யுகன்த், டிரிஸ்ரி, அமோதினி படங்களின் மீது…..
Yugant
ஆபர்ணா சென்னின் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று. இன்றைய புலம் பெயர் சூழலில் பொருந்தக் கூடிய கரு. அபர்ணா சென் பெண்கள் ஒடுக்கு முறைக்கு எதிரான கருத்துக்களை உரத்த குரலில் தெரிவித்துக் கொண்டுள்ளார். இவரது ஒவ்வொரு படங்களிலும் பாத்திரங்களுக்கூடாக தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார். 1981 ல் இவர் இயக்கிய முதலாவது படமான 36 சௌரங்கி லேன் வெளிவந்தது. இன்று வரை வெறும் எட்டு படங்களையே இயக்கியுள்ளார்.(இவற்றுள் ஒன்று தொலைக்காட்சி படம்) பரோமா, சத்தி, பிக்னிக், பரோமிற்றர் எக் டின், திரு-திருமதி ஜயர், 15 பார்க் அவனியு ஆகியவை அவரது மற்றைய படங்கள். அபர்ணா சென் ஓர் நடிகையுமாவார். இவர் சத்யஜித்ரேயின் படமான ரீன் கன்யாவில் நடித்துள்ளார். பம்பாய் ராக்கி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மிருணாள் சென்னின் மாபிருத்வி Mahaprithibi படத்துக்காக சிறந்த நடிகை விருதையும் பெற்றுள்ளார்.
இவர் மூன்று தடவைகள் திருமணம் செய்துள்ளார். இவரது மகள் கொன்கனாவும் ஒர் நடிகையே. இவரது தந்தை சத்தியானந்த தாஸ்குப்தா ஓர் சினிமா விமர்சகர் தயாரிப்பாளா, இயக்குளர்;. .சத்யஜித்ரேயுடன் இணைந்து கல்கத்தாவின் முதலாவது திரைப்பட கழகத்தை ஆரம்பித்தார்கள். சிறு வயதில் இருந்தே நல்ல படங்களை பார்த்து தன்னை, சினிமா மொழியின் பல பரிமாணங்களை பயின்றார்.
ஆபர்ணா ; வணிக சினிமாவில் நடிகையாக இருந்த பொழுது; ஒரு படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்தார். இதில் ஒரு காட்சியில் அயன் பண்ணும் காட்சி. ஆபர்ணா இயக்குனரிடம் “ஆணின் சட்டையை அயன் பண்ணும் பொழுது எரிப்பது போல் காட்டினால் நன்றாக இருக்கும். பெண்ணின் உணர்வுகளும் வெளிப்படும்” என்றார். இயக்குனரும் “நல்ல யோசனை” எனத் தெரிவித்து அதே மாதிரி காட்சியை படமாக்கினார். புடம் வெளிவந்த பொழுது எரிக்கும் காடசியில் குளோசப்பில் இவரது முகமே காட்டப்பட்டது. எரிப்பது காட்டப்படவில்லை இயக்குனரிடம் வினவிய பொழுது “அது அவசியமில்லை” என பதிலளித்தார். ஒரு பேட்டியில் இதனை குறிப்பிட்டு “வணிக சினிமாவில் நடிப்பதற்கு, பல விட்டுக் கொடுப்புகள் அவசியமாகவுள்ளது” என ஒரு பேட்டியில்; குறிப்பிட்டுள்ளார்.
இவரது படங்களில் இரு விதமான ஆண் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. முதலாவது சமூகத்தின் மீது சீரிய பார்வையும், சமூக பயணிகளாகவும் வெளிப்படுவார்கள். இரண்டாவது வகை சமூகக் கட்டுப்பாட்டுக்குட்டுப்பட்ட குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பரோமாவில் பரோமாவின் காதலனுக்கும், கணவனுக்குமிடையில் இந்த இடைவெளியைக் காணலாம். பெண் பாத்திரங்கள் வழமையான வர்த்தக சினிமாவிற்கு எதிரானதாகவும், சுதந்திரமான பரந்த சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நான்கு சுவர்களுக்குள் இருக்கும் பெண்ணின் வாழ்வை வெளி உலகிற்கு கொண்டுவருகின்றார். இந்திய கலாச்சார பராம்பரியப்படி உள்ள பெண் பாத்திரங்களை மனைவி, தாய், தங்கை, அண்ணி போன்றவற்றின் மரபுகளை உடைத்து வெளிக் கொணர்கின்றார்.
யுகந்தில் தீபக், அனுசயா என்ற இரு பாத்திரங்கள். இவர்கள் கணவன் மனைவி. தீபக் ஓர் சுயநலவாதி. சுமூகக் கட்டுப்பாடற்றவர். ஓர் தத்துவவாதி. இவரால் இயல்பாக எந்த வித பதட்டமும் அற்று பிரச்சினைகளை அணுக முடியும். தனது கொள்கை;கு எதிரான அனைத்தையும் தூக்கியெறிபவர். அனுசயா தனது நாட்டியப் பள்ளிக்கு முக்கியத்துவமளிப்பவர். இவரும் தனது கருத்துக்களுக்கு முக்கியத்துவமளிப்பவர். கவித்:துவமானவர். அதே சமயம் கோபக்காரி.
வீடடி;ல் தீபக்கினால் நடத்தப்பட்ட விருந்தில் கட்டற்ற நண்பர்கள் இவர்களது படுக்கையறையில் கூட குடிப்பார்கள். சுதந்திரமாக இருப்பார்கள். இவை அனுசயாவிற்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றன. படிப்படியான கருத்து வேறுபாடுகள் பின் நவீனத்துவாதியையும், கொள்கைவாதியையும் பிரிக்கின்றது.
தீபக் தற்பொழுது விளம்பர நிறுவன இயக்குனர். அனுசயா நடனமாடுபவர்.நாட்டியப் பள்ளியும் நடத்துகின்றார். உலகெங்கும் நடன நிகழ்ச்சிகளை நடத்துபவர் தீபக் அனுசயா இருவரும் வௌ; வேறு இடங்களில் தற்சமயம் உள்ளனர். கடந்த காலங்களில் அவர்களுக்குள் பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன
மீண்டும் தமது திருமணத்தின் பின் 17 வருடங்களுக்கு முன் கழித்த கிராமத்தில் ஒரு கிழமையை கழிப்பது என முடிவு செய்கின்றனர்
இருவரும் தங்களுக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளது என நினைக்கின்றனர். இவர்கள் இணைவு சந்தோசமாகவும், பழைய நினைவுகளை மீட்டுவதாகவும் கழிகின்றன. ஆனால் அடிப்டையில் ஆழ்மனதில் இவர்கள் இன்னமும் மாறவில்லை. இவர்கள் இயல்பு இவர்களுக்குள் ஒழிந்துள்ளது. இப்பொழுது தங்களை நிலை நிறுத்த தத்தளிக்கின்றார்கள்.
தீபக் Nவைலையை ராஜிளாமா செய்து விடப் போவதாக கூறுகின்றார். அதற்கு அனுவின் பதில் “அதிக சம்பளம் பெறும் வேலையை விட்டு விடுவது நல்லதல்ல. நாவலாசிரியராக உயாந்து பணம் சம்பாதிக்க மீண்டும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும், இன்று எமது வாழ்வை சந்தர்ப்பங்களும், விபத்துக்களுமே தீர்மானிக்கின்றன. ”.ஒரு மத்திய வர்க்கத்து பெண்ணின் மனோநிலையில் கேட்கின்றார். தீபக் அதற்கு “உனக்கு வயதாகிவிட்டது” என்கிறார்.
இந்த புத்திஜீவிகள் இருவரும் தங்களது வாழ்ககையை சமூகத்துக்காகவும், அதன் நீதிக்;காகவும், சமூகப் பார்வைக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் தங்களது துறைகளில் சுதந்திரமாக செயல்படமுடியமால் உள்ளது என்பதனையும் உணர்ந்துள்ளார்கள். விட்டுக் கொடுப்பு இன்று அவசியமாகிவிட்டது. இந்த வாழ்வு இவர்களுக்கு அலுத்து விட்டது. ஆனால் இதற்கு வெளியில் செல்ல முடியாமல் தத்தளிக்கின்றார்கள். இறுதியில் தீபக் அனு நேசிக்கும் கடல் அலையினுள் செல்கின்றார். அப்போது அங்கு தீ பிடித்துக் கொள்கின்றது. அனு தீபக்கை தேடி தீயை நோக்கி கத்துகின்றார்.
இப் படத்தில் வரும் பாத்திரங்கள் போல் படமும் மிகவும் ஆழமாக விரிகின்றது. இரு தத்துவவதிகள், மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், வௌ;வேறு தொழில்களை செய்பவர்கள், கலை மீது ஈடுபாடுடையவர்கள். இவர்களுக்கிடையில் தோன்றும் வேறுபாடுகளையும், இவ்வாறான சூழலில் பெண் இயல்பாக ஆணாலும், சமூகத்தாலும் ஒடுக்கப்படுகின்றாள். இந்த இயல்பு நிலை, இயல்பு முரண்பாடுகள் பதியப்பட்டுள்ளன. பெண்கள் சுதந்திரத்தை நோக்கி போகும் பொழுது குடும்ப வாழ்வில் ஏற்கடும் சிக்கல்களே இவை. குடும்பம் என்ற முறையே பிரதானமாக பெண்களை ஒடுக்குகின்றது. குடும்பத்தின் முதல் கூறான திருமணம் பெண்கள் ஒடுக்கு முறைக்கு முதல் அடியாகும். அபர்ணாh சென் தனது பாத்திரங்களுக்கூடாக திருமண முறை மீதான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். இப் படத்தில் வரும் பெண்; புற வெளியை நோக்கி நகர்கின்றாள். இப் படத்தில் மேல் தட்டு வர்க்க மக்களின் எதிர் முரண் நிலைகளையும் இயக்குனா வெளிப்படுத்தியுள்ளார்.
அஜன் ட்டாவும், ரூபா கங்குலியும் குழப்பான கணவன் மனைவியாக நன்றாக நடித்துள்ளனார்.
கோவிந் நிகாலினியின் Drishti (1991)
சநதியா நிகில் இருவரும் தம்பதிகள். மத்திய மேல் தட்டு வர்க்கத்தினர். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்களின் பினனர் பிரிந்து விடுகின்றனர். சந்தியாவிற்கு ராகுலுடன் நட்பு ஏற்பட்டு உறவும் ஏற்படுகின்றது. ஆனால் பின்னர் சநத்pயா அதை விட்:டு விட்டு தொடர்ந்து நிகலுடன் வாழ்ககையை தொடர்கின்றார். நிகிலுக்கு வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட புதிய உறவை சந்தியர்விடம் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டு விவாகரத்து பெறுகின்றான்.
சுமார் நான்கு வருடங்கிளின் பின்னர் இப்பொழுது மீண்டும் நண்பர்களாக சந்திக்கின்றனர். கடற்கரையை ஒட்டிய விடுதியில் சந்திக்கின்றனர். சந்தியா தனக்கு ராகுலுடன் ஏற்பட்ட உறவை கூறுகின்றாள். நிகில் அவளுடன் சண்டையிடுகின்றான்.”நான் நேர்மையாக எனது உறவைக் கூறினேன், நீ மறைத்து விட்டாய்”. சுந்தியாவின் பதில் “நான் உன்னை ஆழமாக நேசித்தேன். அது தற்செயலாக ஏற்பட்ட உறவு. உன்னுடன் தொடாந்து வாழ விரும்பினேன். ஆதனால் கூறவில்லை”. இதில் யார் பக்கம் நியாhயம் உண்டு.
சுந்தியாவாக டிம்பிள் கபாடியா சிறப்பாக நடித்துள்ளார். கோவிந் நிகாலினி ஓர் ஒளிப்பதிவாளர். இதனை இப்படத்தின் ஒளிப்பதிவில் காணலாம். ஒளிப்பதிவின் கூறுகளை பார்ப்பதற்கு கோவிந்தின் படங்கள் உதாரணமானவை.
இவ்விரு படங்களும் மத்திய மேல் தட்டு வர்க்க பெண்கள் மீது விழுந்துள்ள சமூக அறிவியல் சார்ந்த ஒடுக்கு முறையை பதிவு செய்துள்ளன. சமூக அறிவியலின் கூறுகளை தீர்மானிப்பவர்கள் ஆண்களாகவேயுள்ளது மாற்றப்படவேண்டும்.
அமோதினி 1994
அபர்ணாவின் தந்தை சத்தியானந்த தாஸ்குப்தா வின் இயக்கத்தில் வெளிவந்த படமே அமோதினி.18 ம் நூற்றாண்டில் வாழும் நிலப்பிரபுவின் மகளுக்கு ஓர் வயதான பிராமணரை திருமணம் முடிக்க தீhமானிக்கின்றார். திருமணமன்று மணமகனை காணவில்லை. பொழுது புலர முன் திருமணம் முடிக்கவேண்டும். இல்லையேல் மணப்பெண்ணிற்கு தீங்கு நடக்கும் என பெரியவாகள் கூறுகின்றனர். எனவே வீட்டு வேலைக்கார சிறுவனை (15 வயது) திருமணம் முடிக்கின்றனர். இவன் ஒரு பிராமணண் என்பது மற்றொரு காரணம். அவனை மணமகள் முதலிரவன்று அடித்து துpரத்தி விடுகின்றாள். காலம் மாறுகின்றது. இப்பொழுது அதே வேலைக்காரன் செல்வந்தனாக திரும்பி வருகின்றான். அவனுக்கு வேறு திருமணமும் முடிந்து விடுகின்றது. நிலப்பிரபுவின் மகள் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துகின்றாள். கொஞ்சுகின்றாள்.
;. இப் படம் இரு விடயங்களை தெளிவாக கூறியுள்ளது. ஒன்று நீ உயர் சாதியில் பிறக்க வேண்டும்.இரண்டாவது அப்படி பிறப்பினும் நீ பணக்காரனாக இருக்க வேண்டும். பிராமணர் மீதான விமர்சனமாக இப் படம் வெளிப்பட்டாலும், அதன் இருத்தலியலை இப்படம் மறுக்கவும் இல்லை. விமர்சிக்கவுமில்லை.
18 ம் நூற்றாண்டில் உள்ள வாழ்வியல் அம்சங்களையும், பெண்கள், சாதிகள், வர்க்கங்களின் கூறுகளையும் இப்படம் பதிவு செய்துள்ளது.
இப்படத்தின் இசை; சத்தியானந்த தாஸ்குப்தா. இயக்குனர் இசையமைப்பாளராக இருப்பதனால் உள்ள லாபத்தை இப்படத்தில் காணலாம். ஒளிப்பதிவாளர் மது அம்பட். சத்தியானந்த தாஸ்குப்தா சிறந்த விமர்சகர் என்பதனை இப்படத்தை இயக்கிய முறையில் இருந்து காணலாம்.