சமீபகாலமாக கருணாநிதியின் குடும்பக் கட்சியான திமுக மேடைகளில் பாராளுமன்றத்தில் தமிழில் பேச வேண்டும் என்ற கோரிக்கை உரத்து ஒலிக்கிறது. வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு முன்னர் ப்ராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை கேட்டுப் பெறுவதர்கான முயர்ச்சியில் திமுக இறங்கியுள்ளது. மேலோட்டமாக பார்க்கும் போது தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் உள்ள பற்றின் காரணமாக இக்கோரிக்கை முன் வைக்கப்படுவதைப் போன்ற ஒரு தோற்றம் இருக்கும் ஆனால் உண்மையில் மத்திய உரம் மற்றும் இராசாயனத்துறை அமைச்சரும் க்ருணாநிதியின் மகனுமாக மு.க. அழகிரி பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிப்பதில்லை. காரணம் அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கே ஆங்கிலம் தெரியாது என்பதோ தமிழ மட்டுமே தெரியாது என்பதோ பிழையானதோ, தவறானதோ இல்லை. ஆனால் தன் மகனுக்கு பிரச்சனை வருகிறது என்பதாலேயே திமுகவினரும் கருணாநிதியும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். என்பதோடு மிக நுண்மையாக ஒரு எடுத்துக்காட்டை சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வில் இருந்து எடுத்துக் காட்ட முடியும். புதுடில்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இந்திய ஆங்கில ஊடகங்களும், இந்தி ஊடகவியளார்களும் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் ஒரு நிருபர் தமிழில் ஒரு கேள்வியைக் கேட்டார் ஆனால் அந்த நிருபரின் மீது எரிந்து விழுந்த மத்திய உள்துறை அமைச்சரும் வேட்டி கட்டிய தமிழருமான சிதம்பரம் இங்கே தமிழில் கேள்விகள் கேட்கக்கூடாது இங்கே இந்தி ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆகவே உங்கள் கேள்வியை இந்தியிலோ ஆங்கிலத்திலோ கேளுங்கள் தமிழில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன் என்று கடைசி வரை அந்த நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ஒரு வேளை அந்த நிருபருக்கு தமிழ் மட்டுமே தெரிந்திருக்கலாம். அல்லது நமது ஊர் வேட்டி கட்டிய தமிழரிடம் டில்லியில் வைத்து தமிழில் கேள்வி கேட்பதை அந்த நிருபர் பெருமையாகவும் நினைத்திருக்கலாம். அவரது ஆசை என்னவாக இருந்தாலும் அது சிதம்பரத்தால் நிராகரிக்கப் பட்டதோடு ஏனைய ஊடகவியலாளர்களின் மத்தியில் அந்த நிருபர் அவமானபப்டுத்தப்பட்டார்.
இச்சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து சென்னையில் இச்சம்பவம் குறித்து கருணாநிதியிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி தமிழ் தெரியாத ஊடகவியலார்கள் மத்தியில் ஆங்கிலமும் இந்தியும் தெரிந்தவர்களுக்கு மத்தியில் தமிழில் கேள்வி கேட்டதால் நண்பர் சிதம்பரம் அப்படிச் சொல்லியிருக்கலாம் என்று கருணாநிதி பதிலளித்தார்.சிதம்பரத்தில் பதிலை புரிந்து கொண்ட கருணாநிதிக்கு தன் மகன் தொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழ் கோரிக்கை தொடர்பான யதார்த்தம் புரியாதா? இந்திய பாராளுமன்றத்தில் மட்டும் என்ன எல்லா மாநிலத்துக்காரர்களும் தமிழ் படித்துக் கொண்டா பாராளுமன்றம் வருகிறார்கள். அல்லது கருணாநிதியின் மகன் என்பதாலும் தமிழகத்தின் தென் மாவட்டத்து சண்டியர் என்பதாலும் இவர் பேசுகிற தமிழ் வட நாட்டுக்காரகளுக்குப் புரிந்து விடப் போகிறதா? இந்திய பிராந்திய மொழிகள் எதுவாக இருந்தாலும் அது தமிழோ, இந்தியோ, மலையாளமோ, கன்னடமோ எதுவாக இருந்தாலும் அது இந்தியாவின் பொதுமொழியாக ஆக முடியாது ஆகவும் கூடாது. இந்தியர்களின் பொதுமொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும். தவிறவும் தமிழகத்தில் கருணாநிதி குழுவினர் துவக்கி வைத்த மொழித் துவேஷம். அவர்களின் குடும்ப, வாரிசு அரசியல் வளர்சிச்க்கும், பெரும் கோடீஸ்வரக் குடும்பமாக வள்ரவுமே பயன்பட்டிருக்கிறதே தவிற கருணாநிதி தமிழுக்கு எதுவும் செய்ததில்லை. தமிழர்களுக்கும் எதுவும் செய்ததில்லை. செம்மொழி மாநாடு என்பது உலகெங்கிலும் தன் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பை சரி செய்யும் முயர்ச்சியே அன்றி வெறுதும் இல்லை.மத்திய அமைச்சராக அழகிரி பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை அவர் நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்ததில்லை. திமுகவின் எத்தனையோ மூத்த அறிவாளிகள் திருச்சி சிவா மாதிரியான ஆட்கள் இருந்தும். அவர்களுக்கு மிகச் சிறந்த ஆங்கில அறிவு இருந்தும் அவர்களை ம்த்திய அமைச்சர் ஆக்காத கருணாநிதி. தனது மகன். ,மகள், பேரன் என வாரிசுகளுக்கு மட்டுமே பதிவியை வழங்கி வருகிறார். கருணாநிதியின் இந்த போலித் தமிழ் பற்ரில் இனியும் தமிழர்கள் ஏமாறக் கூடாது.
நெஜ்சுக்கு நீதி எழுதிய நெருப்பை,இந்தித்திணீப்பை எதிர்த்து நின்ற கல்தூனை அரசியல் நரிகள் அசிங்கப்படுத்துகிறார்கள்.தன் குடும்பம் என்ற குறூகிய வட்டத்துள் வாழும் தலைவனா கருணாநிதி.சைவத்தை முன்னேற்றூவதாய் மானியம் வாங்கி தமது குடும்பத்துள் அசைவம் சாப்பிடும் தொண்டர் திலகங்கலை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் தனது குடும்பத்திலே சமத்துவம் கண்டவரை நான் பார்த்த்தில்லை.
சாதி இல்லை என்றூ வேதந்தம் பேசிய லோகநாதனே சாப்பிட வந்த தன் நண்பனை சாதியை சொல்லி அழைத்தது கண்டு திகைத்திருக்கிறேன். ஆனால் எல்லாச்சாதியையும் தன் குடும்பத்தில் இனைத்துள்ள சமத்துவ நாயகனை என் வாழ்க்கையில் பார்த்தது என்றால் அது கலைஜர் தான்
.தமிழ் தமிழ் என்றே வாழும் தமிழ் இனத்தமிழன்.விடிவெள்ளீ அது முத்தமிழ் காக்கும் தமிழ்க முதல்வராகவே இருக்கும்.
தமிழ் நாட்டிற்கு நல்லது செய்யும் நல்லவரை நரம்பில்லா நாக்குகள் பேசிக்கொண்டே இருக்கும் ஆனால் அவை எல்லாம் நல்லவர் பணீக்கான் படிக்கட்டுக்களே.
மகிந்த ராஜபக்சாவிற்கும் கருணாநிதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.தமிழக முக்கிய பதவிகளில் கருணாவின் உறவுகள் அங்கிங்கெண்ணாதபடி நீக்கமற நிறைந்துள்ளது போல் மகிந்தாவின் உறவுகள் அங்கிங்கெண்ணாததபடி நீக்கமற நிறைந்து நிற்கிறார்கள்.
//ஆனால் எல்லாச்சாதியையும் தன் குடும்பத்தில் இனைத்துள்ள சமத்துவ நாயகனை என் வாழ்க்கையில் பார்த்தது என்றால் அது கலைஜர் தான்// இதனை இப்படி திருத்திக் கொள்ளுங்கள். எல்லாசாதிகளிலும் உள்ள மிக மிக மிகப் பெரிய கோடீஸ்வரர்களை தங்கள் குடும்பத்தில் இணைத்துள்ள -(கோடீஸ்வரர்களின்) சமத்துவநாயகன் கருணாநிதி.
இந்த உளறல் மன்னனுடன் ஏன் மினைக்கெடுகிறீர்கள்?, I meant thamilmaran.
தமிழை நேசிப்பது உங்கள் மொழியில் உளறலா xxx ? தமிழ் மொழி இந்தியப் பாராளூமனறத்தில் ஒலிப்பதில் எந்த சனநாயகம் மீறப்படுகிறது? தமிழுக்கு உங்கள் தொண்டுதான் என்ன? நமது அழிந்து போய்விடுமோ என்ற எங்கள் குரல் உங்கள் செவியில் உளறலாய் கேட்டால் உங்கள் காதைக் கொண்டே டொக்டரிடம் காட்டுங்கள்.எமது மொழியைக் காப்பாற்றூம் எம்து பயணம் எவர் தடுத்தாலும் தொடரும்.
முதலில் உங்கள் தமிழை நீங்களே படித்துப் பாருங்கள்.
பிறகு பயனுள்ளாதாக ஏதாவது சொல்லுகிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள்.
சும்மா சும்மா கலைஜர் கலைஜர் என்றும் ஐயா ஐயா என்றும் இரண்டு எத்தர்களை மூர்க்கத்தனமாகப் போற்றுவது தான் தமிழை நேசிப்பதா?
சிவா நீங்கள் முன்வைப்பது வெல்ல முடியாத விவாதம்.வீண்வாதம்.உங்களூக்கு பயனுள்ளது உங்கள் கருத்து, என் கருத்தானது எப்படி உங்கள் கருத்தோடு ஒத்துப்போகும்.
எத்தர்கள் யார்?நீந்திக் கரையேற முயற்சிக்கும் மாலுமியா, கரையில் நின்றூ கை தட்டிக் கொண்டிருக்கும் பார்வையாளனா?
பேசுவது, எழுதுவது இலகுவானது பிரச்சனைகளீல் நின்றூ சமாளீப்பதே கடினமானது.
விடுங்க Boss.. இந்த ஜனங்களூக்கு என்ன சொன்னலும் புரியாது… காந்தி நொட்ட காட்டினா துரொகிகளுக்கும்,களவானிகளுக்கும் தானே ஓட்டு போடுறாங்க….
சமீபத்தில் A.R. ரஹ்மான் இசையில் ஆல்பம் ஒன்றில் பாடுவாதாக மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த எல்லோராலும் அன்பாக (TMS என அன்பாக அழைக்கப்படும் இசையுலகின் மேதை பத்ம ஸ்ரீ TMசவுந்திரராஜன் அவர்கள் மருத்துவமனையில் என்று அறியப்படுகிறது.
அவரது நலன் வேண்டி வானொலிகள் அவர் பாடிய மனது மறக்காத பாடல்களை ஒளிபரப்பி வருவது நெஞ்சை தொடுவதாக உள்ளது.
அன்னார் நலம் வேண்டி நாமும் பிரார்த்திப்போமாக.
நன்றி!
அலெக்ஸ் இரவி
தகவலுக்கு நன்றீ அலெக்ஸ், தமிழைத் தமிழாகவே உச்சரித்து தமிழை அழகு செய்த டி.எம்.எஸ்.நலத்திற்காக பிரார்த்திப்போம்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சொந்தரராஜன் (87) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டி.எம்.சொந்தரராஜனுக்கு கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு இருந்தது. இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நலமுடன் இருக்கிறார்: “”உடலில் உள்ள உப்பின் அளவு குறைந்ததால் உடல்நிலையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு நாள்களில் குணமடைந்து வீடு திரும்புவார். அடுத்த வாரம் மதுரையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்” என டி.எம்.சொந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். பால்ராஜ் தெரிவித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.எம்.சொந்தரராஜனை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணிப் பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.