குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அன்றாடம் ஒரு மசோதாவை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது.அன்றாடம் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டாலும் ஏதேனும் ஒரு மசோதாவை நிறைவேற்றுவதில் மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவின் நோக்கன்ம் ஆபத்தானது.
நாடு முழுக்க ஒரே மாதிரி தேர்தலை நடத்துவதுதான் இதன் நோக்கம் இது மாநிலக் கட்சிகளின் அதிகாரங்களைப் பறிக்கும் செயல். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார எண்ணையும் இணைக்கும் இன்னொரு திருத்தமும் இதன் மூலம் செய்யப்பட்டும்.ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தால் அது கலவர காலங்களில் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து சிறுபான்மை மக்களை அடையாளம் காணவே இது பயன்படும் எனப்தால் இம்மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது.