பிரான்சில் நிறவெறி பாசிசக் கட்சியான ‘தேசிய முன்னணி’ ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. வெள்ளை இனத்தவர் அல்லாதோருக்கும் யூதர்களுக்கும் சோசலிஸ்டுக்களும் எதிரான பாசிச தேசிய வெறிக் கட்சியான தேசிய முன்னணி லூ பென் என்ற நிறவெறியரால் உருவாக்கப்பட்டது அவரது மகளான மரீன் லூ பென் இன்று இக்கட்சியின் தலைவர்.
இதே போல பிரித்தானியாவில் நடைபெற்ற ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி என்ற தேசிய வெறிக் கட்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நிறவெறிக் கருத்துக்களை முன்வைக்கும் இக்கட்சி வெளிநாடுக்கு குடியேற்றவாசிகளுக்கு எதிரானது. பிரான்சின் தேசிய முன்னணியைப் போலவே வெள்ளை நிறமற்றவர்களையும், அன்னிய நாட்டவர்களையும் அவமதிக்கும் பேச்சுக்களை தேர்தல் காலத்தில் வெளியிட்டுவந்தது.
இலங்கையில் ராஜபக்ச, இந்தியாவில் நரேந்திர மோடி போன்ற பாசிஸ்டுக்களின் வரிசையில் ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாதவாறு பாசிசம் எழுச்சி பெற்று வருவதை இந்த வெற்றிகள் காட்டுகின்றன.
சரிந்துவிழும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் புதிய ஒழுங்குமுறை மக்களை அதிகமாகச் சுரண்டுவதைத் தவிர வேறில்லை என்பதை அடிப்படையாககொண்டுள்ளது. இதன்போது எழுகின்ற மக்கள் போராட்டங்களையும் எழுச்சிகளையும் எதிர்கொள்ள பாசிஸ்டுக்களின் ஒடுக்குமுறையை முதலாளித்துவம் நம்பியிருக்கின்றது. இக்கட்சிகள் அனைத்தும் ஹிடலர் போன்ற நாசிகளின் வழித்தோன்றலாகத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்கள்.