மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இலங்கை தமிழர்கள் முழு உரிமையுடன் கூடிய வாழ்க்கை பெற்று வாழவும், கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத்தருவதிலும் பிரதமர் மோடி உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மக்களின் எண்ணங்களை மதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் நாற்கர சாலை பொது மக்களுக்கு பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும்’’என்றார்.
இலங்கை இனப்படுகொலை அரசுடன் இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மோடி அரசு அதிகரித்துவரும் நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் சீமானுடன் இணைந்து புலிப்பார்வை படத்தின் பாடல்களை வெளியிட்ட அதிர்ச்சியில் இவ்வாறு பேசவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
The 14th century oceanic erupted 285 acre Katchatheevu Island agreement already signed in 1974…
But before India’s independence it was owned by Ramnad kingdom of Ramanathspuram district
Now, this Pon. Rathakrishnan… all are for stunt politics…
He can’t change anything… !
கச்சதீவு தமிழர்களே கூடுதலாக போய்வரும் இடம். இதனை
பங்குபோட இலங்கை அரசும் இந்திய அரசுமே பேசிக்கொண்டார்கள்.
இருவருமே தமிழர்கள் தென்னிந்தியர்களானலென்ன , இலங்கையர்களாலென்ன தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கவே
விரும்புகின்றவர்கள்.
கச்சதீவு பிரச்சினை தீர்ப்பு பசியில் அழும் குழந்தைக்கு இனிப்பு
வாங்கி கொடுத்து ஏமாற்றுவது போல் இந்திய இலங்கை அரசுகளின்
அரசியல் நாடகமே.
கச்ச தீவு இருப்பது தமிழ்க் கடலில்.
கடலுக்குப் பெயரோ ஆங்கில ஆழுநன் போக் என்று.
பாக்கு என்று சரித்திரம் மட்டுமல்ல மறைக்கப் படுவது.
கச்ச தீவின் கேந்திர முக்கியத்துவதுக்கும் அப்பால் தீவினதும் தீவைச் சூழ்ந்த கடலடியினதும் தாது வளங்கள் பற்றி 60 களிலிருந்தே அமெரிக்க ஆய்வுகள் நடத்தப் பட்டது பலராலும் மறக்கப்பட்டது. இத்தாது வளம் மன்னார்-ராமேசுவரம் பால தாதுமணல் சம்பந்தமாகவோ அல்லது எண்ணெய்/எரிவாயு சம்பந்தமாகவோ அல்ல