கொழும்பு உயர்நீதிமன்றத்தில் கதிர்காமர் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆக்ஸ்ட் 12-ஆம் தியதி வீட்டின் நீச்சல் குளத்தில் குளித்து வெளியேறி வரும் போது கதிர்காமர் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கில் இந்த வழக்கில், முத்தையா சகாதேவன் மற்றும் பாபு எனப்படும் இசிடோர் ஆரோக்கியநாதன் ஆகியோர் முதலாவது மற்றும் இரண்டாவது குற்றவாளிகளாக இனங்காணப்பட்டிருந்தனர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான், சாள்ஸ் மற்றும் கோமதி மணிமேகலா ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.ஆனால் இப்பொது இவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்பதால் இவ்வழக்கில் இருந்து பிரபாகரன் உள்ளிட்ட நாலவரின் பெயர்களையும் கதிர்காமர் கொலைப்பட்டியலில் இருந்து விடுவித்தது நீதிமன்றம்.