ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 216 பக்கங்கள் கொண்ட யுத்தக் குற்றம் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியவற்றின் யுத்தக் குறங்கள் தொடர்பாகக் குறிப்புக்கள் அடங்கிய அறிக்கை, இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் மீது இலங்கை அரசபடைகள் நடத்திய தாக்குதல்கள் ஆதரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தமை, பொதுமக்கள் நிலைகளுக்கு அருகாமையில் ஆயுதங்களைப் பயன்படுத்தியமை, பலவந்தமாக சிறுவர்கள் உள்ளிட்டவர்களை படையில் இணைத்துக் கொண்டமை, பலவந்தமாக ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்தியமை, தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைஅரசு, எறிகணைத் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தமை, வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியமை, மனிதாபிமான உதவிகளை மறுத்தமை, இடம்பெயர் மக்கள் மற்றும் புலிச் சந்தேக நபர்கள் உள்ளிட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியமை, போர் வலயத்திற்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அறிக்கையின் இறுதியில் நான்கு வகையான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. தவிர, பொதுமக்களின் இழப்பைக் கட்டுப்படுத்த சர்வதேச ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுள்ளது.
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றில் பெரும்பாலான கொலைகளுக்கு இலங்கை அரசே பொறுப்பானது எனச் சுட்டிக்காட்டப்படுள்ளது.
குறிப்பாக எந்தத் தனி நபரையும் சுட்டிக்காட்டிக் குற்றம் சுமத்தாக இவ்வறிக்கை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையகம் குற்றங்கள் இழைக்கப்படுவதற்குப் பொறுப்பான தனி நபர்கள் மீதான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf
இலங்கையின் யுத்தக் குற்ற பயங்கர வீடியோக்களை வெளியிட சனல் 4 தயார்
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பிலான புலனாய்வில் இதுவரையில் காட்டப்பட்டவற்றைவிட மிக மிகப் பயங்கரமான வீடியோக் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளதாக ஐக்கிய இராச்சிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2009ஆம் ஆண்டு நடைடிபெற்ற யுத்தத்தின் இறுதி வாரங்களில் இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய்வது பற்றி பான் கீ மூன் அறிவித்ததற்கு அடுத்த நாள் சனல் 4 இந்த அறிவிதலை விடுத்துள்ளது. இதன்மூலம் நடந்த கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த வீடியோக் காட்சிகள் படு பயங்கரமானவை என்பதால் இவை பின் இரவிலேயே ஒளிபரப்பப்படும். படு பயங்கரமான காட்சிகள் காட்டப்படுமுன் உரிய எச்சரிக்கை வழங்கப்படும் என சனல் 4 அறிவித்துள்ளது.