முன்நாள் லிபிய அதிபரும் சர்வாதிகாரியுமான கடாபி கைதான பின்னரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று சுதந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டபியின் ஆதரவு நகரான ஷெர்த் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களின் மீதும், சந்தேகத்திற்கு இடமான பகுதிகளிலும் நேட்டோ விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும், அதிலிருந்து தப்பிச் செல்லும் நோக்கோடு வாகனத் தொகுதி ஒன்றில் கடாபி பயணம் செய்த போதே அவர் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக அரேபிய ஊடகங்கள் நேரடிச் சாட்சிகளை ஆதாரம்காட்டி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கடாபியால் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நாளாக அவரது மரண நாள் அமையட்டும் என்றார்.
இவ்வாறே அமரிக்க மற்றும் ஐரோப்பிய அரச தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துக் கருத்து வெளியிட்டனர். இதே வேளை 2000ம் ஆண்டுகளுக்குப் பின்னர் கடாபி அரசுடன் ஐரோபிய – அமரிக்க அரசுகள் நட்பு அடிப்படையிலானா அரச மட்ட உறவுகளைப் பேணி வந்தமையை குறிப்பிடத்தக்கது. இதே அரசுகள் லிபியாவிற்கு பெருமளவில் ஆயுதங்களை விற்பனை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்தபின் கொன்றது மன்னிக்க முடியாது சர்வதேசக்குற்றம். எது எப்படியிருந்தாலும் ஊடகங்களில் காட்டிய முறைப்படி தெருவில் இழுத்து தலையில் ஏறி உளக்கி நெஞ்சில் மிதித்து செய்யவேண்டியதை எல்லாம் செய்துவிட்டு பின் கொன்றது மனிதமற்ற மனிதர்கள் என்பதைக் காட்டுகிறது. இதில் இருக்கும் வெள்ளைத்தாடியுடனான படம் சதாம் குசெயின் போல் இருக்கிறது. மேலும் கடாபி இருந்தபடியால்தான் லிபியாவின் எண்ணையும் எண்ணைக்கிணறுகளும் பாதுகாப்பாக இருந்தன. ஐரோப்பா அமெரிக்கா பொருளாதார ஆட்டம் கண்டபோது ஆசிய ஆபிரிக்க நாடுகளின் மூலப்பொருட்களும் முதலீடும் தேவைப்படுகிறது. இதன் விளைவே ஜனநாயகம் என்ற போர்வையில் போர்களை மக்களைக் கிளப்பிவிட்டு கொள்ளை அடிக்கிறது மேற்கு. இன்று ஈராக்குக்கு என்ன நடந்தது. இனறு இருக்கும் ஈராக் சதாகுசெயின் ஆட்சியில் இருந்தததை விட மோசமாகவே இருக்கிறது. கடாபி ஒரு புரட்சியாளன் லிபியாவைக் கட்டி ஐரொப்பாக்கு எதிராக எழுப்பியவர். இன்று வரை மேற்கை தனியாக எதிர்த்து நின்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிள்ளைகள் தலைதூக்கியே பிரச்சனை ஆரம்பித்தது. ஒரு முக்கிய விடயத்தை இங்கே குறிப்பிடுவது முக்கியம் பெண்களை இராணுவத்தில் சேர்த்து ஒரு படையணியாக வகுத்த ஒரே ஒரு முஸ்லீம் நாடு கடாபியால் ஆளப்பட்ட லிபியாதான் என்பதை யாரும் மறத்தலாகாது. பொருளாதாரத் தடைகளை விதித்துவிட்டு நாட்டை தனியாக்கிய மேற்குலகம் முழுமையாக லிபியாவை பொருளாதார ரீதியில் மடக்க முடியாது போக மக்களைக் கிளப்பி விட்டு படுகொலையையும் செய்து முடித்திருக்கிறது. இதை லிபிய மக்கள் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
சர்வாதிகளான கடாபியின், சடாமின் உடல்களை காட்டும் நீங்கள் ஏன் தமிழனை 30வருடமாக அடைத்து வைத்த பங்கர் தலைவர் பிரபாகரனின் படத்தை போடவில்லை.
சர்வாதிகளான கடாபியின், சடாமின் உடல்களை காட்டும் உற்சாகத்துக்கும் மேலாக தலைவர் பிரபாகரனின் உடலைக் காட்டியபோது காந்தன் அவர்கள் எங்கே போயிருந்தார்? காக்கைவன்னியரோடு கூடிக் கபடி விளையாடினாரா?.. 63வருடங்களாக அடக்கி நம்பவைத்து அதன்வழியே இன்று தறுதலைத் தமிழர் சிலரை அடைகாக்கவும் வைத்திருக்கும் தலைவர்களின் படங்களை ஏன் போடவில்லை என்ற கேள்வி எழுமானால்…. அதில் ஒரு நியாயம் உண்டு.
ப்ங்கர் தலைவன் படத்தை பார்க்க இந்த இனையதளத்தை பார்க்கவும் தமிழ்னியூஸ்வெப்.சொம்