இலங்கையில் கொத்துக் கொத்தாக வன்னி மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது சொந்த இனம் அழிக்கப்பட்டது குறித்த எவ்வித அக்கறையும் இல்லாத சுயநல மோகி ஒருவரின் வெளிப்படாகவே சிவதம்பியின் இம்மாநாட்டு பங்கேற்பை நாம் காண வேண்டியுள்ளது
அப்படுகொலைக்கு துணை போன இந்திய மத்திய அரசோடு சேர்ந்து கொண்ட கருணாநிதி ஈழ மக்களை எள்ளி நகையாடும் வகையில் அறிக்கை விட்டதையும் போர் நடைபெறவில்லை கனரக ஆயுதங்களை இலங்கை அரசு பயன்படுத்தவில்லை என்று சொன்னதோடு மூன்று மணிநேர உண்ணாவிரதம் ஒன்றை இருந்து விட்டு போர் முடிந்து விட்டது என்று சொல்லி எழுந்து சென்ற கொடூரமான வெளிப்பாடுகளை எல்லாம் நாம் கண்டு களித்தோம். போருக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் மீது இரக்கம் காட்டாத கருணாநிதி மீது புலி ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகசக்திகள் கடும் வெறுப்புற்றனர். இந்நிலையில் தனக்கு எல்லா தரப்புகளிலுமே ஆதரவு இருக்கிறது என்பதை நிறுவ கருணாநிதி தன் அரசியல் இலக்கிய ஊடக சினிமா அல்லக்கைகளை கிளப்பி விட்டு ஆடுகிற நாட்கங்கள் அபத்தக் காட்சிகளாக நம்முன்னே காட்சிகளாக தெரிகின்றன. எந்த மொழி மனித உற்பத்தியில் பங்கெடுக்கிறதோ அந்த மொழியே மக்கள் வ்ழக்கில் நீண்ட நாள் நீடித்திருக்கும் என்ற உண்மையைத் தெரியாத கருணாநிதி தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை மொழிக்கு முக்கியத்துவம் கிடைத்தால் சரி என்று செம்மொழி மாநாடு ஒன்றை கோவையில் நடத்துகிறார்.
வழக்கம் போல நீண்டு பரந்த தமிழ் மரபில் ஜால்ராக்களாகவும் ரப்பர் ஸ்டாம்புகளாகவுமே வாழ்ந்து பழகிவிட்ட தமிழறிஞர்களுக்கோ கருணாநிதியின் இவ்வரிவிப்பு உற்சாகம் கொடுத்திருக்கிறது. இலங்கை தமிழறிஞர் சிவதம்பிக்குக் கூட அப்படித்தான். சொந்த இனம் அழிக்கப்பட்டது குறித்த எவ்வித அக்கறையும் இல்லாத சுயநல மோகி ஒருவரின் வெளிப்படாகவே சிவதம்பியின் இம்மாநாட்டு பங்கேற்பை நாம் காண வேண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு செய்த துரோகத்தை மறைத்து உலகத் தமிழினத்திற்கான வாழ்வது தான் மட்டுமே என்பதை நிறுவ கருணாநிதி எடுக்கும் முயர்ச்சிகள் ஆபாசமான அரசியல் வடிவத்தை தமிழகத்தில் பெற்றிருக்கிறது.தனது ஜாலாரக்களுக்கும் அல்லக்கைகளுக்கும் அரசு நிதியை வாரி வழங்கும் கருணாநிதி இப்போது தமிழ் மாநாட்டு பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது முழுக்க முழுக்க தனது அடிவருடிகளைத்தான்
நக்கீரன் கோபால் ஊடக பாசிஸ்ட் இந்து ராம் ஊடக வாரிசான கலாநிதி மாறன் என தன் குடும்ப ஊடக அதிகார கட்டமைப்பை மேலும் மேலும் நிறுவிக் கொள்ளும் தந்திரத்தை இதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார். தமிழ் சினிமாவில் மூன்றாம் தரமான பாடலாசிரியரான பா. விஜய் என்கிற கவிஞர் கருணாவைச் சந்தித்து மாநாடு மேடை இப்படி அமைக்கலாமா? மாநாட்டு விழா மலர் இப்படி வெளியிடலாமா? என்று தான் வரைந்து எடுத்துச் சென்றவைகளை காட்டியதாகவும். அதைப் பார்த்து தான் மெய்சிலிர்த்துப் போனதாகவும். கூறும் கருணாநிதி உடனே பா.விஜய்க்கு செம்மொழி மாநாட்டில் பதவியும் வழங்கியிருக்கிறார். சினிமாக் காரர்கள் மீது கருணாநிதிக்கு இருக்கும் பாசம் அளவு கடந்தது. மும்தாஜ், சோனா , குஷ்பு, குயிலி , நமீதா என்று கருணாநிதியை இன்று எந்த நடிகரும் எளிதில் பார்த்து மணிக் கணக்காக பேசி விட முடியும். ஆனால் கரும்பு விவசாயிகளோஇகள் இறக்கும் தொழிலாளிகளோ பஞ்சாலை தொழிலாளர்களோ பதவி நிரந்தரம் கோரும் சத்துணவு பணியாளர்களோ இந்த கருணாநிதியை கடந்த எட்டு மாதமாகியும் பார்க்க முடியவில்லை. கமலஹாசன் ரஜினிகாந்துக்கு விருது கொடுப்பது அங்கே நமீதாவை ஆட விட்டு அதை மூன்று மணி நேரம் அமர்ந்து பார்ப்பது. பின்னர் அவர்களை விட்டே தனக்கு ஒரு அரசு விருதை எடுத்துக் கொள்வது. பின்னர் அவர்களை ஒரு விழா நடத்தச் சொல்லி ‘’உலக சாதனையாளர்” என்றொரு பட்டத்தை எடுத்துக் கொண்டு மகிழ்வது. என்று கருணாநிதியின் அர்ப்ப அரசியல் ஆசைகளுக்கு அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.பெரும் கோடிகளைக் கொட்டி சினிமா எடுத்து அதை பல கோடிகளாக மீண்டும் எடுத்து பெரும் பண்ணைகளாக தமிழகத்தில் வாழ்கிறவர்கள்தான் சினிமாக்காரர்கள்
. இவர்களால் தமிழக மக்களுக்கோ அரசுக்கோ கூட எவ்வித ஆதாயங்களும் கிடையாது. ஆனால் இவர்களுக்கு கருணாநிதி காட்டிய சலுகைகள் ஏராளம். அதுவும் ரஜினி கமலுக்கு என்றால் சலுகைகள் தாராளம். இன்றைக்கும் கோடம்பாக்கத்தில் இருக்கும் சினிமாத் தொழிலாளிகளில் நிலை பரிதாபம். ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளோ பகுதி நேர பாலியல் பாலியல் தொழிலாளிகளாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். ஒழுங்கற்ற வேலை நேரத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் வேலை செய்யும் லைட்ஸ் மேன்கள் நூறு ரூபாய் ஊதியம் அதிகமாகக் கேட்டதற்கு பல மாதங்கள் அந்தத் தொழிலாளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் பட்டினி போட்டவர்கள்தான் இந்த இந்த கோடம்பாக்கத்து சினிமாக்காரர்கள். அன்றைக்கு தொழிலாளிகளைச் சுரண்டிய இன்றும் சுரண்டிக் கொண்டிருக்கிற சினிமாத் துறையின் பெரும் பண்ணைகளாக நடிகர் நடிகைகளுக்கு கருணாநிதி நலவாரியம் அமைத்திருப்பதோடு அந்த வாரியத்திற்கு நடிகர் சிவக்குமார் போன்ற பெரும் பணக்கார குடும்ப செல்வாக்கு நடிகர்களை நியமித்தும் இருக்கிறது. இதை எல்லாம் விட மிக மோசமான விஷயமாக நாம் கருதுவது என்ன வென்றால் சென்னை என்பது இன்று உயர் மத்தியதர வர்க்கங்களின் நகரமாக மாறிவிட்டது. பெரும் பண்ணைகள் மட்டுமே சென்னையில் வாழும் சூழலில் ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் வாடகை வீடுகளில் வசிக்கவே பெரும் இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒரு அங்குலம் நிலத்தைக் கூட சொந்தமாக்கி வாழ முடியாத நிலையில் சென்னைக்கு அருகே பையனூரரில் 75 ஏக்கர் நிலத்தை இலவசமாக சினிமாக்காரர்களுக்கு வழங்கியுள்ளார் கருணாநிதி. இந்த இடத்தில் நடிகர் நடிகைகள் மற்றும் பெப்சி உறுப்பினர்கள் 50 ஏக்கரில் வீடு கட்டிக் கொள்வார்களாம். இன்னொரு 15 ஏக்கர் அவர்களின் பொதுவான பயன்பாட்டுக்காம். ( பெப்சியில் உள்ள சாதாரண ஏழைகளுக்கா? இந்த இடத்தைக் கொடுத்து விடப் போகிறார்கள். கோடம்பாக்கத்தில் கோலோச்சும் சில வாரிசு நடிகளும் பெரிய நடிகர் நடிகைகளுமே இந்த இடத்தை எடுத்துக் கொள்ளப் போவதாக பேசிக் கொள்கிறார்கள்) இந்த நிலத்துக்கு குத்தகையாக ஆண்டுக்கு ரூ.1.000 மட்டும் செலுத்தினால் போதுமாம். இதைவிட இ சினிமா தயாரிப்பாளர்களுக்கும் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்துள்ளார் கருணாநிதி. நிலத்தின் வழிகாட்டு மதிப்பில் 3.5 சதவிகிதம் மட்டும் இதற்கு ஆண்டு குத்தகையாக அந்த ‘ஏழைகளிடம்‘ பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது கருணாநிதியின் அமைச்சரவை. குடும்ப அதிகாரம்
இ ஊடக சர்வாதிகாரம் ஆசியாவில் பெரும் கோடீஸ்வரக் குடும்பம் என தமிழகத்தின் சகல துறைகளிலும் ஏகபோகமாய் வளர்ந்து வரும் கருணாநிதி தனக்கு எதிர்ப்பே இருக்கக் கூடாது என்று எல்லோரையும் வளைத்துப் போடுகிறார். அப்படி அரசியல் அல்லக்கைகளை புதிதாக உருவாக்க வேண்டிய தேவையும் அவருக்கு இருக்கிறது. என்கிற நிலையில் மக்கள் வரிப்பணத்தை இந்த கழிசடைகளுக்குக் கொடுத்து தனது கலைஞர் தொலைக்காட்சிக்கு இவர்களிடன் மறைமுக ஆதரவு கோருகிறார். கருணாநி குடும்பத்தின் இந்த வளர்ச்சியும் முற்போக்கு இயக்கமான திராவிட இயக்கத்திற்கு நேர்ந்துள்ள வீழ்ச்சியும் எதிர்காலத்தில் சமூக பண்பாட்டு தளத்தில் ஆழமான விளைவுகளை தோற்று விக்கும் என்கிற நிலையில். திராவிட இயக்கத்தை அபகரித்த கருணாநிதிய்யையும் அவரது குடும்ப ஆட்சியையும் அரசியலில் இருந்து அடியோடு அப்புறப் படுத்தாமல் உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை.
திமுக இப்பொழுது மாறன், ஸ்டாலின் மற்றும் அழகிரி கையில் உள்ளது. எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பண பலம், ஆட்பலம் மற்றும் ஊடக பலம் திமுகவிற்கு உள்ளது. இதை வைத்து கொண்டு தமிழகத்தை சூறையாடுகிறார்கள் இந்த அயோக்கியர்கள். தட்டி கேட்க வேண்டிய பிற திராவிட கட்சிகளும் அமைப்புகளும் நாரி கிடக்கிறது. போலி இந்திய தேர்தல் புறக்கணிப்பு மற்றும் புரட்சிகர கம்யூனிசம் தான் இவர்களை வீழ்த்தும். சும்மா கருணாநிதி திராவிட இயக்கத்தின் துடுப்பு சீட்டு என்று பேசி கொண்டு இருப்பதில் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்.
நீங்க சொல்ரது ரொம்ப சரி அதான் துக்ளக் பத்திரிக்கையில் மிஸ்டர் சோ அவர்கள் பின்னி எடுக்கறாரே? ஆனா யார் இதல்லாம் கவலை படராங்க? ஓட்டு க்கு பணம் வந்தா சரி.
ஒரு பார்ப்பான் திராவிடக் கட்சியை பாராட்டுகிறான் என்றால் திராவிடக்கட்சியின் செயல்பாட்டில் தவறு உள்ள்து… அதைத் தொடர்ந்து அவன் தூற்றுகிறானென்றால் வேறு ஒரு பார்பபன கைக்கூலி தயாராகிறான் என்று அர்த்தம்.. கருணாநிதி தூக்கி எறியப்படும் நேரத்தில் பார்ப்பன எதிர்ப்பு தமிழன் அங்கு வர வேண்டும்
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பான் தமிழன் என்று எமாற்றிக்கொண்டு இருப்பீர்கள்? இதில் உங்ஙளது தனிப்பட்ட காழ்ப்புணர்சிதான் தெரிகிறது. மக்கள் இதைப்பற்றீ பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. வேறு பிழைப்பு இருந்தால் பாருங்கல்.
நம்ம பிழைப்பே இதுதானப்பு.துக்ளக் சோ வால் பேசாமல் இருக்க முடியவில்லை.இந்து ராமால் தமிழனுக்கு கேடு விளகிறது நாம் எப்படி அமைதியாய் இருப்பது.
மக்கள் மக்கள் என மடைத்தனமாகப் பேசி எத்தனை நாளக்குத்தான் உங்கள் கருத்தை ஊர்க் கருத்தாக்குவீர்கள்.பிராமணன் ஒரு விசப்பாம்பு ஒரு உதாரணம் நடிகர் எனப் பூச்சாண்டி காட்டும் கோமாளீ கமல காசனே போதுமே சார்.
may be do …..ok
sir it is true
ரசினி /கெட்டவனுக்கு கடவுள் நிறைய கொடுப்பான்
கடைசியில் கை விட்டுவிடுவான் ,ரசினி இதைத்தான்
சொன்னாரோ .சிறப்பான வரைவு .வாழ்த்துக்கள் .
மக்கள் விரோதி KARUNANITHI FAMILY. SOME WHAT ANGER AND INNER FEELING SATISFIED READING THIS EASSY.
நல்ல கட்டுரை….
நன்றி…
தமிழினி உங்கள் கட்டுரையை வன்மையாக கண்டனம்…… தமிழின தலைவர் ஈழ போரை ௨ நாளில் முடிவுக்கு கொண்டு வந்ததை மறந்துடீங்களா…. கிளர்த்து எழுந்த மாணவர்களை அடக்கி… இலங்கையில் கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது…. தமிழ் மக்கள் துயர் கொண்டபோது தனது கலைஞர் தொலைக்காட்சிக்கு சிரிப்பொலி என புதிய செனல் துவங்கி மக்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியது யார்?
நல்ல நக்கல் விஜய்
doole mamu
AMARKALAM
EXCELENT FRIEND
உலகத்தமிழர்களே! தமிழுணர்வாளர்களே! யாரைப்பார்த்தாலும், ஆதங்கப்பட்டுக்கொள்கிறீர்கள்: ஆனால், தமிழ்ப்பகைவர்களை ஒன்றுபட்டு எதிர்க்கமாட்டேனென்கிறீர்களே!
இனியாவது, சன் குடும்ப – கருணாநிதி குடும்பதொலைக்காட்சிகள் மற்றும் திரைப்படங்கள், நடிகன் விஜய் அஜித் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் என்பவற்றையெல்லாம் இனங்கண்டு முற்றாகப்புறக்கணிப்போமா?
VANAKKAM UNMAYAI MIKA THAIRIYAMAI EALUTIYATHARKKU NANRI
THALTHA PATTA MAKKALIL OURU OODUKKAPATTA MAKKALAGA VALUM ((dalith amoung dalith) ARUNTHATHIYAR
MAKKAL SARBAKA
VALTHUKKAL NANRI
G.JEYARAJ@VETRIVENDAN
ARUNTHATHIYAR
கருனானொதியின் குடும்ப அரசிஅல் விரைவில் முடி்வுஇக்க்கு வரும்.அந்த குடும்பும் பதவிக்கக அட்டிது கொல்லும்
Hi Thamilini, I am more impressed by reading your essay, But now a days Money is deciding the MLA or MP, Because People are more sincere and honest whoever pay the more money they will vote for them only, so my opinion no one can not stop DMK ruling us once again ……………
Excellent article. this must be printed in leaflests and distributed to all over Tamilnadu. Kolignan and his family will ruin Tamilnadu for centures if this type of plundering is allowed. It is the duty of all media to take up this matter seriously. Please educate the people of Tamilnadu how their rights are plundered and only a selected people are enjoying the wealth of that State. Please start from grassroot level to uproot this type of politics in Tamilnadu.
The curse, tears of the Tamils who died in Mullivakkal will haunt his family for generations. God is watching all these crimes.
Justice will prevail at last.
MK& DMK is a BIB Traitor to Tamils!!! It will RUIN in our TIME!! We will witness their DESTRUCTION!!! That is for sure!!! This article is very goog to read!! very good to re read!!! good to preserve for !!!
Tamil nadu for YOUTH
What a great ubity between Mahinda Rajapakse of Sri Laka and Karunanithi of Tamilnadu in establishing FAMILY RULE! A good exposure!
There is no need to have courage to write in online magazines. Read Ti Mu Ka uruvaanatu yen, recently published by Kizhakku Pathippagam, Eldams Road Chennai 18. The author of the book is now harassed for writing the truth in his book.
Sathya
அறிவுஜீவிகள் என்ற போர்வையில் இருக்கும், தமிழ் எழுத்தாளர்கள், தமிழில் எழுதுவோர்……………..முதலியோர், பற்பல சித்தாந்தம் ………………….பேசும் வரையில், ஆரிய-திராவிட மாயைகளில் (கொஞ்சம்கூட சரித்திர ஆதாரமில்லதாவை) இன்றும் உழலும் வரை, இந்து-விரோதத்தைப் பாராட்டி சமதர்மம்-என்றெல்லாம் ………………………பேசி நடிக்கும் நிலையுள்ளவரை கருணாநிதியை – கருணாநிதி மாதிரி உள்ளவர்களை – ஒன்றும் செய்யமுடியாது.
Super article Thamilni..keep it up!!!
trogi …………aresiyel komaligel
kadci enne kadci …..apedi enne nadkali sukem……tamil valerkiren manadu nadethugiren enral potathu…..tamilege minevergelukku enne bathil……
they are not doing any job or business then how can they have this much propeties in all over tamilndau and india.
வந்தவாசி திருச்செந்தூர் வெற்றிகளை பெற கருணாநிதி குடும்பம் மாறன் குடும்பம் எவ்வளவு கோடிகளை செலவழித்துள்ளது என்பது நாடறிந்த ஏடறிந்த விசயம்.. துரோகிகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள எதையும் செய்வார்கள்.. முதல் பகுதி தன் இன மககள் கொலை செய்யப்படுவதற்கு துணை போனார்கள்.மத்தியில் இடம் பெற………. இப்போது மாநிலத்தில் நிலைபெற பணத்தை அள்ளி இறைக்கிறார்கள்…. இன்னும் போகப்போக எதிப்பாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விட இருக்கிறார்கள்… இவர்கள் ஆட்சியிலே விலைவாசி வின்னை முட்டுகிறது மக்கள் வெறுத்துப் போய் உள்ளார்கள்… என்ன இணைய அளவிலே செயல்படும் நல்லோர்கள் இயன்ற அளவு மக்கள் மத்தியில் வந்தால் நல்லது.. நாளையேனும் இந்த குடும்ப அரசியலை ஒழிக்கலாம்..
கருணாநிதியை இப்படி எதிர்க்கும் நீங்கள் நிச்சயம் ஜெ. ஆதரவாளர்தான்
ஜெ எதிரி அவர் ஒழிக்கப்பட வேண்டியவர்.. கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லால் ஜெயா ஆதரவாளர் என்பது தவறு…. துரோகியாக கருணாநிதி மாறிய பின்பு அவ்ர் முதலில் ஒழிக்கப்பட வேண்டியவர் ஆகிவிட்டார்.. தமிழினத்தலைவர் என்று சொல்லிக்கொண்டே ஈழத்தமிழர் அழிவதை வேடிக்கை பார்த்த துரோகி கருணாநிதி.. ஜெயா எப்பவுமே நம்முடைய இனம் அழிய நேரம் பார்த்து பேசுபவர்…
தீட்டம் போட்டு thirudura kutam thiridi konde irrukudu
I never seen a community like Tamils who are widely divieded on the basis of caste and creed. I am ashamed to be born in Tamil Society. My forefather might have sinned a lot. All selfish and have no humane in them.
Rajen Pearlson(Son of Muthu)
Enna koduma thamizhiini idhu
எது சொன்னாலும் நான் சூத்திரன் அதனால் நான் செய்வதெல்லாம் இவர்கள் தப்பு சொல்கிறார்கள் என்று ப்ராமண துவேஷத்தை கிளப்பிவிடுவார். இந்த பதர்களையே நெல்லாமென எண்ணி ஓட்டுபொட்ட நாம் தான் முட்டாள்கள்.
who is responsible for all these.Tamils. now eelan tamils living in west buying all these films.How can you blame someone else. MGR said cheating is their job. To be cheated thats you. Srilankan products are bought eelam tamils but propaganda don’t buy goods from srilanka. UNNAI THIRUTHTHU
வணக்கம் யாழ்தமிழன்,
நீங்கள் சொல்வது தவறு விஜயின் வேட்டைக்காரன் புலம்பெயர் நாடுகளில் மிகப்பெரிய தோல்வி.
இலங்கைப் பொருட்கள் இங்கு விற்பனைசெய்வது குறந்து விட்டது.
இப்போது முன்னைப் போல் இல்லை. யார் நண்பர்கள் யார் எதிரிகள் என மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.
தமிழுக்கென இருக்கும் ஒரெ ஆளையும் இப்படி திட்டியெ எதிர்ப்பை காட்டெளவதால், யார் அனாதையாகப் பொகிறார்கள்? இப்படித்தான இலங்கை பிரச்சினையிலும்நடந்தது!
அவர் என்ன நஎற்றைக்கா தமிழகம் வந்தார் ? என்ன கஎள்வி இது? தமிழக அறிவு இல்லாதவன் தான் கருனானிதியை வெருக்க முடியும். இதெ ஜயலலிதா செய்த போது வாய் மோடி மவுனியாக இருந்தார்கலே? தமிழன் தலை எழுத்து கருனானிதியை எதிர்த்து அழிய வேண்டுமெனில் யாரால் மாற்ற முடியும்?
இப்படி பேசியே அழிந்து போங்கள்……………..
கருணாநிதி எதிரியல்ல துரோகி எதிரியுடன் நேரடியாக மோதலாம் துரோகிகளை உடனே மோதி அழித்துவிட வேண்டும்.. கருணாநிதி இருக்கும்போது தமிழ் தமிழர் வாழ்ந்துவிடவில்லை அவன் அழிந்தாலும் தமிழ் ஒழிந்துவிடப் போவதில்லை
சரியானகருத்து/ காழ்ப்புணர்ச்சி அரசியலில் காசுபணம் சேர்ப்பவர்கள்
வாழவழி காட்டவில்லை மக்களுக்கு/ சொந்த வாழ்க்கையினை உயர்த்துகின்றார் தத்தமக்கு.
பழம்பெருமை பேசிப்பேசி
படுக்கையினில் கிடப்பவர்கள்
எ
ழுந்துவிட்டால் விடிந்துவிடும்- அவர் எழுச்சியுறப் புபாளம் பாடிடுவோம்.
தமிழ் மக்கள் ஒழிக! ஈழம் கதை முடித்தது.!! 60 ஆண்டு அரசியல் விபச்சாரம் ஓங்கி வளர்க!! எங்கே போய் முட்டிப்பது!! தங்கிலிஷ் வெல்க!!
ரொம்ப நல்ல கட்டுரை. ரொம்ப ரொம்ப நல்ல கட்டுரைதான். ஆனால் வெறும் கட்டுரை. அவ்வளவுதான். கருணாநிதி எதிர்ப்பு உணர்வுகளை வடித்து விடுவது; அவ்வளவுதான் வேறொன்றுமில்லை. கட்டுரையாளர் சொல்லியிருப்பவைகளெல்லாம் தமிழ்நாட்டின் அல்லது அயலகத் தமிழர்கள் பலருக்கும் தெரிந்த உலகறிந்த இரகசியங்கள் அல்லது பகிரங்கங்கள்தாம். ஆனால் மாமேதை மார்க்ஸ் குறிப்பிட்டது போலச் சிக்கலின் சாரம் வியாக்யானம் செய்வதிலல்ல் அதை எவ்வாறு மாற்றுவது என்பதே. வெறும் புரட்சிகர வாய்ச்சவடால்களின் மூலமோ; கவைக்குதவாத வெறுப்பை உமிழ்வதன் மூலமோ நாம் எதைத்தான் சாதித்துவிடப் போகிறோம்? இணையத்தின் பக்கங்களை நிரப்புவதைத் தவிர?
தமிழகத்தில் ஒன்றுஇ இரண்டு என சில ஊடகங்கள் முன்பு சார்பு நிலை எடுத்திருந்தன். மீதமுள்ள அனைத்தும், நடுநிலை சமூக அக்கறை என செயல்பட்டன. இந்தக்குடும்பம் ஊடக உலகில் தலையெடுக்க தொடங்கியதும் அனனத்து ஊடகங்களும் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள, ஒரு சார்பு நிலை எடுத்துவிட்டது. இதில் நடுநிலையும், சமூக அக்கறையும் தெருவில்நிற்கிறது. இப்படி ஒருசிலர் விவாத்த்துடன் சுருங்கிவிட்டது.
திமுகவுடன் பேரம் படிந்ததால் மக்கள் தொ.கா திமுக ஆதரவு தளத்தில் இயங்க ஆரம்பித்துவிட்டது இப்பொழுது அது ஈழப் பிரச்சனையை கை கழுவி விட்டது
when will people differentiate the difference between LTTE and SL tamil. Today LTTE is no more is the reality. However SL tamil is still a reality. It is unfortunate that the tamil nadu politicians [ pagutarivu pasari ] is not concerned about them. It is the EU which took up the matter for removing the people from the camps.
Why cannot the author put it very clear that is the congress sonia who nailed last thorn on the coffin of LTTE. Probably as mentioned they are all in making money.
America took 30 years to to go dog, i would not know how much time is written for the closing these economic loot by the MK family.
Is the participant in this blog aware of the reaction of general tamil people for the happening in sl tamil. ACtually they got fed up and left it. Gone are those days when people came on the roads on the call of politicians as it is a open secret that the leader become rich and the worker stays as worker. MK is the best example. So every body has become leader thinking about themself.
What did the sl tamil all over the world did? They have kept quiet by sending money to ltte the wrong organization rather than assisting the common man for studies and economic upliftment.
What are these organization doing in the respective countries ? Why are they not taking up for economic investment in the destructed zone for the development.
A GOOD ARTICLE, BUT WHO CARES? TAMILNADU POLITICIANS ARE MONEY MONGERS . KARUNANITHI KUDUMBAM RUINED THE WHOLE OF TAMILNADU.
//சினிமாக் காரர்கள் மீது கருணாநிதிக்கு இருக்கும் பாசம் அளவு கடந்தது. மும்தாஜ், சோனா , குஷ்பு, குயிலி , நமீதா என்று கருணாநிதியை இன்று எந்த நடிகரும் எளிதில் பார்த்து மணிக் கணக்காக பேசி விட முடியும். ஆனால் கரும்பு விவசாயிகளோஇகள் இறக்கும் தொழிலாளிகளோ பஞ்சாலை தொழிலாளர்களோ பதவி நிரந்தரம் கோரும் சத்துணவு பணியாளர்களோ இந்த கருணாநிதியை கடந்த எட்டு மாதமாகியும் பார்க்க முடியவில்லை.// நூறு விழுக்காடு உண்மை
This article is a biased one. If people in eelam are not united for their personal benefits how you can expect the same from tamilnadu ( India) . Lots of blunders were committed by extremists and because of this they lost the support from international arena. So we cannot blame each other for the sake of eelam.
Most importantly, Karunanithi has betrayed the people of Tamilnadu.
He and his clan have robbed Taminadu blind for years to become some of the the richest families in Tamilnadu.
It was stupid of Tamils of Sri Lanka and their leaders to trust him.
A viper or a crocodile is more trustworthy.
varugiraan oru thalaivan
– poruthu irunthu paarungal
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இந்திய அரசியல் சட்டங்களில் நிரைய மதிருத்தங்கள் அரசியல் புலிகளுக்காக மாற்றம் செய்யப்பட்டது. அதில் ஒன்றுமே இல்லாமல் இறந்த தலைவர்களை கருத்தில் கொண்டு இன்று ஊழல் நிறைந்த ஆட்சியை ஆளுகை செய்துவரும் கலைஜரருக்கு இது புதுமை இல்லை. அவர் போடும் திட்டங்களில் எல்லாம் கனிசமான வருமானம் வந்துவிடுகிரது.
மக்கள் திருந்தாத வரையில் இதற்கு முடிவு இல்லை!
பத்மினி@ஜெயந்தி காரைக்கால்,
ஆரோக்கிய தாஸ், காரைக்கால்.
மன்னன் எவ்வழியோ அவ்வழி தனெய் மக்களும் செல்வர். இது வெகுகாலமாக வழஙிகி வருவதுதானெ. வாக்குகுக்கு பண்ம் பெறுபவர்கள் இருக்கும் வரை இது தொடரத்தான் செஇயும்.த்விர்க்கமுடியாது.
தமிழனுக்கு மானமும் இல்லை, சுடு சொரனையும் இல்லை, ஒட்ருமையும் இல்லை, ஒரு எழவும் இல்லை. தன்மானம் இழந்து பல 1000 வரடங்கல் ஆயுடுச்சு….தி மு க வும் சரி இல்லை, அ தி மு க வும் சரி இல்லை, ப ம க வும் சரி இல்லை, ம தி மு க வும் சரி இல்லை, கமுனிசமும் சரி இல்லை……யென்னனு சொல்ல.. . . .
உடன் பிறப்பே!
பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்..
பெரியாறு போனால் என்ன? காவேரி காய்ந்தால் என்ன?
மீனவன் மடிந்தால் என்ன? கச்சத் தீவு காணாமல் போனால் என்ன?
இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன?
கடிதமும் தந்தியும் காலம் கடத்த இந்த கருணாநிதிக்கு கிடைத்த ஆயுதங்கள்.
தம்பி!
தேர்தல் வந்துவிட்டால் தேனீயைப் போல் தேடிச்சென்று,
அடித்த பணத்தை அள்ளி கொடுத்து,
வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா!
என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே!
பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும.
இனிய கவிதை
emotional news. please send this news to froad karunanidhi & his jalras.
என் மனகருத்துக்களை இங்கே காண்கிறேன். குடும்ப அரசியலை (சன் மற்றும் கலைஞர்) கண்டிப்பாக ஒழிக்க வேண்டும்…
தமிழன் மானத்தேடு, மரியாதையோடும் வாழ வேண்டும்…
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு, அந்த குணமானது எவன் எக்கேடு கெட்டாலென்ன நம் பிழைப்பு நடந்தால் சரி என்ற மனப்பாவம். அது இருக்கும் வரை எதுவேனுமாலும் நடக்கும்.
really good for thought
ஈழப் பெண்ணின்…இரத்தக் குளியல்
வா பெண்ணே….வா! நீதான் வரனுக்காக ஏங்கி வடமேற்குத் திசை நோக்கி வாடித் தவம் கிடந்த வனிதையா? …என்ன செய்ய! உனக்கு நல்ல வரன் பார்த்தால் எங்கள் ஊர் நரியர்களுக்குப் பிடிக்காதே!
பார்போற்றும் ராஜீவும் பாரிவள்ளல் எம்ஜியாரும் பார்த்;த வரனைத்தான் நீகூடப் பரிகாசம் செய்தாயே!
மாங்கல்யம் சூட்டு முன்பே உன் உடம்பின் மச்சத்தை எண்ணிப் பார்க்க எங்கள் ஊர் மாப்பிள்ளைகள் முயன்றார்கள்!
ஆனால்> அது> மரபல்ல என்றல்லவோ எங்கள் மாமனிதர் எம்ஜியார் மறுத்துச் சொல்லிவிட்டார்!
ஆனால்> நீயும் அவர்கள் மடியில்தான் மயங்கித் தவம் கிடந்தாய். அவர்கள் உன்னை மணக்கவா செய்தார்கள்? பாவம்> உன்னை மானபங்கப் படுத்தினார்கள்.
உன் கையைக் கொண்டே உன் கண்ணைக் குத்தும் உத்தமர்கள்(!) இன்று எங்கள் ஊரின் உயர்பதவி; நாயகர்கள்!!
வழக்கமாக> பதவிக்கு வருமுன்பு உன் மேல் பரிதாபம் காட்டிப் பேசுவார்கள்.
பதவிமட்டும் கிட்டி விட்டால் உன்னைப் பார்ப்பதே பாவம் என்று பதுங்கிக் கொள்வார்கள்.
உன் அழுகைச் சத்தம் தான் அவர்களுக்கு அமுத கானம். பதவி வெறிபிடித்த இந்தப் பச்சோந்திகளை நம்பித் தான் நீயும் பலகாலம் தவம் கிடந்தாய்!
இன்று> நீ சிந்திய ரத்தத்தால் இந்தியப் பெருங்கடலைச் சிவப்பாக்கிக் கொண்டிருக்கின்றாய்.
முக்கடலின் சங்கமத்துள் முழ்கித் தவம்கிடந்த முத்தமிழ் நாயகியாம் உன்னை> ரத்தக் குளியலி லிருந்து மீட்பதற்காக எங்களின் இதய தெய்வம் பட்டபாடு கொஞ்சமல்ல.
தத்துவப் படையொன்றுக்கு அவர் தலைமை யேற்கும் முன்பே> தர்மதேவன் அவரைத் தன் உலகுக்கு அழைத்துக் கெண்டான்..
எங்கள் ஊர் இன்று தறுதலைகளின் ஊழல் கைகளில் தவியாய்த்; தவிக்கிறது.
செந்தமிழ் மணக்கும் சித்திரப் பதுமையாய் நின்ற உன்னைச் சிறைமீட்கத் துணிந்தவரும் சிரச் சேதம் ஆகிப் போனார்!
நீயும் சீரழிவுக்கு ஆளானாய்!
தினந்தினமும் உன்னைப் பற்றி பேசியே இங்கு செல்வச் சீமானாய் ஆனவர்> இன்;று சிரித்துச் சிரித்துப் பேசித் தன் குடும்ப வாரீசுகளைச் சிகரத்தில் வைத்துக் கொஞ்சுகிறார்.
ஆனால்> இவர்தான்> தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவுமே வாழ்கிறாராம்.
நீயே நம்பினாய்! பின் என்ன? நாங்களும் தான் நம்புகிறோம்;!
ஆனால்> ஒன்று! செந்தமிழ் நங்கை நீ சிந்திய ரத்தத்துளிகள்> இந்த வங்கக் கடலிலிருந்து வடிகட்டப் படாதவரை>
எங்களின் வாழ்வையும் வளத்தையும் களவாடிய இந்த வசன வியாபாரியின் வாழ்வாதாரம் அனைத்தும் திருடப்பட்டது என்பதையே இந்த வையகம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும். இது சத்தியம்!
கலைஞ்ரைக் காப்பி அடித்தாலே தமிழ் வரும்போது கலைஞர் தமிழை வாழ்விக்கும் கடவுள் என்பதை கண்டு பிடிக்க ஆராய்ச்சிகள் தேவையில்லை.எப்போதும் குப்பைத் தொட்டிகளயே குற சொல்லும் லூசுகள் தம் தப்பை உணர்வது எப்போது?
நல்ல கேள்வி. லூசுகள் தம் தப்பை உணர்வது எப்போது?
விடிந்தும் தூங்கும் விசுக்கோத்துக்கள் கலைஞர் பெருமைக்கு கை தட்ட முடியாமல் தூக்க கலக்கத்திலேயே கிடக்கின்றன.இந்தக் கழண்டதுகள் எண்டைக்கு திருந்தும் எனும் தங்கள் கவலை எனக்கும் உண்டு.
ஊழலின் ஊற்றே! போதுமினோ பொய்வாழ்வு!
ஊழலின் ஊற்றே…! போதுமினோ பொய்வாழ்வு …..
மூதாதை யோர்என்றும் முட்டாள்கள் இல்லையென்பார்
பாதாதை நம்கண்ண தாசனும்தான் — ஓதாத
சொல்லொன்று கண்ட்டீரோ சோம்பிச் சுகம்நாடி
வில்லென்று வாய்குவிக்கும் நீர்
பண்ணிப் பகட்டுரைத்தாய் பண்பாளர் நெஞ்சொடித்தாய்
உன்னை ஒருநாளும் ஓர்ந்துஅறியாய் — மண்ணில்
பகுத்தறிவைக் கொன்றாய் பழுத்ததீஞ் சொல்லால்
வகுத்தாரைச் சுட்டாயே வந்து
மூளைச் சலவைகளால் மூத்த தமிழ்க்குடியின்
நாளைக் குறைக்கவந்த நாத்திகத்தை — வாழவைக்கும்
ஆதவனாய்க் காட்டி அனுதினமும் பேசினையே
போதுமினோ பொய்வாழ்வு போஒய்!
வாழுநா ளெல்லாம் வறியநா ளாக்கிவிட்டு
வீழுநாள் எண்ணிநிற்கும் வீணவரே — ஊழ்வினையால்
ஊர்சுற்றும் நாய்க்கன்றி உன்காலப் பேர்சொல்ல
யாருன்னால் வாழ்ந்தெழுந்தா ராம்
பொய்வேடம் தாங்கி புகழ்நாடும் உன்றனது
மெய்வேடத் தொண்டரெல்லாம் மேன்மையுற — ஐயமுற்றே
கோயில்களை நாடிவிட்டார் கூத்தடிக்கும் நீயுனது
வாயில் கொழுக்கட்டை வை
ஊருக்கு உபதேசம் ஓங்கி முழக்கிவரும்
பேருக்கு நாத்தீயப் பேச்சழகா — பாருக்கு
நீதந்து செல்ல நெறிஏதும் கண்டிருந்தால்
வாவந்து பாசொல்ல வா
குங்குமமும் நீறும் குழைத்தெடுத்த சந்தனமும்
அங்கமதில் கண்டால் அலறுவையே — இங்குனது
தொண்டராய் வாய்த்தவர்கள் தும்பிக்கை யான்றன்னை
தெண்டனிட்டுக் கொள்வதனைத் தேர்
நெற்றியிலே குங்குமத்தை நேர்கண்டால் ஆகாது
வற்றிவிட்ட வார்த்தைகளால் வார்த்தெடுப்பாய் — தொற்றுநோய்
உற்றவரைப் போல்பேசி ஊரைக் கெடுத்தீரே
மற்றவரால் வாழ்ந்திருக்கும் மண்
Posted by செந்தமிழ் அந்தணன் at 2:14 AM
அந்தணன் எல்லாம் காஞ்சி மடத்தில் காவல் கிடந்து சங்கராச்சாரிக்கு பணீவிடை செய்து தங்கள் சாதிச் சங்கத்த சமயபீடமாக்கி தமிழனுக்கு சங்கு ஊதுகிறான்.கறீ தின்னும் பிராமணன் தன்னை தமிழனாய் பாசாங்கு காட்டி தமிழுக்கு சமாதி கட்ட அலைகிறான்.சதிகளூம் சூழ்ச்சிகளூம் நிரம்பிய அரசியலில் கலைஞர் தமிழைக் காப்பாற்ற தன் தள்ளாத வயதிலும் உழைப்பதைப் பொறூக்காத பொறூக்கிகள் சில பிராமணன் சதியில் பங்கெடுக்க முனைகினறன ஆனால் அவர்களால் தானைத் தலைவன் தமிழின் தமிழின் தாய்ப்பால் கலைஞரின் மூக்குக் கண்ணாடியை கூட உரச முடியாது இது சத்தியம்.
அழகாக கருணாநிதின் மன்ன்னாராரடச்சியை வெளிபடுதீரனிர்
உங்களின் கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. உங்களின் வேதனையை, தமிழக மக்கள் கருனா நீதிக்கு காத்திருந்து கொடுத்துவிட்டனர்.
இது கருனா நீதிக்கு கொடுத்த சரியான செருப்படி, தமிழன் ரோஷம் உள்ளவன் என்று நிருபித்து விட்டனர்.
உங்களின் கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது