கருணாநிதி அரசின் முடிவை எதிர்த்து நளினி மேன்றையீடு செய்யப்போவதாக முடிவெடுத்துள்ளார். இத்தகவலை வேலூர் சிறையில் இருக்கும் நளினியை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வேலூர் சிறையில் இருந்து வரும் நளினி, ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் தன்னை முன்னர் விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பு தர்மராவ், கே.கே. சசிதரன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு மார்ச் 11ஆம் திகதி அன்று விசாரணைக்கு வந்தது.
நளினி விடுதலை தொடர்பாக சிறைக்கைதிகள் ஆலோசனைக் குழு தமிழக அரசிற்கு அளித்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் வைத்து அரசு வழக்கறிஞர் பி.எஸ். இராமன் நீதிபதிகளிடம் வழங்கினார்.
நளினி விடுதலை தொடர்பாக ஆலோசனைக் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க இரண்டு வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.
இவ்வழக்கு ஒரு தனி மனிதன் வாழ்க்கை தொடர்பானது, ஆகவே வழக்கு விசாரணையை தாமதப்படுத்தாமல் விரைவில் முடிவு செய்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் விசாரணையை இம் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன் நாள் விசாரணைக்கு வந்தது. நளினியை விடுவிக்க இயலாது என்று அறிவுரை குழு பரிந்துரை செய்துள்ளது. அறிவுரை குழுவின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கிறது என்று உயர்நீதிமன்றத்தில் பதில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வழக்கறிஞர் புக ழேந்தி தமிழக அரசின் டிவை எதிர்த்து நளினி மேன்றையீடு செய்யப்போவதாக தெவித்துள்ளார்.
அறிவுரை குழுவின் முடிவு கருணாநிதியின் அறிவின்படி செயல்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.. நான் முதல்வராக இருந்திருந்தால் காஞ்சி சங்கராச்சாரியை கைது செய்து இருக்க மாட்டேன் என்று கருணாநிதி கூறியதாக எஸ்.வி.சேகர் சொல்லியிருந்தார்.. ஈழத்தமிழர் சாவை வேடிக்கை பார்த்து ரசித்த கருணாநிதி ஆட்சியில் சங்கரராமன் கொலைக்கான சாட்சிகள் அடுத்தடுத்து பல்டியடிக்கிறார்கள்.. மடசெலவுக்காக இந்தியன்வங்கி ஒரு கோடி ரூபாய் அன்பளீப்பு கொடுத்துள்ளது.. ஒரு மெல்லிய கோட்டை நிகழ்வுகளூடன் இணைத்துப் பாருங்கள்.. பெரியாரின் பெயர் சொல்லும் திராவிட ஆட்சி பார்ப்பன கைக்கூலி ஆட்சியாக மாறிவிட்டது புரியும்.. சங்கராச்சாரியை காப்பாற்ற துடிக்கும் கருணாநிதி நளீனி என்ற தமிழட்சியை விடுவிக்க மாட்டார். புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக கருணாநிதி நம்புவதால் அவரின் மனநோக்கப்படி அவர் ஈழத்தமிழர்களை முற்றொழிக்க முயல்வாரேயல்லாமல் காப்பாற்ற மாட்டார்.. தான் ஒரு தமிழனல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
பெரியார் என்ற கன்னடனால் தெலுங்கனும் ,மலையாளீயும் கோலோச்சும் நிலை வந்தது தமிழ் மண்ணூக்கு இன்றூ கலைஜரை அவமதிக்கும் நிலமைக்கும் அது வந்தது.நளீனி ஒரு துயரக்கதாபாத்திரம் கொலையில் நேரடியாக பங்கேற்காது விட்டாலும் கொலைத்தண்டனைக்கு மேலாக அனுபவித்து விட்டார்.குடும்பம் வாழ்க்கை என்றூ எதுவுமில்லாமல் ஒரு பெண் நித்தம் பட்ட வேதனை கொடியது.அவர் விடுதலையானால் கன்னடன் இளங்கோவன்,தெலுங்கன் பாலசுப்பிரமணீயம்,ராஜா என்றூ திமிங்கிலங்கள் கலைஜரைத் தின்னத் துடிப்பதால் கலைஜரும் அரசியல் நாடகம் ஆடவேண்டி இருக்கிறது. அகப்பட்டிருப்பது அப்பாவி நலினி.
சுத்தத் தமிழன் என்பவனை எவ்வாறு வரையறுக்கிறிர்கள்?
சுத்தத் தமிழன் ஒருவனை உஙளால் காட்ட முடியுமா?
இந்த மாதிரி இன வெறுப்புத் தான் இன்றைய தமிழனின் அவலத்தின் வேர்.
தமிழரை எல்லாம் ஏய்த்து ஏப்பம் விடும் கருணாநிதி என்ற புல்லுருவியை நியாயப்படுத்த நேர்மையானவர்களல் இயலாது.
சுத்தத் தமிழன் என்ற பதம் கட்டுரையிலோ அல்லது கருத்துக்களிலோ எங்கே என்று தேடிப்பார்த்தேன், காணவில்லை. சுத்தத் தமிழன் என்று ஒரு இனம் உண்டென்று சொல்ல முடியாது. ஆனால் தமிழன் என்று ஒரு இனம் உள்ளது. தமிழன் என்பவன் பாரம்பரியமாக தமிழ் பேசி வருபவன்தான். இவர்களை எப்படி அடையாளம் காண்பதென்பது, இவர்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழ் கதைக்க முடியுமான வேளையில் தமிழில்தான் உரையாடுவார்கள். இலங்கை முஸ்லிம்கள் இதற்கு விதிவிலக்கு என்று அவர்கள் சொல்வார்கள்! மேடையில் தமிழிலும் வீட்டில் தெலுங்கிலும் கதைப்பவன் தமிழன் இல்லை. தமிழருக்காக அரசியல் செய்து பிழைப்பவனும் தமிழன் இல்லை. நான் தமிழன் என்று மார்தட்டி பிள்ளைகளுக்கு தமிழே தெரியாது வளர்ப்பவரும் இருக்கிறார்கள். உலகில் உள்ள இனங்களில் மிக அபூர்பமான இனமாகிய தமிழர்தான் தமிழனைக் கண்டதால் ஆங்கிலத்தில் கதைப்பார்கள். வேறு சில இனங்களும் உண்டுதான். ஆனால் பெரும்பான்மையான இனங்கள் தமது தாய்மொழியிலேயே கதைப்பதை நான் கண்டுள்ளேன்.