வடலி குலைந்து
வானம் பார்த்தபடி
ஒற்றைப்பனை
அதன் மேல்
அக்கினி உமிழத் தயாராக
ஊர் நிலவு
குருதி படிந்த
வேலி இடுக்கில்
தலை கிழிந்த
ஒரு புகைப்படம்
கிடுகின் பொந்தல்லூடு
புன்னகை மறந்து
பொசுங்கிப்போன
ஒற்றைக்கை உருவம்
தன்நிலை மறந்து
கோவிலடி ஆலமரம்
அம்மன் பாவம்…
ஒரு கண்ணுடனும்
ஒற்றைக் காலுடனும்
அதே…
அப்பாவிச் சிரித்த முகம்
காற்றில் அலைந்து
களைத்து விழுகிறது
ஒரு துளி மழை
மழைத்துளி விழுந்தாலும்
எதோ என்று
பதறியடித்து
பதுங்கிக்கொள்கிறது
உடைந்த ஒற்றைக் கதவடியில்
ஒரு குழந்தை
ஏன் என்பதை
முழுவதுமாய் யாராவது
இனியேனும் உணரக்கூடும்…?
மனசுதான் வாழ்க்கை.வாழ்க்கையை மாற்றப் போவதும் மனசுதான்.குழந்தை ஒரு கணம் பதறூம் மறூ கணம் அதைப் பழக்கப்படுத்து விளயாடும்.விழுந்தாலும் எழுந்து சாதிக்க முயலும்.ஒற்றப் பனையால்தான் ஊரெல்லாம் பனையாகி அதுவே கூடலாகி வாழ்க்கையை வசபப்டுத்த நமக்கு கற்றூத் தந்தது.ஆலமரம் போல் விழுதுகள் விடுவோம்.ஆயிரங்காலத்திற்கும் நிலை பெற்றூ நிற்போம்.
கவிதாவின் ” என் ஏதேன் தோட்டம்” “தொட்டிப்பூ” மிகவும் அருமையான கவிதைத் தொகுப்பு. எங்கே கிடைக்குமென்று தெரியவில்லை, தேடிப்படிக்கலாம். மிடுக்கும், கோபமும் பேசும் இளங்கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்.
என்னைத் தொடர்பு கொள்ளவும் புத்தகங்கள் தருகிறேன்
பொன் ராஜேஷ் 98842 88228
கவிதை நன்றாயிருக்கின்றது. எம் அவலத்தை வீச்சொடு விளக்கும் இப்படியான சிறுகவிதைள் வேற்று மொழிகளிலும் புனையப்படவேண்டும். அது கவிதா போன்றவர்களால் முடியாததல்ல. எமது மக்கள்படும் துன்பம் யாவும் உலகுக்குத் தெரிந்ததே. இருப்பினும் முயன்றோம் என்ற நிம்மதி கிடக்குமல்லவா?
கவிதைகள் அல்ல இவைக் கார் மழைகள்!!
எளிய நடை
மிடுக்கு
உள்ளூர் மொழி வழக்கு
சிறந்த மொழி ஆளுமை இன்னும் சிறப்பு!!
வாழ்த்துக்கள்!!
இளங்கவிஞர் சிறக்க!! புதியனப் பல படைக்க!!