்று கூறும் மா.இராக்கியண்ணன் அவர்களே… வரலாற்றை இப்படி பார்ப்போம். இன்னும் 100 ஆண்டுகள் கழித்து ஒரு வரலாறு கட்டமைக்கப்படும். அது எப்படியெனில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த “இயற்கை” என்ற திரைப் படத்தை பார்த்துதான் திருக்குறள்  எழுதப்பட்டது என்று. ஆச்சரியப்படவேண்டாம்.
    காதல் வந்தால் சொல்லியனுப்பு
    உயிரோடிருந்தால் வருகிறேன்… என்ற பாடலத்தைதான்
    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வாற்க் குரை 
    ’’’’நம்மிடம் காலத்தைச் சரியாக மதிப்பிடும் மரபும் பலவீனமானது என்றேன். அதை நீங்கள் மீளவும் நினைவூட்டுகிறீர்கள். திருக்குறளின் காலம் பற்றிய ஆய்வுகள் பல்வேறு கோணங்களில் செய்யப்பட்டுள்ளன’’’’’’’’’ என்று சிவா சொல்வதை இதனுடன் இணைத்து பாருங்கள்.
    வரலாற்றை எழுதுபவர்கள் எழுதுவதுதானே எழுதென்றாகிறது.

  9. எஸ்.ஜி.ரமேஷ்பாபு says:
    16 years ago

    ஆதவன் தீட்சண்யா ஒரு சிறந்த கட்டுரையை எழுதி உள்ளார். இன்னும் கூட கலப்பிரர் காலம் குறித்தும், அந்த சமயத்தில் தமிழ் அடைந்த வளர்ச்சி குறித்தும் விரிவாக எழுதப்பட வேண்டும்.

  10. shanmugam says:
    16 years ago

    sir pls send kanda sasti kavasam tamil lyrics ,

    • xxx says:
      16 years ago

      சாத்தியமான ஒரு வழி: இணையத்தில் “கந்த சஷ்டி கவசம்” என்பதை ‘கூகிள்’ தேடல் செய்யுங்கள்.

      (எச்சரிக்கை: கந்தசஷ்டி கவசத்தால் உங்களைக் கருணாநிதியிடமிருந்து காப்பாற்ற முடியாது.)

  11. அரிபாபு says:
    16 years ago

    எனக்கு எங்கே யாரிடம் முறையிடுவது என்று தெரிய வில்லை! எனக்கு தேவை நியாயம்!

    http://controversialhistory.blogspot.com/2007/01/tamil-brahmi-myth-of-antiquity-of-tamil.html

    இந்த தொடுப்பில் குறிப்பிடுவது போல் தமிழ் எழுத்துக்கள் (Tamil Bhrami), வடநாட்டில் இருந்து இங்கு வந்து அல்ல! இங்கிருந்துதான் வடநாட்டிற்கு சென்றது! இது தமிழ்ர்களுக்கு தெரியும்,

    ஆனால், ஆதாரம்!?
    கிடைத்தது! ஆதிச்சநல்லூரில்!!

    ஆதிச்சநல்லூரின் ஆழ்வாராய்வு அவ்விடம் இறையிலிருந்து 2500 முதல் 3500 ஆண்டுகள்(கிமு 1500 முதல் கிமு 500) பழமையானது என்கிறது!

    2005 FEBRUARY மாதம் ஒரு முது மக்கள் தழியில் அறிய வகை Tamil Bhrami எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டது! அவ்வெழுத்துக்கள் குறைந்தபட்சம் கிமு 500 ஆம் நூற்றாண்டை சார்த்தென்று முதல்கட்ட அறிவிப்புகள் வெளியாகின. அடுத்த கட்ட ஆராய்ச்சி (Corbon-14 dating) செய்யபோவதாகவும் மேற்கொண்டு தகவல்கள் வெளியாகுமென்றும் தெரிவிக்கப்பட்டது!

    http://www.hinduonnet.com/2005/02/17/stories/2005021704471300.htm

    ஆனால் இன்றுவரை ஒரு முடிவும் வெளியாகவில்லை! நடந்து முடிந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிலும் இதைபற்றி ஒரு பேச்சும் இல்லை! நமக்கு இது மறந்து போய்விட்டது!!

    ஏன்!?

    இந்த முடிவு வெளியானால் இது வரை நாம் படித்த இந்திய சரித்திரம் மாரிவிடும்! இந்திய, தெற்காசிய மொழிகளுக்கெள்ளாம் தமிழை தாய்மொழியாக அறிவிக்க நேரிடும். மத்திய அரசின் மெத்தனமா? அல்லது சூழ்ச்சியா?

    தயவுசெய்து இந்த விஷயத்தை உலகிற்கு வெளிகொனறுங்கள்!

    என் தமிழ்ல் பிழை இருக்கும் மன்னிக்கவும்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...