கடலூர் மாவட்டத்திற்குள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நுழைய தமிழக அரசு தடை விதித்ததை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அக்கட்சியினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததோடு, ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க.வினர் மீது பா.ம.க.வினர் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. இதனால் கடலூரில் பதற்றம் நிலவுகிறது.
சாதி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மதுரை மாவட்டத்திற்குள் நுழைய அம்மாவட்ட கலெக்டர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்திற்குள் நுழையவும் ராமதாசுக்கு அம்மாவட்ட கலெக்டர் தடை விதித்தார்.
இந்த நிலையில், தடையை நீக்க கோரி கடலூர் மாவட்ட கலெக்டரை சந்திக்க பா.ம.க.வினர் இன்று சென்றனர். அப்போது, கலெக்டர் அலுவலகம் முன்பு டீசல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ண்ணா தொழிற்சங்கப் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ம.க.வினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் நாளாபக்கமும் சிதறி ஓடிய பா.ம.க.வினரை அ.தி.மு.க.வினர் தாக்கினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர், அ.தி.மு.க.வினர் தாக்கினர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பா.ம.க – அ.தி.மு.க மோதலை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் கடலூர் நகர் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
பமகவினர் நண்பர்களையே தாக்கியுள்ளனர்.