மேற்கு வங்க மாநிலத்தின் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தில் அடங்கிய கந்தபஹாரி என்ற இடத்தை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
இப்பகுதியில் பழங்குடியினரின் ஆதரவுடன் நக்ஸலைட்டுகள ஆதிககம் செலுத்தி வந்தனர்.
பி.எஸ்.எஃப், சிஆர்பிஎஃப், சிறப்பு நக்ஸல் எதிர்ப்புப் படையினர் கொண்ட சுமார் 1,600 பேர் லால்கார், ராம்காரைத் தொடர்ந்து, கந்தபஹாரிக்குள் நுழைந்திருப்பதாகவும், இந்தப் பகுதி கடந்த 8 மாத காலமாக நக்ஸல் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் இருப்பிடத்தை அறிய ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தபஹாரில் காவல்துறையினரின் முகாம் அமைக்கப்படும் என்று சிறப்பு நடவடிக்கைக் குழுவின் டிஐஜி சித்திநாத் குப்தா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் இன்னமும் நிறைவடையவில்லை என்றும், கந்தபஹாரியை கைப்பற்றியது மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதிதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பல மாதங்களாக காவல்துறையினரே இல்லாமல் கந்தபஹாரி இருந்ததாகவும், தற்போது அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், இது தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நீங்கள் போட்டிருக்கும் படம் விடுதலைப் போராளிகள் தான் கைப்பற்றினர் என எண்ண வைக்கிறது.