பெரும்பாலான புகழ்பெற்ற இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்ளாததால் iifa திரைப்பட விழா கொழும்பில் களையிழந்துள்ளது பெரும்பலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள போதிலும் நினைத்த மாதிரி மிகப்பெரிய ஸ்டார்களைக் காட்டி வருமானத்தை ஈட்ட முடியவில்லை இலங்கை அரசுக்கு, இந்நிலையில் அமிதாப் பச்சனை கடைசி நாள் விழாவுக்காகவாது அழைத்து வந்து விட வேண்டும் என்று மும்பையில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மூலம் இலங்கை அரசு நெருக்கடி கொடுத்து வருகிறதாம். ராஜபட்சே நேரடியாகவே அமிதாப்புக்குத் தொலைபேசியதாகவும். அவரிடம் அமிதாப் தான் கொழும்பு வந்தால் பல கோடி ரூபாய் முதலீட்டில் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ராவணா படம் வெளியாகும் போது தமிழகத்தில் பெரும் நெருக்கடி உருவாகும் என அஞ்சுவதாகக் கூறி அழைப்பை நிராகரித்து விட்டதாக உறுதியாகாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
the integrity exhibited by the indian cine stars is really commendable. tamils salute this noble gesture.really a blow to hypocrites.