அவலங்களும் அழிவுகளும் நிறைந்த ஈழத் தமிழர்கள் மீதான பெருந்தேசிய ஒடுக்குமுறையை அமரிக்க அரசு தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்வதற்கான துருப்புச்சீட்டாகவே பயன்படுத்துகிறது என்பதைதுணை இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஒ பிளக் இப்போது நேரடியாகவே கூறியுள்ளார்.
உலககில் எங்கெல்லாம் ஒடுக்குமுறையின் இரத்தக்கறை படிந்திருக்கிறதோ அங்கெல்லாம் அமரிக்க அரசின் பின்புலதைக் கண்டுகொள்ளலாம். அமரிக்காவின் கொல்லைப் புறத்தில் கூடுகட்டியிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசும், அதன் அடிமைகள் போலத் தொழிற்படும் உலகத் தமிழர் பேரவையும், தமிழ் நாட்டின் தமிழ் இனவாதிகளும், தமிழர் பேரவை போன்ற புலிகளின் தொடர்ச்சியும் இனிமேலாவது புரிந்துகொள்ளட்டும் அமரிக்கா ஏகாதிபத்தியம் எதிரிதான் என்று.
அமரிக்காவின் சட்டலைட்டுக்கள் படம்பிடித்துக்கொண்டிருக்கும் போதே ஐம்பதாயிரம் மக்கள் முள்ளிவாய்க்காலில் சாட்சியின்றிக் கொல்லப்பட்ட்டார்கள். இன்று வரை ஈழப் பிரச்சனையைச் சற்றேனும் தெரிந்து வைத்திருக்கும் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகள் எல்லாம் இலங்கை அரசிற்கு சார்பான நிலைப்பாட்டை முன்வைத்ததில்லை. புலிகளின் சிந்தனைகளின் தொடர்ச்சியான குறுகிய எல்லைக்குள்ளான தேசியவாதிகளோ அவர்களை அணுகியதில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மேற்குலகச் சார்பு விம்பத்தை உருவமைத்து உண்மையான நண்பர்களை அன்னியப்படுத்திய இனவாதம் அழிவுகளை மட்டுமே விட்டுச் சென்றுள்ளது.
இந்த நிலையில் அமரிக்காவினதும் மேற்கினதும் இறுதி நோக்கங்கள் மக்கள் சார்ந்ததல்ல என்பதை ரொபெர் பிளக் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
அல் கய்தாவின் ஒஸாமா பின்லாடனுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் வேறுபாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றில் இருவரும் பயங்கரவாதத் தலைவர்களாக பதியப்படுவார்கள் எனவும், கொடூரமான பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை ஒரு முக்கியமான நாடு. குறிப்பாக கடற்பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளில் இலங்கையுடன் நெருங்கிச் செயற்பட அமெரிக்கா விரும்புகின்றது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் சில விடயங்களில் அபிவிருத்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வலயங்களை வரையறுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒசாமாவிற்கும் பிரபாகரனிற்கும் இடையே வேறுபாடில்லை என்று அமரிக்கப் பிரதினிதி கூறியதனூடாக இரண்டு விடயங்கள் தெளிவாகின்றன. பிரபாகரன் கொல்லப்படுவதையும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதையும் அமரிக்க அரசு ஆதரித்திருக்கிறது. மக்கள் திரள் அமைப்புக்களின் பின்பலமின்றி ஒசாமாவும் பிரபாகரனும் வாழ்ந்த காலங்களில் அமரிக்காவின் நேரடி அல்லது மறைமுக நண்பர்களாக அரசியலை வரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகளின் அறிக்கை என்பது கொலை வெறிகொண்ட இலங்கை அரசாங்கத்தைத் அமரிக்க அணியை நோக்கி முழுமையாக உள்வாங்குவதற்கான பயமுறுத்தல் மட்டுமே. இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமும் அதன் ஆதரவாளர்களும் இனிமேல் தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்களான ஒடுக்கப்பட்ட மக்களால் மட்டுமே தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை அமரிக்கா வேறு வார்த்தைகளில் கூறியுள்ளது.
அமெரிக்கன் ஏதோ தவறு செய்யாத கடவுள் என்று எண்ணுகிறதா? உலகில் பயங்கரவாதம் தோன்றுவதற்கும், ஒடுக்கபட்ட மக்களின் போராட்டம் தொடங்கியமைக்கும் அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகளே காரணம்.மேற்குலகம் தமது மனிதாபிமான செயற்பாட்டுகளைக் கூட தமது சுயநலன்களை முன்நிறுத்தியே செய்கின்றார்கள். அதில் அமெரிக்கன் விதிவிலக்கல்ல. ஒசாமாவை ஒரு போராளியாக உருவாக்கியது அமெரிக்கர் தான். அவரை பயங்கரவாதியாக்கியதும் இதே அமெரிக்கன் தான். தமக்கு சார்பாக இருக்கும் வரை ஒசாமா போன்றவர்களை இவர்கள் தலையில் தூக்கி வைத்தக் கொண்டாடுவார்கள் அதன் தமக்கு எதிராக திரும்பும் போது கைவிட்டுவிடுவார்கள். இன்று அதுவே கொலைவெறி சிஙகள அரசின் சார்பாக வெளியிடும் கருத்தும். பொருளாதாரம் பாதுகாப்பு அதே போல் மேற்குலகின் உல்லாசபுரியாக மாறிக் கொண்டிருப்பதனால் அவர்களின் பார்வை வித்தியாசமாகவே இருக்கும். அதுவும் மனித மாமிசம் உண்பவர்களுக்கு சார்பாகவே இருக்கும். இதற்கான மாற்றம் நிச்சயமாக புலம் பெயர் தமிழர்களின் கைகளிலே உள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள் என்ற வகையில் பின் லேடனுக்கும் பிரபாகரனுக்கும் வேறுபாடில்லை எனலாம். ஆனால் தமிழ் மக்களை அடிமைகளாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டசிங்கள ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடிய பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராட்ட வீரர். வரலாறு அதை மெய்ப்பிக்கும். இந்தியாவில்1975 வரையிலும் மாமேதை அம்பேத்கரைப் பற்றி பள்ளிப் பாடங்களில் இடம் பெறாமல் உயர்சாதிக் கும்பலினர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கால ஓட்டத்தில் அவரைப் புறக்கணிக்க முடியவில்லை. மக்களுக்காக உண்மையாக உழைத்தவர்களை வரலாற்றிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்க முடியாது. பிரபாகரன் பெயரும் விடுதலை வீரராக வரலாற்றில் மிளிரவே செய்யும்.
இராமியா
மிக சரியான பதிவு
ஒடுக்கப்பட்ட மக்களின், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மேற்குலகச் சார்பு விம்பத்தை உருவமைத்து உண்மையான நண்பர்களை அன்னியப்படுத்திய இனவாதம் அழிவுகளை மட்டுமே விட்டுச் சென்றுள்ளது.
அமெரிகருக்கு அமெரிக்காவை தவிர வேறூ உலகம் தெரியாது அமெரிக்காதான் உலகம் அவர்களூக்கு.ஆனால் நம்மையும் தம்மவர்களாக நினைத்து வாய்ப்புக்கள் வழ்ங்குவதில் மனித நேயம் இந்த அரபுக்காரனுக்கு இல்லை.பாகிஸ்தானி,வங்காளீ ஏன் இந்தியா என்றூ நாம் தனித்தீவான இல்ங்கையரே.பிரபாகரன் மனதில் பகை விதைத்தோர் திராவிடம் பேசியோர் ஆண்ட பரம்பரை ஆண்ட பரம்பரை எனப் பேசிப் பேசியே நம்மை ஆண்டியாக்கினார்கள் இல்லை என்றால் நாம் சிங்களவரைப் பகைத்திருக்க வாய்ப்பில்லை.நம்மில் அனேகருக்கு தமிழ் நாட்டானைப் படிக்காது தமிழ் நாட்டானுக்கு நம்மைப் பிடிக்காது அப்படியானால் நாம் யார்? இலங்கையர் அல்லவா? மகிந்தா விரோதியாய் இருந்தாலும் உறவுக்காரனே..ஆக அமெரிக்கர் சொல்வதன் உண்மை அறீவோம்.
புஷ் க்கும்,ஒபாமாவுக்கும் கூடத் தான் “வித்தியாசமில்லை”நாம் ஏதாவது சொல்கிறோமா?
பிரபாகரன் ஆனாலும் ஒசாமா ஆனாலும் பயன்கிரவாதிகள் தான் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள் தான் பிரபாகரன் விடயத்தில் இலங்கை கையாண்ட அதே யுக்தியை தான் அமெரிக்காவும் பயன்படுத்தியுள்ளது இறுதிகிரியை கூட செய்ய முடியாத அளவு குழப்பமான சூழ்நிலைகளை உருவாக்கி இருவரதினதும் கொட்டயயையும் அடக்கியுள்ளது இந்த தந்திரத்தை அமெரிக்க இலங்கையிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளது வல்லரசிற்கே பாடம் புகட்டிய இலங்கை
இராமியா,
அம்பேத்கார் பற்றிய விவாதங்களைப் பின்னே வைத்துக்கொள்வோம். புலிகள் எப்போதும் மேற்கு நாடுகளுக்கும் குறிப்பாக அமரிக்க ஐரோப்பிய அரசுகளுக்கும் சார்பானவர்களாகவே இருந்துள்ளனர். இந்தியா, இஸ்ரேல் போன்ற அழிப்பு நாடுகளிடம் இராணுவப்பயிற்சி பெற்றுள்ளனர். ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளவேண்டும் என்பதே அவர்களது தாரக மந்திரம். அமரிக்காவிலிருந்து ஒவ்வ்வொரு சிறிய ஐரோப்பிய நாடுகளதும் ஆளும் கட்சிகளோடு உறவு வைத்து “லொபி” அரசியல் செய்ய வேண்டும் என்பதே அவர்களது கொள்கையாக இருந்து வந்தது. புலிகளுக்கு எதிர்ப்புக்கூடக் காட்டாத கமயுனிஸ்ட் தொழிற்சங்க வாதிகளான அண்ணாமலை, விஜயானந்தன் என்ற இருவரைக் கொலை செய்வதில் ஆரம்பித்த இவர்களது இடது – எதிர்ப்பு அரசியல் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களை இனச்சுத்திகரிப்பு செய்வது வரை நீண்டிருக்கிறது.
இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும், இஸ்ரேலிய யூதர்கள் போன்று தமிழினம் உருவாக வேண்டும் என்று பிரபாகரன் கனவுகண்டதை இன்னும் தாங்கிப் பிடிப்பவர்கள். இது புலிகளின் சிந்தனை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பொதுவான எல்லா இயக்கங்களதும், புலி எதிர்ப்பாளர்களதும் சிந்தனையே.
புலி எதிர்ப்பாளரகள் புலியை விமர்சிப்பது தாம் புலிகள் போல ஆதிக்கம் கொண்ட இன்னொரு சக்தியாக உருவாக வேண்டும் என்பதாலேயே. அதில் ஒரு பகுதி மகிந்தவிற்கு பக்கவாத்தியம் வசிக்க இன்னொரு சிறு பகுதி லும்பன்களாக இணையங்களில் அவ்வப்போது உலா வருகிறார்கள்.
புலிகளை விமர்சித்தல் என்பது அவர்களது சிந்தனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், முற்போக்குத் தேசிய வாதத்தை உருவாக்குவதற்காகவும் மட்டுமே பயன்பட வேண்டும். இலங்கை அரசைப் பலப்படுத்துவதற்காகவோ அன்றி இன்னொரு புலியாக உலாவருவதற்காகவோ அல்ல.
அமரிக்க அரசு இலங்கை ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறிய பின்னரும் , பிரபாகரனும் ஒசாமா பின்லாடனும் ஒரே வகையானவர்கள் என்று கூறிய பின்னரும் இன்று வரைக்கும் புலி ஆதரவு ஊடகங்கள் ஒன்றாவது அமரிக்காவை எதிர்த்து ஒரு கருத்துக்கூட வெளியிடவில்லை என்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
நான் அம்பேத்கரைப் பற்றி விவாதிக்கவே இல்லை. அம்பேத்கரை இருளிலேயே வைத்திருந்த ஆதிக்க சக்திகளைப் பற்றித் தான் குறிப்பிட்டு இருக்கிறேன். அது போலவே பிரபாகரனும் மக்கள் விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்து இருப்பதால் ஆதிக்க சக்திகள் அவர் மீது அவது|று பரப்பினாலும் அவர் புகழ் மறையாது என்று தான் குறிப்பிட்டு இருந்தேன். புலி ஆதரவு ஊடகங்கள் ஏன் இதைப் பற்றிப் பேசவில்லை என்பது பற்றி எனக்குத் தெரியாது.
நிங்கள் சொல்லுவது சரிதான்
ஒசாமா ஆனாலும் பிரபாகரன் ஆனாலும் இருவரும் ஒன்றுதான் இவர்களை பிரித்து பேசுவது சரியல்ல இவர்களால் பொதுமக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ள பட்டாலும் பெரிதும் பாதிக்க பட்டவர்கள் பொதுமக்கள் தான் பொது மக்களுக்காக பாடு படுபவர்கள் பொதுமக்களையும் கவனத்தில் கொள்ளாது பாம்ப் வைத்து கொள்ளுவது தற்கொலை படை அமைத்து போதுக்கூட்டம்களில் மக்களையும் பாராமல் தலைவர்களுடன் சேர்த்து பொது மக்களை கொல்லுவது இதெல்லாம் எந்த வகையில் நியாயம் ஆனது???அன்று பிரபாகரனை எப்படி இலங்கை ராணுவம் கொன்றதோ அதுபோலவே இன்று ஒசாமாவும் அமெரிக்காவால் கொள்ள ப்பட்டு இருக்கிறார் இவர்கள் இருவருமே பெரிய தலைவர்கள் முதல் சல்லிக்காசுக்கு வழி இல்லாத பொதுமக்கள் வரை கொன்றவர்கள் கூட்டத்தின் தலைவர்கள் தான் ஆக இருவரும் ஒன்று போலதான்
அல் கைதாவின் தலைவர் ஒசாமாவை பாகிஷ்தானுக்குள் ; அமெரிக்க படைகள் ஊடுருவி தாக்கி அழிப்பதற்கு அந்த நாட்டின் அனுமதியை பெறவில்லை.
அது போல புலிகளின் தற்போதைய தவைராக தம்மை வெளிபடுத்தி ; இன்டாபோலால் தேடப்பட்டு வந்த கேபீயை அமெரிக்கா கடத்திச் செல்லவோ அல்லது சிறீலங்கா அரசு ஒப்படைத்து புலிகளது குற்றத்துக்காக நீதி மன்றத்தில் நிறுத்தவோ முனையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
அத்தோடு புலத்து புலிகளது குரல்கள் மேலும் அடங்கும்…………….
ஒபாமாவிற்கும் பிரபாகரனுக்கும் உண்மையில் வேறுபாடில்லைத்தான். இதை அமெரிக்கா சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. மானிடம் அழிந்து நீறாகினாலும் தாங்கள் தப்பவேண்டுமென்று தலைகீழாக இறுதிவரை நின்றவர்கள்.
// அமரிக்காவின் கொல்லைப் புறத்தில் கூடுகட்டியிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசும், அதன் அடிமைகள் போலத் தொழிற்படும் உலகத் தமிழர் பேரவையும், தமிழ் நாட்டின் தமிழ் இனவாதிகளும், தமிழர் பேரவை போன்ற புலிகளின் தொடர்ச்சியும் இனிமேலாவது புரிந்துகொள்ளட்டும் அமரிக்கா ஏகாதிபத்தியம் எதிரிதான் என்று.
//
கோசலன் அவர்களே இது அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தவிடயம் தான். மறுபடி மறுபடி ஏமாறுவதும் ஏமாறநினைப்பதும் நாங்கள்தான்……………