உலகத்தில் அதிகாரவர்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடி கடந்த ஐனித்து ஆண்டுகளாக இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் மக்கள் பற்றுள்ள இடதுசாரிகளே. நமது சாபக்கேடு இலங்கையின் பெரும்பாலான இடதுசாரிகள் வாக்குப்பொறுக்கிகளாகிவிட்டதே. பாராளுமன்ற ஜனநாயகம் என்பது அவ்வப்போது மக்களை உணர்ச்சிவயப்படுத்தி வாக்குகளைத் திடட்டிக்கொள்வதே. வேட்பாளர்கள் வாக்குப்பொறுக்குவதற்குரிய பணத்தை பெரும் வணிக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். சிலவேளைகளில் அன்னிய நாடுகளும் உளவு நிறுவனங்களும் தமது நலன்களுக்காக வாக்குப் பொறுக்கும் வேட்பாளர்களதும் கட்சியினதும் பின்புலத்தில் செயற்படுகின்றனர்.
இதனால் மக்கள் பணம்படைத்த இரண்டு கொள்ளைக்காரர்களில் ஒருவரைத் தெரிவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையே முதலாளித்துவ அமைப்பில் ஜனநாயகம் என்று அழைத்துக்கொள்கின்றனர்.
மக்கள் விரும்பாவிடினும் ஒருவரை அல்லது ஒரு கட்சியைத் தெரிவுசெய்யுமாறு நிர்பந்திக்கும் ஜனநாயகத்தை முன்வைத்து மக்களின் உள்ளார்ந்த விருப்பு வெறுப்புக்களை அறிந்துகொள்ள முடியாது.
கடந்த நூற்றாண்டில் பிரித்தானிய உளவுத்துறையான MI5 உம், அமெரிக்க உளவுத்துறையான CIA உம் இணைந்து அதிகமாகச் செலவுசெய்த பணம் கம்யூனிசத்திற்கு எதிராகப் பொய்பிரச்சாரம் செய்வதற்கானதே. கம்யூனிசத்திற்கு எதிராகப் பல இனப்படுகொலைகள் நடைபெற்றிருக்கின்றன. பல தனி நபர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பலர் போலிக் குற்றங்களின் பேரில் சிறையிலடைக்கப்பட்டனர்.
ஏகாதிபத்திய நாடுகளின் பணபலத்தில் போலிக் கம்யூனிஸ்டுக்களை உருவாக்கி வாக்குப் பொறுக்கிகளாக மாற்றி மக்கள் மத்தியில் கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்பு இன்னொரு முனையில் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது.
சமூகத்தையும் அதன் இயக்கத்தையும் தர்க்கரீதியாக அணுகுவதே கம்யூனிசத்தின் தொடட்க்கப்புள்ளி. அனைத்துமே கடவுளின் செயல் எனக் கோவில்களுக்குள் முடக்கிவைக்கப்பட்ட சமூகத்திற்கு உலகத்தை அறிமுகப்படுத்தியது கம்யூனிசமே.
உலகின் வெற்றிபெற்ற தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் கம்யூனிச இயக்கங்களே. இன்றும் உலகின் அத்தனை உளவு நிறுவனங்களும் அதிகார வர்க்கமும் இணைந்து அழிக்க முடியாமலிருப்பது குர்திஸ்தான் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டம். இப்போராட்டத்தை குஸ்தீஸ் தொழிலாளர் கட்சி (PKK) என்ற கம்யூனிஸ்ட் கட்சியே தலைமை தாங்குகிறது.
ஆனால் யாழ்ப்பாணத்தின் மேட்டுக்குடி அரசியல் வாதிகள் தமிழர்களைப் பின் தங்கிய மந்தைகளாகவே வைத்திருக்க விரும்புகின்றனர். தேசிய விடுதலைப் போராட்டத்தை கம்யூனிஸ்டுக்கள் தலைமைதாங்கினால் அது வெற்றிபெற்றுவிடுமோ என்ற அச்சம் அவர்களின் பேச்சுக்களில் வெளிப்படுகிறது. ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரஸ் (General Secretary of the All Ceylon Tamil Congress (ACTC)) இன் செயலளர் எனத் தனது linkedin பக்கத்தில் தன்னைத் தானே அறிமுகம் செய்யும் கொழும்பு பணக்கார மேட்டுக்குடியின் குறிப்பிடத்தக்க உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்கள் கம்யூனிசத்தை என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பைச் சுற்றியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சொத்துக்களிலிருந்து அவரின் அமெரிக்க ஏகாதிபத்தியச் சார்புக் கருத்துக்கள் வரை தேசியம் பேசவில்லை. அவை விதேசியத்தின் துருத்தலான குறியீடுகள். இதனால் கஜேந்திரகுமாரின் கம்யூனிச எதிர்ப்பு வியப்பிற்குரியவை அல்ல. தேசியத்திலும் அதிகமாக அதிகாரவர்கத்தை நேசித்தால் மட்டுமே கஜேந்திரகுமார் தனது சொத்துக்களையும், ஏகாதிபத்திய விசுவாசத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதனால் தான் கஜேந்திரகுமாரின் தாத்தா ஜீ.ஜீ.பொன்னம்பலம் பேரினவாத்தித்திற்கு நுளைவாசலக அமைந்த மேற்கின் அடிமை அரசான டீ.எஸ்.சேனாநாயக்கவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.
‘எங்கட மக்கள் ‘எப்போதும்’ கம்யுனிசத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல.” என்ற கஜனின் கூற்று சரியா?தவறா?.
என்னைப் பொறுத்தவரை கஜனின் கூற்று தவறு. அவரின் வரலாறு குறித்த பார்வையில், ‘நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’…
யாழ்.குடாவில் நடைபெற்ற சாதீய ஓடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தினை வழிநடாத்தியோர் கம்யுனிச சித்தாந்தத்தினை ஏற்றுக்கொண்டவர்களே. விடுதலைப்புலிகளின் கலை- பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரையும் கம்யுனிஸ்ட்தான்.
வரலாற்றினை திரிப்பதும் மறைப்பதும், ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்ட உதவாது. 70 களின் ஆரம்பத்திலிருந்து தமிழ் கலை- இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்கள் இடதுசாரிகளே.
இவையெல்லாம் வரலாற்றுக் கற்பனைகள் என்று கஜேந்திரகுமாரால் சொல்ல முடியுமா?.
உங்களுக்குப் பிடிக்காத விடயம், மக்களுக்கும் பிடிக்கவில்லை என்று கூறுவது, ஒருவகையில் கருத்துத் திணிப்புத்தான். சிலவேளை இவரின் கூற்று, ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவிற்குப் பிடிக்கலாம்.
மேலுள்ள தமிழ்நெட் இணைப்பில் கம்யூனிசம் சரி பிழை ஒன்றும் இல்லையே?
http://tamilnet.com/art.html?catid=13&artid=37545
இணைப்பிலுள்ள ஒலிப்பதிவில் 44ஆவது நிமிடம் அளவில் கம்யூனிசம், திட்டமிட்ட இனவழிப்பத் தொடரும் ஆட்சிமாற்றம், மாற்று ஜனாதிபதி வேட்பாளர்கள் என ஸ்ரீதுங்க ஜயசூரிய-வை சுட்டிக்காட்டி ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. அதற்கான பதில் இழுத்தடிக்கப்பட ஒலிப்பதிவும் துண்டிக்கப்படுகிறது.
இனியொருவின் இச்செய்தித் துளிக்கு ஆதாரத்தை முன்வைப்பதே சிறந்த ஊடக முறைமை.
அதே ஒலிப்பதிவில் 29 ஆவது நிமிடமளவில் “போரை வெண்ரது யார்? பொன்சேகா!” என கஜேந்திரகுமார் உளறுவது கவலைக்கிடமானது. 2009 -இக்குப் பின்னர் அரசியலில் வளர எத்தனிக்கும் எவரும் 2009 இல் இருசாராரையும் முடக்கி விட்டு உருவான போரையும் வென்றது அமெரிக்க ராணுவ மையமான பென்டகன் என்பதில் தெளிவுற வேண்டும்!
தெளிவாய் இருக்கிறது 44.13 நிமிடத்தில்…
அவர் உண்மையைத் தான் சொன்னாரே தவிட இல்லாத ஒன்றை கண்டுபிடிக்கவில்லை. தமிழ் மக்கள் கம்யூனிசத்தை ஒருக்காலும் ஏற்றுகொண்டதில்லை. இனிமேலும் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இதுதான் யதார்த்தம்
அவர் பிறக்க முதல் இருந்த உண்மையைச் சொல்லவில்லை. தீண்டாமைக்கு எதிராக ஜி.ஜி.பொன்னம்பலமா போராடினார்?. வரலாற்றைத் திரித்து வாக்கு வங்கி அரசியல் செய்யலாம்.
ஒன்றை மட்டும் மறந்திராதையுங்கோ…தேசிய இனம் என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறுத்தவர்கள் கம்யுனிஸ்ட்டுக்கள்தான்.