இந்தியாவில் ஓபிசி என்ற சொல் சமீபத்தில் அதிக அளவில் கவனம் பெற்று வந்தது. தமிழகத்திலோ இது பரவலாக அறியப்பட்ட சொல். காரணம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற சொல் ஏற்கனவே பரவலாக அறிமுகம் ஆனதுதான்.
காரணம் தந்தை பெரியாருக்கு முன்பே வகுப்பாரி பிரதிநிதித்துவம் என்ற கோஷம் தமிழகத்தில் முன் வைக்கப்பட்ட நிலையில் பெரியார்தான் அதை மக்கள் போராட்டமாக மாற்றி வெற்றி கண்டார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுப்பணிகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோஷம் முன் வைக்கப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்தது பாஜக. வட இந்திய மாநிலங்கள் முழுக்க பெரும் கலவரங்களைச் செய்தார்கள்.
ராஜீவ்கோஷ்வாமி என்ற உயர்சாதி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்ய அதைவைத்தே பெரும் கலவரங்களை பாஜக நடத்தியது. அதனையொட்டி நடத்தப்பட்ட ரதயாத்திரை இந்தியா முழுக்க இந்து –முஸ்லீம் கல்வரங்களை உருவாக்கியது. பாபர் மசூதியை இடித்தது இந்தியாவை ஒரு இருண்ட காலத்திற்குள் தள்ளியது. இந்து பிறபடுத்தப்பட்டோருக்கான இட இதுக்கீட்டு எதிர்ப்பை தந்திரமாக இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாற்றியதோடு, முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் யாருடைய இட ஒதுக்கீட்டை பாஜக எதிர்த்ததோ அந்த இந்து பிற்படுத்தப்பட்டோரை வெற்றிகரமாக முஸ்லீம்களுக்கு எதிராக பயன்படுத்தியது.
அப்படி இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்க்கும் பாஜக ஓபிசி பிரிவினருக்கு 27% சதவிகித இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்விக்கு ஒதுக்கியது.திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால் இட ஒதுக்கீட்டை மறுக்கும் பாஜக இப்போது ஏன் இட ஒதுக்கீடு வழங்கியது என்றால் ஐந்து மாநில தேர்தல்களே காரணம்.
உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறது இந்த மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை தன் பக்கம் ஈர்ப்பதற்காக பாஜக இட ஒதுக்கீடு விவகாரத்தில் இறங்கி வந்துள்ளது.