Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஒக்ரோபர் புரட்சியும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்

இனியொரு... by இனியொரு...
11/02/2012
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான கொடூரச் சுரண்டலுக்கும் ஏதேச்சதிகார அடக்கு முறைகளுக்கும் மட்டுமன்றி தேசிய இனங்களின் சிறைச்சாலையாக விளங்கிய ரஷ;சியப் பேரினவாத ஒடுக்குமுறைக்கும் எதிராக வெடித்தெழுந்து வெற்றி பெற்றதே மாமேதை லெனின் தலைமையிலான 1917 ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியாகும். அதிலிருந்து எழுந்த அதிர்வலைகள் இன்றுவரை உலகம் பூராவும் எதிரொலித்தபடியே இருந்து வருகின்றன அதன் காரணமாகவே அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி வரும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒக்ரோபர் புரட்சி காட்டிய புரட்சிகரப்பாதையில் போராடி வருகிறார்கள். அதன் வழியிலேயே 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியானது வடபுலத்தில் சாதிய தீண்டாமையை எதிர்த்து நின்ற புரட்சிகரப் போராட்டங்கள் ஆகியது. அன்றைய போராட்டங்களே தமிழர் பழமைவாதத்தால் பேணிப் பாதுகாக்கப்பட்டுவந்த தீண்டாமையை முறியடித்து ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1917ல் சோசலிசப் புரட்சியானது வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் ரசியக் கம்யூனிக் கட்சியின் தலைமையில் வெற்றி பெற்று ஜார் மன்னனின் ஏதேச்சதிகாரத்தை துடைத்தெறிந்;து அந்த மண்ணிலே சோசலிசத்தை நிலைநிறுத்தியது. அதே வர்க்கப் போரட்டப் பாதையில் இலங்கையில் புரட்சிகர கம்யூனிட்கட்சி தலைமையில் பழமைவாதத்தால் இறுகி நின்ற வடபுலத்து மண்ணிலே சாதியை தீண்டாமைக்கு எதிராகப் போராடி தீண்டாமைக் கொடுமையை முடியடித்தது. அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் சமத்துவத்தையும் சமூக நீதியையும் ஜனநாயகத்தையும் வென்றெடுத்து நிலைநிறுத்தியது. கடந்த நுற்றாண்டில் வரலாற்றுத் தடம் பதித்து கொண்ட இவ்விரண்டு புரட்சியினதும், எழுச்சியினது அனுபவங்கள் இன்றைய இலங்கைச் சூழலில் ஆழ்ந்து நோக்கப்படவும் அவற்றின் வழியில் சிந்தித்து செயற்படவும் முன்வர வேண்டியவையாகும்.
இவ்வாறு 1916 ஒக்ரோபர் புரட்சியும் 1966 ஒக்ரோபர் எழுச்சியும் எனும் தலைப்பில் 28.10.2012 அன்று யாழ்நகரில் இடம்பெற்ற பகிரங்க கருத்தரங்கில் உரையாற்றிய புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் கூறினார். கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சட்டத்தரணி சோ.தேவராஜா இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
சி.கா.செந்திவேல் தொடர்ந்தும் தனது உரையில், இன்று நமது நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் முற்றுமுழுதான மக்கள் விரோதப்போக்குகள் வளர்க்கப்பட்டு செல்கின்றன. மகிந்த சிந்தனையானது தலைமை தாங்கும் தரகு முதலாளித்துவ பேரினவாத எதேச்சதிகார ஆட்சி அதிகாரமே சகலவற்றையும் தீர்மானிப்பது மட்டுமன்றி பாசிச சர்வாதிகாரமாக கோலோச்சி வருவதையும் காணமுடிகிறது. தேசியவாதம் பாசிசத்திற்கு இட்டு செல்லுமென்ற வரலாற்றுப் பட்டறிவின் யதார்த்தத்தை இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதம் இன்று அடையாளம் காட்டி நிற்கிறது. இத்தகைய பேரினவாதம் என்பது ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுடன் கைகோர்த்து செல்கிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்தே எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளது என்றால் நாடு எங்கே இழுத்துச் செல்லப்பபடுகிறது என்பதை விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தெற்கில் சிங்கள உழைக்கும் மக்கள் மீதான பொருளாதார சுமை ஏற்றல்களுக்கும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் மறைப்புக் கட்டிக் கொள்ளவே தமிழ், முஸ்லீம் மலையக தேசிய இனங்கள் மீதான பேரினவாத பேச்சுக்களும் நடமுறைச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கவும் சிங்கள மக்களை திசைதிருப்பி வைத்திருக்கவும் குடும்ப அதிகாரத்தை தொடர்ந்தும் தமது கைகளில் வைத்திருக்க முடிகிறதே தவிர நாட்டையும் மக்களையும் சுவீட்சமான பாதையில் இட்டுச் செல்வதற்கல்ல என்பதே உண்மையாகும். இதனையே அமெரிக்க உலகமேலாதிக்க வாதிகளும் இந்தியப் பிராந்திய மேலாதிக்கசக்திகளும் விரும்புகின்றன அதற்கான காய் நகர்த்தல்களையே அவர்கள் இலங்கையில் மேற்கொண்டு வருகின்றார்கள். மறைக்கப்படும் இத்தகைய உண்மைகளை புரிந்து கொள்ளாது தெற்கின் சிங்கள மக்களும் வடக்கு கிழக்கு மலையகத்தின் தமிழ் முஸ்லீம் மக்களும் தம்மைப் பினைத்துள்ள வலிமை மிகுந்த கொடூர அடக்குமுறைச் சங்கிலிகளை உடைத்தெறிய முடியாது. இந்நிலையிலேயே 96 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒக்ரோபர் புரட்சியில் இருந்தும் 46 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற ஒக்ரோபர் 21 எழுச்சியில் இருந்தும் வரலாற்று அனுபவப் பாடங்கள் பெற்று முன்செல்ல வேண்டிய வரலாற்றுத் தேவை எம்முன்னால் உள்ளது என்றும் கூறினார்.
மேலும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா தனது தலைமை உரையில் பின்வருமாறு கூறினார். இலங்கையர்களாகிய நாம் இன்று தரகு முதலாளித்துவத்தாலும் பேரினவாத ஒடுக்குமுறைகளாலும் ஏகாதிபத்திய உலகமயமாதலினாலும் இறுக்கி அமுக்கப்பட்டோராக இருந்து வருகின்றோம். குறிப்பாகப் பேரினவாத ஒடுக்குமுறையானது தேசிய இனங்களை ஒடுக்கிவருவது முன் என்றுமில்லாதவாறு வேகமடைந்து நிற்கிறது. அதனை எதிர் கொண்டு முறியடிப்பதில் கடந்த நுற்றாண்டிலும் சரி இப்பொழுதும் சரி தமிழ்த் தேசியவாதத்தினால் முடியவில்லை. அகிம்சைப் போராட்டங்களாலும் பின்பு ஆயுதப் போராட்டங்களாலும் எதையுமே சாதிக்க இயலவில்லை. அது ஏன் என்பது பற்றிய ஒரு மீள்பரிசீலனைக்கோ மறுமதிப்பீட்டுக்கோ எந்தவொரு தமிழ்த் தேசியவாத தலைமையும் தயாராக இல்லாத துர்வதிஸ்ட நிலையே நீடித்துவருகிறது. இவ்வாறான இன்றைய சூழலையே ஒக்ரோபர் புரட்சியினதும் ஒக்ரோபர் 21 எழுச்சியினது பாடங்களும் படிப்பினைகளும் ஒடுக்கப்படும் தமிழத் தேசிய இனத்திற்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் அவசியமானவையாகும். மீண்டும் மீண்டும் தமிழ்த் தேசியமானது பேரினவாதத் ஒடுக்குமுறையைச் சரியான தளத்தில் நின்று எதிர்க்க முடியாது இருப்பதன் அடிப்படை அது தமிழர் பழமை வாதத்தின் வேர்பிடித்து நிற்பதேயாகும். அதிலிருந்து விடுபடாதவரை தமிழ்த் தேசிய இனத்திற்கு தமிழ்த் தேசியவாத தலைமைகளால் வெறும் வாய்பேச்சு தலைமையை மட்டும் அளிக்க முடியுமே தவிர விடுதலையை எவ்வகையிலும் பெற்றுக்கொள்ள உதவமாட்டாது. 1966 ஒக்ரோபர் எழுச்சியானது தாழ்த்தப்பட்ட மக்கள் தனித்து நின்று மட்டும் போராடக்கூடிய வழிமுறையை காட்டப்படவில்லை உயர்த்தப்பட்டோர் எனப்பட்ட மக்கள் மத்தியில் இருந்த நல்லென்னம் கொண்டோர் ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள், இடது சாரி சக்திகள் ஆகியோரோடு இணைந்து நின்ற வெகுஜனப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையாலேயே அன்றைய போராட்டங்கள் வெற்றி பெற்றன. இந்த வரலாற்று அனுபவ உண்மையினை தமிழ்த் தேசியவாதிகள் தொடர்ந்தும் படிக்க மறுப்பது மட்டுமன்றி வரலாற்றில் அவற்றை மறைக்கவும் செய்கிறார்கள். அதற்குக் காரணம் இன்றும் அவர்களிடம் இறுகிய நிலையில் இருந்து வரும் பழமைவாதக் கருத்தியலே ஆகும். வர்க்கத்தையும் சாதியத்தையும் பெண்ணடிமைத்தனைத்தையும் தகர்க்க விரும்பாத தமிழ்த் தேசியத்தைக் கேள்விக்குட்படுத்தாது அல்லது அதனைத்தாண்டிச் செல்லாத எத்தகைய போராட்டத்தாலும் தமிழ்தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியாது. அதேபோன்று பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு தீனி போடும் வகையில் அன்றி சிங்கள உழைக்கும் மக்களிடம் சென்றடையக் கூடிய நியாயமான கொள்கைகளையும் வழிமுறைகளையும் முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களின் விடுதலையை நோக்கி செல்லமுடியும். இன்றைய தமிழர் ஆதிக்க அரசியல் தலைமைகளைத் தவிர்த்து விட்டு உழைக்கும் தமிழ் மக்களின் தலைமையிலான நான்காவது கட்டப் போராட்டம் ஒன்றினை தோற்றுவிப்பதே இன்றைய தேவையாகும் அது பரந்து பட்ட தமிழ் மக்களை அணிதிரட்டிய வெகுஜனப் போராட்டங்களாகவே இருக்கமுடியும் இதனைவிட வேறு மார்க்கம் எதுவம் தமிழ் மக்கள் முன்னாலும் இல்லை எனவும் கூறினார்.
கருத்துரைமுடிவில் திறந்த கலந்துரையாடலில் வருகை தந்தோர் பயன்தரும் பல்வேறு கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

பு.ஜ.மா.லெ.கட்சி
வடபிராந்தியக்குழு

புதிய–ஜனநாயக மாக்சிச–லெனினிசக் கட்சி
வடபிராந்திய பணிமனை 405,ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்.
ஊடகங்களுக்கு
30.10.2012

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மீண்டும் பேராட்டத்தின் பெயரால் பிரித்தானியாவில் பணம்திரட்டும் தமிழ் மாபியாக்கள்

மீண்டும் பேராட்டத்தின் பெயரால் பிரித்தானியாவில் பணம்திரட்டும் தமிழ் மாபியாக்கள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...