புத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருப்பது விடுதலைப் புலிகளே என்று குற்றம்சாட்டினார். தற்போது இலங்கை படையினர் மேற்கொண்டுவரும் மனிதாபிமான யுத்தத்தினை நிறுத்தும்படி தன்னிடம் கோருவதை விடுத்து விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்துள்ள ஆயிரக்கணக்கான சிவிலியன்களை விடுவிக்கச் சொல்லி அந்த அமைப்பின் மீது சர்வதேச சமூகம் அழுத்தம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச யுத்த கொள்கைகளை நாம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி எங்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு முயற்சிகளை சிலர் மேற்கொண்டுவருக்கின்றனர் எனினும் தாய் நாட்டிற்காக நான் கழுத்தையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற ஒன்றுக்கூடலில் ஆயுர்வேத நிபுணர்கள் ,சமாதான நீதவான்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
peena
Prabaharan enna naattin thalaivara ulaha thalaivarhal avaridam ketpathatku,
neethanappa oru legitimate country in pm.