ஐந்து கண்டங்களை சேர்ந்த 53 நாடுகளை கூட்டிணைக்கும் பொதுநலவாய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை நாட்டு அதிபரின் செயலாளரை போன்று நடந்து கொள்ள கூடாது. அவர் பொதுநலவாய கொள்கைகளை காப்பாற்ற விளைகிறாரா அல்லது இலங்கை அரசாங்கத்தை காப்பாற்ற முயல்கிறாரா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
பொதுநலவாய கொள்கை பிரகடனத்தில் பதினாறு அடிப்படை விதிகள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான விதிகளான ஜனநாயகம், மனித உரிமைகள், மத சுதந்திரத்தை வலியுறுத்தும் சகிப்புத்தன்மை, பேச்சு சுதந்திரம், நீதி-பாராளுமன்றம்-நிர்வாகம் ஆகியவற்றின் பரஸ்பர சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, சுகாதாரம்-கல்வி-குடிநீர் ஆகிவற்றுக்கான உரிமை ஆகிய எட்டு விடயங்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் கறை படிந்த வரலாற்றை செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கழுவி சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்த முனைய கூடாது.
பொதுநலவாய கொள்கைகளை அமுல் செய்யும்படி ஏனைய பொதுநலவாய நாடுகளுக்கு உபதேசம் செய்ய முன் தனது சொந்த நாட்டில் அவற்றை அமுல் செய்து உலகத்துக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ளும்படியும், இவற்றுக்கு முதற்படியாக கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை முழுமையாக அமுல் செய்யும்படியும், பொதுநலவாயத்தின் புதிய தலைவரான மகிந்த ராஜபக்சவை, கமலேஷ் சர்மா வலியுறுத்த வேண்டும் எனவும் நாம் கோருகிறோம்.
இந்த பணியிலிருந்து கமலேஷ் சர்மா தவறுவாராயின், புதிய தலைவர் மட்டும் அல்ல, கமலேஷ் சர்மாவும் தனது பதவிலிருந்து விலகி வீடு போக வேண்டி வரும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது;
இந்த நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களை காப்பாற்றுவதில் ஐநா தவறிவிட்டது என ஐநா செயலாளர் நாயகம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது இந்த நாட்டில் யுத்த குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என அவர் கோடிட்டு காட்டுகின்றார். செனல் நான்கு தொலைகாட்சியில் காட்டப்பட காணொளிகள், படுகொலைகள், காணாமல் போனோர், தடுத்து வைகப்பட்டுள்ளோர் ஆகிய விவகாரங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில்,சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதை செய்வதாக அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில், இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் ஏற்றுகொண்டனர்.
ஆனால், இந்த ஊடக மாநாடு நடக்கும் இவ்வேளையில்கூட, கொழும்பில் நடக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வடக்கில் இருந்து வந்து கொண்டிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல் இலங்கைக்குள் விசா வாங்கிகொண்டு வந்துள்ள செனல் நான்கு தொலைகாட்சி ஊடகவியலாளர் கொலம் மெக்ரே வடக்கு நோக்கி செல்லும்போது அனுராதபுரத்தில் தடுக்கப்பட்டுள்ளார்.
இவை என்ன? இந்த நாட்டில் மனித உரிமை, பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவை இருக்கின்றனவா? பொதுநலவாயத்தின் 53 நாடுகளுக்கும், பொதுநலவாய பிரகடனத்தில் அடங்கியுள்ள பல்வேறு கொள்கை விதிகளை அமுல் செய்யும்படி கூற வேண்டிய, இந்த அமைப்பின் புதிய தலைமை நாடான இலங்கை, தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள போகும் இன்றைய வேளையிலேயே பொதுநலவாய கொள்கை பிரகடனத்தை அப்பட்டமாக மீறுகிறது. இந்த நிலைமைக்கு பிரதான பொறுப்பை கமலேஷ் சர்மா ஏற்றுகொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் பொதுநலவாய மாநாடு நடக்க கூடாது என்றும், அதற்கான தகுதி இந்த நாட்டு அரசாங்கத்துக்கு இல்லை என்றும், நாங்கள் சொன்னோம். இதையே சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் சொல்கின்றன. இதையே இந்தியாவை சேர்ந்த பல அரசியல் கட்சிகளும் சொல்லுகின்றன. இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றி, பாதுகாத்து, இம்மாநாடு இந்த நாட்டில் நடைபெற பெரும் பங்களித்தவர் கமலேஷ் சர்மா ஆகும்.
இந்நிலையில் , இனி எதிர்காலத்திலும் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் கமலேஷ் சர்மா இறங்கக்கூடாது. செயலாளர் நாயகம் என்ற முறையில் அவர் பொதுநலவாய அமைப்புக்கு பொறுப்பு கூறவேண்டுமே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு அல்ல.
புதிய தலைமை நாடான இலங்கையை, தனது சொந்த கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளை ஒப்புகொண்டபடை அமுல் செய்யும்படியும், பொதுநலவாய கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளின் படி நாட்டை நடத்தி செல்லும்படியும், கமலேஷ் சர்மா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவுரை கூற வேண்டும். இது நடக்காவிட்டால் தலைவரும், செயலாளர் நாயகமும் பதவி விலக வேண்டும்.
News Makers. News Breakers. Mano Ganeshan. Praba Ganeshan. I wold like to meet Honourable Ramalingam Chandrasekar from Colombo.
சந்தேகம் வேண்டாம்..கமலேஸ் சர்மா,ஒரு பாப்பான்(பூணூல்) அது எப்போதுமே தமிழனுக்கு எதிரான செயலைச் செய்யும்:அதற்கு 998 சொத்தை காரணங்களையும் வழிமொழியும்
Ramdoss the Commonwealth Conferance is indeed a big Tamasha in Colombo.
the entire world is watching these genocide&co’s active demo@ colombo!
Kamalesh Sharma (born 30 September 1941 is the 5th and current Secretary General of the Commonwealth of Nations) was an officer in the Indian Foreign Service from 1965 to 2001. He served as India’s Permanent Representative to the United Nations, from Aug 1997 to May 2002, before his retirement from IFS. From 2002 to 2004, he served as U.N. Secretary General’s special representative to East Timor. He was appointed as the High Commissioner of India to Britain in 2004. He is a Vice-President of the Royal Commonwealth Society. He is also the Chancellor of Queen’s University Belfast (from July 2009)
Sharma was elected to the position of secretary-general over Michael Frendo, foreign minister of Malta, during the biennial Commonwealth summit in Kampala, Uganda held from 22 November to 24 November 2007. He took over from Sir Don McKinnon of New Zealand on 1 April 2008.
Sharma was re-elected on 30 October 2011 at the 2011 CHOGM. He was unopposed, having been proposed by India and seconded by Pakistan. His second term began on 1 April 2012.
On 9 July 2009 Sharma was appointed Chancellor of The Queen’s University of Belfast after the retirement of Senator George J. Mitchell. Queen’s says he was responsible for cementing relations between Northern Ireland and India which led to the country’s investment in Northern Ireland businesses. The position is a largely honorary title and Sharma said he was enormously proud to be given the job at Queen’s
Alex Ravi you are always great. Lot of new stuff.
What Wiki stuff is great ?
Someo ne have to bring wiki stuff … also… Not all people genious like u, bro.
What ever we know have to share with others… that’s me…
If people are clever enough to read inioru.com they are intelligent enough to read Wiki themselves.
தமிழினத்திற்கெதிரான வன் கொடுமை பல்லாண்டுகளாகவே நடத்தப்பட்டு வருகின்றன. கமலேஷ் சர்மா ஒரு தலியாட்டி பொம்மை.ராஜிவ் காந்தி முதல் இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் உட்பட அனைவருமே தமிழின துரோகிகள் தான்.இலங்கையோடு கை கோர்த்து அனைத்து கொடுமைகளையும் செய்துமுடித்த கொலையாளிகள் குற்றத்திலிருந்து தப்பும் வழி தேடுவது இயற்கை.குற்றவாளிக்கும் உடந்தையானோருக்கும் தக்க ந்நிதி கிடைக்க பிற நாடுகளின் துணை பெறுவதே சிறப்பு.அணியும் விளக்கு பிரகாசமாகத்தான் எரியும்.இனத்தை அழித்தொழித்த கயவர்கள் தூக்கு மேடை யேற வேண்டும்.தமிழர்கள் இனி நிம்மதியாக சுவாசிக்க வேண்டும். உலக மாந்தர்களே ! கயமைக்கு முடிவு தாருங்கள்
Mr. Mathivanan nine flags have been approved to the nine provinces. I think the two provincial councils will look after the affairs of the Sri Lankan Tamils well.