18.03.2009.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களை செல்வி, திருமதி என்ற பதங்களைப் பயன்படுத்தி அழைப்பதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தடை பிறப்பித்துள்ளது.
புதிய பால் சமத்துவக் கொள்கையின் அடிப்படையிலேயே இத்தடை உத்தரவு அறிவிக்கப்பட்டிருப்பதுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை சக அரசியல் வாதிகள் முழுப்பெயர் கூறியே அழைக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு வீரர்களை மெய்வல்லுநர்கள் என்றும் அரசியல் பிரமுகர்களை அரசியல் தலைவர்கள் என்றும் செயற்கையை மனிதத் தயாரிப்பு என்று அழைக்குமாறும் இப்புதிய மொழிக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தொழில்துறைகளை வெளிப்படுத்தும் தீயணைப்பு வீரர், விமானப் பணிப் பெண், தலைமை ஆசிரியர், பொலிஸ், விற்பனையாளர்கள், முகாமையாளர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் ஆண்தாதி போன்ற பதங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹோட்டல்களில் பணிபுரியும் சேவகர்களுக்குரிய மாற்றுப் பதம் இப்புதிய மொழிக் கொள்கையில் இடம்பெறவில்லை.