ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக திஹார் சிறையில் இருக்கும் கனிமொழியின் ஜாமீன் மனு இன்று உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுபியுள்ளது. இன்று அவரது மனு விசாரணைக்கு வந்த போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனிமொழியின் ஜாமீனுக்கு எதிர்புத் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. மற்றும் நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட் அது தொடர்பாக சி.பி.ஐ.க்கு அதன் பதிலை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கனிமொழி எம்.பி. தன்னை ஜாமீனில் விடக் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த 4 மனுக்களும் (4 முறை) நிராகரிக்கப்பட்டன. கடந்த நவம்பர் 3 ம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஒரு பெண் என்ற காரணத்திற்காக அவரை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று சி.பி.ஐ. நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழி, தன்னை ஜாமீனில் விடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
நாட்டில் இது வரை நிகழ்ந்த ஊழல்களில் மிகப் பெரியதாகக் கருதப்படும் 2ம் தலைமுறை அலைக்கற்றை ஊழலில் பங்கேற்றுள்ள காப்ரேட் முத்லாளிகள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.