இலங்கையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் காயங்களை ஆற்ற முடியும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு லண்டனில் நடைபெறவுள்ள அமர்வுகளுக்கான வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே பிரித்தானியாவின் விருப்பமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்கம், நீதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கோடு அல்கையிதா பயங்கரவாதிகளுக்கு மில்லியன்களாகப் பணத்தை வாரி இறைக்கும் கமரோன் இலங்கை அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்கிறார். ஒடுக்கும் தரப்பும் ஒடுக்கப்படும் தரப்பும் எப்படி ஒத்துழைக்கலாம் என டேவிட் கமரோனைக் கேட்பதற்கு அவரது ‘தமித் தேசிய அடிமை வியாபாரிகள்’ தயாரில்லை.
British Prime Minister David Cameron had said tit right. Look like he and Canadian Prime MInister Stephan Harper had kind of embarrassed President Mahinda Rajapakse in a Britsh Commonwealth Meeting in Australia. That says something. 1952. After Queen Elizabeth II both Canada and Australia will like to become Republics with their own independant foreign policies and strategic interests.