முடிவுகளை பொன்சேகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாத்திரமன்றி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முனனணியும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே இந்த முடிவுகளில் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த முடிவுகள் இவ்வாறு வெளியிடப்படுவதற்கு பாரிய திட்டம் தீட்டப்பட்டதன் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளது. முக்கியமாக, அரச அதிகாரிகள், இராணுவம், பொலிஸ் மற்றும் நிறைவேற்று அதிகாரம் ஆகிய அனைத்து சக்திகளும் இணைந்து வெளியிட்ட முடிவாகவே இது அமைந்துள்ளது.
அரச ஊடகத்தினூடாக அரசாங்கம் ஜெனரல் பொன்சேகா மீது மிகைப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களையெல்லாம் அடுக்கிக்கொண்டே போனது. இறுதியில் ஜெனரல் பொன்சேகாவின் குடியுரிமை தொடர்பிலும் கூட விமர்சிக்கப்பட்டது. கடந்த காலப்பகுதியில் அவர் யுத்தக் களத்திலே நின்றுகொண்டிருந்த சமயத்தில் அவரது குடும்பத்தார் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் காரணமாக நிலையானதொரு இடத்தில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.
இவ்வாறிருக்கும் போது வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான நேரகாலம் அவருக்கு இருக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் இழந்துள்ள உரிமையை பெற்றுக் கொடுத்திருப்பதாக கூறிய அரசாங்கம் அவர்களது வாக்களிக்கும் உரிமையை பறித்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது. வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் நீதி நிலைபெறாவிடின் மீண்டும் ஒரு பிரச்சினைக்கே வழி வகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
குறுகிய காலத்தில் அரசாங்கம் நாடு முழுவதும் இனவாதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தது. இது மிகவும் பயங்கரமானதாகும். நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் கணனி மாயாஜாலம் இடம்பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது. ஏனெனில் இந்த கணனி மாயாஜாலம் குறித்து ஜனாதிபதி நன்கு அறிவார்.
2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது கணனி மாயாஜாலம் குறித்து அறிமுகப்படுத்தியதே ஜனாதிபதிதான். அது குறித்து அவரே நன்கு அறிந்து வைத்துள்ளார். எனவேதான் தேர்தல் முடிவுகளில் நம்பிக்கை இழக்கப்பட்டிருக்கின்றது.”
சை
வத்தை முன்னேற்றூவதாய் கூறூம் தமிழரில் சிலரைப்போல் இந்த சோமவன்சாக்களூம்.இன்னும் எங்கலை பேயன் என்ரே எல்லோரும் எண்ணூகிறார்கள்.சைவம் வாழ்வியல் கணனியும் வாழ்வியல் இங்கு குழம்பினிற்கிற சோம்பேறீ யார்? பேருக்கும் ஊரையும் பேய்க்காட்டுவது எத்தனைநாலைக்கு அன்பார்ந்தவர்கலே/