அதிகாரத்திற்கு வரும் பேரினவாதக் கட்சிகளோடு ஒட்டிக்கொள்ளும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளரும் மகிந்த பாசிச ஆட்சியின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கட்சி தாவுவதா இலையா என இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மகிந்த குடும்ப ஆட்சியின் கீழிருந்த அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்று எதிர்க்கட்சிக்குத் தாவுகின்றனர். சந்திரிக்காவின் அமைச்சரவையில் தொடர்ச்சியாக அங்கம் வகித்த டக்ளஸ் கட்சி தாவும் வாய்ப்புள்ளதா என அவரிடம் ஊடகவிலாளர்கள் கேட்டபோது எதிர்வரும் 25ம் திகதி என் முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.குடாநாட்டில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், ஊடகவியலாளர்கள் மேற்படி கேள்வியை எழுப்பினர்.
கட்சி தாவும் எண்ணப்பாடு ஏதேனும் உள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்ட அமைச்சர் டக்ளஸ்,
எதிர்வரும் 25ம் திகதி பெரியளவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கிறேன். அதன்போது என் நிலைப்பாடு என்ன? என்பதை நான் வெளிப் படுத்துவேன் என கூறினார்.
தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் அழித்துத் துவம்சம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு தடவையும் பேரினவாதிகளோடு ஒட்டிக்கொண்டு பதவியைத் தக்கவைத்துக்க்கொள்ளும் டக்ளஸ் நிலமைகளை அவதானித்து பலமடையும் பக்கத்தில் தொற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
And he’ll wait for TNA’s decision…
URUMEEN KIDAIKKA VAADI IRUKKUM KOKKU THAAN INTHA DAKLAS !!!
If TNA & Traditional Minister in same side, then how can do the politics…?