லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்று புதிய ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், உயிருடன் பிடிபட்ட கடாபியை கொன்றது ஏன் என்று நாடுகள் கேள்வி எழுப்பி உள்ளது. இந்நிலையில், கடாபியை கொன்றவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மாற்று கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், கடாபியை உயிருடன் பிடித்து வராமல் கொன்றவர்கள் மீது லிபிய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்லும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். கடாபி கொலை பற்றி ஏற்கனவே விசாரணையை தொடங்கி விட்டோம்.
போர் குற்றவாளிகளை எப்படி நடத்துவது என்பதற்கான நடத்தை விதிமுறைகளை நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனினும், கடாபியை கொன்றது தனிப்பட்ட செயல். இதில் “புரட்சிப் படையினருக்கோ” அல்லது லிபிய தேசிய ராணுவத்துக்கோ தொடர்பில்லை என்றனர்.
கடாபியுடனான தனது உறவுகளை மறைக்கும் நோக்கோடு கடாபியி பயணம் செய்த வாகனத்தின் மீது விமானக் குண்டுகளை வீசி அவரை கொன்றவர்கள் மேற்கு நாடுகளின் படைகளே. கொலைசெய்தவர்களே தண்டனை வழங்கும் அனீதியிலிருந்தே புதிய லிபியாவின் ஆட்சி ஆரம்பமாகிறது.
கடாபியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சிகளை பல ஊடகங்கள் ஒளிபரப்பிய நிலையில் “கடாபியி பயணம் செய்த வாகனத்தின் மீது விமானக் குண்டுகளை வீசி கொன்றதாக” லங்காபுவத்பாணியில் இங்கு கதை சொல்லப்படுகிறது.
யுத்தமுனை தாக்குதலில் எதிரி பலியானால் அது யுத்தவிதிகளிற்குட்டதுங்கோ! இதில் மனிதவுரிமை மீறல் கிடையாது. உங்களிற்கு எப்படியாவது மேற்குலகில் பழி போடும் குறியில் யுத்தவிதி யதார்த்தம் புரியவில்லையா!
அது சரி தமிழின அழிப்பை ஆதரிக்கும் கியூபா வெனிசூலா ஈரான் வியட்நாம் சீனாவை கதாநாயகர்களாக கொண்ட சிறிலங்கா தேசப்பக்தர்கள் லங்காபுவத் பாணியில் நியாயம் சொல்வது வாஸ்தவம்தான்.
நிர்மலன் நீர் குழந்தை போல கதைக்கிறீர். உம்முடைய தலைவனை உயிருடன் சரணடைமயவைத்து சிறீலங்கா அரசிடம் கையளித்தது அனைத்தினையும் முன்னின்று செய்தது நீங்கள் இன்று தூக்கிப் பிடிக்கும் மேற்குலகம் தான் என்பது தொpந்திருந்தும் தொpயாதது போல கதையளக்கிறீர். உங்களுக்கு தேவை வெளிநாட்டிலிருந்து பிரமுகராக அரசியல் வியாபாரம். உண்மையை கூறினால் வியாபாரம் தொடா;ந்து ஓகொ வென நடக்காது தானே.
வீரகேசரி தளத்திலிருந்து ஆதாரம் காட்டி எழுதும் புலி விசுவாசிக்கு ஒன்றும் புரியாதாம்.
தலைவரை காப்பாற்ற அமெரிக்கா கப்பல் அனுப்புகிறதாம்,
வர வேண்டிய நேரத்தில் தலைவர் வருவாராம் ,
கருணாவும் கே.பி யும் ,
பிள்ளையானும் புலியே இல்லையாம் ,டெலோ காரர்களாம்.
தலைவர் வெளி வந்ததும் முதல் குண்டை சுமக்க வெளிநாட்டு புலிகள் ரெடியாகி விட்டார்களாம்.
ஐயய்யோ ஐயய்யோ கேளாயோ
புலத்து புலிகள் கதையை நீ
கேளாயோ ..
காசு கறக்கும் கதையை நீ
கேளாயோ ..
நந்தி கடலே நீ
கேளாயோ ..நீ
கேளாயோ ..
தலைவர் செத்த கதையை நீ
கூறாயோ
இலங்கை போர்க்குற்றம்: ‘சுதந்திரமான விசாரணை தேவை’
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 அக்டோபர், 2011 – 16:12 ஜிஎம்டி
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன்
ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் 22வது உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க உலகின் பலநாடுகளின் தலைவர்களும் முன்வைத்த யோசனைகள் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்மனித உரிமை, ஆஸ்திரேலியா, கெமரன், மஹிந்த ராஜபக்ஷபிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன், மனித உரிமைகள் பாதுகாப்பு விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகளுக்கான அடிப்படை மூலதர்மங்களை உறுதிப்படுத்துவதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கமரோன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கை மீது அழுத்தம்
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடுத்த பொதுநலவாய உச்சிமாநாட்டை நடத்தவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய விவகாரமும் இம்முறை மாநாட்டின் பேச்சுக்களில் அடிபட்டன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசு நடத்திய போரில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் முக்கிய சீரமைப்புகளை செய்யாவிட்டால், அங்கு 2013இல் நடக்கவுள்ள மாநாட்டை பகிஸ்கரிக்கப் போவதாக கனடிய பிரதமர் ஸ்டீஃபன் ஹாப்பர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இந்தப் பின்னணியில், இலங்கைப் பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன், இலங்கையில் என்னதான் நடந்தது, போர்க்குற்றங்கள் நடந்தனவா, அவற்றுக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பவற்றை முழுமையாகக் கண்டறிவதற்காக முறையான, சுயாதீனமான, விசாரணை நடைமுறைகள் அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
BBC Tamil
அப்படியே ஈராக், லிபியா, அப்கானிஸ்தான், பற்றியும், பிரபாவின் குற்றம் பற்றியும் விசாரிப்பார்களோ