யாழில் கடத்தப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது.
மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் நாம் இலங்கையர் அமைப்பு ஆகியன ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாடத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்ட குகன், லலித் ஆகியோரை உடன் விடுதலை, கடத்தியவர்களை விடுதலை செய் போன்ற சுலோகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.