இலங்கை ராஜபக்ச அரசாங்கம் பாசிச அரசியலுக்கு புதிய வடிவத்தைக் கொடுத்துள்ளது. உலகின் புதிய கிரிமினல் முதலாளித்துவத்திற்கு இலங்கை அரசு முன்னுதாரணமாகத் திக்ழ்கிறது. ராஜபக்ச குடும்ப அரசைச் சுற்றி இலங்கையின் போதைப்பொருள் வியாபாரிகளும் சமூகத்தை மிரட்டும் கொலைகாரர்களும் பாதுகாப்பு அரண்கள் போலச் செயற்படுகின்றனர். இவர்களைப் பாதுகாக்க இராணுவமும், உளவுப்படையும் போலிஸ் ஒழுங்கமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தையும் புலிகளையும் காரணாமாக முன்வைத்து இவ்வாறான அரச கட்டமைப்பு தொடங்கி வலுப்பெற்றது. இந்த அமைப்பிற்கு ஜனநாயகச் சாயம் பூசுவதற்காக உயர்மட்ட புத்திசீவிகள் கூட்டம் ஒன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் என்று தம்மை அழைத்துக்கொள்பவரகளான டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார போன்றவர்களில் ஆரம்பித்து டயான் ஜெயதிலக மற்றும் கிரிஸ் நோனிஸ் போன்றவர்கள் வரையான புத்திசீவிகள் கூட்டம் ஒன்று வாடகைக்கு அமர்த்தப்பட்ட அடிமைகள் கூட்டத்தில் அடங்கும்.
ராஜப்கச குடும்பத்தினதும் அதன் பாதுகாப்பு அரணான கிரிமினல்களதும் நேரடிக்கட்டுப்பாட்டிலுள்ள அடிமைகளாகவே இப் புத்திசீவிகள் கூட்டம் செயற்படும். சில வேளைகளில் தமது மேதாவித்தனத்தைக் காட்ட முற்பட்டால் புத்திசீவிகளின் தலைகளும் சீவப்படும். ராஜபக்ச அரசின் ஊதுகுழலாகச் செயற்படும் பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் கிரிஸ் நோனிஸ் என்பவரும் இந்த அடிமைகள் கூட்டத்தின் ஒரு அங்கம். பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு லைக்கா போன்ற பல்தேசிய நிறுவனங்களின் பணக்கொடுப்பனவிற்கு மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் சீ.என்.என் தொலைக்காட்சிக்கு கிரிஸ் நோனிஸ் வழங்கிய நேர்காணல் பிரபலமானது. நேர்த்தியான ஆங்கிலத்தில் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஒடுக்கப்படவில்லை என சீ,என்,என் தொலைக்காட்சியில் நோனிஸ் தனது ஆங்கிலப் புலமையைக் காட்டியபோது சிங்கள மேட்டுக்குடிகள் தமது வீட்டுத் தொலைக்காட்சிகளின் முன்னால் அமர்ந்து விசிலடித்தன.
ராஜபக்ச அரசின் கிரிமினல் பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரத் துறையின் கண்காணிப்புக்குழு உறுப்பினருமன சஜின் வாஸ் குணவர்த்தன ஊதுகுழல் கிரிஸ் நோனிஸ் ஐத் தாக்கியதில் நோனிஸ் பதவி விலகியதாக இலங்கை ஊடங்கள் பரபப்பாகச் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சஜின் வாஸ் துபாயில் இலங்கையிலிருந்து வேலைக்குச் செல்பவர்களின் பொருட்களை அனுப்புவதற்கான முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். ராஜபக்ச எதிர்கட்சியிலிருக்கும் போது சஜின் வாசை அங்கு சந்திததிலிருந்து ஏற்பட்ட நட்பு விரிவடைந்தது. ராஜபக்ச சர்வாதிகாரியாகப் பொறுப்பெடுத்துக்கொண்டதும் சஜின் வாசை இலங்கைக்கு அழைத்து பொறுப்புக்களை வழங்கினார். ஏற்கனவே சட்டவிரோதத் தொழில்களிலிலும் வன்முறைகளிலும் புகழ்பெற்ற சஜீன் குணவர்த்தன தனது கிரிமினல் வலையமைப்புடன் ராஜபக்சவிடம் இணைந்துகொண்டார்.
சஜின் வாஸ் குணவர்த்தனவும், கிரிஸ் நோனிசும் நியூ யோர்க்கில் இரவு விருந்து ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அங்கு ஏற்பட்ட விவாதத்தில் சஜின் வாஸ், கிரிஸ் நோனிசை நையப்புடைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கிரிஸ் நோனிஸ் தனது தூதர் பதவியைத் துறப்பதாக நியூ யோர்க்கிலிருந்த ராஜபக்சவிற்கு எழுதிக்கொடுத்துவிட்டு லண்டனுக்குச் சென்றுள்ளார்.
வன்னியில் லட்சக்கணக்கில் மக்கள் கொலைசெய்யப்பட்ட போது வராத கோபம் கிரிஸ் நோனிசை ஆட்கொண்டதில் பதவி விலகியுள்ளார். ஆங்கிலம் பேசத் தெரிந்த கலாநிதி கண்கலங்கியதைக்கண்ட தமிழ் சிங்கள உயர்குடிமக்கள் சஜின் வாசைக் கண்டிக்கவும் நோனிஸ் நோகாமல் பாதுகாக்கவும் தமது ஊடகச் சுதந்திரத்தைப் பயனபடுத்தியுள்ளனர். சஜின் என்ற கிரிமினலும் கிரிஸ் என்ற கிரிமினல்களின் ஊதுகுழலும் மோதிக்கொள்வது வெறும் செய்திமட்டுமே. இதில் யாருக்காகவும் அழமுடியாது.
மக்வூட்ஸ் (Mackwoods) நிறுவனத்தை கிரிஸ் நோனா-வின் பூட்டன் வெள்ளைத்துரைகளுக்கு முண்டியடித்து நிர்வாகிக்கத் தொடக்கிவிடப்பட்டதே மேட்டுக்குடி என்பதால் தான். ராஜபக்சவின் பாட்டனும் வெள்ளைத்துரைகளுக்கு முண்டியடித்த ஒரு மூதேவி ஆனால் மேட்டுக்குடி அல்ல. ஊரைத் தின்ற கள்ளன் சஜின் வாஸ் குணவர்த்தன ராஜபக்ச குடும்ப உறவினன்.
கிரிஸ் நோனா-வின் பாட்டன் தேயிலைத் தோட்ட உரிமையாளனாக இருந்த காலத்தில் பிரித்தானிய அரசியும் பின்னர் அண்மைக் காலத்தில் கொமன்வெல்த் மாநாட்டைக் காரணங் காட்டி பிரித்தானிய முடிக்குரிய இளவரசனும் “அடிமைத்” தோட்டத்திலேயே தேனீர் பருகச் சென்றது மக்வூட்ஸ்-இன் கீபோக்கல்ல தோட்டத்துக்கே. அவ்வளவுக்கு கிரிஸ் நோனா ஒரு மேட்டுக் குடி. கொமென்வெல்த் என்ற கள்ளக் கூட்டுறவில் காலனித்துவ காலத்து இனத்துரோகிக் குடும்பத்தான் என பலதசாப்தங்களாக அரவணைக்கப்பட்டவன்.
கிரிஸ் நோனா-வின் தாயார் காலத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசு பெருந் தோட்டங்களை தேசியமயமாக்குவதாக நாடகமாடிய காலத்தில் மக்வூட்ஸ் நிறுவனம் பெருப்பிக்கப்பட்டது இம்மேட்டுக் குடி குடும்ப்பத்தின் ஆதிக்கத்தை உணர்த்துவது. கிரிஸ் நோனா பல தமிழரைப் போல் ஒரு பிரித்தானியா வாழ் வைத்திய கலாநிதி. அவனின் ஆங்கிலப் புலமை ஒப்பீட்டளவிலேயாகும். நோனா- வை ராஜபக்ச பிரித்தானிய தூதுவனாக அவிழ்த்து விட்டதே கொமன்வெல்த் மாநாடு சம்பத்தப்பட்ட விடயங்களைக் கையாலவே. நியூயோர்க்கில் ஐ.நா பொதுத் தொடரோடு கொமென்வெல்த் கள்ளன்களும் ராஜபக்ச (கொமன்வெல்த் தலைமை என்ற முறையில்) தலைமையில் பலருமறியாவண்ணம் 2015ஆம் ஆண்டிற்கப்பால் வறுமை ஒழிப்பு என வளர்க்கப்பட்ட பொய்நாடகத்துக்கு வித்திடும் சாட்டில் நடாத்திய சந்திப்பின் பிறகே கிரிஸ் நோனா புறந்தள்ளப்படுவது என்பது அவதானிக்கப்பட வேண்டியது.
இப்போது ஏற்பட்டுள்ள கேள்விக்குறி என்னவென்றால் மக்வூட்ஸ் நிறுவனம் கிரிஸ் நோனா தலைமையில் ஏற்படுத்திக் கொண்ட வியாபார செயற்பாடுகளின் கதி என்ன? இவற்றில் பல இராணுவமயமாக்கலுடன் தொடர்புற்ற இரகசியங்கள் போல் தெரிபவை. வடக்கிற்கான புகையிரதப் பாதை புனர்நிர்மானத்துடன் சகல புகையிரத நிலையங்களுக்கும் மின்சார உற்பத்தி ஒப்பந்தம் க்ரிஸ் நோனா-வின் மக்வூட்ஸ் நிறுவனத்தின் …
ஆதாரங்கள் –
http://thecommonwealth.org/media/press-release/commonwealth-heads-government-foreign-ministers-meet-new-york
http://www.ft.lk/2014/03/13/mackwoods-energy-powers-northern-railway-stations/
1952. Rajapakse Family i going to hold on to the Presidency for a while. It will take more time for the Green to mount a real opposition. To me Sinhalese are like Arabs in this matter. .There is a Meddu Kudi among Sinhalese too. Where. In Colombo. That is Common Grounds to me. 2012..
மேட்டுக்குடி என்பதில் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. இச் சொல்லைத் தவிர்த்து விடயத்தை விளக்குவது நல்லது போலும் தெரிகிறது.
கிரிஸ் நோனா “கோல் உயரக் குடி உயரும்” எனும் கிரந்தத்துக்கு ஏற்ப ராஜபக்ச உயர ஒட்டுண்ணி போல் தானும் உயர எத்தனித்தவன்.