நீங்கள் ஒரு ஓரினச் சேர்க்கையாளரா என்ற நேர்காணல் கேள்விக்காக ஒரு தமிழ்ப் படைப்பாளி கோபப்பட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஓரினச் சேர்க்கை (Homosexual) பற்றிய பதிவுகள் செய்தியாகவேகூட தமிழ் அறிவு சீவிகளின் ஏடுகளில் இடம் பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை போன்று இன்னும் பல நாடுகள் ஓரினச் சேர்க்கையாளர் குறித்த கனிவுப் பார்வையை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கமாட்டாது என்பது நிச்சயம்.
சில நாடுகள் அய்.நா (UN) அகதிகளுக்கான சாசனத்தில் எவ்வாறு கையெழுத்திடாமல் இருக்கின்றன அல்லது அகதிகளுக்கான சாசனத்தில் கையெழுத்திட்டும் அவற்றுக்கான உண்மை நடைமுறையைக் கைக்கொள்ளாமல் இருக்கின்றன. அதே போன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டுக் கண்டும் காணாமல் இருக்கின்ற நிலையும் ஏற்படலாம். (இலங்கை தமிழ் அகதிகளை (Tamil Refugee) இந்தியா கையாழும் வகை மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு)
அதே போன்று ஓரினச் சேர்க்கை பற்றிய இந்த ஒப்பந்தத்திலும் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
ஓரினச் சேர்க்கை என்பதையும் சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதையும் (Pedophilia) பிரித்துப்பார்க்கவேண்டும். இரண்டையும் குழப்பிப் பார்ப்பதும் நடைமுறையில் பலவேளைகளில் உள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர் (Homosexuals) என்போர் தங்கள் பால்நடவடிக்கைக்கான தெரிவாக தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவரை நாடுவர். இது வன்முறையால் அமைவதல்ல. நட்பு வகையிலும் பின்னர ;உறவு வகையிலும் பரஸ்பர கூட்டுச் செயற்பாடாக மலர்கிறது. ஆண்களானால் ஆண்களையும் பெண்களானால் பெண்களையும் நாடுகையில் அது ஓரினச் சேரக்கை என அழைக்கப்படுகிறது.
கனடாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓரினச் சேர்க்கையாளரின் திருமணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில், கடந்த கிழமையில் ஓர் இந்தியத் தாய்மூலம் குழந்தையைப் பெற்றுத் தத்தெடுத்துக்கொண்ட இஸ்ரேலிய ஆண் ஓரினச் சேர்க்கையாளரின் படம் செய்தி ஏடுகளில் வந்திருந்தது.
ஆனால் சிறுவர் மீதான பால்வன்முறையைச் செய்வோர் அவர்கள் தெரிவாக ஓரினச் சேர்க்கையை எடுத்ததாளுபவரல்லலர். அவர்கள் பால் வக்கிர மனநிலை (PERVERSION) உடையோர். சிறுவர்களுக்கு வளர்ந்த ஆண் அல்லது பெண்களுடன் பால் செயற்பாட்டில் ஈடுபட எந்தத் தேவையும் இல்லை. சிறுவர்களை கட்டாயப்படுத்தித் தங்கள் இச்சைகளுக்கு ஆட்பட வைக்கும் செயலே சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல் என்னும் வகையில் அடக்கப்படுகிறது.(ஆங்கிலத்தில் PEDOPHILIA )
அண்மையில் யாழ்ப் பகுதியில் இருந்து வந்த செய்திகள் இந்தக் குழந்தைகள் மீதான பால் வன்முறை குறித்த கவலையைத் தருவனவாக உள்ளன.
யாழில் உள்ள காப்பரண்களில் இருக்கும் ராணுவத்தினர் அவ்வழியாகத் தொடர்ந்து பள்ளி செல்லும் சிறார்களை அடையாளம் கண்டு வேறுபடுத்தி மிரட்டி தனிமைப்படுத்தி பால்சார் வன்முறைக்கு உள்ளாக்குவது தெரியவந்துள்ளது.
கைவிடப்பட்ட வீடுகளும் கண்காணிப்பற்ற வீதிகளும் துப்பாக்கி முனையும் இவ்வன்முறை தொடர்வதற்கும் ஏற்படுவதற்கும் வாய்ப்பாகவுள்ளது.
பசியிலும் பஞ்சத்திலும் இருக்கும்; குழுந்தைகளிடம் இனிப்புக்களும் உணவுகளும் விளையாட்டுப் பொருட்களும் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பால்வன்முறைபுரியும் ராணுவத்தினர் நடுவில் இந்தச் சிறுவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே எம்மிடம் இருக்கும் குடும்ப நடைமுறையின்; கண்டிப்பான பெற்றோர் என்ற நிலைப்பாடு குழந்தைகளையும் சிறார்களையும் இந்தத் தங்கள் மீதான பால்வன்முறைபற்றிக் கதைக்கவிடாது தடுக்கிறது. அதே போல கொடுமையானவும் கண்டிப்பான ஆசிரியர்களைக் கொண்டதுமான எமது கல்வி முறை. ஆசிரியர்களுடனும் கதைக்க முடியாத நிலை எமது சிறுவர்களுக்கு.
இராணுவத்தின் கொடுமைகள் போரின் அவலம் தரும் மன உளைச்சல் அனைத்தும் பொருளாதார இழிவினால் வரும் பாதிப்புக்களுடன் இந்தச் சிறுவர்களைத் தாக்குகின்றன.
இது ஒரு புறமிருக்க சிங்களப்பகுதியில் குறிப்பாக கொழும்பையும் அதனை அண்டிய காலி வரைக்குமான கடற்கரைப் பகுதிகளும் உலகம் முழுவதும் உள்ள பிள்ளைபிடி காரர்களால் (சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவோரால்) சொர்க்க பூமியாகக் கருதப்படுகிறது. (SRI LANKA IS A HEAVEN OF PEDOPHILIA) இந்த நிலையைக் கண்டும் காணாமல் இலங்கை அரசு தனது உல்லாசப் பயண வருமானத்துக்காக மூடிமறைத்துச் செயற்படுகிறது.
இலங்கை அரசின் கையெழுத்திட மறுப்பு என்பது இந்தச் சிறார் பால் வன்முறையின் மீதான உலகக் கவனம் தங்கள் மீது திரும்பிவிடக்கூடாது என்பதனாலும் உருவாகியிருக்கும் வாய்ப்பிருக்கிறது.
ஆப்கானிஸ்தானிலிருக்கும் கனடாவின் அமைதிகாக்கும் படையினரிடம் தற்போது ஓர் சிக்கல் எழுந்துள்ளது. ஆப்கானில் இருக்கும் கனடாவின் படையணி அமைதி என்ற பெயரில் (வழக்கம் போல – இந்திய அமைதிப்படை செய்தது போல) அங்குள்ள தலிபான் குழுக்களுடன் சண்டையில் ஈடுபட்டுவருகிறது. அமெரிக்கா போன்ற நேட்டோ கூட்டாளிகளால் இந்தப் போரில் கனடா இழுத்துவிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் எழுந்திருப்பது இதுதான்.
ஆப்பகானில் அரசுசார் படைகளும் கனடியப் படையினருக்கான மொழி பெயர்ப்பாளர்களும் அங்குள்ள ஆப்கன் சிறுவர்களைக் கொண்டு வந்து (sodomize) கம்பிஅடிக்கையில் அதைக் கண்டும் காணாமல் இருக்கும்படிக்கு கனடாவின் கட்டளை அதிகாரிகள் தங்கள் கீழுள்ள இராணுவத்தினரை அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
கனடாவில் சிறுவர்களைப் பால்வகைத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது தண்டனைக்குரிய அவமானத்துக்குரிய மிகப்பெரிய குற்றம்.
இந்நிலையில் கனடாவின் இராணுவ அதிகாரிகளின் இத்தகைய அறிவுறுத்தல் பெரிய கேள்வியாகியிருக்கிறது.
இதில் மற்றொன்றையும் பார்க்க வேண்டும். தலிபான்கள் கூடாதவர்கள் என்ற கோசம் வைத்தவர்கள் பலர் தலிபான்கள் பெண்கள் சிறுவர்கள் மீதான கடும் பண்பாட்டுத் தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்ற குற்றச் சாட்டுக்களையே வைத்தார்கள்.
தற்போது ஆப்கானில் ஆட்சியிலிருக்கும் கைப்பாவைகளும் அவர்களது கைப்பாவைகளும் செய்யும் இத்தகையை கொடிய வேலைகள் இந்த சனநாயகவாதிகளின் கண்களில் ஏன் படாமல் போனது ?
யாரோ ஒரு கனடாவின் இராணுவத்தினர் வந்து தங்கள் மேலதிகாரிகளின் முறையற்ற செயலைப்பற்றி சொன்னதன் விளைவாகத்தானே இந்தச் செய்தி வெளி வந்திருக்கிறது?
கனடா இது வரை சற்றேக்குறைய 100 வீரர்களைப் பலிகொடுத்திருக்கிறது. 2000 வீரர்கள் மட்டுமே அங்கு நிலை கொண்டுள்ளனர். ஆனால் லட்சக்கணக்கில் வீரர்களை கொண்டு அங்கு ‘அமைதிப் பணிபுரியும்” நாடுகளின் இராணுவத்தினருக்கு அங்குள்ளவர்கள் சிறுவர்களைக் கம்பியடிக்கும் இந்தப் பாதகம் தெரிவில்லையா? ஏன் அது வெளிப்படுத்தப்படவில்லை? என்பவற்றையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.
இலங்கையில் தமிழர்களைக் கேட்கவே நாதியில்லை. பின்னர் அவர்களின் குழந்தைகளை சிறார்கள் பால் வன்புணர்வுக்கு உள்ளாக்கினால் யார் கேட்பது?
(எனக்கு நிச்சயமாகத் தெரியும் எனக்குத் தெரிந்த மக்களாட்சி நண்பர்களால் இது குறித்து வாய் திறக்கமுடியாது என்பது? இன்று அவர்களது ஒரே இலக்கு மக்களாட்சி தத்துவத்தினடிப்படையில் தேர்தலில் நின்று பாராளுமன்றத்திற்கு சென்று எமது குரலை ஒலிக்கவேண்டும் என்பதுதான்.)
ஓரினச் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு வரவேண்டிய அதேவேளை சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகளை நிறுத்தும் வகையில் அதுவும் குறிப்பாக இலங்கையில் நிறுத்தும் வகையில் கோரிக்கைகள் வைக்கப்படவேண்டும்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் (human right watch)போன்றவை தங்கள் கவனத்தில் இதை எடுத்துக் கொள்ளவேண்டும். போரின் கொடுமை போதாது என்று இப்பாலியல் கொடுமையை ஏன் இந்தச் சிறுவர்கள் எதிர்கொள்ளவேண்டும்?
இலங்கை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்ததில் ஓரளவு சரியான தன்மையே தென்படுகிறது. இலங்கை கைச்சாத்திட்டபின் இரட்டைவேடம் போடாமல் நேரடியாகவே மறுத்திருக்கிறது. இதுதான் இலங்கை ! என்பது அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.
எவ்வாறு எயிட்ஸ் நோயையும் ஓரினச் சேர்க்கையையும் ஒன்றாக அடையாளப்படுத்தி குழப்பம் ஏற்படுத்தப்பட்டதோ அதே போல – அதன் மறுதலைபோல இலங்கையைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையையும் சிறவர்கள் மீதான பால்வன்முறையும் குழப்பிப் பார்க்கப்படுகிறது.
எவ்வாறு சிறுவர்களைப் படையில் சேர்ப்பது பாரிய குற்றமோ அதைவிடவும் பலமடங்கு குற்றச்செயலாக சிறுவர் மீதான பால்வன்முறை பார்க்கப்படவேண்டும்.
யுனெஸ்கோ-யுனிசெவ் (unesco – unicef)முதலான சிறவர்களுக்கான நல்வாழ்வு ஏற்படுத்தும் அமைப்புக்கள் கண்ணில் படவேண்டிய செய்தி இதுதான்.
இது இலங்கைக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் பொருத்தப்படவேண்டியது.
ஆப்கானில் தலிபான்கள் பண்பாட்டுக் குற்றவாளிகள் என்றால் பாரிய அளவில் நடாத்தப்படும் சிறுவர் மீதான வன்முறைக்காக தற்போதிருக்கும் ஆப்கான் அரசு அதைவிடவும் கொடிய குற்றவாளிகள்தான். தலிபான்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட உதவிகரமாக இருந்த பல பெண்கள் அமைப்புக்கள், மக்களாட்சி அமைப்புக்கள் இந்த சிறுவர்க்ள மீதான பால் சார் வன்முறைகளை கனடாவின் ஓர் ராணுவ வீரரின் மனச்சாட்சி பேசும் வரைக்கும் ஏன் குற்றமாக எடுத்து உலகுக்குச் சொல்லவில்லை.
அந்தக் குழந்தைகள் ஏழைக் குழைந்தகளாக இருந்ததனாலா?
ஆப்கானில் இருந்த இருக்கின்ற இந்த மற்றைய நாடுகள் (இங்கிலாந்து அமெரிக்கா அய்ரோப்பிய வட்டகை நாடுகள்…) எவ்வாறு சிறுவர்கள் மீதான பால் வன்முறையைப் பாரக்கின்றன? இதுவரை அந்த நாடுகளின் ஒரு இராணுவத்தினர்கூடவா கனடிய இராணுவத்தினர் கண்ட அந்தக் காட்சியைக் காணவில்லை? சிறுவர் பால் வன்முறைக்கு சாட்சியாகவில்லையா? அப்படியாயின் ஏன் அது வெளிவரவில்லை?
இலங்கை முதலாக எங்கு அரசுசார் வன்முறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லையோ அங்கு அனைத்து வன்முறைகளும் தலைவிரி;த்தாடும். அது அனைத்து அரசியல் சித்தாந்தங்களுக்கும் அனைத்து அமைப்புக்களுக்கும் புவிசார் இடங்களுக்கும் பொருந்தும்.
வரலாறு எத்தனை தடவைதான் எங்களுக்குப் பாடங் கற்றுத் தரவேண்டும் என எதிர்பார்ப்பது?
புலிகளுக்கு நாசூக்கா வேலைசெய்வதென்பது இதைத்தான்.
ரகுநாதன் வாசியுங்கள்…
இனியொருவையாவது….
https://inioru.com/?p=1116
//புலிகளுக்கு நாசூக்கா வேலைசெய்வதென்பது இதைத்தான்.//ரகுநாதன்.
திரு.ரகுநாதன் நீங்கள் புலியெதிர்ப்பால் முன்வைப்பது உண்மையான நேர்மையான கருத்து இல்லை.
கருத்தியல் ரீதியலான விவாதத்திற்கு வருவதே ஆரோக்கியமானது.இது சுருக்கமான தரமான கட்டுரை .அவை ஆரோக்கியமானவை. கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை.
சரி பிழை என்பவற்றிற்கு அப்பால் ஒரினச் சேர்க்கை ஆண்களும் பெண்களும் எமது சமூகத்தில் உள்ளனர். இது அணுகப்பட வேண்டும் மட்டுமல்ல அங்கிகரிக்கப்படவும் வேண்டும். இதற்குள் வேறு புலியும் புண்ணாக்கும்.!
புலம்பெயர்ந்த இந்த நாடுகளில் இருக்கும் நாங்கள் தரமான நட்பார்ந்த விவாதங்களை நடாத்தவேண்டும். இந்த ஐரோப்பா முதலாளித்துவ சூழல் ஏதோ ஒருவகையில் ஐனநாயகத்தை குறைந்தளவாவது வழங்கியுள்ளது. எதுக்கெடுத்தாளும் புலியென்றும் அரசு என்றும் கன்னை பிரிந்து மயிரை பிச்சுக்கொள்வதில் பிரயோசனம் இல்லை. முதலில் புலிஆதரவாளர்களும் இலங்கை அரச ஆதரவாளர்களும் இணையத்தளங்களில் வந்து குப்பை கொட்டுவதை நிறுத்திக் கொளவதுதான் தரமான விவாதங்களை நடாத்த சிறந்த வழி. இவர்களுக்கு சிறீலங்கா அரசின் இணையத்தளங்களும் புலிகளின் இணையத்தளங்களும் நிறைய உண்டு. அங்கேபோய் உங்கள் மல் யுத்தத்தை செய்யுங்கள். இந்தக் கட்டுரை சமூகத்தின் முக்கிய பிரச்சகையை அனுகியுள்ளது. இதற்குள் போய் உங்களின் புலிக்காய்ச்சல்களையும் அரச காய்ச்சல்களையும் காட்டாதீர்கள்.
கோதை எமது இனத்தின் உயிரும் வாழ்வும்
கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.இவையிருந்தால்தான்
மற்றவற்றை பற்றி ஆய்வுசெய்ய முடியும்.நீங்கள் புழிச்சல் ஏவறை
அல்லவா விடுகிறீர்கள்.உங்கள் பாட்டுக்கு நீங்கள் ஆய்வு செய்யுங்கள்
யார் மறுத்தது. அடிமடியில் கைவைக்காதீர்கள்.கிண்டலடிக்காதீர்கள்.
சந்திரன் ராசா,
எமது இனத்தைப் பற்றி நீங்களா பேசுகிறீர்கள்?
என்னே கேவலம்??
சிறீ லங்கா ராணுவம் கொசுக்க்ளைப் போல எமது இனத்தை கொன்று குவிக்கும் போது கைதட்டிக் கூச்சல் போடும் நீங்களா இனத்தை பற்றிப் பேசுகிறீர்கள்??
புலிகளை அழிபது என்ற போர்வையில் மொத்த இனத்தையே நிர்மூலமாக்குவதை நியாயம் என்று சொல்லும் உங்களுக்கு இப்படிப் பேச வெக்கமாக இல்லை?
புலிப் பாசிசத்திற்கும் உங்களைப் போன்றவர்கள் வளர்த்துவிடும் அரச பாசிசத்துக்கும் பலியாகும் மக்களின் ஆவி கூட உங்களைச் சும்மா விடாது.
சமகான்; உமது இனம் வன்னியில் மட்டும்தானா? இருக்கிறது
எனது இனம் அம்பாறை மட்டக்கிளப்பு அப்படியே றவுண்டச்சு வந்தால்
புத்தளம் வரைக்கும் இருக்கிறது. இவளவும் குடியிருப்புத்தான். தொழில்
செய்வதாகயிருந்தால் இலங்கைபூராவும் என்று சொல்லலாம்.
இப்ப என்னவென்றால் நீர் தமிழ்ழகத்து சினிமாக்காரர்மாதிரி கூட்டமைப்பு கோஸ்டிமாதிரி
தமிழ்மக்களை அழிச்ஒழிப்பதாக ஒப்பாரி வைக்கிறீர்?இப்பநீங்கள் மொத்த இனம்
என்றுசொல்லுகிறது புரியக்கூடியதாக இருக்கிறது.புலிகள் அழித்தொழிக்கப்படவேண்டியதே!
இதில்மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தவிர்கமுடியாத உண்மை. அதற்குஏதாவது மாற்று
வழியிருந்தால் கூறுங்கள்.இதைவிடுத்து திட்டுறதும் புலம்புறதும் அறிவுக்குரியதுதல்ல.
ஐயோ சந்திரன் ராசா,
எனது இனம் இலங்கையின் பின் கோடியில் ஆரம்பித்து வளைகுடாவையும் கடந்து உலகம் முழுவதும் உள்ளதையா! மனித இனம்!!
சதாம் ஹுசையினை அழிப்பதற்காக அமரிக்காவையும் புஷ்ஷையும் ஆதரித்தவர்கள், ஒசாமா பின்லாடன் என்ற கோரமான பயங்கர வாதியை அழிக்க புஷ்ஷிற்கும் ஐரோப்பியநாடுகளுக்கும் பக்கவாத்தியம் வாசித்தவர்கள் இன்றைக்கும் கொலைகளைக் கண்டு கைதட்டிச் சிரிப்பவர்கள் இதைப் போலவே புலிகளை அழிக்க அரச பயங்கரவாதி, புஷ் ஐப் போலவே மோசமான மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கிறீர்.
உமது உறவினர்,நீர், …….. ………..எல்லாரும் ஐரோப்பிய நாட்டின் ஒரு மூலையில் வைன் கிளாசோடு கொல்லப்படும் பச்சிழம் குழந்தைகளையும், கொன்று குவிக்கப்படும் அப்பாவி மக்களின் பிணங்களையும் ரசித்துக் கொண்டிருக்கும் ………..
…………………………………………………………………………………
இப்படித்தான் சதாமை அழிக்கிறோம் என்று ஈராக் மக்களைக் கொன்று குவித்த அமரிக்காவை ஆதரித்தவர்களும் அமரிக்க உளவாளிகளாகத் தான் செயற்பட்டார்கள்.
சமகான்!
நீங்கள் இப்பதான் இடதுசாரிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில்லிருந்து
புறப்பட்டுகிறீர்கள் என நினைக்கிறேன்.ரணில் பிரேமதாசா ஜே.ஆர்.ஜயவர்த்தனா
இவர்களை விட மகிந்தாராஜபக்சா மிகவும் உயர்ந்தவராகவே எனக்கு படுகிறார்.
உங்கள்கருத்தின்படி நான் அரசின்உளவாளியாகவே இருந்துவிட்டு போகிறேன்.
மகிந்தாஅரசு பாசிசஅரசுயென்றால் அவர்களை நாம் எப்படி எதிர்கொள்வது. இனி
நாம் என்ன செய்யவேண்டும்?
இந்த சாரத்தை எனக்காகவும் இனியொரு வாசகர்களுக்காகவும் உங்களை கேட்டுக்கொள்ளுகிறேன்
இதற்கு பெரியவிளக்கம் அவசியம் இல்லை. நான்கு வரிகள் போதுமானவை.
//உங்கள்கருத்தின்படி நான் அரசினுளவாளியாகவே இருந்துவிட்டு போகிறேன்.
மகிந்தாஅரசு பாசிசாரசுயென்றால் அவர்களை நாம் எப்படி எதிர்கொள்வது. இனி
நாம் என்ன செய்யவேண்டும்?
//
இதுகெல்லாம் இடதுசாரிப் படிப்பெல்லாம் அவசியமில்லை ராசா!
நீங்கள் பேரினவாத கொலைகார அரசின் கத்தைகத்தையான தமிழினப் படுகொலைகளை ஆதரிக்கிறீர்கள்.
ஈராக்கிலும் கூட இப்படித்தான் சதாமை விட புஷ் மேல் என்றுதான் அமரிக்காவை இறக்கினார்கள்.
புஷ் இற்கு அவரது பெற்றோல் வியாபரம் முக்கியமானதாக இருந்தது மகிந்தவுக்கு அவரது குடும்ப வியாபாரம் முக்கியமானது போல!
குழந்தைகள், வயோதிபர் என்று வித்தியாசம் பார்க்காத மனித இனமே வெக்கித் தலை குனியும் கொடூரம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது இலங்கையில்.
திரணியிருந்தால் உங்களது இனத்திற்காகவல்ல மனித நேயத்திற்காகவாவது இத்ற்காகக் குரல் கொடுங்கள்!
ஒவ்வொரு கொலைகாரனுக்கும் அவர்களை ஆதரிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் ஏதாவது ஒரு நியாயம் இருக்கும் புலிக்கு ஒருநியாயம் இருந்ததைப் போல.
ஒரு பக்கதில் புலியும் ஆதரவாளர்களும் மருபுறத்தில் அரச பயங்கரவாதமும் உங்களைப் போன்றவர்களும்!
பாவம் மக்கள்!!!
சந்திரன் ராசா,
83 இல் புலிகளின் படுகொலைகளைக் கண்டித்த போதும் அவர்கள் நீங்கள் சொல்வதைப் போலத்தான் சொன்னார்கள்…
அவர்களும் சொன்னார்கள் கொலைகார அரசை எதிர் கொள்வது நாம் மட்டும் தான் என்று!!
சிங்கள இனவெறி கொண்ட இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் பெண்கள், சிறுமிகள், ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்படும் தமிழ் பிரதேசங்கள், கொல்லப்படும் சிறார்களும் முதியவர்களும் என….. ஒரு இன அழிப்பே நடந்துகொண்டிருக்கும் போது மகிந்தவை வெளிப்படையாகவே ஆதரிக்கும் உங்களைப் போன்ற ………. இருக்கவே செய்கிறார்கள்.
இந்தச் சந்ரன் ராஜா என்ற நபர் தமிழனாகவே இருக்க முடியாது என்பதே எனது அபிப்பிராயம்
சந்திரன் ராஜா என்பவர் மக்களின் பிணங்களின் மேல் ஜனநாயகம் கேட்பவர். இவர் இனிஒருவில் மட்டுமல்ல பல தளங்களில் பதிபவர். ……………….. லட்சக் கணக்கில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் அரசாங்கத்தை நியாயப்படுத்த அரசால் அனுப்பப்பட்ட ……. என்பதே எனது அபிப்பிராயம்.
புலிகளின் அழித்தொழிப்பின் பின்பே இலங்கையில்
இறுதியாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
இதை மறுப்பவர்களும் இதற்கு புதுபுது வியாக்கியானம்
கண்டு பிடிப்பவர்களும் எஞ்சியுள்ள தமிழ்மக்களையும்
அழித்தொழிக்க துணைபோகிறவாகளே !
ஈராக்கிலும் கூட இப்படித்தான் சதாமை விட புஷ் மேல் என்றுதான் அமரிக்காவை இறக்கினார்கள்.
புஷ் இற்கு அவரது பெற்றோல் வியாபரம் முக்கியமானதாக இருந்தது மகிந்தவுக்கு அவரது குடும்ப வியாபாரம் முக்கியமானது போல”
பிரபாகரனுக்கு மட்டும் எது முக்கியமானதாக இருந்து விடப் போகின்றது.பிரபாகரன் என்ன தமிழர்களின் விடிவெள்ளியோ?நாளைக்கு தேவைப்பட்டால் இதே மகிந்தவுடன் கூடிக்குலவும் போது தந்திரோபாயம் என நீங்களே சமாதானம் சொல்லிக் கொள்ளுவீர்கள்.
சாமகான் தமிழினி சரவணன் ஆகியோர் வன்னிமக்களில்
உண்மையான கருசரணையிருந்தால் உங்கள் விசாவையும் வேலையும்
பொருட்படுத்தாது அரைகருவாடாக மாறிப்போன மக்களை வன்னியைவிட்டு
வெளியேற பிரபாகரன் காலில்விழுந்து அனுமதி வாங்கிக்கொடுப்பது தான்.செய்வீர்களா?
அல்லது முயற்சிதான் செய்து பார்ப்பீர்களா? ?
புலிகளின் அழித்தொழிப்பின் பின்பே இலங்கையில்
இறுதியாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
இதை மறுப்பவர்களும் இதற்கு புதுபுது வியாக்கியானம்
கண்டு பிடிப்பவர்களும் எஞ்சியுள்ள தமிழ்மக்களையும்
அழித்தொழிக்க துணைபோகிறவாகளே !
எப்படியென்று சந்திரன்ராஜா எழுதுங்கள் பார்க்கலாம்.
சரங்கா உங்கள் கேள்விகளுக்கு நன்றி. புலிகள் அரசியல் மேல்பரப்புக்கு வந்த பின்பு அல்லது தமிழ்மக்களின்
உரிமைகளை களவாடிய பிறகு தமிழ்மக்கள் வாழ்வு உயர்வடைந்தா? சீரழிக்கப்பட்டதா? எத்தனைவிதமான
இடப்பெயர்வைச்சந்தித்தார்கள்.எத்தனைவிதமான மரணங்களை சந்தித்தார்கள். எத்தனைஆண்டுகாலம்
அவர்கள் வாழ்வு பின்நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. அவர்களின் கல்விகள் எப்படி பாழ்படுத்தப்பட்டிருகிறது?
ஊட்டச் சத்துகுறைந்த தலைமுறைகளையும் பல்லாயிரகக்கணக்காண விதைவைகளையும் பாம்புப்புற்றுகளையும்
எருக்கலைமரங்களையும் அல்லவா? உருவாக்கிவிட்டிருக்கிறது. இதையொல்லாம் இனவாத அரசாங்கமும் அவர்களுடன் சேர்ந்த ஒட்டக்குழுக்களும் சேர்ந்து செய்த வேலையென இன்னும் எத்தனை நாட்களுக்கு கதையளக்கப்போகிறீர்கள்
இனவிடுதலைஎன்பது அந்தஇனத்தின் ஐக்கியத்தாலும் அறிவாலும் பெற்றுக்கொள்ளகூயதேயொழிய நவீனபயங்கர-
மான ஆயுதங்களால் அல்லஎன்பதை இவ்வளவு அழிவிற்குப்பிறகும் திரும்பவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது
தமிழ்மக்களுக்கு பிரச்சனை இல்லையென்று ஜாதிககெலஉறுமையா ஜே.வி.பியைத்தவிர இந்தியா உட்பட உலகத்தில் எந்த நாடும் சொன்னது கிடையாது. அப்படியென்றுல் இனி?
சந்திரன் ராஜா அவர்களே
தமிழர்களுக்கு புலிகள் செய்த துரோகங்களையும் கொடுமைகளையும் நான் மறுக்கவில்லை.ஆனால் அதற்காக புலிகளை இலங்கை அரசாங்கம் அழிக்க வேண்டும் எனவும் அதன் பிறகு தமிழ் மக்களுக்கு விமோசனம் உண்டென்றும் நீங்கள் கருதுவது போலுள்ளது.இந்த இனவாத அரசை என்னால் நம்ப முடியவில்லை.புலிகளை அழித்து விட்டு தமிழர்களுக்கு என்ன கொடுக்கப் போகின்றது இந்த அரசு?
அத்தோடு புலியின் சமூகம் மீதான அத்தனை பின்னடைவான விளைவுகள் குறித்தும் இந்த அரசு அக்கறை கொண்டு எம்மை அபிவிருத்தி செய்து விடுமா?
இலங்கை மக்களின் எதிரி இந்த அரசு இல்லையா?
தமிழ்மக்களது உரிமைகளையும் இனக்கெளரவத்தையும் சூறையாடியது
பேரினவாதிகள் அல்ல குருவித்தலை பிரபாகரனும் அவனின் புலம்பெயர் பினாமிகளுமே
அவர்கள் மில்லியன் கணக்காக தொழிலாளர் காசுகளை கொள்ளையடித்தார்கள் இவன்
பங்பருக்குள் பாதுகாப்பாக இருந்தான் இவ்வளவுகாலவரை…………………
இலங்கையில் வாழ்வதற்கும் போராடுவதற்கும் ஒவ்வொருக்கும் எவ்வளவு உரிமை இருக்கிறதோ
அவ்வளவு உரிமை நாட்டில் தோன்றியபயங்கரவாதத்தை அடக்குவதற்கும் உரிமையிரக்கிறது அரசுக்கு
ஈக்கிலாலை குத்தி இரும்புகம்பியாலை அடிவாங்கிற போக்கு விடுதலைப்போராட்டம் இல்லை மாறாக
அப்படமான பயங்கரவாதமே ! ஜனசநாயகஉரிமைகளை களவாடியவர்கள் பேரினவாதமல்ல புலிகளே!!
அரசியலை வழிநடத்தத்தெரியாதவனே மலட்டுத்தன்மையை அடைகிறான் பயங்கரவாதியாகிறன்.தமிழ்மக்களை நடுத்தெருவில்விட்டவர்களையும் ஐக்கியத்தைகுலைத்தவர்களையும் முதலில் கேள்விக்குள்ளாக்குங்கள் தனியொருமனிதனின் பெயரை நிராகரியுங்கள். தொழில்சங்கங்களுக்கும் விவசாயகழகங்களுக்கும் முதல்உரிமை.
மனநிலைப் பாதிப்புக்கு சிறிதளவு உட்பட்டபின்னரும்கூட பல அறிஞர்கள் உலகத்தில் மிகத் தீவிரமாகவும் ஆய்வோட்டத்துடனும் எழுதியிருக்கிறார்கள். அதற்காக அப்படி நினைத்துக்கொண்டு அனைத்துப்பேரையும் எழுதவிடத்தேவையில்லை என நினைக்கிறேன்.
பின்னூட்டக்காரர்களுக்கு கொஞ்சமாவது சுரணையிருக்கா? கட்டுரை எதைப்பற்றி இருக்கிறது? பின்னூட்டங்கள் எதுபற்றிப் பேசுகின்றன. எனக்கென்னவோ யாழ்ப்பாணம் போன்ற அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்தால் நடத்தப்படும் சிறுவர்மீதான பாலியல் கொடுமைகளையும் தென்னிலங்கையில் உல்லாசப்பயணிகளுக்குப் பலியாகும் ஏழைச்சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகளையும் பற்றி யாரும் பேசாதிருப்பதற்காக திசைமாற்றிவிடும் நோக்கில் இப்பின்னூட்டங்கள் விடப்படுகின்றன போலுள்ளது. அரச வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் சுரணையிழந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசபாதுகாப்பான யாழில் சோதனைச் சாவடிகளுக்கு அண்மையில் தங்கள் பிள்ளைகளைத் தனியே விட்டு வளாப்பீர்களா? இனி வன்னியிலும் இவ்வாறான சிறப்புப் பாதுகாப்பு உங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கப் போகிறது நினைத்துப் புல்லரியுங்கள். மனச்சாட்சி உள்ளவர்களா? இதுபற்றி வாய்திறக்காது தந்திரமான கதை மாத்து!
//பின்னூட்டக்காரர்களுக்கு கொஞ்சமாவது சுரணையிருக்கா? கட்டுரை எதைப்பற்றி இருக்கிறது? பின்னூட்டங்கள் எதுபற்றிப் பேசுகின்றன.//
இதற்கெல்லாம் காரணம் இலங்கை அரச ஏஜண்ட் சந்திரன் ராஜாவின் அனாவசியமான அரச பிரச்சார பின்னூட்டங்களைப் பிரசுரிப்பதுதான்.
இணையத்தளங்கள் இந்த ஆசாமியைத் தவிர்ப்பதே சரி.
பின்னூட்டங் மேலோட்டமாக பார்ததால் திசைமாறிய மாதிரி; தான் இருக்கும்.யு த்தத்தின் சத்தங்கள் அடங்கி அமைதி நிலவும் இடத்திலேயே கட்டுரை குறிப்பிடும் விடயங்கள் பற்றி ஆழமாயும் தொடர்ச்சியாகவும் உரையாட முடியும்.
“இராணுவத்தால் நடத்தப்படும் சிறுவர்மீதான பாலியல் கொடுமைகளையும் தென்னிலங்கையில் உல்லாசப்பயணிகளுக்குப் பலியாகும் ஏழைச்சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகளையும் பற்றி யாரும் பேசாதிருப்பதற்காக திசைமாற்றிவிடும் நோக்கில் இப்பின்னூட்டங்கள் விடப்படுகின்றன போலுள்ளது”
எல்லாம் யுத்தத்தோடு தொடர்புபட்டிருக்கையில் அதை தவிர்த்து எப்படி பேசுவது?;
சந்திரன்ராசா போன்றவர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள். நாம்தான் இவர்கள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். புலி எதிர்ப்பாளராக தன்னைக்காட்டிக் கொள்ளும் இந்த நபர் உண்மையான புலி எதிர்ப்பாளர் இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.தன்னையும் ஒரு இடதுசாரியாக காட்டிக்கொண்டு உண்மையான இடதுசாரித் தத்துவங்கள் மீதும் உண்மையான இடதுசாரிகள் மீதும் சேறு பூசுவதே இவருடைய வேலை.தன்னைத்தானே புத்திஜீவியாக நினைத்துக்கொள்ளும் இவர் உண்மையிலே ………………………………………………………யாராவது அவர் மீது அக்கறைகொண்டவர்கள் அவரை ஒரு நல்ல …….வைத்தியரிடம் காண்பிப்பது நல்லது.
பிணங்களின் மேல் தமிழருக்கு விடிவு காணப் புறப்பட்டவர்கள் புலிகளே. கொஞ்சமெண்டால் அது புலிகளில்லை சந்திரன் ராஜா தான் கேட்டவர் எண்டும் சொல்லுவாங்கள் போலிருக்கு.புலிகள் அழியத்தான் வேண்டும். காரண்ம் அனைவர்க்கும் தெரியும். புலிகள் அழியும் பட்சத்தில் தமிழினம் மேலும்மேலும் ஒடுக்கப்படும் அழிக்கப்படும். இராணுவ பலத்தை மட்டும் நம்பி தமிழருக்கு விடிவுகாணலாம் என்றிருந்ததால் வந்த வினைதான் இது. புலிகளிடம் பொதுக் குழு அல்லது கட்சி இல்லை இது இராணுவ அமைப்பு இது ஒரு மக்கள் அமைப்பு அல்ல இது தனது இராணுவத்திக்கான செயல்கனைத்தான் செய்ய முடியுமே தவிர மக்களுக்கான போராட்டத்தை என்றுமே செய்யாது இராணவம் வெற்றி-தோல்வியில் முடிவதைத்தவிர வேறு இந்த தனிநபர் தலைமைக்குத் தெரியாது.
மக்கள் கூட்டத்ததால் எந்த முடிவும் மக்களுக்காக எடுக்கப்பட வேண்டும் ஆனால் இங்கே பிரபாகரன் என்ற தனி நபரால் தனித்து முடிவுகள் எடுக்கப்பட்டே வந்துள்ளது இது தனிநபர் பயங்கரவாதமே தவிர இது விடுதலைப் போராட்டமல்ல இப்படியான பல குழுக்கள் உலகின் பல நாடுகளில் விடுதலை இயக்கம் என்ற சுலோகத்தை தாங்கியவாறு பல பயங்கரவாத செயல்களை செய்து வந்து அவர்களை வேறு சில நாடுகளும் வேறு பயங்கரவாத அமைப்புக்களும் பாவித்து விட்டு அவர்களை பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி முடித்துவிட்ட வரலாறுகள் பல – இப்படியாகவே புலிகளும் முடியும் தறுவாயில் உள்ளது போலத் தெரிகிறது.
இதற்குமேல் எதுவானாலும் தமிழர் எதிர்கொள்ளத்தான் வேண்டும்
தவம் கருத்தை கருத்தால் வெல்லப்பழகுங்கள் இது தான் இடதுசாரி தத்துவத்தின்
ஆரம்பவிதி.புலியும் பாசிசம் அரசும் பாசிசம் என்ற ஒரு கருத்து ஏற்புடையதா? என்பதை
இடதுசாரிகள் அறிவார்கள்.ஏன் பலபெயரில் வந்து ஆட்டம் போடுகிறீர்கள்.உங்களுக்கு யார்?
பகையாளி.நிச்சியம் நான் இல்லை.
சேறுஅடிக்கப்புறப்பட்டு உங்கள் முகத்தில் சேறு ஒட்டிக்கொள்வது தெரியவில்லையா?
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சரங்கா பத்தொன்பதுஇலக்கமிட்ட உங்கள் பின்னோட்டத்தில் என்கருத்தைப்பற்றி
தவறான புரிதலைக்கொண்டிருக்கிறீர்கள். புலிகள்அழிவிலிருந்து தான் தமிழ்மக்களிடையே
ஜனநாயகத்திற்கான வழிகள்அதாவது போராட்டவழிகள் திறக்கப்படும் என்றுதான் சொல்லிவருகிறேன்.
புலிகள்அழிந்தால் விமோசனம் கிடைக்கும் என்று சொன்னதில்லை.போராட்டம் புதியஆரோக்கிய வடிவம்
எடுக்குமென்பதே கருத்து.
புலிகளை அழித்து விட்டு தமிழ்மக்களுக்கு என்னகொடுக்கப் போகிறது? அதுவும் உங்கள் கருத்து.
என்கருத்து புலிகளைவிட மகிந்தாவில் எனக்கு நம்பிக்கையுண்டு. முழுமையான தீர்வு விசயத்தில் அல்ல.
கால்தீர்வு அரைத்தீர்வுகளை நிச்சியம் அவர்வைக்கவும் நிர்பந்திக்கும் அதைதடுத்துநிறுத்தவும் நிர்பந்திக்கும்
எது வந்த விழுகிறதோ அதை கண்டுகொள்வோம். சிங்களபோலீஸ் அடிச்சால் நோகும் தமிழ்போலீஸ் அடித்தால்
நோகாது.சிங்களசிறைக்காலைகொடுமை தமிழ்சிறைச்சசாலை இனிக்கும் தமிழ்முதலாளி சிங்களமுதலாளி எனக்கல்லை. அர்த்தமில்லாத யுத்தம் முடிவுக்குகொண்டுவரவேண்டும். அதுபுலிகள் அழிவில் தான் சாத்தியம்.
//கருத்தை கருத்தால் வெல்லப்பழகுங்கள் இது தான் இடதுசாரி தத்துவத்தின்
ஆரம்பவிதி.//
இடதுசாரித்தத்துவம் என்பது எது?
இடதுசாரித்தத்துவம் என்பது ஒன்று இருந்தால் யாராவது விளக்கமிளத்தால் மிகவும் நல்லது.
இனியொரு அன்பர்களாவது இந்தப் பின்னூட்டங்களில் வரும் தத்துவங்களைத் தொகுக்கலாம்.
ஓர் புதிய அத்தியாயத்தைத் தத்துவ உலகில் திறக்க அது வாயப்பாக இருக்கும்.
அருமையாக இருக்கிறது.
இனி ஒரு போன்ற இணையத் தளங்கள் சந்திரன் ராசா போன்ற …………………………… பிரச்சாரங்களை அனுமதிப்பது ஏன்?
இந்த ………….மக்களின் பிணங்களின் மீது உக்காந்து கொண்டு வயிறு புடைக்க சாப்பிடதை எல்லாம் இணையத் தளங்களின் வாந்தி எடுக்கிறார்கள்.
சரவணன் நீங்கள் யாருக்காக குத்திமுறிகிறீர்கள்
என்றாவது சொல்லமுடியுமா? யார் யாரை நான் தலையில்
வைத்து கூத்தாடி என்கருத்தை சொல்ல வேண்டும்? அப்படி
வந்தாலும் அதுயொரு கருத்தா? ஏன் ஒருவரின் கருத்தை கண்டு
துடைநடுங்கிகிறீர்கள் ? உங்கள் பருப்பு வேகமறுப்பதில் தானா?
நான்அப்படி என்ன சமூகத்தை கெடுக்கும் ஆபாசத்தை செய்துவிட்டேன்
நானும் உங்கள் குலத்தில்லிருந்து வந்தவன் தானே இப்படியான நிந்தனை-நிபந்தனை
போக்குகளாலே எங்கள் இனம் கண்முன்னாலேயே அவஸ்தைப்பட்டுக்கொண்டிருப்பது
தெரிந்தும் இப்படி கதைகிறீர்கள். பதில் சொல்லுங்கள்.
this is what you get when you’ve an dispassionate involvement with the topic. pathetic.
Hari
Your comment on whom? May I know ?
where is my previous comment? it’s been deleted . i said something about alluding peadophilia to homosexuality and the typical straight reading you employed throughout your essay….
sorry for posting in english, my browser isn’t supportive
Hi Hari,
//where is my previous comment? it’s been deleted . //
I inioru editorial has to answer this Q.
1. This is not an essay. A small writ up to interfere with the news and comments appeared on this site.
2. The no intention of allusion in the writing explicitly. But every text could/will be able to deconstruct its own argument, which I know very well. You reading may be right. I am waiting the comment been placed by you earlier and comment on it, if it is necessary.
3. Welcome to Europe!
4.Try Firefox latest version at http://www.mozilla.com/en-US/firefox/.
//But every text could/will be able to deconstruct its own argument, which I know very well. //
thats so cute of you to put it this way. thanks.
I’ll be addressing this issue in my blog, i mean, the straight people’s (or closeted ones) attitude whn they speak abt homosexuality.
Gracias for the welcome message 🙂
i’m using a portable firefox which runs on my memory stick. i had to customize everything. an upgrade will help endu ninaikkiran, let me see.
Hari,
I’ll wait for the blogs’ version.
In a way I am against the words used so far, even, eg. straight ( the apolitical vocabs.).
Also wish to see your previous comment which had been deleted or censored by ‘inioru.com’.
Firefox: download Firefox 3 and the plug in called ‘Foxmarks’ which could help to acuumulate and manage the bookmarks in Firefox from any work station with your sign in.
The previous comment has been deleted by inioru.com due to the swear words used , without which the whole sentence would have been meaningless. – INIORU
The previous comment has been deleted by inioru.com due to the swear words used , without which the whole sentence would have been meaningless. – INIORU
முன்னைய பின்னூட்டம் “பாலியல் நிந்தனை வார்த்தைகளால்” எழுதப்பட்டிருந்ததால் அழிக்கப்பட்டது. தமிழ் மொழியிலான சஞ்சிகையில் கூடுமான வரை தமிழிலேயே பின்னூட்டங்களையிடுதல் என்பதே பொருத்தமானதாக அமையும்.
இனியொருவினருக்கு
பின்னூட்டம் ஆங்கிலத்தில் இருந்ததால் பதிலும் அப்படியே சொல்ல வேண்டியதாகிவிட்டது.
அவற்றை நானேதமிழ்ப்படுத்தினால் அதிலும் சிக்கல் வந்திருக்கலாம் என்பதால் பதிலும் ஆங்கிலத்திலேயே போடும்படி ஆயிற்று.
பினூட்டம் நீக்கப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி எனதல்ல என்பதை அறிவவீர்கள். ஆயினும் தங்களிடம் விளக்கம் இருக்கும் என்பதால் அதை வரவழைக்க அழுத்தம் கொடுத்தேன்.
நன்றி.
//without which the whole sentence would have been meaningless.// ha ha, அதை விட்டால் என் இருப்பை அர்த்தப்படுத்தும் வேறு வழி எனக்குத் தெரியாது. அச்சொற்களையும் இழந்து விடின் நானும் எனது இருப்பும் அர்த்தமிழந்து போகுமாயிருக்கும்.
யாரோ சொன்ன ஞாபகம், இது ஒரு வெள்ளை வேட்டி இணையத் தளம் என்று… உண்மைதான் போலிருக்கிறது.
ரஃபேல், ஆலோசனைக்கு நன்றி இப்போது யுனிக்கோடில் எழுத முடிகிறது.:-)