கஜேந்திரகு மார் பொன்னம்பலம் யாழ்ப்பானத்தி ல் நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில் ஜெனிவா தீர்மானம் சம்பந்தமாக (23.03.13) வழங்கிய கருத்துக்க ள்
உரையின் தொடக்கம் :-
நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் நேற்று ஐ.நா. மனித உரிமை பேரவையுடைய அமர்வுகளில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அந்தத் தீர்மானம் தொடர்பாக பொதுவாக இலங்கையிலும், ஆனால் குறிப்பாக தமிழர் மட்டத்தில் அது ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, முழு உலகம் முழுவதிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்கள் மட்டத்தில் இத்தீர்மான் தொடர்பாக ஒரு மிகப் பெரிய ஒரு முக்கியத்துவம் நிறைந்த நிலையில் தான் இந்தத் தீர்மானம் நேற்று ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மானம் தொடர்பாக இரண்டாவது தீர்மானம் அமெரிக்கா கொண்டுவரயிருக்கிறது, என்ற ஒரு செய்தி வெளியிட்ட காலம் தொடக்கம் தமிழ் மக்கள் மட்டத்தில் ஒரு மிகப் பெரியதொரு எதிர்பார்ப்பு காணக் கூடியதாக இருந்தது.
அந்த எதிர்பார்ப்ப வளர்ந்ததற்கு காரணங்கள் பல காரணங்கள் இருக்கு அதில் வந்து ஒரு சில அரசியல் கட்சிகள் கடந்த வருடம் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தத் தீர்மானத்தில் இருக்கக் கூடிய குறைபாடுகளை மூடிமறைப்பதற்காக அடுத்த வருடம் அதாவது இந்த வருடம் மார்ச் மாதம் 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்படயிருக்கும் தீர்மானம் அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் அதவாது ஒரு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்று நிச்சயமாக வரும் அதற்காக அடித்தளம் கடந்த வருடம் தீhமானம் போடப்பட்டது அத்தீர்மானமுடாக போடப்பட்டது, ஆனால் இந்த வருடம் அது கட்டாயம் வருமென்றெல்லாம், கடந்த வருடமே ஒரு வருடத்திற்க முன்பாகவே அரசியல் தரப்புக்கள் விசேடமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட ஏனைய தரப்புக்கள் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தைப் பற்றி நீண்டகாலமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்தவகையில் எங்கள் ஊடகங்களுக்கும் ஒரு பொறுப்புயிருக்கு ஏன்னென்றால் எங்கள் ஊடகங்கள் கூட ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சர்வதேச அரசியலை சரியாக எங்கட மக்களுக்கு விளங்கப்படுத்தாமல், உணர்வுரீதியாக நாங்கள் ஒரு எங்களின் மனதிற்குள் ஒரு தமிழனாக இருந்து கொண்டு எங்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்குத்தானே, தேவைகள் இருக்கு, அந்தத் தேவைகளுக்கு மட்டும் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தது இந்த எதிர்பார்ப்புக்கு எங்கட மக்கள் மட்டத்தில் தமிழர் பொதுவாக மட்டத்தில் எதிர்பார்ப்பு வளர்வதற்கான முக்கிய காரணமாகும்.
அப்ப அந்த எதிர்பார்ப்புக்கும், உண்மையிலேயே நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்திற்கும் இடையில் இருக்கக் கூடிய இடைவெளிகளைப் பற்றி முக்கியமாக எங்கட மக்களுக்கு விளங்கப்படுத்தும் நோக்குடன்தான், இன்று இந்தப் பத்திரிகை மாநாட்டைக் கூட்டியுள்ளோம்.
முதல் கட்டமாக ஆரம்பத்திலேயே வந்து நாங்கள் தெளிவாகக் கூறவிரும்புகின்றோம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில், ஐ.நாவில் நேற்று (திகதிவரவேண்டும்) நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த தீர்மானத்திற்கும் மக்கள் முன்னணி அந்தத் தீர்மானத்துடன் எந்தவிதத்திலும் சொந்தம் கொண்டாடவிரும்பவில்லை. (ஆங்கிலத்தில் சொல்லப்பட்டுள்ளது) எங்களைப் பொறுத்தவரையில் அந்தத் தீர்மானம் எங்கள் கட்சி நிராகரிக்கிறது.
அதற்கு காரணங்களை நான் இந்த பத்திரிகை மாநாட்டினுடாக உங்களுக்கு விளங்கப்படுத்தயிருக்கின்றேன். ஆந்த விளக்கத்தினுடாக உங்களுக்கு மக்கள் மட்டத்தில் இருந்த எதிர்பார்ப்புக்கும் உண்மையில் நிறைவேற்றியிருக்கின்ற இந்த தீhமானத்தினுடைய அந்த ஆழமான பொருளுக்குமிடையில் இருக்கக் கூடிய இடைவெளியை நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
அப்ப ஏன் இந்த தீர்மானத்தை நாங்கள் நிராகரிக்கின்றோம். முதல் கட்டமாக எங்களைப் பொறுத்தவரையில், மூன்று மிக முக்கியமான விடயங்கள் காணப்படுகின்றன.
முதலாவது விடயம் கடந்த வருடம் ஒரு உள்ளக அறிக்கை ரீதியான பொறுப்புக் கூறுவதற்கான ஒரு புரிந்துணர்வை உருவாக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட, அன்றைக்குக் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாமல் அது ஒரு மிகப் பெரியதொரு ஏமாற்றத்தை தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கின்றது என்ற செய்தியை நாங்கள் வெளிப்படுத்தினோம். ஆனால் கடந்த வருடம் அந்தத ;தீர்மானம் நிறைவேற்ற எமக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் என்னவென்றால் எடுத்த எடுப்பில் ஒரு சர்வதேச விசாரணையை சர்வதேசம் அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது, முதல் கட்டமாக சிறீலங்க அரசாங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
அவை சர்வதேசம் அந்த சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறார்கள், இந்த சந்தர்ப்பத்தை அவர்கள், சிறீலங்கா அரசாங்கம் பயன்படுத்தாத பட்சத்தில், அடுத்த கட்டமாக, அடுத்த படியாக படிப்படியாகதான் நாங்கள் போகவேண்டும், அப்படித்தான் எல்லாரும் கூறுகின்றார்கள், அடுத்த படியாக வந்து ஒரு சர்வதேச விசாரணை ஒன்று விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றதுதான் பலர், அன்றைக்கு கடந்த வருடத் தீர்மானத்தை விமர்சிக்கவே எங்களுக்குக் கூறி எங்களை விமர்சித்தார்கள்.
இப்ப அந்தத் தீர்மானத்தை, தீர்மானம் இது நான் முதலாவது விடயம் சர்வதேச பக்க சார்பான விசாரணை என்பது நிறைவேற்றப்படாமல் அந்த, அந்த கோரிக்கை உள்ளடங்கப்படாத விடயத்தைப் பற்றி நான் விசேடமாக கூறவிரும்புகின்றேன்.
கடந்த வருடம் உள்ளக விசாரணை என்பதை வலியுறுத்தி தீர்மானம் எடுத்ததற்கும் இந்தவருடம் தீர்மானம் எடுத்ததற்கும் இடையில் அந்த நடுப்பகுதியில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக நாங்கள் அக்கரை செலுத்த வேண்டும்.
எங்களுக்கு நன்றாகத் தெரியும் கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பிறகு, இந்த ஒரு வருடத்திற்குள் வந்து தமிழரைப் பொறுத்தவரையில் நிலைமை மோசமடைந்திருக்கின்றது. காணி பறிப்பு மிகப்பெரியளவில் இடம்பெறத் தொடங்கியதே, கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகே, பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஒரு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்தப்பட்டுள்ளதும், கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு, சிங்களக் குடியேற்றங்கள். ஒரு உச்சக் கட்டத்தை அடைந்திருப்பது, ஒரு அப்பட்டமாக நடைபெறுமளவுக்கு அந்தக் குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும் கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு.
மீள்குடியேற்றம் விசேடமாக கேப்பாபுலவு போன்ற பகுதிகளில் மக்கள் சொந்த இடங்களில் குடியேற்றவிடாமல், நடுக் காட்டிலே கொண்டுபோய் இறக்கினதும், கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு.
போராளிகள், அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஒரு மீள் புனர்வாழ்வுக்கு அனுப்பியதற்குப் பிறகு, அவைகள் சமூக மட்டத்தில் வந்து விடுவிக்கப்பட்டதற்குப் பிறகும், அவை திரும்பவும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீண்டும் அவர்களுடைய வாழ்க்கை கேள்விக் குறியாக மாற்றியிருக்கின்ற நிலமை மிக மோசமான ஒரு உச்சக் கட்டத்தை அடைந்திருப்பதும் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு.
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கத்தான் இந்த சம்பவங்கள், இந்த அநீதிகள் சர்வதேச சட்டங்களை மீறிய விடயங்களை வந்து ஒரு விசாரிப்பதற்காகத்தான் உள்ளகப் பொறிமுறையென்று நீங்கள் கடந்த வருடம் கூறினீர்கள். ஆனால் அந்த உள்ளகப் பொறிமுறையை வந்து சரியாக அமுல்படுத்துவதற்கு, இலங்கை அரசுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான அந்த அவையின் கட்டமைப்பு வந்து நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தில் கூட சிறீலங்கா அரசு செய்த சர்வதேச சட்ட மீறல்கள், போர்க்குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றச் சாட்டுக்கள், இனப் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்களை சர்வதேசம் அதுவும் ஐ.நாவில் கடந்த வருடம் சிறீலங்காவைக் காப்பாற்றுவதற்குப் போய் வாதாடிக் கொண்டிருந்த தரப்புதான் இன்று வந்து இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கின்றார்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், உள்ளக ரீதியாக பொறுப்பு கூறுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க முடியாத ஒரு நிலைமையினை இந்த ஒரு வருட காலப் பகுதி நிரூபித்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மீண்டும் ஒரு முறை சிறீலங்கா அரசு உள்ளக ரீதியாக சர்வதேச சட்டங்கள் மீறிய நிலையில் ஒரு பொறிமுறையை உருவாக்கி செயல்பட வேண்டும் என இந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டியிருப்பது எம்மைப் பொறுத்தவரையில் நடந்திருக்கின்ற அநீயாயங்கள் எல்லாவற்றையும் மூடிமறைப்பதாகத்தான் அந்த கோரிக்கை அமைந்திருக்கின்றனது.
ஆகவே, இந்தத் தீர்மானத்தின் முதல் கண்டனம் இந்த உள்ளகப் பொறிமுறையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தல், சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை கைவிட்டதும் எமது முதலாவது கண்டனம் வலியுறுத்தியிருப்பது. அப்ப எல்.எல்.ஆர்.சி என்பது என்ன? சர்வதேச மட்டத்திலிருந்து வரக் கூடிய அழுத்தங்களிருந்து சிறீலங்கா அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவசர, அவரசமாக தங்களுக்கு விஸ்வாசமாக இருக்கக் கூடியவர்களை நியமித்து எல்.எல்.ஆர்.சி நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒரு ஆணையத்தினை நியமித்து ஒரு விசாரணை ஒன்றை நடாத்தி அந்த விசாரணைகளுடாக வெளிப்படுத்தியிருக்கின்ற பரிந்துரைகள்தான் இந்த எல்.எல்.ஆர்.சியின் விடயம் அறிக்கை.
ஆந்த எல்.எல்.ஆர்.சி நியமிக்கப்பட்ட நிலையில், பொதுவாக சர்வதேச மட்டத்தில் ஒரு மனித உரிமைகள் சம்பந்தமாக மதிக்கப்படக் கூடிய அமைப்புகள் யுஅநnவைல iவெநவெழையெடஇ ர்ரஅயn சுiபாவ றயவஉhஇ போன்ற அமைப்புக்கள் கூட ஏன் iவெநவெழையெட ஊசநளளள பசழரி கூட எல்.எல்.ஆர்.சியைப் புறக்கணித்தார்கள் சிறீலங்கா அரசாங்கம் அவர்களுக்கு அழைப்பு விட்டு நீங்கள் இந்த எல்.எல்.ஆர்.சியிடம் இருக்கக் கூடிய தகவல்களையும், ஆதாரங்களையும் எல்.எல்.ஆர்.சி ஆணையத்திற்கு வந்து நீங்கள் ஆணையத்திற்கு முன்னால் முன்வையுங்கள் நாங்கள் அவற்றையும் சேர்த்துத்தான் விசாரணை செய்யப் போகின்றோம் என்று சிறீலங்கா அரசு அவர்களுக்கு ஒரு அழைப்பு விடுக்க இந்த அமைப்புகள் இந்த எல்.எல்.ஆர்.சியை அடியோடு நிராகரித்தார்கள். நிராகரித்தது மட்டுமல்ல புறக்கணித்தார்கள். இந்த எல்.எல்.ஆர்.சியை ஏற்றுக் கொள்ள முடியாதென்று அந்த அமர்வுகள் தொடங்குவதற்கு முதலே அவர்கள் அந்த எல்.எல்.ஆர்.சி என்ற பொறிமுறையை அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.
அதுமட்டுமல்ல, சர்வதேச சமூகம் அதனை நிராகரித்திருந்த ஒரு நிலையில் தமிழ் மக்கள் தமிழ் மக்களோட இணைந்து வேலை செய்கின்ற முக்கியமான அரசியல் தரப்புகளாக இருக்கக் கூடிய ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட அந்த எல்.எல்.ஆர்.சியில் வந்து சாட்சியம் வழங்குவதற்கு முன்வரவில்லை. ஏன் அவ்வளத்துக்கு ஒரு மோசமான ஒரு பொறிமுறை என்றவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு அந்த எல்.எல்.ஆர்.சி ஆணையத்தை நிராகரித்தோம். எங்களைப் பொறுத்தவரையில், ஒரு குற்றவாளி தன்னுடைய சொந்த கூட்டத்தை விசாரிப்பது என்பது இயற்கை நீதிக்கு ஒரு முரணான ஒரு விடயம். ஆகவே, எக்காரணம் கொண்டு அப்படிப் பட்ட பொறிமுறைக்குள் அந்த பொறிமுறையின் மிக மோசமான இயற்கை நீதியை முற்றுமுழுதாக இல்லாமல் செய்கின்ற அப்படிப்பட்ட பாதைக்குள் நாங்கள் அதுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் என்றவiயில் அதனை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரித்தோம்.
அன்று இருந்த சூழலில் மக்கள் இருந்த பயபீதியான ஒரு சூழல் இராணுவத்தின் கெடுபிடி மிகமோசம் உங்கள் அனைவருக்கும் தெரியும் எல்.எல்.ஆர்.சிக்குப் போயி சாட்சியம் வழங்கி கருத்துத் தெரிவித்த ஆட்களுக்கே வந்து மிக மோசமாக இராணுவம் அவர்களை வெருட்டியது. அந்த வெருட்டுன சம்பவங்கள் செய்தியாக எல்.எல்.ஆர்.சியுடைய அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது. அப்ப மக்களினுடைய உண்மையான பங்களிப்பும் மக்களினுடைய நம்பிக்கையும் இல்லாதொரு நிலையில்தான் எல்.எல்.ஆர்.சி என்ற ஆணையம் தங்களுடைய அமர்வுகளை, நடாத்தி அந்த அமர்வுகள் ஊடாக அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் படி அவர்களினுடைய பரிந்துரைகளை முன்வைத்தார்கள். அப்படிப்பட்ட எல்.எல்.ஆர்.சியுடை இறுதிப் பரிந்துரைகளில் தான் இந்த அதாவது உண்மையில் முழுமையான ஒரு விசாரiணை விசாரிக்கப்பட்ட மக்களினுடைய முழுமையான ஒரு பங்களிப்புடன், நம்பிக்கையுடன் மக்களிடம் இருக்கக் கூடிய அவர்களுடைய பிரச்சினைகள் முன்வைக்காதொரு நிலையில் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்ட நிலையில், அதுதான் நல்லிணக்கத்திற்கான ஒரு சிறந்த ஒரு பொறிமுறையெனக் கூறி இந்த ஐ.நாவின், இரண்டாவது வருடமாக இரண்டாவது முறையாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் இரண்டாவது தீர்மானம் இரண்டாவது கண்டனம்,
மூன்றாவது விடயம், நல்லிணக்கம் என்ற பெயர்க்கு அப்பால் சென்று ஒரு தீர்வு சம்பந்தமாகக் கூட முதல் கட்டமாக அதாவது கடந்த வருடம் இல்லாத இந்த வருடத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன ஒரு விடயத்தையும், மாகாண சபை தேர்தல் என்ற விடயம். என்றால் 13 ஆவது திருத்தம் சம்பந்தப்பட்ட விடயம். வடக்கில் வந்து மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். அவை நடைபெறப் போவதாக இந்த வருடம் அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்கின்றோம் அதன் பின்நோக்கம், மாகாண சபை என்றால், இலங்கை அரசாங்கம் சொல்லியிருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதுதான், தங்களுடைய தீர்வென்று என்றால் தமிழர்களுடைய இனப் பிரச்சினை 1980துகளில் எடுத்த எடுப்பில் நிராகரித்த தமிழரே நிராகரித்த 13 ஆவது திருத்தத்தோடு, முடக்கப்படுவதற்கான மிகவும் ஆபத்தான ஒரு நிலமை இந்தத் தீர்மானம் இந்த நிறைவேற்றியிருக்கின்ற ஐ.நாவில் நிறைவேற்றியிரக்கின்ற தீர்மானம் உருவாகியிருக்கிறது.
ஆகவே, இந்தத் தீர்மானத்தை, தீர்மானம் தொடர்பாக நாங்கள் முன்வைக்கக் கூடிய மூன்றாவது கண்டனம் அதுதான்.
அப்படிப்பட்ட நிலையில், எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் ஜெனிவாக்கு செல்வதற்கு முன்பதாகவே, 25 பெப்ரவரி 2013 ஆண்டு நாங்கள் வைத்த இதே மண்டபத்தில் வைத்த பத்திரிகை மாநாட்டில் வலியுறுத்தின விடயங்களை, சுருக்கமாக நான் மீண்டும் வலியுறுத்த வேண்டுகிறேன்.
தமிழரைப் பொறுத்தவரையில், இந்த இன அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது, எங்களுடைய முதல் தேவை. இனம் அழிந்து கொண்டு போகுது, ஒவ்வொரு நாளும் எங்களுடைய தேசியத்தினுடைய அடையாளத்தை இல்லாதொழிக்ககின்ற வகையில் செயற்பாடுகளை சிறீலங்கா அரசு முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கொரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அத்தியாவசியம். ஆதற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய ஒரே ஒரு வழி சர்வதேச சமூகத்தின் கண்பார்வையில், கண்காணிப்பில், சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பில், சிறீலங்கா அரசியல் அமைப்புக்கு அப்பாற்பாட்ட வகையில், தமிழர் தாயகப் பகுதி என்று சொல்லக் கூடிய வடகிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாகம் (வுசயளௌi யுனஅinளைவசயவழைn ) உருவாக்கப்படுவதே ஒரே வழி. ஆந்த இடைக்கால நிர்வாகம் ஒருவாக்குவதன் மூலம் ஒரு பாதுகாப்பான அமைதியான சூழல் உருவாகுவதன் மூலம் ஒரு சர்வதேச பக்கசார்பற்ற விசாரணையொன்று சர்வதேச சட்டங்கள் மீறுவது தொடர்பான விசாரணைக் ஆணையம் நியமிக்கப்படுகின்ற போது, அப்படிப்பட்ட விசாரணையில், சாட்சியம் வழங்கக் கூடிய மக்களாக இருக்கக் கூடிய தமிழ் மக்கள் எவ்விதமான பயமுமின்றி, அந்த விசாரணையில் கலந்து கொண்டு, தங்களுக்கு இருக்கக் கூடிய முழுத் தகவல்களையும், இந்த விசாரணையில், சமர்ப்பிப்பதற்கான ஒரு சூழலும், அமையும் என்ற இரண்டாவது நோக்கம் என்ற அந்த இடைக்கால நிர்வாகத்தில் இருக்கும்,
ஆகவே, முதலாவது கோரிக்கை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால நிர்வாகம் என்றும், இரண்டாவத ஒரு பக்கசார்பற்ற சர்வதேச விசாரணை அந்த விசாரணை நடைபெறுவதற்கும் முதலாவது, கோரிக்கை ஒரு இடைக்கால நிர்வாகம் என்பது, வழிவகுக்கும் என்பதையும், நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
ஆப்ப எங்களுடைய தீர்மானம் தொடர்பாக, எங்களைப் பொறுத்தவரையிலே இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கான ஒரு ஏமாற்றம் மட்டுமல்ல, இந்த நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானம், உண்மையில் வந்து தமிழ் தேசிய நலன்களுக்கு ஒரு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியளவுக்கு அந்த தீர்மானத்தில் இருக்கக் கூடிய கருத்துகளை நாங்கள் இந்த பத்திரிகை மாநாட்டில், எங்களுடைய மக்களுக்கு, சுட்டிக் காட்டியிருக்கின்றோம். ஆதனை நீங்கள் சரியாக விளங்கிக் கொண்டிருக்க வேண்டும் அதுசம்பந்தமான, எதிர்காலத்தில் கேள்விகள் இருக்குமென்றால் அது தொடர்பாக தயவு செய்து நீங்கள் கேளுங்கோ அது மிக முக்கியம்.
இதில் எங்களுக்கு ஒன்றும் இல்லை என்றுமட்டும் அல்ல இதில் நிறைவேற்றியிருக்கும் ஒரு சில கருத்துகள், எங்களுடைய இருப்பக்கு ஆபத்தான ஒரு விஷயம் என்பதையும் நாங்கள் கருதுகின்றோம். ஆந்த வகையில் நாங்கள் இந்தத் தீர்மானத்தோடு நாங்கள் ஒரு விலகியிருப்பது மட்டுமல்ல. நாங்கள் இந்தத் தீர்மானத்தை நிராகரிப்பதாகவும், எங்கள் நிலைப்பாடு அமைந்திருக்கின்றது.
கேள்வி இருக்கென்றால்…. கேட்டதற்கு கேள்வி சரியாக விளங்கவில்லை.
தோடர்ந்து கஜேந்திரக்குமாரின் கருத்து,
துரதிஷ்ட்ட வசமான விடயம் என்னவென்றால், இன்றைக்கு வந்து எங்களுடைய உரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஐ.நாவில் செய்த அந்த உரை. உண்மையில் சர்வதேச சமூகத்தை வந்து, சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் வந்து, தட்டிக் கேள்வி கேட்பதாக இருந்தது. உதாரணத்திற்கு வந்து ஐ.நாவில் கூட வந்து யூ.பி.ஆர்;. தொடர்பாக நாங்கள் முன்வைத்த கருத்துக்கள் தமிழ் என்ற வார்த்தையை பயன்படுதியதில்லை. மற்றது தமிழனுடைய பிரச்சினையை வந்து வெறுமனே தனிநபர்களுடைய தனிப்பட்ட மனித உரிமை மீறல்கள் விடயம் தொடர்பான விடயமாகத் தான் கொண்டுபோக வேண்டும் என்றார்கள்.
இது இனம் சம்பந்தப்பட்ட, இன மோதல் என்ற அடிப்படையில் கொண்டு போகவில்லை. இந்த விடயம் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டித்தான், நாங்கள் எங்களின் உரையில் வந்து அந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தோம். அதுமட்டுமல்ல, பின்னர் ஒரு சர்வதேச விசாரணையும், ஒரு இடைக்கால நிர்வாகமும் அவசியம் என்பதையும் அங்கு வலியுறுத்தியிருந்தோம். இப்ப, இதில் இருக்கும் உண்மையான பிரச்சினையென்றால் உண்மையான எதிர்வு கூறல்கள், அதாவது நாங்கள் முன்வைத்த கருத்து பெரியதளவில் எடுபடுவதற்கு, நாங்களே வந்து அதாவது தமிழ் மக்களே வந்து அந்த உரைக்கு வந்து ஒரு முட்டுக் கட்டையாக இருக்கின்றது.
காரணம், சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் வந்து தமிழரால் நியமிக்கப்பட்ட ஒரு தரப்பு தாங்கள் செய்கின்ற அலலது பிழைளை செய்தாலும் கூட கண்மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டு அதற்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பதாக ஒரு நிலமை இருக்க உதாரணமாக, எங்களுக்கு வந்து சம்பந்தன் ஐயா வந்து நேற்று அந்தத் தீர்மானம் வரவேற்றது மட்டுமல்ல, அது சம்பந்தமாக அவருக்கு ஒரு மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது என்ற செய்தியை பிபிசிக்கெல்லாம் அறிவித்திருக்கின்றார்.
அப்படிப்பட்ட நிலையில் வந்த தமிழ் மக்களால், நியமிக்கப்படாத தரப்பாக இருக்கக் கூடிய நாங்கள், நாங்கள் என்ன கருத்தைச் சொன்னாலும், சர்வதேசம் விரும்பி வந்து தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஒரு நடவடிக்கை எடுக்க, மக்களால் நியமிக்கப்பட்ட, அங்கீகாரம் பெற்ற தரப்பாக இருக்கக் கூடிய கூட்டமைப்பு கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கும் போது, நாங்கள் எவ்வளவுத்துக்கான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது கேள்விக் குறி?. சரிதானே எங்களைப் பொறுத்தவரையில், அவற்றையெல்லாம் தாண்டி. நாங்கள் ஒரு கட்சியாகவும், தனிப்பட்ட நபர்களாகவும் இதில், ஒரு மனசாட்சி இருக்கின்றவர்களாக, எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்ற பொழுது, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துபவர்களாகத் தான், நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.
ஆனால், அப்பொழுது, இப்படியிருக்கவும், என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைக்கு, மிக மோசமான ஒரு நிலைப்பாட்டை வைத்திருப்பது அதை அவர்கள், செயல்படுவதும் அது மிக முக்கியமான மோசமாக இருந்தாலும் கூட உண்மையில் எங்களுடைய மக்களின், இனத்தினுடைய நலன்களைப் பாதிக்க கூடியளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் கூட எங்களுக்கு ஒரு சின்னதொரு நம்பிக்கை ஒன்று உருவாகியிருக்கின்றது. சின்னதென்றால் அது வளர்ந்து கொண்டுவருகிறது அந்த நம்பிக்கை, விசேடமாக வந்து, தமிழகத்தில் வந்து, மாணவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால்பட்ட வகையில், எங்களுடைய பிரச்சினைகளையும், ஐ.நாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சர்வதேச அரசியலையும், முழுமையாக விளங்கிக் கொண்டு, சும்மா வெறுமனே ஒரு உணர்ச்சிவசப்பட்டல்ல, உண்மையிலேயே அந்த சர்வதேச அரசியலை விளங்கிக் கொண்டு, தங்களுடைய மிகத் தெளிவான கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதும், அந்தப் போராட்டம் படிப்படியாக, வளர்ந்து கொண்டுவருவது, சமூக மட்டத்தில் தமிழகத்தில் வந்து முழுமையாக அதை ஏற்றக் கொள்கின்ற தன்மையொன்று, வளர்ந்து கொண்டுவருவது, அந்த அலைக்குப் பின்னால் ஏன் அரசியல் கட்சி கூட இழுபட்டுக் கொண்டு கோகவேண்டியளவுக்கு, ஒரு நெருக்கடியொன்றை அவர்கள் உருவாக்கியிருப்பது எம்மைப் போன்ற தரப்புக்கு அதாவது நாங்கள் ஜெனீவாவில் சென்று பேசுவத்கு சில விடயங்கள் கூட அங்கு எடுபடக் கூடிய நிலை உருவாகியிருக்கின்ற நிலையில் எங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கின்றது.
ஆகவே, அந்த வகையில் வந்து மக்கள் பலம் மட்டும்தான் இந்த ஒரு மோசமான நிலையிலிருந்து எங்களுடைய எதிர்காலத்திற்கு நாங்கள் ஒரு சாதகமானதொரு, விடிவை ஏற்படுத்தலாமே தவிர, தமிழ் தேசிய கூட்டமைப்பில் செயற்பாடுகளுடாகவோ, அல்லது ஒரு சில அமைப்புகளுடைய எங்களுடைய நம்பிக்கையை அவர்களிடம் விட்டு, அவர்கள் சரியாக நடந்து கொள்வார்கள் என்று, நீங்கள் ஒதுங்கிநிற்பதனுடாக ஒருநாளும் வந்து நாங்கள் முன்னேர முடியாது என்பதே எங்களுடைய நிலைப்பா, ஆனால், எங்களுடைய கருத்துகளுக்கு எதிர்காலத்திலாவது, நிச்சயமாக வந்து இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்திற்குப் பின்னர் பேசப்பட்டிருக்கின்றதென்றால், இந்தத் தீர்மானத்திற்கு வந்து ஒரு பெரியளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை. ஆனால், எதிர்காலத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய செயற்பாடுகள் அல்லது, அவர்களும் அவர்களோட ஒன்றிணைந்து செயற்படக் கூடிய தரப்புகளையும், தாண்டி மக்கள் போராட்டமாக ஒரு நெருக்கடியை உருவாக்கக் கூடிய நிலைமை உருவாகுவதன் மூலம் என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் முன்வைக்கக் கூடிய இந்த நிலைப்பாடுகள் எடுபடுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கிறது. அது எங்களுடைய செயற்பாட்டில்தான் தங்கியுள்ளது.
கேள்வி கேட்கப்படுகிறது…
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனிவாவுக்கு வந்திருந்தவர்கள் திரு.மாவை சேனாதிராசா அவர்கள், சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள். திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், திரு.சிறிதரன் அவர்கள், மட்டக்களப்பிலிருந்து அரியநேந்திரன், திரு.யோகேஸ்வரன் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவாவுக்கு வந்திருந்தார்கள்.
ஆரம்பத்தில் வந்து ஜெனீவாவில் வந்து ஒரு மாநாடு ஒன்று அனைத்துலக தமிழர் பேரவையினுடைய அழைப்பில் ஒரு மாநாடு அதாவது, தமிழர் உரிமை என்ற தலைப்பில் வந்து ஒரு மாநாடு, 02ஆம் திகதி மார்ச் 2013 ஜெனீவாவில் நடைபெற்றது. எங்களுக்கும் அழைப்பு விடப்பட்டது நாங்கள் எங்கள் கட்சியிலிருந்து, தலைவர் என்ற வகையில் நானும், செயலாளர் என்ற வகையில், செல்வராசா கஜேந்திரன் அவர்களும், தேசிய அமைப்பாளர் என்ற வகையில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களும் சட்டத்தரணி, நாங்கள் மூன்றுபேரும், அதில் கலந்து கொண்டிருந்தோம். ஆனால், அந்த மாநாட்டுக்குப் பிற்பாடு, அந்த மாநாடு முக்கியமாக வந்து, தமிழ் மக்கள் அதாவது, இலங்கையில் இருக்கக் கூடிய தமிழ் மக்களும் தமிழகத்தில் இருக்கக் கூடிய ஒரு சில பிரதிநிதிகளும் அதேபோன்று, புலம்பெயர் அமைப்பில் இருக்கக் கூடிய எங்கட தமிழ் அமைப்புக்களையும் வந்து, ஒரு மண்டபத்தில் கூட்டித்தான் நாங்கள் அந்த மாநாட்டை நடாத்தி அதன் பிறகு ஒரு தீர்மானமும் எடுக்கப்பட்டது. அந்த மாநாட்டுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய அந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அந்த மாநாடு ஜெனீவாவில்தான் நடைபெற்றது. ஆனால், அந்த மாநாடு முடிவடைய திரு.சுரேஸ் பிறேமச்சந்திரனும், திரு.சிறிதரன் அவர்களையும் தவிர மற்ற எந்தொரு பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐ.நா.மனித உரிமை சபைக்குள் கால்வைக்கவே இல்லை. மாறாக, சுவிஸ்லாந்தில் வந்து அவர்கள், தங்களுக்குத் தெரிந்த நபர்களை வைத்து ஒவ்வொரு மாநிலத்திலையும் வந்து தங்கட கட்சியை முன்நிலைப்படுத்தி தமிழ் மக்களை சந்தித்தார்களே தவிர, ஜெனீவாவில், மனித உரிமை ஆணையத்திற்குள் அவர்கள் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. திரு.சுரேஸ் பிறேமச்சந்திரன், 8 ஆம் திகதி வரைக்கும், ஜெனீவாவில் இருந்தார். திரு.சிறிதரன் அவர்கள் நான் நினைக்கின்றேன் அவரும் ஒரு 8ஆம், 7 ஆம் திகதிக்கும் வரைக்கும் இருந்தார்.
அவர்கள் இருவரும், அமர்வுகள் உத்தியோகபூர்வமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது, பாராளுமன்றத்தில், அதாவது இலங்கை பாராளுமன்றத்தை எடுத்துக் கொண்டால் பாராளமன்றத்தில் அமர்வுகள் என்று இருக்கின்றது, அதேசமயத்தில், நாடாளுமன்ற குழு கூட்டம் என்று இருக்கின்றது. குழுக்களுக்கு பல அறைகள் இருக்கின்றது, அந்த அறைகளில் ஒவ்வொரு அமைச்சர்களும், ஒரு கலந்துரையாடல்கள் நடைபெறும், அந்த அமைச்சரின் கீழ். அந்த அமைச்சருடன் சம்பந்தப்பட்ட தொடர்பாக ஆராய்வதற்கு, ஒரு விவாதம் ஒன்று நடைபெறும். அப்படிப்பட்ட குழுக்கூட்டத்தில்தான் திரு. சுரேஸ் பிறேமச்சத்திரனும், திரு. சிறிதரனும், கலந்து கொண்டவர்கள், ஆனால், அது 8 ஆம் திகதி வரைக்கும்.
ஆனால், ஏனையோர், மனித உரிமை ஆணையகத்தினுள் கால் வைக்கவேயில்லை.
கேள்வி கேட்கப்படுகிறது……
எங்களைப் பொறுத்தவரையில் நடைமுறை சாத்தியமோ இல்லையோ, எங்கட கேள்வி வந்து, நடைமுறை சாத்தியமோ என்று கேட்பது, நாங்கள் சிங்கள மயப்படுத்தப்படும் வேலைக்கு நாங்கள் இணைங்கிப் போவதுதான் ஒரே வழி. இப்ப எங்களுக்குத் தேவையென்ன? இதில் இருந்து விடுபடுவதற்கு வேறு வழி, எங்களுக்கு உண்மையில் என்ன தேவையென்பதை நாங்கள் சரியாக அடையாளப்படுத்தலாம் என்றால், அதை நோக்கி படிப்படியாக நகர வேண்டும் என்பதுதான் தேவை, அப்பப் போராட்டங்கள் என்ற வகையில் வந்து, நாங்கள் உதாரணத்திற்கு வந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராட்டங்களை நடாத்தினம், அதேசமயம் கூட்டமைப்பும் ஒரு சில கூட்டங்களை நடாத்தின, ஏன் காணாமல் போணாமல் போனோர் வந்து தங்களுடைய, போராட்டங்களை நடாத்தியிருக்கின்றார்கள். தெல்லிப்பளையில் வந்து மக்கள், குடியேற முடியாத மக்கள் வந்து போராட்டங்களை நடாத்தினார்கள்.
நாங்கள் கேட்பது என்னவென்றால், படிப்படியாக வந்து எங்களுக்கு வந்து, எங்களைப் பொறுத்தவரையில் வந்து தமிழ் தேசிய, தமிழர் தாயகத்தில் வந்து மிக மோசமாக வந்து அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்தப்பட்டுள்ளது நிலையில், நாங்கள் அடையாளப் போராட்டங்களை நடாத்தினாலே வந்து ஒரு மிகப் பெரியதொரு எதிர்வினை உருவாக்கும். நாங்கள் மிகப் பெரிய ஒரு மக்கள் போராட்டத்தை வந்து உருவாக்கலாம் என்றால் மிகத்திறம். அப்படிப்பட்ட நிலையினை நோக்கிப் போகவேணும் என்பதற்காக படிப்படியாகவது, அடையாளப் போராட்டங்களையாவது, நாங்கள் நடாத்தியே ஆகவே வேண்டும் அதற்கு, கடினம் இருக்கின்றது, அது நன்றாகத் தெரியும் சரிதானே நாங்கள் அந்த கடினத்தை எடுக்கத் தயாரில்லை என்றால், பின்னர் கடையில் வந்து முன்னேற முடியாது.
நடைமுறை சாத்தியம் என்றால் நீங்கள் சொல்வது சரியென்று நாங்கள் எடுக்கலாம், நாங்கள் இந்தப் போராட்டத்தை நடாத்த முடியாது, நடத்தவும் கூடாது, சரிதானே நாங்கள் இந்த கடினத்தை எடுக்கத் தயாரில்லையென்றால், இறுதிவரைக்கும் முன்னேற முடியாது, அது சரியான கடினம், அதுதான் நடைமுறை சாத்தியமில்லை. நாங்கள் கடினத்தை எடுக்கத் தயாரில்லையென்றால், முன்னேற முடியாது, முன்னேற முடியும் என்பது நடைமுறை சாத்தியமில்லை. தமிழகத்தில் வந்து எங்களுக்காக வந்து, நாங்கள் வந்து கஷ்ட்டப்படுவதை நாங்கள் இங்கே வந்து உதவி கொடுக்க முடியாத நிலையிருப்பதை மையப்படுத்திதான், உண்மையிலேயே வந்து தமிழகத்தில் வந்து, அதையும் நான் குறிப்பிட விரும்புகின்றேன், தமிழகத்தில் வந்து என்னைப் பொறுத்தவரையில் வந்து மாணவர்கள் போராட்டத்திற்கு வந்து ஒரு மிக முக்கியமானதொரு விடயம் வந்து, இங்கே பல்கலைக்கழக மாணவர்கள் சரியான நெருக்கடியின் மத்தியில் வந்து போராடினார்கள். அவர்களுடைய அந்த செயற்பாடுதான், தமிழகத்தில் ஒரு நம்பிக்கையைக் கொடுத்து அந்த மக்களும் வந்து, எப்படியாவது நாங்கள் எதையும் செய்ய வேண்டும் என்று, ஒரு முடிவெடுக்கப் பண்ணியது. இங்கே சின்னதொரு கடினம், அந்த கடினத்தினால் வந்து, அந்த முயற்சியெடுத்ததால் வந்து நான்கு மாணவர்கள் கைது செய்து செய்யப்பட்டு, சட்டத்திற்கு முரணாக வந்து அவர்கள் கைது செய்யப்பட்ட மிகவும் மோசமாக வந்து பாதிக்கப்பட்டார்கள். ஆனால், எடுத்த அந்த முயற்சி, இன்றைக்கு மிகப் பெரியதொரு அலையை வந்து தமிழகத்தில் வந்து, உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்ல, புலம்பெயர்ந்த மக்கள் மட்டத்திலும் தமிழ் மக்கள் மட்டத்திலும் வந்து மிகப பெரியதொரு எழுச்சியை உருவாக்கியுள்ளது. ஆனால் கஷ்ட்டப்படாமல், நாங்கள் அடுத்த கட்டத்திற்கு போகவே முடியாது. அதைத்தான் நாங்கள் இங்கே சொல்லவருகிறோம்.
அதற்காக வந்து ஏதோ, தற்கொலை செய்வதற்கான முயற்சியாக இருக்கக் கூடாது, அதைக் கேட்கவில்லை. கஷ்ட்டப்படத்தான் வேண்டும்.
கேள்வி கேட்கப்படுகிறது….
ஆனால், உதாரணத்திற்கு வந்து, நீங்கள் மனித உரிமை ஆணையகத்தில் வந்து நீங்கள் நடாத்திய குழுக் கூட்டமாக இருக்கலாம், அல்லது மனித உரிமை ஆணையத்தின் ஆணையாளர் நவநீதப்பிள்ளை அம்மையாருடைய அறிக்கையை நீங்கள் எடுக்கலாம். அதைக் கூட நீங்கள் எடுத்துப் பார்த்தாலும், மிகச் சிறியளவில் வந்து மிகப் பெரிய நெருக்கடிகள் மத்தியில் வந்து, யாழ்ப்பாணத்திலும் ஏனைய தமிழ் பிரதேசங்களிலும், தாயகத்தின் ஏனைய பிரதேசங்களிலும் வந்து, நாங்கள் நடாத்திய போராட்டங்கள் அது மிகப்பெரிய அலையென்றுயில்லை. அப்படியிருக்கவும் எடுத்த முயற்சி அந்த முயற்சி எடுத்தன் காரணத்தினால் வந்து, அதற்கு வரக் கூடிய அந்த அரசாங்கத்தில் இருந்து வந்த அழுத்தங்களும், மிகப் பெரியளவில் வந்து சர்வதேச சமூக மட்டத்தில் வந்து எடுபட்டுள்ளது. அது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாறாக மற்ற மாதிரி பாருங்கள், இப்படியெல்லாம் நடக்க நாங்கள் எவ்விதமான கருத்துக்களையும் தெரிக்காமல் ஒரு கஷ்ட்டப்படாமல், ஒரு அடையாளப் போராட்டத்தை செய்யாமல், ஏன் கஷ்ட்டப்படாமல், அமைதியாக இருந்தால் அரசாங்கம் சொல்வது, அரசாங்கம் சொல்லும் மற்றப் பக்கம் மக்களுக்கு சரியான சந்தோஷமப்பா, நீங்கள் வெளியில்தான் போராடுகிறீர்கள் இங்கே போராடவில்லையே, நாங்கள் கஷ்ட்டப்பட்டு போராட அந்தப் போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக அரசாங்கம் தன்னுடைய பயங்கரவாதத்தை எங்கள் மீது கட்டவீழ்த்திவிட சர்வதேச சமூகத்தை சென்றடையும் அப்படிப்பட்ட நிலைமையினை வந்து, நாங்கள் செய்தே ஆகவே வேண்டும்.
கேள்வி….
இல்லை நான் நினைக்கின்றேன். அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. நிலமைகள் விளங்குகிறது. எல்லாருக்கும் நன்றாகத் தெரியும் வந்து இப்ப இவ்வளவு நெருக்கடியில் இருக்கவும் வந்து கடைசில் வந்து அவருக்கு அல்லது அவருடைய கட்சிக்கோ, அவர் விரும்பும் இடமில்லையே, மக்கள் இறுதியில் வந்து வாக்களிக்கவில்லையே எந்த ஒரு தேர்தலையெடுத்தாலும், எவ்வளவு நெருக்கடியிருந்தாலும், பெரியளவில் வந்து, அவரோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பை கடுமையாக விமர்சிக்கிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாக்கு அவருக்கில்லையே, அல்லது அவர் சார்ந்த கட்சிக்கு அளித்த வாக்கில்லையே, அப்ப மக்கள் இவ்வளவு நெருக்கடி இருக்கத் தக்கதாக வந்து, மக்கள் அந்த விடயத்தில் இப்ப மக்கள், நான் நினைக்கிறேன் வந்து, இலங்கைத் தீவை விட்டு வெளியேறிய காலம் தொடக்கம் இன்றை வரைக்கும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அபிவிருத்தி என்று சொல்லக் கூடிய விடயத்தில் இந்த அரசாங்கம் எவ்வளவோ செய்துள்ளது, வீதி அமைத்துள்ளார்கள் எவ்வளவோ செய்துள்ளது. ஆனால் அதுயில்லையே எங்கள் பிரச்சினை அப்படியெல்லாம் செய்தும், உண்மையில் வந்து தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒரு சிங்கள கட்சியை அல்லது சிங்களத் தலைவர்களை தேர்ந்தெடுக்க நான் நினைக்கின்றேன் மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கம் ஒரு தமிழ் மக்களால் மிக கூடுதலாக வந்து வெறுக்கப்படுகின்ற அரசாங்கமாகதான் இருக்கின்றது அதுதான் யதார்த்தம் இதுதான், இவ்வளவுயெல்லாம் செய்தும் அபிவிருத்தி என்ற பேரில் இவையெல்லாம் செய்தும், மிக மோசமாக வெறுக்கப்படுகின்ற தரப்பாக அருடைய அரசாங்கம் இருக்கிறது. பொதுவாக வந்து அதுதான் நிலைமை.
அலுவலகம் திறப்பதனால் வந்து அவருக்கு ஆதரவு இருக்கின்றது என்று அர்த்தமல்ல.
தமிழ் தேசிய டிக்கட் வேண்டி இந்த மனித உரிமை பேரவையில் கலந்து கொள்வதற்காகவும், வேலை செய்வதற்காகவும், எங்கட மக்களுக்காக வந்து அங்க இருக்கின்ற ராஜதந்திரிகளையும் வந்து டிப்ளொமெட்டிக்கையும் சந்திப்பதற்காகத்தான் டிக்கட் வேண்டி 6 பேர் எங்களில் 3 பேர் அதுவும் நான் எந்த சொந்த காசில்தான் நான் போனநான் சரியோ 6 பேர் அவையெல்லாம் செய்து, ஒழுங்கு செய்து கொண்டுபோய் அங்கு கட்சி வேலைதான் பார்த்தார்கள். அதையும் நீங்கள் தெரிந்து வைத்திருங்கோ என நீங்கள் தான் கொண்டுவந்தீர்கள் ஆட்களை
கேள்வி கேட்ட…
இதை நான் சொல்லவில்லை அண்ணன் நான் சொன்னால் நம்பமாட்டீர்கள் வேறுயாரும் சொல்வது நல்லவிடயமாக இருக்கும். அதுபரவாயில்லை பிரச்சினையில்லை.
வேறு என்னவும் இருக்கின்றதோ,
கடைசியாக நான் சொல்ல விரும்புவது, இப்ப தமிழகத்தில் வந்து மாணவர்கள் முன்னெடுக்கின்ற இந்தப் போராட்டத்தை வந்து நாங்கள் அதை வந்து உண்மையிலேயே வார்த்தைகள் சொல்ல முடியாதளவுக்கு வந்து நாங்கள் அந்தப் போராட்டத்தை வந்து மதிப்பது மட்டுமல்ல நேசிக்கின்றோம். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் வந்து அவர்களுடைய முயற்சி எங்களுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், எங்களுக்கு ஒரு சரியான நம்பிக்கையையும், ஒரு தைரியத்தையும் வந்து, கொடுத்துயிருக்கின்றது. அவர்களுடைய முயற்சியினுடைய வெற்றியில்தான் எங்களுடைய எதிர்காலமே தங்கியிருப்பதாகத் தான் நாங்கள் கூறவேண்டியிருக்கின்றது.
ஏன்னென்றால் அவர்களுடைய முயற்சி மிகவும் தூய்மையானதொரு முயற்சி எல்லாவற்றுக்கும் அப்பால் வந்து சர்வதேச அரசியலை மிக, மிக ஆழமாக விளங்கிக் கொண்டுதான் அவர்களுடைய முயற்சி அமைந்திருக்கின்றது என்பதுதான் அப்பட்டமாக எங்களுக்கு விளங்குகின்றது. ஏன்னென்றால் நாங்கள் இங்கே பெரியளவிலான ஒரு ஊடகங்கள் கூட எங்களுக்கு ஒரு இடம்கொடுக்காத நிலையில், நாங்கள் எங்களால் செய்யக் கூடியளவுக்கு எங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டுவருவதை அவர்கள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கும் விட எத்தனையோ நூற்றுக் கணக்கான மடங்குக்கு அப்பால் கொண்டு சென்று முழுத் தமிழகத்திலும் வந்து அந்த உண்மை வந்து ம்தியில் கொண்டு போவது வந்து எங்களைப் பொறுத்தவரையில் ஒரு தமிழ், ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தில் வந்து ஒரு திருப்புமுனையாக இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம். அவர்களுடைய அந்து முயற்சிக்கு நாங்கள் தலை வணங்கிறோம், அவர்களுடைய முயற்சி வெற்றிபெற வேண்டும், அவர்களுடைய முயற்சி திசைதிருப்புவதற்கு அவர்கள் அனுமதிக்கக் கூடாது, அவர்களுடைய முயற்சி வளர தமிழகத்தில் இருக்கக் கூடிய அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, ஏன் ஈழத்தமிழர்கள் தொடர்பாக ஒரு அக்கரை கொண்ட அனைத்துத் தரப்புகளும், தமிழகத்தில் மட்டுமல்ல, அப்பபாற்பட்ட மாநிலங்களிலும் கூட ஈழத்தமிழர்களுடைய நலன்கள் ஒரு மனித நேயத்தை மதிக்கின்ற தரப்புகளை அரவணைக்கக் கூடிய சக்தியாகவும் வந்து அவர்களுடைய இந்த முயற்சி மாறுவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது. அந்தவகையில் வந்து அது கட்டாயம் வந்து வெற்றிபெற வேண்டும் என்றுதான் எங்களுடைய கருத்து நாங்கள் கூட வந்து எங்களால் செய்யக் கூடியளவுக்கு நெருக்கடிகளான, அண்ணன் கேட்டது போல இங்கே, நெருக்கடிகள் கூடுதலாக இருந்தாலும் கூட நாங்கள் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கக் கூடிய வகையில், வந்து எங்களால் செய்யக் கூடிய முயற்சிகளை செய்ய இருக்கின்றோம். புலம்பெயர் மட்டத்திலும் கூட நாங்கள் அவர்களுடைய முயற்சிக்கு ஒரு உந்து சக்தியாக இருப்பதற்கு அவர்களுடைய பங்களிப்புக்கு நாங்கள் ஏற்கனவே வேண்டியிருக்கின்றோம்.